Thursday, July 14, 2016

Thaaniyeal 5 | தானியேல் 5 | Daniel 5

பெல்ஷாத்சார்  என்னும்  ராஜா  தன்  பிரபுக்களில்  ஆயிரம்பேருக்கு  ஒரு  பெரிய  விருந்துசெய்து,  அந்த  ஆயிரம்பேருக்கு  முன்பாகத்  திராட்சரசம்  குடித்தான்.  (தானியேல்  5:1)

belshaathsaar  ennum  raajaa  than  pirabukka'lil  aayirampearukku  oru  periya  virunthuseythu,  antha  aayirampearukku  munbaagath  thiraadcharasam  kudiththaan.  (thaaniyeal  5:1)

பெல்ஷாத்சார்  திராட்சரசத்தை  ருசித்துக்கொண்டிருக்கையில்,  அவன்  தன்  தகப்பனாகிய  நேபுகாத்நேச்சார்  எருசலேம்  தேவாலயத்திலிருந்து  கொண்டுவந்த  பொன்  வெள்ளி  பாத்திரங்களில்,  ராஜாவாகிய  தானும்  தன்  பிரபுக்களும்  தன்  மனைவிகளும்  தன்  வைப்பாட்டிகளும்  குடிக்கிறதற்காக  அவைகளைக்  கொண்டுவரும்படி  கட்டளையிட்டான்.  (தானியேல்  5:2)

belshaathsaar  thiraadcharasaththai  rusiththukko'ndirukkaiyil,  avan  than  thagappanaagiya  neabukaathneachchaar  erusaleam  theavaalayaththilirunthu  ko'nduvantha  pon  ve'l'li  paaththirangga'lil,  raajaavaagiya  thaanum  than  pirabukka'lum  than  manaiviga'lum  than  vaippaattiga'lum  kudikki’ratha’rkaaga  avaiga'laik  ko'nduvarumpadi  katta'laiyittaan.  (thaaniyeal  5:2)

அப்பொழுது  எருசலேமிலுள்ள  தேவனுடைய  வீடாகிய  ஆலயத்திலிருந்து  எடுக்கப்பட்ட  பொற்பாத்திரங்களைக்  கொண்டுவந்தார்கள்;  அவைகளில்  ராஜாவும்  அவனுடைய  பிரபுக்களும்  அவனுடைய  மனைவிகளும்  அவனுடைய  வைப்பாட்டிகளும்  குடித்தார்கள்.  (தானியேல்  5:3)

appozhuthu  erusaleamilu'l'la  theavanudaiya  veedaagiya  aalayaththilirunthu  edukkappatta  po’rpaaththirangga'laik  ko'nduvanthaarga'l;  avaiga'lil  raajaavum  avanudaiya  pirabukka'lum  avanudaiya  manaiviga'lum  avanudaiya  vaippaattiga'lum  kudiththaarga'l.  (thaaniyeal  5:3)

அவர்கள்  திராட்சரசம்  குடித்து,  பொன்னும்  வெள்ளியும்  வெண்கலமும்  இரும்பும்  மரமும்  கல்லுமாகிய  தேவர்களைப்  புகழ்ந்தார்கள்.  (தானியேல்  5:4)

avarga'l  thiraadcharasam  kudiththu,  ponnum  ve'l'liyum  ve'ngalamum  irumbum  maramum  kallumaagiya  theavarga'laip  pugazhnthaarga'l.  (thaaniyeal  5:4)

அந்நேரத்திலே  மனுஷ  கைவிரல்கள்  தோன்றி,  விளக்குக்கு  எதிராக  ராஜ  அரமனையின்  சாந்து  பூசப்பட்ட  சுவரிலே  எழுதிற்று;  எழுதின  அந்தக்  கையுறுப்பை  ராஜா  கண்டான்.  (தானியேல்  5:5)

annearaththilea  manusha  kaiviralga'l  thoan’ri,  vi'lakkukku  ethiraaga  raaja  aramanaiyin  saanthu  poosappatta  suvarilea  ezhuthit’ru;  ezhuthina  anthak  kaiyu’ruppai  raajaa  ka'ndaan.  (thaaniyeal  5:5)

