Thursday, July 14, 2016

Thaaniyeal 4 | தானியேல் 4 | Daniel 4


ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  பூமி  எங்கும்  குடியிருக்கிற  சகல  ஜனத்தாருக்கும்  ஜாதியாருக்கும்  பாஷைக்காரருக்கும்  எழுதுகிறது  என்னவென்றால்:  உங்களுக்குச்  சமாதானம்  பெருகக்கடவது.  (தானியேல்  4:1)

raajaavaagiya  neabukaathneachchaar  boomi  enggum  kudiyirukki’ra  sagala  janaththaarukkum  jaathiyaarukkum  baashaikkaararukkum  ezhuthugi’rathu  ennaven’raal:  ungga'lukkuch  samaathaanam  perugakkadavathu.  (thaaniyeal  4:1)

உன்னதமான  தேவன்  என்னிடத்தில்  செய்த  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  பிரசித்தப்படுத்துவது  எனக்கு  நன்மையாய்க்  கண்டது.  (தானியேல்  4:2)

unnathamaana  theavan  ennidaththil  seytha  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum  pirasiththappaduththuvathu  enakku  nanmaiyaayk  ka'ndathu.  (thaaniyeal  4:2)

அவருடைய  அடையாளங்கள்  எவ்வளவு  மகத்துவமும்,  அவருடைய  அற்புதங்கள்  எவ்வளவு  வல்லமையுமாயிருக்கிறது;  அவருடைய  ராஜ்யம்  நித்திய  ராஜ்யம்;  அவருடைய  ஆளுகை  தலைமுறை  தலைமுறையாக  நிற்கும்.  (தானியேல்  4:3)

avarudaiya  adaiyaa'langga'l  evva'lavu  magaththuvamum,  avarudaiya  a’rputhangga'l  evva'lavu  vallamaiyumaayirukki’rathu;  avarudaiya  raajyam  niththiya  raajyam;  avarudaiya  aa'lugai  thalaimu’rai  thalaimu’raiyaaga  ni’rkum.  (thaaniyeal  4:3)

நேபுகாத்நேச்சாராகிய  நான்  என்  வீட்டிலே  சவுக்கியமுள்ளவனாயிருந்து  என்  அரமனையிலே  வாழ்ந்துகொண்டிருந்தேன்.  (தானியேல்  4:4)

neabukaathneachchaaraagiya  naan  en  veettilea  savukkiyamu'l'lavanaayirunthu  en  aramanaiyilea  vaazhnthuko'ndirunthean.  (thaaniyeal  4:4)

நான்  ஒரு  சொப்பனத்தைக்  கண்டேன்;  அது  எனக்குத்  திகிலை  உண்டாக்கிற்று;  என்  படுக்கையின்மேல்  எனக்குள்  உண்டான  நினைவுகளும்,  என்  தலையில்  தோன்றின  தரிசனங்களும்  என்னைக்  கலங்கப்பண்ணிற்று.  (தானியேல்  4:5)

naan  oru  soppanaththaik  ka'ndean;  athu  enakkuth  thigilai  u'ndaakkit’ru;  en  padukkaiyinmeal  enakku'l  u'ndaana  ninaivuga'lum,  en  thalaiyil  thoan’rina  tharisanangga'lum  ennaik  kalanggappa'n'nit’ru.  (thaaniyeal  4:5)

ஆகையால்  சொப்பனத்தின்  அர்த்தத்தை  எனக்குத்  தெரிவிக்கிறதற்காகப்  பாபிலோன்  ஞானிகளையெல்லாம்  என்னிடத்தில்  கொண்டுவரும்படி  கட்டளையிட்டேன்.  (தானியேல்  4:6)

aagaiyaal  soppanaththin  arththaththai  enakkuth  therivikki’ratha’rkaagap  baabiloan  gnaaniga'laiyellaam  ennidaththil  ko'nduvarumpadi  katta'laiyittean.  (thaaniyeal  4:6)

