Thursday, July 14, 2016

Thaaniyeal 1 | தானியேல் 1 | Daniel 1


யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீம்  அரசாண்ட  மூன்றாம்  வருஷத்திலே  பாபிலோனின்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  எருசலேமுக்கு  வந்து,  அதை  முற்றிக்கைபோட்டான்.  (தானியேல்  1:1)

yoothaavin  raajaavaagiya  yoayaakkeem  arasaa'nda  moon’raam  varushaththilea  baabiloanin  raajaavaagiya  neabukaathneachchaar  erusaleamukku  vanthu,  athai  mut’rikkaipoattaan.  (thaaniyeal  1:1)

அப்பொழுது  ஆண்டவர்  யூதாவின்  ராஜாவாகிய  யோயாக்கீமையும்  தேவனுடைய  ஆலயத்தின்  பாத்திரங்களில்  சிலவற்றையும்  அவன்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  அவன்  அந்தப்  பாத்திரங்களைச்  சினேயார்  தேசத்திலுள்ள  தன்  தேவனுடைய  கோவிலுக்குக்  கொண்டுபோய்,  அவைகளைத்  தன்  தேவனுடைய  பண்டசாலைக்குள்  வைத்தான்.  (தானியேல்  1:2)

appozhuthu  aa'ndavar  yoothaavin  raajaavaagiya  yoayaakkeemaiyum  theavanudaiya  aalayaththin  paaththirangga'lil  silavat’raiyum  avan  kaiyil  oppukkoduththaar;  avan  anthap  paaththirangga'laich  sineayaar  theasaththilu'l'la  than  theavanudaiya  koavilukkuk  ko'ndupoay,  avaiga'laith  than  theavanudaiya  pa'ndasaalaikku'l  vaiththaan.  (thaaniyeal  1:2)

அப்பொழுது  இஸ்ரவேல்  புத்திரருக்குள்ளே  ராஜகுலத்தார்களிலும்  துரைமக்களிலும்  யாதொரு  மாசும்  இல்லாதவர்களும்,  அழகானவர்களும்,  சகல  ஞானத்திலும்  தேறினவர்களும்,  அறிவில்  சிறந்தவர்களும்,  கல்வியில்  நிபுணரும்,  ராஜாவின்  அரமனையிலே  சேவிக்கத்  திறமையுள்ளவர்களுமாகிய  சில  வாலிபரைக்  கொண்டுவரவும்,  (தானியேல்  1:3)

appozhuthu  israveal  puththirarukku'l'lea  raajakulaththaarga'lilum  thuraimakka'lilum  yaathoru  maasum  illaathavarga'lum,  azhagaanavarga'lum,  sagala  gnaanaththilum  thea’rinavarga'lum,  a’rivil  si’ranthavarga'lum,  kalviyil  nibu'narum,  raajaavin  aramanaiyilea  seavikkath  thi’ramaiyu'l'lavarga'lumaagiya  sila  vaalibaraik  ko'nduvaravum,  (thaaniyeal  1:3)

அவர்களுக்குக்  கல்தேயரின்  எழுத்தையும்  பாஷையையும்  கற்றுக்கொடுக்கவும்  ராஜா  தன்  பிரதானிகளின்  தலைவனாகிய  அஸ்பேனாசுக்குக்  கற்பித்தான்.  (தானியேல்  1:4)

avarga'lukkuk  kaltheayarin  ezhuththaiyum  baashaiyaiyum  kat’rukkodukkavum  raajaa  than  pirathaaniga'lin  thalaivanaagiya  aspeanaasukkuk  ka’rpiththaan.  (thaaniyeal  1:4)