அப்பொழுது  ராஜாவின்  முகம்  வேறுபட்டது;  அவனுடைய  நினைவுகள்  அவனைக்  கலங்கப்பண்ணினது;  அவனுடைய  இடுப்பின்  கட்டுகள்  தளர்ந்தது,  அவனுடைய  முழங்கால்கள்  ஒன்றோடொன்று  மோதிக்கொண்டது.  (தானியேல்  5:6)

appozhuthu  raajaavin  mugam  vea’rupattathu;  avanudaiya  ninaivuga'l  avanaik  kalanggappa'n'ninathu;  avanudaiya  iduppin  kattuga'l  tha'larnthathu,  avanudaiya  muzhangkaalga'l  on’roadon’ru  moathikko'ndathu.  (thaaniyeal  5:6)

ராஜா  உரத்த  சத்தமிட்டு;  ஜோசியரையும்  கல்தேயரையும்  குறிசொல்லுகிறவர்களையும்  உள்ளே  அழைத்துவரும்படி  சொன்னான்.  ராஜா  பாபிலோன்  ஞானிகளை  நோக்கி:  இந்த  எழுத்தை  வாசித்து,  இதின்  அர்த்தத்தை  எனக்கு  வெளிப்படுத்துகிறவன்  எவனோ,  அவன்  இரத்தாம்பரமும்  கழுத்திலே  பொற்சரப்பணியும்  தரிக்கப்பட்டு,  ராஜ்யத்திலே  மூன்றாம்  அதிபதியாய்  இருப்பான்  என்று  சொன்னான்.  (தானியேல்  5:7)

raajaa  uraththa  saththamittu;  joasiyaraiyum  kaltheayaraiyum  ku’risollugi’ravarga'laiyum  u'l'lea  azhaiththuvarumpadi  sonnaan.  raajaa  baabiloan  gnaaniga'lai  noakki:  intha  ezhuththai  vaasiththu,  ithin  arththaththai  enakku  ve'lippaduththugi’ravan  evanoa,  avan  iraththaambaramum  kazhuththilea  po’rsarappa'niyum  tharikkappattu,  raajyaththilea  moon’raam  athibathiyaay  iruppaan  en’ru  sonnaan.  (thaaniyeal  5:7)

அப்பொழுது  ராஜாவின்  ஞானிகளெல்லாரும்  வந்து  சேர்ந்தார்கள்;  ஆனாலும்  அவர்கள்  அந்த  எழுத்தை  வாசிக்கவும்,  அதின்  அர்த்தத்தை  ராஜாவுக்குத்  தெரிவிக்கவும்  கூடாதிருந்தது.  (தானியேல்  5:8)

appozhuthu  raajaavin  gnaaniga'lellaarum  vanthu  searnthaarga'l;  aanaalum  avarga'l  antha  ezhuththai  vaasikkavum,  athin  arththaththai  raajaavukkuth  therivikkavum  koodaathirunthathu.  (thaaniyeal  5:8)

அப்பொழுது  ராஜாவாகிய  பெல்ஷாத்சார்  மிகவும்  கலங்கினான்;  அவனுடைய  முகம்  வேறுபட்டது;  அவனுடைய  பிரபுக்கள்  திகைத்தார்கள்.  (தானியேல்  5:9)

appozhuthu  raajaavaagiya  belshaathsaar  migavum  kalangginaan;  avanudaiya  mugam  vea’rupattathu;  avanudaiya  pirabukka'l  thigaiththaarga'l.  (thaaniyeal  5:9)

ராஜாவும்  அவனுடைய  பிரபுக்களும்  சொன்னவைகளை  ராஜாத்தி  கேள்விப்பட்டு  விருந்துசாலைக்குள்  பிரவேசித்தாள்.  அப்பொழுது  ராஜாத்தி:  ராஜாவே,  நீர்  என்றும்  வாழ்க;  உமது  நினைவுகள்  உம்மைக்  கலங்கப்பண்ணவும்,  உமது  முகம்  வேறுபடவும்  வேண்டியதில்லை.  (தானியேல்  5:10)

raajaavum  avanudaiya  pirabukka'lum  sonnavaiga'lai  raajaaththi  kea'lvippattu  virunthusaalaikku'l  piraveasiththaa'l.  appozhuthu  raajaaththi:  raajaavea,  neer  en’rum  vaazhga;  umathu  ninaivuga'l  ummaik  kalanggappa'n'navum,  umathu  mugam  vea’rupadavum  vea'ndiyathillai.  (thaaniyeal  5:10)