அப்பொழுது  சாஸ்திரிகளும்,  ஜோசியரும்,  கல்தேயரும்,  குறிசொல்லுகிறவர்களும்  என்னிடத்திலே  வந்தார்கள்;  சொப்பனத்தை  நான்  அவர்களுக்குச்  சொன்னேன்;  ஆனாலும்  அதின்  அர்த்தத்தை  எனக்குத்  தெரிவிக்கமாட்டாமற்போனார்கள்.  (தானியேல்  4:7)

appozhuthu  saasthiriga'lum,  joasiyarum,  kaltheayarum,  ku’risollugi’ravarga'lum  ennidaththilea  vanthaarga'l;  soppanaththai  naan  avarga'lukkuch  sonnean;  aanaalum  athin  arththaththai  enakkuth  therivikkamaattaama’rpoanaarga'l.  (thaaniyeal  4:7)

கடைசியிலே  என்  தேவனுடைய  நாமத்தின்படியே  பெல்தெஷாத்சார்  என்னும்  பெயரிடப்பட்டு,  பரிசுத்த  தேவர்களின்  ஆவியையுடைய  தானியேல்  என்னிடத்தில்  கொண்டுவரப்பட்டான்;  அவனிடத்தில்  நான்  சொப்பனத்தை  விவரித்துச்  சொன்னதாவது:  (தானியேல்  4:8)

kadaisiyilea  en  theavanudaiya  naamaththinpadiyea  beltheshaathsaar  ennum  peyaridappattu,  parisuththa  theavarga'lin  aaviyaiyudaiya  thaaniyeal  ennidaththil  ko'nduvarappattaan;  avanidaththil  naan  soppanaththai  vivariththuch  sonnathaavathu:  (thaaniyeal  4:8)

சாஸ்திரிகளின்  அதிபதியாகிய  பெல்தெஷாத்சாரே,  பரிசுத்த  தேவர்களுடைய  ஆவி  உனக்குள்  இருக்கிறதென்றும்,  எந்த  மறைபொருளையும்  அறிவது  உனக்கு  அரிதல்லவென்றும்  நான்  அறிவேன்;  நான்  கண்ட  என்  சொப்பனத்தின்  தரிசனங்களையும்  அதின்  அர்த்தத்தையும்  சொல்லு.  (தானியேல்  4:9)

saasthiriga'lin  athibathiyaagiya  beltheshaathsaarea,  parisuththa  theavarga'ludaiya  aavi  unakku'l  irukki’rathen’rum,  entha  ma’raiporu'laiyum  a’rivathu  unakku  arithallaven’rum  naan  a’rivean;  naan  ka'nda  en  soppanaththin  tharisanangga'laiyum  athin  arththaththaiyum  sollu.  (thaaniyeal  4:9)

நான்  படுத்திருந்தபோது  என்  தலையில்  தோன்றின  தரிசனங்கள்  என்னவென்றால்:  இதோ,  தேசத்தின்  மத்தியிலே  மிகவும்  உயரமான  ஒரு  விருட்சத்தைக்  கண்டேன்.  (தானியேல்  4:10)

naan  paduththirunthapoathu  en  thalaiyil  thoan’rina  tharisanangga'l  ennaven’raal:  ithoa,  theasaththin  maththiyilea  migavum  uyaramaana  oru  virudchaththaik  ka'ndean.  (thaaniyeal  4:10)

அந்த  விருட்சம்  வளர்ந்து  பலத்து,  தேசத்தின்  எல்லைபரியந்தமும்  காணப்படத்தக்கதாக  அதின்  உயரம்  வானபரியந்தம்  எட்டினது.  (தானியேல்  4:11)

antha  virudcham  va'larnthu  balaththu,  theasaththin  ellaipariyanthamum  kaa'nappadaththakkathaaga  athin  uyaram  vaanapariyantham  ettinathu.  (thaaniyeal  4:11)