ராஜா,  தான்  உண்ணும்  போஜனத்திலேயும்  தான்  குடிக்கும்  திராட்சரசத்திலேயும்  தினம்  ஒரு  பங்கை  அவர்களுக்கு  நியமித்து,  அவர்களை  மூன்றுவருஷம்  வளர்க்கவும்,  அதின்  முடிவிலே  அவர்கள்  ராஜாவுக்கு  முன்பாக  நிற்கும்படி  செய்யவும்  கட்டளையிட்டான்.  (தானியேல்  1:5)

raajaa,  thaan  u'n'num  poajanaththileayum  thaan  kudikkum  thiraadcharasaththileayum  thinam  oru  panggai  avarga'lukku  niyamiththu,  avarga'lai  moon’ruvarusham  va'larkkavum,  athin  mudivilea  avarga'l  raajaavukku  munbaaga  ni’rkumpadi  seyyavum  katta'laiyittaan.  (thaaniyeal  1:5)

அவர்களுக்குள்  யூதா  புத்திரராகிய  தானியேல்,  அனனியா,  மீஷாவேல்,  அசரியா  என்பவர்கள்  இருந்தார்கள்.  (தானியேல்  1:6)

avarga'lukku'l  yoothaa  puththiraraagiya  thaaniyeal,  ananiyaa,  meeshaaveal,  asariyaa  enbavarga'l  irunthaarga'l.  (thaaniyeal  1:6)

பிரதானிகளின்  தலைவன்,  தானியேலுக்கு  பெல்தெஷாத்சார்  என்றும்,  அனனியாவுக்கு  சாத்ராக்  என்றும்,  மீஷாவேலுக்கு  மேஷாக்  என்றும்,  அசரியாவுக்கு  ஆபேத்நேகோ  என்றும்  மறுபெயரிட்டான்.  (தானியேல்  1:7)

pirathaaniga'lin  thalaivan,  thaaniyealukku  beltheshaathsaar  en’rum,  ananiyaavukku  saathraak  en’rum,  meeshaavealukku  meashaak  en’rum,  asariyaavukku  aabeathneakoa  en’rum  ma’rupeyarittaan.  (thaaniyeal  1:7)

தானியேல்  ராஜாவின்  போஜனத்தினாலும்  அவர்  பானம்பண்ணும்  திராட்சரசத்தினாலும்  தன்னைத்  தீட்டுப்படுத்தலாகாதென்று,  தன்  இருதயத்தில்  தீர்மானம்பண்ணிக்கொண்டு,  தன்னைத்  தீட்டுப்படுத்தாதபடி  பிரதானிகளின்  தலைவனிடத்தில்  வேண்டிக்கொண்டான்.  (தானியேல்  1:8)

thaaniyeal  raajaavin  poajanaththinaalum  avar  baanampa'n'num  thiraadcharasaththinaalum  thannaith  theettuppaduththalaagaathen’ru,  than  iruthayaththil  theermaanampa'n'nikko'ndu,  thannaith  theettuppaduththaathapadi  pirathaaniga'lin  thalaivanidaththil  vea'ndikko'ndaan.  (thaaniyeal  1:8)

தேவன்  தானியேலுக்குப்  பிரதானிகளின்  தலைவனிடத்தில்  தயவும்  இரக்கமும்  கிடைக்கும்படி  செய்தார்.  (தானியேல்  1:9)

theavan  thaaniyealukkup  pirathaaniga'lin  thalaivanidaththil  thayavum  irakkamum  kidaikkumpadi  seythaar.  (thaaniyeal  1:9)

பிரதானிகளின்  தலைவன்  தானியேலை  நோக்கி:  உங்களுக்குப்  போஜனத்தையும்  பானத்தையும்  குறித்திருக்கிற  ராஜாவாகிய  என்  ஆண்டவனுக்கு  நான்  பயப்படுகிறேன்;  அவர்  உங்களோடொத்த  வாலிபரின்  முகங்களைப்பார்க்கிலும்  உங்கள்  முகங்கள்  வாடிப்போனவைகளாகக்  காணவேண்டியதென்ன?  அதினால்  ராஜா  என்னைச்  சிரச்சேதம்பண்ணுவாரே  என்றான்.  (தானியேல்  1:10)

pirathaaniga'lin  thalaivan  thaaniyealai  noakki:  ungga'lukkup  poajanaththaiyum  baanaththaiyum  ku’riththirukki’ra  raajaavaagiya  en  aa'ndavanukku  naan  bayappadugi’rean;  avar  ungga'loadoththa  vaalibarin  mugangga'laippaarkkilum  ungga'l  mugangga'l  vaadippoanavaiga'laagak  kaa'navea'ndiyathenna?  athinaal  raajaa  ennaich  sirachseathampa'n'nuvaarea  en’raan.  (thaaniyeal  1:10)