உம்முடைய  ராஜ்யத்திலே  ஒரு  புருஷன்  இருக்கிறான்,  அவனுக்குள்  பரிசுத்த  தேவர்களுடைய  ஆவி  இருக்கிறது;  உம்முடைய  பிதாவின்  நாட்களில்  வெளிச்சமும்  விவேகமும்  தேவர்களின்  ஞானத்துக்கு  ஒத்த  ஞானமும்  அவனிடத்தில்  காணப்பட்டது;  ஆகையால்  உம்முடைய  பிதாவாகிய  நேபுகாத்நேச்சாரென்னும்  ராஜாவானவர்  அவனைச்  சாஸ்திரிகளுக்கும்  ஜோசியருக்கும்  கல்தேயருக்கும்  குறிசொல்லுகிறவர்களுக்கும்  அதிபதியாக  வைத்தார்.  (தானியேல்  5:11)

ummudaiya  raajyaththilea  oru  purushan  irukki’raan,  avanukku'l  parisuththa  theavarga'ludaiya  aavi  irukki’rathu;  ummudaiya  pithaavin  naadka'lil  ve'lichchamum  viveagamum  theavarga'lin  gnaanaththukku  oththa  gnaanamum  avanidaththil  kaa'nappattathu;  aagaiyaal  ummudaiya  pithaavaagiya  neabukaathneachchaarennum  raajaavaanavar  avanaich  saasthiriga'lukkum  joasiyarukkum  kaltheayarukkum  ku’risollugi’ravarga'lukkum  athibathiyaaga  vaiththaar.  (thaaniyeal  5:11)

ராஜாவினால்  பெல்தெஷாத்சாரென்னும்  பெயரிடப்பட்ட  அந்தத்  தானியேலுக்குள்  சொப்பனங்களை  வியார்த்திபண்ணுகிறதும்,  புதைபொருள்களை  வெளிப்படுத்துகிறதும்,  கருகலானவைகளைத்  தெளிவிக்கிறதுமான  அறிவும்  புத்தியும்  விசேஷித்த  ஆவியும்  உண்டென்று  காணப்பட்டது;  இப்போதும்  தானியேல்  அழைக்கப்படட்டும்,  அவன்  அர்த்தத்தை  வெளிப்படுத்துவான்  என்றாள்.  (தானியேல்  5:12)

raajaavinaal  beltheshaathsaarennum  peyaridappatta  anthath  thaaniyealukku'l  soppanangga'lai  viyaarththipa'n'nugi’rathum,  puthaiporu'lga'lai  ve'lippaduththugi’rathum,  karugalaanavaiga'laith  the'livikki’rathumaana  a’rivum  buththiyum  viseashiththa  aaviyum  u'nden’ru  kaa'nappattathu;  ippoathum  thaaniyeal  azhaikkappadattum,  avan  arththaththai  ve'lippaduththuvaan  en’raa'l.  (thaaniyeal  5:12)

அப்பொழுது  தானியேல்  ராஜாவின்முன்  உள்ளே  அழைத்துவந்து  விடப்பட்டான்;  ராஜா  தானியேலைப்  பார்த்து:  நீ  என்  பிதாவாகிய  ராஜா  யூதாவிலிருந்து  சிறைபிடித்துவந்த  யூதரில்  ஒருவனாகிய  தானியேல்  அல்லவா?  (தானியேல்  5:13)

appozhuthu  thaaniyeal  raajaavinmun  u'l'lea  azhaiththuvanthu  vidappattaan;  raajaa  thaaniyealaip  paarththu:  nee  en  pithaavaagiya  raajaa  yoothaavilirunthu  si’raipidiththuvantha  yootharil  oruvanaagiya  thaaniyeal  allavaa?  (thaaniyeal  5:13)

உனக்குள்ளே  தேவர்களின்  ஆவி  உண்டென்றும்,  வெளிச்சமும்  புத்தியும்  விசேஷித்த  ஞானமும்  உன்னிடத்தில்  காணப்பட்டதென்றும்  உன்னைக்குறித்துக்  கேள்விப்பட்டேன்.  (தானியேல்  5:14)

unakku'l'lea  theavarga'lin  aavi  u'nden’rum,  ve'lichchamum  buththiyum  viseashiththa  gnaanamum  unnidaththil  kaa'nappattathen’rum  unnaikku’riththuk  kea'lvippattean.  (thaaniyeal  5:14)