அதின்  இலைகள்  நேர்த்தியும்,  அதின்  கனி  மிகுதியுமாயிருந்தது;  எல்லா  ஜீவனுக்கும்  அதில்  ஆகாரம்  உண்டாயிருந்தது;  அதின்  கீழே  வெளியின்  மிருகங்கள்  நிழலுக்கு  ஒதுங்கினது;  அதின்  கொப்புகளில்  ஆகாயத்துப்  பட்சிகள்  தாபரித்துச்  சகல  பிராணிகளும்  அதினால்  போஷிக்கப்பட்டது.  (தானியேல்  4:12)

athin  ilaiga'l  nearththiyum,  athin  kani  miguthiyumaayirunthathu;  ellaa  jeevanukkum  athil  aagaaram  u'ndaayirunthathu;  athin  keezhea  ve'liyin  mirugangga'l  nizhalukku  othungginathu;  athin  koppuga'lil  aagaayaththup  padchiga'l  thaabariththuch  sagala  piraa'niga'lum  athinaal  poashikkappattathu.  (thaaniyeal  4:12)

நான்  படுத்திருக்கையில்  என்  தலையில்  தோன்றின  தரிசனங்களைக்  காணும்போது,  காவலாளனாகிய  பரிசுத்தவான்  ஒருவன்  வானத்திலிருந்து  இறங்கக்கண்டேன்.  (தானியேல்  4:13)

naan  paduththirukkaiyil  en  thalaiyil  thoan’rina  tharisanangga'laik  kaa'numpoathu,  kaavalaa'lanaagiya  parisuththavaan  oruvan  vaanaththilirunthu  i’ranggakka'ndean.  (thaaniyeal  4:13)

அவன்  உரத்த  சத்தமிட்டு:  இந்த  விருட்சத்தை  வெட்டி,  இதின்  கொப்புகளைத்  தறித்துப்போடுங்கள்;  இதின்  இலைகளை  உதிர்த்து,  இதின்  கனிகளைச்  சிதறடியுங்கள்;  இதின்  கீழுள்ள  மிருகங்களும்  இதின்  கொப்புகளிலுள்ள  பட்சிகளும்  போய்விடட்டும்.  (தானியேல்  4:14)

avan  uraththa  saththamittu:  intha  virudchaththai  vetti,  ithin  koppuga'laith  tha’riththuppoadungga'l;  ithin  ilaiga'lai  uthirththu,  ithin  kaniga'laich  sitha’radiyungga'l;  ithin  keezhu'l'la  mirugangga'lum  ithin  koppuga'lilu'l'la  padchiga'lum  poayvidattum.  (thaaniyeal  4:14)

ஆனாலும்  இதின்  வேர்களாகிய  அடிமரம்  பூமியில்  இருக்கட்டும்;  இரும்பும்  வெண்கலமுமான  விலங்கு  இடப்பட்டு,  வெளியின்  பசும்புல்லிலே  தங்கி,  ஆகாயத்துப்  பனியிலே  நனைவதாக;  மிருகங்களோடே  பூமியின்  பூண்டிலே  அவனுக்குப்  பங்கு  இருக்கக்கடவது.  (தானியேல்  4:15)

aanaalum  ithin  vearga'laagiya  adimaram  boomiyil  irukkattum;  irumbum  ve'ngalamumaana  vilanggu  idappattu,  ve'liyin  pasumpullilea  thanggi,  aagaayaththup  paniyilea  nanaivathaaga;  mirugangga'loadea  boomiyin  poo'ndilea  avanukkup  panggu  irukkakkadavathu.  (thaaniyeal  4:15)

அவனுடைய  இருதயம்  மனுஷ  இருதயமாயிராமல்  மாறும்படி,  மிருக  இருதயம்  அவனுக்குக்  கொடுக்கப்படக்கடவது;  இப்படியிருக்கிற  அவன்மேல்  ஏழு  காலங்கள்  கடந்துபோகவேண்டும்.  (தானியேல்  4:16)

avanudaiya  iruthayam  manusha  iruthayamaayiraamal  maa’rumpadi,  miruga  iruthayam  avanukkuk  kodukkappadakkadavathu;  ippadiyirukki’ra  avanmeal  eazhu  kaalangga'l  kadanthupoagavea'ndum.  (thaaniyeal  4:16)