அப்பொழுது  பிரதானிகளின்  தலைவனாலே,  தானியேல்,  அனனியா,  மீஷாவேல்,  அசரியா  என்பவர்கள்மேல்  விசாரிப்புக்காரனாக  வைக்கப்பட்ட  மேல்ஷார்  என்பவனைத்  தானியேல்  நோக்கி:  (தானியேல்  1:11)

appozhuthu  pirathaaniga'lin  thalaivanaalea,  thaaniyeal,  ananiyaa,  meeshaaveal,  asariyaa  enbavarga'lmeal  visaarippukkaaranaaga  vaikkappatta  mealshaar  enbavanaith  thaaniyeal  noakki:  (thaaniyeal  1:11)

பத்துநாள்வரைக்கும்  உமது  அடியாரைச்  சோதித்துப்பாரும்;  எங்களுக்குப்  புசிக்கப்  பருப்பு  முதலான  மரக்கறிகளையும்,  குடிக்கத்  தண்ணீரையும்  கொடுத்து,  (தானியேல்  1:12)

paththunaa'lvaraikkum  umathu  adiyaaraich  soathiththuppaarum;  engga'lukkup  pusikkap  paruppu  muthalaana  marakka’riga'laiyum,  kudikkath  tha'n'neeraiyum  koduththu,  (thaaniyeal  1:12)

எங்கள்  முகங்களையும்  ராஜபோஜனத்தில்  புசிக்கிற  வாலிபருடைய  முகங்களையும்  ஒத்துப்பாரும்;  பின்பு  நீர்  காண்கிறபடி  உமது  அடியாருக்குச்  செய்யும்  என்றான்.  (தானியேல்  1:13)

engga'l  mugangga'laiyum  raajapoajanaththil  pusikki’ra  vaalibarudaiya  mugangga'laiyum  oththuppaarum;  pinbu  neer  kaa'ngi’rapadi  umathu  adiyaarukkuch  seyyum  en’raan.  (thaaniyeal  1:13)

அவன்  இந்தக்  காரியத்திலே  அவர்களுக்குச்  செவிகொடுத்து,  பத்துநாளளவும்  அவர்களைச்  சோதித்துப்பார்த்தான்.  (தானியேல்  1:14)

avan  inthak  kaariyaththilea  avarga'lukkuch  sevikoduththu,  paththunaa'la'lavum  avarga'laich  soathiththuppaarththaan.  (thaaniyeal  1:14)

பத்துநாள்  சென்றபின்பு,  ராஜபோஜனத்தைப்  புசித்த  எல்லா  வாலிபரைப்பார்க்கிலும்  அவர்கள்  முகம்  களையுள்ளதாயும்,  சரீரம்  புஷ்டியுள்ளதாயும்  காணப்பட்டது.  (தானியேல்  1:15)

paththunaa'l  sen’rapinbu,  raajapoajanaththaip  pusiththa  ellaa  vaalibaraippaarkkilum  avarga'l  mugam  ka'laiyu'l'lathaayum,  sareeram  pushdiyu'l'lathaayum  kaa'nappattathu.  (thaaniyeal  1:15)

