Friday, July 15, 2016

Thaaniyeal 12 | தானியேல் 12 | Daniel 12

உன்  ஜனத்தின்  புத்திரருக்காக  நிற்கிற  பெரிய  அதிபதியாகிய  மிகாவேல்  அக்காலத்திலே  எழும்புவான்;  யாதொரு  ஜாதியாரும்  தோன்றினதுமுதல்  அக்காலமட்டும்  உண்டாயிராத  ஆபத்துக்காலம்  வரும்;  அக்காலத்திலே  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறவர்களாகக்  காணப்படுகிற  உன்  ஜனங்கள்  அனைவரும்  விடுவிக்கப்படுவார்கள்.  (தானியேல்  12:1)

un  janaththin  puththirarukkaaga  ni’rki’ra  periya  athibathiyaagiya  migaaveal  akkaalaththilea  ezhumbuvaan;  yaathoru  jaathiyaarum  thoan’rinathumuthal  akkaalamattum  u'ndaayiraatha  aabaththukkaalam  varum;  akkaalaththilea  pusthagaththil  ezhuthiyirukki’ravarga'laagak  kaa'nappadugi’ra  un  janangga'l  anaivarum  viduvikkappaduvaarga'l.  (thaaniyeal  12:1)

பூமியின்  தூளிலே  நித்திரைபண்ணுகிறவர்களாகிய  அநேகரில்  சிலர்  நித்தியஜீவனுக்கும்,  சிலர்  நித்திய  நிந்தைக்கும்  இகழ்ச்சிக்கும்  விழித்து  எழுந்திருப்பார்கள்.  (தானியேல்  12:2)

boomiyin  thoo'lilea  niththiraipa'n'nugi’ravarga'laagiya  aneagaril  silar  niththiyajeevanukkum,  silar  niththiya  ninthaikkum  igazhchchikkum  vizhiththu  ezhunthiruppaarga'l.  (thaaniyeal  12:2)

ஞானவான்கள்  ஆகாயமண்டலத்தின்  ஒளியைப்போலவும்,  அநேகரை  நீதிக்குட்படுத்துகிறவர்கள்  நட்சத்திரங்களைப்போலவும்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  பிரகாசிப்பார்கள்.  (தானியேல்  12:3)

gnaanavaanga'l  aagaayama'ndalaththin  o'liyaippoalavum,  aneagarai  neethikkudpaduththugi’ravarga'l  nadchaththirangga'laippoalavum  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lilum  piragaasippaarga'l.  (thaaniyeal  12:3)

தானியேலாகிய  நீயோவென்றால்,  முடிவுகாலமட்டும்  இந்த  வார்த்தைகளைப்  புதைபொருளாக  வைத்து  வைத்து,  இந்தப்புஸ்தகத்தை  முத்திரைபோடு;  அப்பொழுது  அநேகர்  இங்கும்  அங்கும்  ஓடி  ஆராய்வார்கள்,  அறிவும்  பெருகிப்போம்  என்றான்.  (தானியேல்  12:4)

thaaniyealaagiya  neeyoaven’raal,  mudivukaalamattum  intha  vaarththaiga'laip  puthaiporu'laaga  vaiththu  vaiththu,  inthappusthagaththai  muththiraipoadu;  appozhuthu  aneagar  inggum  anggum  oadi  aaraayvaarga'l,  a’rivum  perugippoam  en’raan.  (thaaniyeal  12:4)

அப்பொழுது,  தானியேலாகிய  நான்  ஆற்றுக்கு  இக்கரையில்  ஒருவனும்  ஆற்றுக்கு  அக்கரையில்  ஒருவனுமாகிய  வேறே  இரண்டுபேர்  நிற்கக்கண்டேன்.  (தானியேல்  12:5)

appozhuthu,  thaaniyealaagiya  naan  aat’rukku  ikkaraiyil  oruvanum  aat’rukku  akkaraiyil  oruvanumaagiya  vea’rea  ira'ndupear  ni’rkakka'ndean.  (thaaniyeal  12:5)

சணல்வஸ்திரம்  தரித்தவரும்,  ஆற்றின்  தண்ணீர்களின்மேல்  நிற்கிறவருமாகிய  புருஷனை  ஒருவன்  நோக்கி:  இந்த  ஆச்சரியமானவைகளின்  முடிவு  வர  எவ்வளவுகாலம்  செல்லும்  என்று  கேட்டான்.  (தானியேல்  12:6)

sa'nalvasthiram  thariththavarum,  aat’rin  tha'n'neerga'linmeal  ni’rki’ravarumaagiya  purushanai  oruvan  noakki:  intha  aachchariyamaanavaiga'lin  mudivu  vara  evva'lavukaalam  sellum  en’ru  keattaan.  (thaaniyeal  12:6)