உன்னதமானவர்  மனுஷருடைய  ராஜ்யத்தில்  ஆளுகைசெய்து  தமக்குச்  சித்தமானவனுக்கு  அதைக்  கொடுத்து,  மனுஷரில்  தாழ்ந்தவனையும்  அதின்மேல்  அதிகாரியாக்குகிறார்  என்று  நரஜீவன்கள்  அறியும்படிக்குக்  காவலாளரின்  தீர்ப்பினால்  இந்தக்  காரியமும்  பரிசுத்தவான்களின்  மொழியினால்  இந்த  விசாரணையும்  தீர்மானிக்கப்பட்டது  என்றான்.  (தானியேல்  4:17)

unnathamaanavar  manusharudaiya  raajyaththil  aa'lugaiseythu  thamakkuch  siththamaanavanukku  athaik  koduththu,  manusharil  thaazhnthavanaiyum  athinmeal  athigaariyaakkugi’raar  en’ru  narajeevanga'l  a’riyumpadikkuk  kaavalaa'larin  theerppinaal  inthak  kaariyamum  parisuththavaanga'lin  mozhiyinaal  intha  visaara'naiyum  theermaanikkappattathu  en’raan.  (thaaniyeal  4:17)

நேபுகாத்நேச்சார்  என்னும்  ராஜாவாகிய  நான்  கண்ட  சொப்பனம்  இதுவே;  இப்போது  பெல்தெஷாத்சாரே,  நீ  இதின்  அர்த்தத்தைச்  சொல்லு;  என்  ராஜ்யத்திலுள்ள  ஞானிகள்  எல்லாராலும்  இதின்  அர்த்தத்தை  எனக்குத்  தெரிவிக்கக்கூடாமற்போயிற்று;  நீயோ  இதைத்  தெரிவிக்கத்தக்கவன்;  பரிசுத்த  தேவர்களுடைய  ஆவி  உனக்குள்  இருக்கிறதே  என்றான்.  (தானியேல்  4:18)

neabukaathneachchaar  ennum  raajaavaagiya  naan  ka'nda  soppanam  ithuvea;  ippoathu  beltheshaathsaarea,  nee  ithin  arththaththaich  sollu;  en  raajyaththilu'l'la  gnaaniga'l  ellaaraalum  ithin  arththaththai  enakkuth  therivikkakkoodaama’rpoayit’ru;  neeyoa  ithaith  therivikkaththakkavan;  parisuththa  theavarga'ludaiya  aavi  unakku'l  irukki’rathea  en’raan.  (thaaniyeal  4:18)

அப்பொழுது  பெல்தெஷாத்சாரென்னும்  பெயருள்ள  தானியேல்  ஒரு  நாழிகைமட்டும்  திகைத்துச்  சிந்தித்துக்  கலங்கினான்.  ராஜா  அவனை  நோக்கி:  பெல்தெஷாத்சாரே,  சொப்பனமும்  அதின்  அர்த்தமும்  உன்னைக்  கலங்கப்பண்ணவேண்டியதில்லை  என்றான்;  அப்பொழுது  பெல்தெஷாத்சார்  பிரதியுத்தரமாக:  என்  ஆண்டவனே,  அந்தச்  சொப்பனம்  உம்முடைய  பகைவரிடத்திலும்,  அதின்  அர்த்தம்  உம்முடைய  சத்துருக்களிடத்திலும்  பலிக்கக்கடவது.  (தானியேல்  4:19)

appozhuthu  beltheshaathsaarennum  peyaru'l'la  thaaniyeal  oru  naazhigaimattum  thigaiththuch  sinthiththuk  kalangginaan.  raajaa  avanai  noakki:  beltheshaathsaarea,  soppanamum  athin  arththamum  unnaik  kalanggappa'n'navea'ndiyathillai  en’raan;  appozhuthu  beltheshaathsaar  pirathiyuththaramaaga:  en  aa'ndavanea,  anthach  soppanam  ummudaiya  pagaivaridaththilum,  athin  arththam  ummudaiya  saththurukka'lidaththilum  palikkakkadavathu.  (thaaniyeal  4:19)