ஆகையால்  மேல்ஷார்  அவர்கள்  புசிக்கக்  கட்டளையான  போஜனத்தையும்,  அவர்கள்  குடிக்கக்  கட்டளையான  திராட்சரசத்தையும்  நீக்கிவைத்து,  அவர்களுக்குப்  பருப்பு  முதலானவைகளைக்  கொடுத்தான்.  (தானியேல்  1:16)

aagaiyaal  mealshaar  avarga'l  pusikkak  katta'laiyaana  poajanaththaiyum,  avarga'l  kudikkak  katta'laiyaana  thiraadcharasaththaiyum  neekkivaiththu,  avarga'lukkup  paruppu  muthalaanavaiga'laik  koduththaan.  (thaaniyeal  1:16)

இந்த  நாலு  வாலிபருக்கும்  தேவன்  சகல  எழுத்திலும்  ஞானத்திலும்  அறிவையும்  சாமர்த்தியத்தையும்  கொடுத்தார்;  தானியேலைச்  சகல  தரிசனங்களையும்  சொப்பனங்களையும்  அறியத்தக்க  அறிவுள்ளவனாக்கினார்.  (தானியேல்  1:17)

intha  naalu  vaalibarukkum  theavan  sagala  ezhuththilum  gnaanaththilum  a’rivaiyum  saamarththiyaththaiyum  koduththaar;  thaaniyealaich  sagala  tharisanangga'laiyum  soppanangga'laiyum  a’riyaththakka  a’rivu'l'lavanaakkinaar.  (thaaniyeal  1:17)

அவர்களை  ராஜாவினிடத்தில்  கொண்டுவருகிறதற்குக்  குறித்த  நாட்கள்  நிறைவேறினபோது,  பிரதானிகளின்  தலைவன்  அவர்களை  நேபுகாத்நேச்சாருக்கு  முன்பாகக்  கொண்டுவந்து  விட்டான்.  (தானியேல்  1:18)

avarga'lai  raajaavinidaththil  ko'nduvarugi’ratha’rkuk  ku’riththa  naadka'l  ni’raivea’rinapoathu,  pirathaaniga'lin  thalaivan  avarga'lai  neabukaathneachchaarukku  munbaagak  ko'nduvanthu  vittaan.  (thaaniyeal  1:18)

ராஜா  அவர்களோடே  பேசினான்;  அவர்கள்  எல்லாருக்குள்ளும்  தானியேல்,  அனனியா,  மீஷாவேல்,  அசரியா  என்பவர்களைப்போல  வேறொருவரும்  காணப்படவில்லை;  ஆகையால்  இவர்கள்  ராஜசமுகத்தில்  நின்றார்கள்.  (தானியேல்  1:19)

raajaa  avarga'loadea  peasinaan;  avarga'l  ellaarukku'l'lum  thaaniyeal,  ananiyaa,  meeshaaveal,  asariyaa  enbavarga'laippoala  vea’roruvarum  kaa'nappadavillai;  aagaiyaal  ivarga'l  raajasamugaththil  nin’raarga'l.  (thaaniyeal  1:19)

ஞானத்துக்கும்  புத்திக்கும்  அடுத்த  எந்த  விஷயத்தில்  ராஜா  அவர்களைக்  கேட்டு  விசாரித்தானோ,  அதிலே  தன்  ராஜ்யம்  எங்குமுள்ள  சகல  சாஸ்திரிகளிலும்  ஜோசியரிலும்  அவர்களைப்  பத்துமடங்கு  சமர்த்தராகக்  கண்டான்.  (தானியேல்  1:20)

gnaanaththukkum  buththikkum  aduththa  entha  vishayaththil  raajaa  avarga'laik  keattu  visaariththaanoa,  athilea  than  raajyam  enggumu'l'la  sagala  saasthiriga'lilum  joasiyarilum  avarga'laip  paththumadanggu  samarththaraagak  ka'ndaan.  (thaaniyeal  1:20)

கோரேஸ்  ராஜ்யபாரம்பண்ணும்  முதலாம்  வருஷமட்டும்  தானியேல்  அங்கே  இருந்தான்.  (தானியேல்  1:21)

koareas  raajyabaarampa'n'num  muthalaam  varushamattum  thaaniyeal  anggea  irunthaan.  (thaaniyeal  1:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!