Tuesday, July 12, 2016

Seppaniyaa 1 | செப்பனியா 1 | Zephaniah 1


ஆமோனின்  புத்திரனாகிய  யோசியா  என்னும்  யூதா  ராஜாவின்  நாட்களிலே,  எஸ்கியாவின்  குமாரனாகிய  ஆமரியாவுக்குக்  குமாரனான  கெதலியா  என்பவனுடைய  மகனாகிய  கூஷின்  குமாரன்  செப்பனியாவுக்கு  உண்டான  கர்த்தருடைய  வசனம்.  (செப்பனியா  1:1)

aamoanin  puththiranaagiya  yoasiyaa  ennum  yoothaa  raajaavin  naadka'lilea,  eskiyaavin  kumaaranaagiya  aamariyaavukkuk  kumaaranaana  kethaliyaa  enbavanudaiya  maganaagiya  kooshin  kumaaran  seppaniyaavukku  u'ndaana  karththarudaiya  vasanam.  (seppaniyaa  1:1)

தேசத்தில்  உண்டானதை  எல்லாம்  முற்றிலும்  வாரிக்கொள்ளுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (செப்பனியா  1:2)

theasaththil  u'ndaanathai  ellaam  mut’rilum  vaarikko'l'luvean  en’ru  karththar  sollugi’raar.  (seppaniyaa  1:2)

மனுஷரையும்  மிருகஜீவன்களையும்  வாரிக்கொள்ளுவேன்;  நான்  ஆகாயத்துப்  பறவைகளையும்,  சமுத்திரத்து  மச்சங்களையும்,  இடறுகிறதற்கேதுவானவைகளையும்  துன்மார்க்கரோடேகூட  வாரிக்கொண்டு,  தேசத்தில்  உண்டான  மனுஷரைச்  சங்காரம்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (செப்பனியா  1:3)

manusharaiyum  mirugajeevanga'laiyum  vaarikko'l'luvean;  naan  aagaayaththup  pa’ravaiga'laiyum,  samuththiraththu  machchangga'laiyum,  ida’rugi’ratha’rkeathuvaanavaiga'laiyum  thunmaarkkaroadeakooda  vaarikko'ndu,  theasaththil  u'ndaana  manusharaich  sanggaarampa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (seppaniyaa  1:3)

நான்  யூதாவின்மேலும்,  எருசலேமிலுள்ள  எல்லாக்  குடிகளின்மேலும்  என்  கையை  நீட்டி,  பாகாலில்  மீதியாயிருக்கிறதையும்,  ஆசாரியர்களோடேகூடக்  கெம்மரீம்  என்பவர்களின்  பேரையும்,  (செப்பனியா  1:4)

naan  yoothaavinmealum,  erusaleamilu'l'la  ellaak  kudiga'linmealum  en  kaiyai  neetti,  baagaalil  meethiyaayirukki’rathaiyum,  aasaariyarga'loadeakoodak  kemmareem  enbavarga'lin  pearaiyum,  (seppaniyaa  1:4)

வீடுகளின்மேல்  வானசேனையைப்  பணிகிறவர்களையும்,  கர்த்தர்பேரில்  ஆணையிட்டு,  மல்காமின்பேரிலும்  ஆணையிட்டுப்  பணிகிறவர்களையும்,  (செப்பனியா  1:5)

veeduga'linmeal  vaanaseanaiyaip  pa'nigi’ravarga'laiyum,  karththarpearil  aa'naiyittu,  malkaaminpearilum  aa'naiyittup  pa'nigi’ravarga'laiyum,  (seppaniyaa  1:5)

கர்த்தரை  விட்டுப்  பின்வாங்குகிறவர்களையும்,  கர்த்தரைத்  தேடாமலும்,  அவரைக்குறித்து  விசாரியாமலுமிருக்கிறவர்களையும்,  இவ்விடத்தில்  இராதபடிக்குச்  சங்காரம்பண்ணுவேன்.  (செப்பனியா  1:6)

karththarai  vittup  pinvaanggugi’ravarga'laiyum,  karththaraith  theadaamalum,  avaraikku’riththu  visaariyaamalumirukki’ravarga'laiyum,  ivvidaththil  iraathapadikkuch  sanggaarampa'n'nuvean.  (seppaniyaa  1:6)