நீர்  கண்ட  விருட்சம்  வளர்ந்து  பலத்து,  தேசத்தின்  எல்லைபரியந்தம்  காணப்படத்தக்கதாக  அதின்  உயரம்  வானபரியந்தம்  எட்டினது.  (தானியேல்  4:20)

neer  ka'nda  virudcham  va'larnthu  balaththu,  theasaththin  ellaipariyantham  kaa'nappadaththakkathaaga  athin  uyaram  vaanapariyantham  ettinathu.  (thaaniyeal  4:20)

அதின்  இலைகள்  நேர்த்தியும்,  அதின்  கனி  மிகுதியுமாயிருந்தது;  எல்லா  ஜீவனுக்கும்  அதில்  ஆகாரம்  உண்டாயிருந்தது;  அதின்  கீழே  வெளியின்  மிருகங்கள்  தங்கினது,  அதின்  கொப்புகளில்  ஆகாயத்துப்பட்சிகள்  தாபரித்தது.  (தானியேல்  4:21)

athin  ilaiga'l  nearththiyum,  athin  kani  miguthiyumaayirunthathu;  ellaa  jeevanukkum  athil  aagaaram  u'ndaayirunthathu;  athin  keezhea  ve'liyin  mirugangga'l  thangginathu,  athin  koppuga'lil  aagaayaththuppadchiga'l  thaabariththathu.  (thaaniyeal  4:21)

அது  பெரியவரும்  பலத்தவருமாயிருக்கிற  ராஜாவாகிய  நீர்தாமே;  உமது  மகத்துவம்  பெருகி  வானபரியந்தமும்,  உமது  கர்த்தத்துவம்  பூமியின்  எல்லைபரியந்தமும்  எட்டியிருக்கிறது.  (தானியேல்  4:22)

athu  periyavarum  balaththavarumaayirukki’ra  raajaavaagiya  neerthaamea;  umathu  magaththuvam  perugi  vaanapariyanthamum,  umathu  karththaththuvam  boomiyin  ellaipariyanthamum  ettiyirukki’rathu.  (thaaniyeal  4:22)

இந்த  விருட்சத்தை  வெட்டி,  இதை  அழித்துப்போடுங்கள்;  ஆனாலும்  இதின்  வேர்களாகிய  அடிமரம்  தரையில்  இருக்கட்டுமென்றும்,  இரும்பும்  வெண்கலமுமான  விலங்கு  இடப்பட்டு,  வெளியின்  பசும்புல்லிலே  தங்கி,  ஆகாயத்துப்  பனியிலே  நனைவதாக;  ஏழு  காலங்கள்  அவன்மேல்  கடந்துபோகுமட்டும்  மிருகங்களோடே  அவனுடைய  பங்கு  இருக்கக்கடவதென்றும்,  வானத்திலிருந்து  இறங்கிச்  சொன்ன  பரிசுத்த  காவலாளனை  ராஜாவாகிய  நீர்  கண்டீரே.  (தானியேல்  4:23)

intha  virudchaththai  vetti,  ithai  azhiththuppoadungga'l;  aanaalum  ithin  vearga'laagiya  adimaram  tharaiyil  irukkattumen’rum,  irumbum  ve'ngalamumaana  vilanggu  idappattu,  ve'liyin  pasumpullilea  thanggi,  aagaayaththup  paniyilea  nanaivathaaga;  eazhu  kaalangga'l  avanmeal  kadanthupoagumattum  mirugangga'loadea  avanudaiya  panggu  irukkakkadavathen’rum,  vaanaththilirunthu  i’ranggich  sonna  parisuththa  kaavalaa'lanai  raajaavaagiya  neer  ka'ndeerea.  (thaaniyeal  4:23)