அப்பொழுது  சணல்வஸ்திரம்  தரித்தவரும்  ஆற்றின்  தண்ணீர்களின்மேல்  நிற்கிறவருமாகிய  புருஷன்  தம்முடைய  வலதுகரத்தையும்  தம்முடைய  இடதுகரத்தையும்  வானத்துக்கு  நேராக  ஏறெடுத்து,  ஒரு  காலமும்,  காலங்களும்,  அரைக்காலமும்  செல்லும்  என்றும்;  பரிசுத்த  ஜனங்களின்  வல்லமையைச்  சிதறடித்தல்  முடிவுபெறும்போதே  இவைகளெல்லாம்  நிறைவேறித்  தீருமென்றும்  என்றென்றைக்கும்  ஜீவித்திருக்கிறவர்பேரில்  ஆணையிடக்  கேட்டேன்.  (தானியேல்  12:7)

appozhuthu  sa'nalvasthiram  thariththavarum  aat’rin  tha'n'neerga'linmeal  ni’rki’ravarumaagiya  purushan  thammudaiya  valathukaraththaiyum  thammudaiya  idathukaraththaiyum  vaanaththukku  nearaaga  ea’reduththu,  oru  kaalamum,  kaalangga'lum,  araikkaalamum  sellum  en’rum;  parisuththa  janangga'lin  vallamaiyaich  sitha’radiththal  mudivupe’rumpoathea  ivaiga'lellaam  ni’raivea’rith  theerumen’rum  en’ren’raikkum  jeeviththirukki’ravarpearil  aa'naiyidak  keattean.  (thaaniyeal  12:7)

நான்  அதைக்  கேட்டும்,  அதின்  பொருளை  அறியவில்லை;  ஆகையால்:  என்  ஆண்டவனே,  இவைகளின்  முடிவு  என்னமாயிருக்கும்  என்று  கேட்டேன்.  (தானியேல்  12:8)

naan  athaik  keattum,  athin  poru'lai  a’riyavillai;  aagaiyaal:  en  aa'ndavanea,  ivaiga'lin  mudivu  ennamaayirukkum  en’ru  keattean.  (thaaniyeal  12:8)

அதற்கு  அவன்:  தானியேலே,  போகலாம்;  இந்த  வார்த்தைகள்  முடிவுகாலமட்டும்  புதைபொருளாக  வைக்கப்பட்டும்  முத்திரிக்கப்பட்டும்  இருக்கும்.  (தானியேல்  12:9)

atha’rku  avan:  thaaniyealea,  poagalaam;  intha  vaarththaiga'l  mudivukaalamattum  puthaiporu'laaga  vaikkappattum  muththirikkappattum  irukkum.  (thaaniyeal  12:9)

அநேகர்  சுத்தமும்  வெண்மையுமாக்கப்பட்டு,  புடமிடப்பட்டவர்களாய்  விளங்குவார்கள்;  துன்மார்க்கரோ  துன்மார்க்கமாய்  நடப்பார்கள்;  துன்மார்க்கரில்  ஒருவனும்  உணரான்,  ஞானவான்களோ  உணர்ந்துகொள்ளுவார்கள்.  (தானியேல்  12:10)

aneagar  suththamum  ve'nmaiyumaakkappattu,  pudamidappattavarga'laay  vi'langguvaarga'l;  thunmaarkkaroa  thunmaarkkamaay  nadappaarga'l;  thunmaarkkaril  oruvanum  u'naraan,  gnaanavaanga'loa  u'narnthuko'l'luvaarga'l.  (thaaniyeal  12:10)

அன்றாடபலி  நீக்கப்பட்டு,  பாழாக்கும்  அருவருப்பு  ஸ்தாபிக்கப்படுங்காலமுதல்  ஆயிரத்திருநூற்றுத்  தொண்ணூறுநாள்  செல்லும்.  (தானியேல்  12:11)

an’raadabali  neekkappattu,  paazhaakkum  aruvaruppu  sthaabikkappadungkaalamuthal  aayiraththirunoot’ruth  tho'n'noo’runaa'l  sellum.  (thaaniyeal  12:11)

ஆயிரத்து  முந்நூற்று  முப்பத்தைந்து  நாள்மட்டும்  காத்திருந்து  சேருகிறவன்  பாக்கியவான்.  (தானியேல்  12:12)

aayiraththu  munnoot’ru  muppaththainthu  naa'lmattum  kaaththirunthu  searugi’ravan  baakkiyavaan.  (thaaniyeal  12:12)

நீயோவென்றால்  முடிவுவருமட்டும்  போயிரு;  நீ  இளைப்பாறிக்கொண்டிருந்து,  நாட்களின்  முடிவிலே  உன்  சுதந்தர  வீதத்துக்கு  எழுந்திருப்பாய்  என்றான்.  (தானியேல்  12:13)

neeyoaven’raal  mudivuvarumattum  poayiru;  nee  i'laippaa’rikko'ndirunthu,  naadka'lin  mudivilea  un  suthanthara  veethaththukku  ezhunthiruppaay  en’raan.  (thaaniyeal  12:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!