இப்போதும்  இந்த  எழுத்தை  வாசிக்கிறதற்கும்,  இதின்  அர்த்தத்தை  எனக்குத்  தெரிவிக்கிறதற்கும்  சாஸ்திரிகளும்  ஜோசியரும்  எனக்கு  முன்பாக  அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்;  ஆனாலும்  இந்த  வசனத்தின்  அர்த்தத்தை  வெளிப்படுத்த  அவர்களால்  கூடாமற்போயிற்று.  (தானியேல்  5:15)

ippoathum  intha  ezhuththai  vaasikki’ratha’rkum,  ithin  arththaththai  enakkuth  therivikki’ratha’rkum  saasthiriga'lum  joasiyarum  enakku  munbaaga  azhaiththukko'nduvarappattaarga'l;  aanaalum  intha  vasanaththin  arththaththai  ve'lippaduththa  avarga'laal  koodaama’rpoayit’ru.  (thaaniyeal  5:15)

பொருளை  வெளிப்படுத்தவும்,  கருகலானவைகளைத்  தெளிவிக்கவும்  உன்னாலே  கூடுமென்று  உன்னைக்குறித்துக்  கேள்விப்பட்டேன்;  இப்போதும்  நீ  இந்த  எழுத்தை  வாசிக்கவும்,  இதின்  அர்த்தத்தை  எனக்குத்  தெரிவிக்கவும்  உன்னாலே  கூடுமானால்,  நீ  இரத்தாம்பரமும்  கழுத்திலே  பொற்சரப்பணியும்  தரிக்கப்பட்டு,  ராஜ்யத்திலே  மூன்றாம்  அதிபதியாய்  இருப்பாய்  என்றான்.  (தானியேல்  5:16)

poru'lai  ve'lippaduththavum,  karugalaanavaiga'laith  the'livikkavum  unnaalea  koodumen’ru  unnaikku’riththuk  kea'lvippattean;  ippoathum  nee  intha  ezhuththai  vaasikkavum,  ithin  arththaththai  enakkuth  therivikkavum  unnaalea  koodumaanaal,  nee  iraththaambaramum  kazhuththilea  po’rsarappa'niyum  tharikkappattu,  raajyaththilea  moon’raam  athibathiyaay  iruppaay  en’raan.  (thaaniyeal  5:16)

அப்பொழுது  தானியேல்  ராஜசமுகத்தில்  பிரதியுத்தரமாக:  உம்முடைய  வெகுமானங்கள்  உம்மிடத்திலேயே  இருக்கட்டும்;  உம்முடைய  பரிசுகளை  வேறொருவனுக்குக்  கொடும்;  இந்த  எழுத்தை  நான்  ராஜாவுக்கு  வாசித்து,  இதின்  அர்த்தத்தைத்  தெரிவிப்பேன்.  (தானியேல்  5:17)

appozhuthu  thaaniyeal  raajasamugaththil  pirathiyuththaramaaga:  ummudaiya  vegumaanangga'l  ummidaththileayea  irukkattum;  ummudaiya  parisuga'lai  vea’roruvanukkuk  kodum;  intha  ezhuththai  naan  raajaavukku  vaasiththu,  ithin  arththaththaith  therivippean.  (thaaniyeal  5:17)

ராஜாவே,  உன்னதமான  தேவன்  உம்முடைய  பிதாவாகிய  நேபுகாத்நேச்சாருக்கு  ராஜ்யத்தையும்  மகத்துவத்தையும்  கனத்தையும்  மகிமையையும்  கொடுத்தார்.  (தானியேல்  5:18)

raajaavea,  unnathamaana  theavan  ummudaiya  pithaavaagiya  neabukaathneachchaarukku  raajyaththaiyum  magaththuvaththaiyum  kanaththaiyum  magimaiyaiyum  koduththaar.  (thaaniyeal  5:18)

அவருக்குக்  கொடுக்கப்பட்ட  மகத்துவத்தினாலே  சகல  ஜனங்களும்  ஜாதியாரும்  பாஷைக்காரரும்  அவருக்கு  முன்பாக  நடுங்கிப்  பயந்திருந்தார்கள்;  அவர்  தமக்குச்  சித்தமானவனைக்  கொன்றுபோடுவார்,  தமக்குச்  சித்தமானவனை  உயிரோடே  வைப்பார்;  தமக்குச்  சித்தமானவனை  உயர்த்துவார்,  தமக்குச்  சித்தமானவனைத்  தாழ்த்துவார்.  (தானியேல்  5:19)

avarukkuk  kodukkappatta  magaththuvaththinaalea  sagala  janangga'lum  jaathiyaarum  baashaikkaararum  avarukku  munbaaga  nadunggip  bayanthirunthaarga'l;  avar  thamakkuch  siththamaanavanaik  kon’rupoaduvaar,  thamakkuch  siththamaanavanai  uyiroadea  vaippaar;  thamakkuch  siththamaanavanai  uyarththuvaar,  thamakkuch  siththamaanavanaith  thaazhththuvaar.  (thaaniyeal  5:19)