ராஜாவே,  அதின்  அர்த்தமும்  ராஜாவாகிய  என்  ஆண்டவன்பேரில்  வந்த  உன்னதமானவருடைய  தீர்மானமும்  என்னவென்றால்:  மனுஷரினின்று  நீர்  தள்ளிவிடப்படுவீர்;  வெளியின்  மிருகங்களோடே  சஞ்சரிப்பீர்;  மாடுகளைப்போலப்  புல்லைமேய்ந்து,  ஆகாயத்துப்  பனியிலே  நனைவீர்.  (தானியேல்  4:24)

raajaavea,  athin  arththamum  raajaavaagiya  en  aa'ndavanpearil  vantha  unnathamaanavarudaiya  theermaanamum  ennaven’raal:  manusharinin’ru  neer  tha'l'lividappaduveer;  ve'liyin  mirugangga'loadea  sagncharippeer;  maaduga'laippoalap  pullaimeaynthu,  aagaayaththup  paniyilea  nanaiveer.  (thaaniyeal  4:24)

உன்னதமானவர்  மனுஷருடைய  ராஜ்யத்தில்  ஆளுகைசெய்து,  தமக்குச்  சித்தமாயிருக்கிறவனுக்கு  அதைக்  கொடுக்கிறார்  என்பதை  நீர்  அறிந்துகொள்ளுமட்டும்  ஏழு  காலங்கள்  உம்முடையபேரில்  கடந்துபோகவேண்டும்.  (தானியேல்  4:25)

unnathamaanavar  manusharudaiya  raajyaththil  aa'lugaiseythu,  thamakkuch  siththamaayirukki’ravanukku  athaik  kodukki’raar  enbathai  neer  a’rinthuko'l'lumattum  eazhu  kaalangga'l  ummudaiyapearil  kadanthupoagavea'ndum.  (thaaniyeal  4:25)

ஆனாலும்  விருட்சத்தின்  வேர்களாகிய  அடிமரம்  தரையில்  இருக்கட்டும்  என்று  சொல்லப்பட்டது  என்னவென்றால்:  நீர்  பரம  அதிகாரத்தை  அறிந்தபின்,  ராஜ்யம்  உமக்கு  நிலைநிற்கும்.  (தானியேல்  4:26)

aanaalum  virudchaththin  vearga'laagiya  adimaram  tharaiyil  irukkattum  en’ru  sollappattathu  ennaven’raal:  neer  parama  athigaaraththai  a’rinthapin,  raajyam  umakku  nilaini’rkum.  (thaaniyeal  4:26)

ஆகையால்  ராஜாவே,  நான்  சொல்லும்  ஆலோசனையை  நீர்  அங்கீகரித்துக்கொண்டு  நீதியைச்  செய்து  உமது  பாவங்களையும்,  சிறுமையானவர்களுக்கு  இரங்கி  உமது  அக்கிரமங்களையும்  அகற்றிவிடும்;  அப்பொழுது  உம்முடைய  வாழ்வு  நீடித்திருக்கலாம்  என்றான்.  (தானியேல்  4:27)

aagaiyaal  raajaavea,  naan  sollum  aaloasanaiyai  neer  anggeegariththukko'ndu  neethiyaich  seythu  umathu  paavangga'laiyum,  si’rumaiyaanavarga'lukku  iranggi  umathu  akkiramangga'laiyum  agat’rividum;  appozhuthu  ummudaiya  vaazhvu  neediththirukkalaam  en’raan.  (thaaniyeal  4:27)

இதெல்லாம்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரின்மேல்  வந்தது.  (தானியேல்  4:28)

ithellaam  raajaavaagiya  neabukaathneachchaarinmeal  vanthathu.  (thaaniyeal  4:28)

பன்னிரண்டு  மாதம்  சென்றபின்பு,  ராஜா  பாபிலோன்  ராஜ்யத்தின்  அரமனைமேல்  உலாவிக்கொண்டிருக்கும்போது:  (தானியேல்  4:29)

pannira'ndu  maatham  sen’rapinbu,  raajaa  baabiloan  raajyaththin  aramanaimeal  ulaavikko'ndirukkumpoathu:  (thaaniyeal  4:29)

இது  என்  வல்லமையின்  பராக்கிரமத்தினால்,  என்  மகிமைப்பிரதாபத்துக்கென்று,  ராஜ்யத்துக்கு  அரமனையாக  நான்  கட்டின  மகா  பாபிலோன்  அல்லவா  என்று  சொன்னான்.  (தானியேல்  4:30)

ithu  en  vallamaiyin  baraakkiramaththinaal,  en  magimaippirathaabaththukken’ru,  raajyaththukku  aramanaiyaaga  naan  kattina  mahaa  baabiloan  allavaa  en’ru  sonnaan.  (thaaniyeal  4:30)