கர்த்தராகிய  ஆண்டவருக்கு  முன்பாக  மௌனமாயிருங்கள்;  கர்த்தருடைய  நாள்  சமீபித்திருக்கிறது;  கர்த்தர்  ஒரு  யாகத்தை  ஆயத்தம்பண்ணி,  அதற்கு  விருந்தாளிகளையும்  அழைத்திருக்கிறார்.  (செப்பனியா  1:7)

karththaraagiya  aa'ndavarukku  munbaaga  maunamaayirungga'l;  karththarudaiya  naa'l  sameebiththirukki’rathu;  karththar  oru  yaagaththai  aayaththampa'n'ni,  atha’rku  virunthaa'liga'laiyum  azhaiththirukki’raar.  (seppaniyaa  1:7)

கர்த்தருடைய  யாகத்தின்  நாளிலே  நான்  அதிபதிகளையும்  ராஜகுமாரரையும்  மறுதேசத்து  வஸ்திரம்  தரிக்கிற  யாவரையும்  தண்டிப்பேன்.  (செப்பனியா  1:8)

karththarudaiya  yaagaththin  naa'lilea  naan  athibathiga'laiyum  raajakumaararaiyum  ma’rutheasaththu  vasthiram  tharikki’ra  yaavaraiyum  tha'ndippean.  (seppaniyaa  1:8)

வாசற்படியைத்  தாண்டி,  கொடுமையினாலும்  வஞ்சகத்தினாலும்  தங்கள்  எஜமான்களின்  வீடுகளை  நிரப்புகிற  யாவரையும்  அந்நாளிலே  தண்டிப்பேன்.  (செப்பனியா  1:9)

vaasa’rpadiyaith  thaa'ndi,  kodumaiyinaalum  vagnchagaththinaalum  thangga'l  ejamaanga'lin  veeduga'lai  nirappugi’ra  yaavaraiyum  annaa'lilea  tha'ndippean.  (seppaniyaa  1:9)

அந்நாளிலே  மீன்வாசலிலிருந்து  கூக்குரலின்  சத்தமும்,  நகரத்தின்  இரண்டாம்  பாகத்திலிருந்து  அலறுதலும்,  மேடுகளிலிருந்து  மகா  சங்காரத்தின்  இரைச்சலும்  உண்டாகுமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (செப்பனியா  1:10)

annaa'lilea  meenvaasalilirunthu  kookkuralin  saththamum,  nagaraththin  ira'ndaam  paagaththilirunthu  ala’ruthalum,  meaduga'lilirunthu  mahaa  sanggaaraththin  iraichchalum  u'ndaagumen’ru  karththar  sollugi’raar.  (seppaniyaa  1:10)

மக்தேஷின்  குடிகளே  அலறுங்கள்;  வர்த்தகரெல்லாரும்  சங்காரமானார்கள்;  காசுக்காரர்  யாவரும்  வெட்டுண்டுபோனார்கள்.  (செப்பனியா  1:11)

maktheashin  kudiga'lea  ala’rungga'l;  varththagarellaarum  sanggaaramaanaarga'l;  kaasukkaarar  yaavarum  vettu'ndupoanaarga'l.  (seppaniyaa  1:11)

அக்காலத்திலே  நான்  எருசலேமை  விளக்குக்கொளுத்திச்  சோதித்து,  வண்டல்போலக்  குழம்பியிருக்கிறவர்களும்,  கர்த்தர்  நன்மைசெய்வதும்  இல்லை  தீமைசெய்வதும்  இல்லையென்று  தங்கள்  இருதயத்தில்  சொல்லுகிறவர்களுமான  மனுஷரைத்  தண்டிப்பேன்.  (செப்பனியா  1:12)

akkaalaththilea  naan  erusaleamai  vi'lakkukko'luththich  soathiththu,  va'ndalpoalak  kuzhambiyirukki’ravarga'lum,  karththar  nanmaiseyvathum  illai  theemaiseyvathum  illaiyen’ru  thangga'l  iruthayaththil  sollugi’ravarga'lumaana  manusharaith  tha'ndippean.  (seppaniyaa  1:12)