அவருடைய  இருதயம்  மேட்டிமையாகி,  அவருடைய  ஆவி  கர்வத்தினாலே  கடினப்பட்டபோது,  அவர்  தமது  சிங்காசனத்திலிருந்து  தள்ளப்பட்டார்;  அவருடைய  மகிமை  அவரைவிட்டு  அகன்றுபோயிற்று.  (தானியேல்  5:20)

avarudaiya  iruthayam  meattimaiyaagi,  avarudaiya  aavi  karvaththinaalea  kadinappattapoathu,  avar  thamathu  singgaasanaththilirunthu  tha'l'lappattaar;  avarudaiya  magimai  avaraivittu  agan’rupoayit’ru.  (thaaniyeal  5:20)

அவர்  மனுஷரினின்று  தள்ளப்பட்டார்;  அவருடைய  இருதயம்  மிருகங்களுடைய  இருதயம்போலாயிற்று;  காட்டுக்கழுதைகளோடே  சஞ்சரித்தார்;  உன்னதமான  தேவன்  மனுஷரின்  ராஜ்யத்தில்  ஆளுகைசெய்து,  தமக்குச்  சித்தமானவனை  அதின்மேல்  அதிகாரியாக்குகிறார்  என்று  அவர்  உணர்ந்துகொள்ளுமட்டும்  மாடுகளைப்போல்  புல்லை  மேய்ந்தார்;  அவருடைய  சரீரம்  ஆகாயத்துப்  பனியிலே  நனைந்தது.  (தானியேல்  5:21)

avar  manusharinin’ru  tha'l'lappattaar;  avarudaiya  iruthayam  mirugangga'ludaiya  iruthayampoalaayit’ru;  kaattukkazhuthaiga'loadea  sagnchariththaar;  unnathamaana  theavan  manusharin  raajyaththil  aa'lugaiseythu,  thamakkuch  siththamaanavanai  athinmeal  athigaariyaakkugi’raar  en’ru  avar  u'narnthuko'l'lumattum  maaduga'laippoal  pullai  meaynthaar;  avarudaiya  sareeram  aagaayaththup  paniyilea  nanainthathu.  (thaaniyeal  5:21)

அவருடைய  குமாரனாகிய  பெல்ஷாத்சார்  என்னும்  நீரோவென்றால்,  இதையெல்லாம்  அறிந்திருந்தும்,  உமது  இருதயத்தைத்  தாழ்த்தாமல்,  (தானியேல்  5:22)

avarudaiya  kumaaranaagiya  belshaathsaar  ennum  neeroaven’raal,  ithaiyellaam  a’rinthirunthum,  umathu  iruthayaththaith  thaazhththaamal,  (thaaniyeal  5:22)

பரலோகத்தின்  ஆண்டவருக்கு  விரோதமாக  உம்மை  உயர்த்தினீர்;  அவருடைய  ஆலயத்தின்  பாத்திரங்களை  உமக்கு  முன்பாகக்  கொண்டுவந்தார்கள்;  நீரும்,  உம்முடைய  பிரபுக்களும்,  உம்முடைய  மனைவிகளும்,  உம்முடைய  வைப்பாட்டிகளும்  அவைகளில்  திராட்சரசம்  குடித்தீர்கள்;  இதுவுமன்றி,  தம்முடைய  கையில்  உமது  சுவாசத்தை  வைத்திருக்கிறவரும்,  உமது  வழிகளுக்கு  எல்லாம்  அதிகாரியுமாகிய  தேவனை  நீர்  மகிமைப்படுத்தாமல்  காணாமலும்  கேளாமலும்  உணராமலும்  இருக்கிற  வெள்ளியும்  பொன்னும்  வெண்கலமும்  இரும்பும்  மரமும்  கல்லுமாகிய  தேவர்களைப்  புகழ்ந்தீர்.  (தானியேல்  5:23)

paraloagaththin  aa'ndavarukku  viroathamaaga  ummai  uyarththineer;  avarudaiya  aalayaththin  paaththirangga'lai  umakku  munbaagak  ko'nduvanthaarga'l;  neerum,  ummudaiya  pirabukka'lum,  ummudaiya  manaiviga'lum,  ummudaiya  vaippaattiga'lum  avaiga'lil  thiraadcharasam  kudiththeerga'l;  ithuvuman’ri,  thammudaiya  kaiyil  umathu  suvaasaththai  vaiththirukki’ravarum,  umathu  vazhiga'lukku  ellaam  athigaariyumaagiya  theavanai  neer  magimaippaduththaamal  kaa'naamalum  kea'laamalum  u'naraamalum  irukki’ra  ve'l'liyum  ponnum  ve'ngalamum  irumbum  maramum  kallumaagiya  theavarga'laip  pugazhntheer.  (thaaniyeal  5:23)