இந்த  வார்த்தை  ராஜாவின்  வாயில்  இருக்கும்போதே,  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகி:  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரே,  ராஜ்யபாரம்  உன்னைவிட்டு  நீங்கிற்று.  (தானியேல்  4:31)

intha  vaarththai  raajaavin  vaayil  irukkumpoathea,  vaanaththilirunthu  oru  saththam  u'ndaagi:  raajaavaagiya  neabukaathneachchaarea,  raajyabaaram  unnaivittu  neenggit’ru.  (thaaniyeal  4:31)

மனுஷரினின்று  தள்ளப்படுவாய்;  வெளியின்  மிருகங்களோடே  சஞ்சரிப்பாய்;  மாடுகளைப்போல்  புல்லை  மேய்வாய்;  இப்படியே  உன்னதமானவர்  மனுஷருடைய  ராஜ்யத்தில்  ஆளுகைசெய்து,  தமக்குச்  சித்தமாயிருக்கிறவனுக்கு  அதைக்  கொடுக்கிறாரென்பதை  நீ  அறிந்துகொள்ளுமட்டும்  ஏழு  காலங்கள்  உன்மேல்  கடந்துபோகும்  என்று  உனக்குச்  சொல்லப்படுகிறது  என்று  விளம்பினது.  (தானியேல்  4:32)

manusharinin’ru  tha'l'lappaduvaay;  ve'liyin  mirugangga'loadea  sagncharippaay;  maaduga'laippoal  pullai  meayvaay;  ippadiyea  unnathamaanavar  manusharudaiya  raajyaththil  aa'lugaiseythu,  thamakkuch  siththamaayirukki’ravanukku  athaik  kodukki’raarenbathai  nee  a’rinthuko'l'lumattum  eazhu  kaalangga'l  unmeal  kadanthupoagum  en’ru  unakkuch  sollappadugi’rathu  en’ru  vi'lambinathu.  (thaaniyeal  4:32)

அந்நேரமே  இந்த  வார்த்தை  நேபுகாத்நேச்சாரிடத்தில்  நிறைவேறிற்று;  அவன்  மனுஷரினின்று  தள்ளப்பட்டு,  மாடுகளைப்போல்  புல்லை  மேய்ந்தான்;  அவனுடைய  தலைமயிர்  கழுகுகளுடைய  இறகுகளைப்போலவும்,  அவனுடைய  நகங்கள்  பட்சிகளுடைய  நகங்களைப்போலவும்  வளருமட்டும்  அவன்  சரீரம்  ஆகாயத்துப்  பனியிலே  நனைந்தது.  (தானியேல்  4:33)

annearamea  intha  vaarththai  neabukaathneachchaaridaththil  ni’raivea’rit’ru;  avan  manusharinin’ru  tha'l'lappattu,  maaduga'laippoal  pullai  meaynthaan;  avanudaiya  thalaimayir  kazhuguga'ludaiya  i’raguga'laippoalavum,  avanudaiya  nagangga'l  padchiga'ludaiya  nagangga'laippoalavum  va'larumattum  avan  sareeram  aagaayaththup  paniyilea  nanainthathu.  (thaaniyeal  4:33)

அந்த  நாட்கள்  சென்றபின்பு,  நேபுகாத்நேச்சாராகிய  நான்  என்  கண்களை  வானத்துக்கு  ஏறெடுத்தேன்;  என்  புத்தி  எனக்குத்  திரும்பி  வந்தது;  அப்பொழுது  நான்  உன்னதமானவரை  ஸ்தோத்திரித்து,  என்றென்றைக்கும்  ஜீவித்திருக்கிறவரைப்  புகழ்ந்து  மகிமைப்படுத்தினேன்;  அவருடைய  கர்த்தத்துவமே  நித்திய  கர்த்தத்துவம்,  அவருடைய  ராஜ்யமே  தலைமுறை  தலைமுறையாக  நிற்கும்.  (தானியேல்  4:34)