அவர்களுடைய  ஆஸ்தி  கொள்ளையாகும்;  அவர்களுடைய  வீடுகள்  பாழாய்ப்போகும்;  அவர்கள்  வீடுகளைக்  கட்டியும்,  அவைகளில்  குடியிருக்கமாட்டார்கள்;  அவர்கள்  திராட்சத்தோட்டங்களை  நாட்டியும்,  அவைகளின்  பழரசத்தைக்  குடிப்பதில்லை.  (செப்பனியா  1:13)

avarga'ludaiya  aasthi  ko'l'laiyaagum;  avarga'ludaiya  veeduga'l  paazhaayppoagum;  avarga'l  veeduga'laik  kattiyum,  avaiga'lil  kudiyirukkamaattaarga'l;  avarga'l  thiraadchaththoattangga'lai  naattiyum,  avaiga'lin  pazharasaththaik  kudippathillai.  (seppaniyaa  1:13)

கர்த்தருடைய  பெரியநாள்  சமீபித்திருக்கிறது;  அது  கிட்டிச்சேர்ந்து  மிகவும்  தீவிரித்துவருகிறது;  கர்த்தருடைய  நாளென்கிற  சத்தத்துக்குப்  பராக்கிரமசாலி  முதலாய்  அங்கே  மனங்கசந்து  அலறுவான்.  (செப்பனியா  1:14)

karththarudaiya  periyanaa'l  sameebiththirukki’rathu;  athu  kittichsearnthu  migavum  theeviriththuvarugi’rathu;  karththarudaiya  naa'lengi’ra  saththaththukkup  baraakkiramasaali  muthalaay  anggea  manangkasanthu  ala’ruvaan.  (seppaniyaa  1:14)

அந்த  நாள்  உக்கிரத்தின்  நாள்;  அது  இக்கட்டும்  இடுக்கமுமான  நாள்;  அது  அழிவும்  பாழ்க்கடிப்புமான  நாள்;  அது  இருளும்  அந்தகாரமுமான  நாள்;  அது  மப்பும்  மந்தாரமுமான  நாள்.  (செப்பனியா  1:15)

antha  naa'l  ukkiraththin  naa'l;  athu  ikkattum  idukkamumaana  naa'l;  athu  azhivum  paazhkkadippumaana  naa'l;  athu  iru'lum  anthagaaramumaana  naa'l;  athu  mappum  manthaaramumaana  naa'l.  (seppaniyaa  1:15)

அது  அரணிப்பான  நகரங்களுக்கும்,  உயரமான  கொத்தளங்களுக்கும்  விரோதமாக  எக்காளம்  ஊதுகிறதும்  ஆர்ப்பரிக்கிறதுமான  நாள்.  (செப்பனியா  1:16)

athu  ara'nippaana  nagarangga'lukkum,  uyaramaana  koththa'langga'lukkum  viroathamaaga  ekkaa'lam  oothugi’rathum  aarpparikki’rathumaana  naa'l.  (seppaniyaa  1:16)

மனுஷர்  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தபடியால்,  அவர்கள்  குருடரைப்போல்  நடக்கும்படி  நான்  அவர்களை  வருத்தப்படுத்துவேன்;  அவர்கள்  இரத்தம்  புழுதியைப்போல்  சொரியப்படும்;  அவர்கள்  மாம்சம்  எருவைப்போல்  கிடக்கும்.  (செப்பனியா  1:17)

manushar  karththarukku  viroathamaayp  paavagnseythapadiyaal,  avarga'l  kurudaraippoal  nadakkumpadi  naan  avarga'lai  varuththappaduththuvean;  avarga'l  iraththam  puzhuthiyaippoal  soriyappadum;  avarga'l  maamsam  eruvaippoal  kidakkum.  (seppaniyaa  1:17)

கர்த்தருடைய  உக்கிரத்தின்  நாளிலே  அவர்கள்  வெள்ளியும்  அவர்கள்  பொன்னும்  அவர்களைத்  தப்புவிக்கமாட்டாது;  அவருடைய  எரிச்சலின்  அக்கினியினால்  தேசமெல்லாம்  அழியும்;  தேசத்தின்  குடிகளையெல்லாம்  சடிதியாய்  நிர்மூலம்பண்ணுவார்.  (செப்பனியா  1:18)

karththarudaiya  ukkiraththin  naa'lilea  avarga'l  ve'l'liyum  avarga'l  ponnum  avarga'laith  thappuvikkamaattaathu;  avarudaiya  erichchalin  akkiniyinaal  theasamellaam  azhiyum;  theasaththin  kudiga'laiyellaam  sadithiyaay  nirmoolampa'n'nuvaar.  (seppaniyaa  1:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!