அப்பொழுது  அந்தக்  கையுறுப்பு  அவரால்  அனுப்பப்பட்டு,  இந்த  எழுத்து  எழுதப்பட்டது.  (தானியேல்  5:24)

appozhuthu  anthak  kaiyu’ruppu  avaraal  anuppappattu,  intha  ezhuththu  ezhuthappattathu.  (thaaniyeal  5:24)

எழுதப்பட்ட  எழுத்து  என்னவென்றால்:  மெனே,  மெனே,  தெக்கேல்,  உப்பார்சின்  என்பதே.  (தானியேல்  5:25)

ezhuthappatta  ezhuththu  ennaven’raal:  menea,  menea,  thekkeal,  uppaarsin  enbathea.  (thaaniyeal  5:25)

இந்த  வசனத்தின்  அர்த்தமாவது:  மெனே  என்பதற்கு,  தேவன்  உன்  ராஜ்யத்தை  மட்டிட்டு,  அதற்கு  முடிவுண்டாக்கினார்  என்றும்,  (தானியேல்  5:26)

intha  vasanaththin  arththamaavathu:  menea  enbatha’rku,  theavan  un  raajyaththai  mattittu,  atha’rku  mudivu'ndaakkinaar  en’rum,  (thaaniyeal  5:26)

தெக்கேல்  என்பதற்கு,  நீ  தராசிலே  நிறுக்கப்பட்டு,  குறையக்  காணப்பட்டாய்  என்றும்,  (தானியேல்  5:27)

thekkeal  enbatha’rku,  nee  tharaasilea  ni’rukkappattu,  ku’raiyak  kaa'nappattaay  en’rum,  (thaaniyeal  5:27)

பெரேஸ்  என்பதற்கு,  உன்  ராஜ்யம்  பிரிக்கப்பட்டு,  மேதியருக்கும்  பெர்சியருக்கும்  கொடுக்கப்பட்டது  என்றும்  அர்த்தமாம்  என்றான்.  (தானியேல்  5:28)

pereas  enbatha’rku,  un  raajyam  pirikkappattu,  meathiyarukkum  persiyarukkum  kodukkappattathu  en’rum  arththamaam  en’raan.  (thaaniyeal  5:28)

அப்பொழுது  பெல்ஷாத்சார்  தானியேலுக்கு  இரத்தாம்பரத்தையும்,  அவனுடைய  கழுத்தில்  பொற்சரப்பணியையும்  தரிப்பிக்கவும்,  ராஜ்யத்திலே  அவன்  மூன்றாம்  அதிகாரியாயிருப்பவன்  என்று  அவனைக்குறித்துப்  பறைமுறையிடவும்  கட்டளையிட்டான்.  (தானியேல்  5:29)

appozhuthu  belshaathsaar  thaaniyealukku  iraththaambaraththaiyum,  avanudaiya  kazhuththil  po’rsarappa'niyaiyum  tharippikkavum,  raajyaththilea  avan  moon’raam  athigaariyaayiruppavan  en’ru  avanaikku’riththup  pa’raimu’raiyidavum  katta'laiyittaan.  (thaaniyeal  5:29)

அன்று  இராத்திரியிலே  கல்தேயரின்  ராஜாவாகிய  பெல்ஷாத்சார்  கொலைசெய்யப்பட்டான்.  (தானியேல்  5:30)

an’ru  iraaththiriyilea  kaltheayarin  raajaavaagiya  belshaathsaar  kolaiseyyappattaan.  (thaaniyeal  5:30)

மேதியனாகிய  தரியு  தன்  அறுபத்திரண்டாம்  வயதில்  ராஜ்யத்தைக்  கட்டிக்கொண்டான்.  (தானியேல்  5:31)

meathiyanaagiya  thariyu  than  a’rubaththira'ndaam  vayathil  raajyaththaik  kattikko'ndaan.  (thaaniyeal  5:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!