antha  naadka'l  sen’rapinbu,  neabukaathneachchaaraagiya  naan  en  ka'nga'lai  vaanaththukku  ea’reduththean;  en  buththi  enakkuth  thirumbi  vanthathu;  appozhuthu  naan  unnathamaanavarai  sthoaththiriththu,  en’ren’raikkum  jeeviththirukki’ravaraip  pugazhnthu  magimaippaduththinean;  avarudaiya  karththaththuvamea  niththiya  karththaththuvam,  avarudaiya  raajyamea  thalaimu’rai  thalaimu’raiyaaga  ni’rkum.  (thaaniyeal  4:34)

பூமியின்  குடிகள்  எல்லாம்  ஒன்றுமில்லையென்று  எண்ணப்படுகிறார்கள்;  அவர்  தமது  சித்தத்தின்படியே  வானத்தின்  சேனையையும்  பூமியின்  குடிகளையும்  நடத்துகிறார்;  அவருடைய  கையைத்  தடுத்து,  அவரை  நோக்கி:  என்ன  செய்கிறீரென்று  சொல்லத்தக்கவன்  ஒருவனும்  இல்லை  என்றேன்.  (தானியேல்  4:35)

boomiyin  kudiga'l  ellaam  on’rumillaiyen’ru  e'n'nappadugi’raarga'l;  avar  thamathu  siththaththinpadiyea  vaanaththin  seanaiyaiyum  boomiyin  kudiga'laiyum  nadaththugi’raar;  avarudaiya  kaiyaith  thaduththu,  avarai  noakki:  enna  seygi’reeren’ru  sollaththakkavan  oruvanum  illai  en’rean.  (thaaniyeal  4:35)

அவ்வேளையில்  என்  புத்தி  எனக்குத்  திரும்பி  வந்தது;  என்  ராஜ்யபாரத்தின்  மேன்மைக்காக  என்  மகிமையும்  என்  முகக்களையும்  எனக்குத்  திரும்பி  வந்தது;  என்  மந்திரிமாரும்  என்  பிரபுக்களும்  என்னைத்  தேடிவந்தார்கள்;  என்  ராஜ்யத்திலே  நான்  ஸ்திரப்படுத்தப்பட்டேன்;  அதிக  மகத்துவமும்  எனக்குக்  கிடைத்தது.  (தானியேல்  4:36)

avvea'laiyil  en  buththi  enakkuth  thirumbi  vanthathu;  en  raajyabaaraththin  meanmaikkaaga  en  magimaiyum  en  mugakka'laiyum  enakkuth  thirumbi  vanthathu;  en  manthirimaarum  en  pirabukka'lum  ennaith  theadivanthaarga'l;  en  raajyaththilea  naan  sthirappaduththappattean;  athiga  magaththuvamum  enakkuk  kidaiththathu.  (thaaniyeal  4:36)

ஆகையால்  நேபுகாத்நேச்சாராகிய  நான்  பரலோகத்தின்  ராஜாவைப்  புகழ்ந்து,  உயர்த்தி,  மகிமைப்படுத்துகிறேன்;  அவருடைய  கிரியைகளெல்லாம்  சத்தியமும்,  அவருடைய  வழிகள்  நியாயமுமானவைகள்;  அகந்தையாய்  நடக்கிறவர்களைத்  தாழ்த்த  அவராலே  ஆகும்  என்று  எழுதினான்.  (தானியேல்  4:37)

aagaiyaal  neabukaathneachchaaraagiya  naan  paraloagaththin  raajaavaip  pugazhnthu,  uyarththi,  magimaippaduththugi’rean;  avarudaiya  kiriyaiga'lellaam  saththiyamum,  avarudaiya  vazhiga'l  niyaayamumaanavaiga'l;  aganthaiyaay  nadakki’ravarga'laith  thaazhththa  avaraalea  aagum  en’ru  ezhuthinaan.  (thaaniyeal  4:37)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!