Friday, July 01, 2016

Sanggeetham 149 | சங்கீதம் 149 | Psalms 149

அல்லேலூயா,  கர்த்தருக்குப்  புதுப்பாட்டைப்  பாடுங்கள்;  பரிசுத்தவான்களின்  சபையிலே  அவருடைய  துதி  விளங்குவதாக.  (சங்கீதம்  149:1)

allealooyaa,  karththarukkup  puthuppaattaip  paadungga'l;  parisuththavaanga'lin  sabaiyilea  avarudaiya  thuthi  vi'langguvathaaga.  (sanggeetham  149:1)

இஸ்ரவேல்  தன்னை  உண்டாக்கினவரில்  மகிழவும்,  சீயோன்  குமாரர்  தங்கள்  ராஜாவில்  களிகூரவுங்கடவர்கள்.  (சங்கீதம்  149:2)

israveal  thannai  u'ndaakkinavaril  magizhavum,  seeyoan  kumaarar  thangga'l  raajaavil  ka'likooravungkadavarga'l.  (sanggeetham  149:2)

அவருடைய  நாமத்தை  நடனத்தோடே  துதித்து,  தம்புரினாலும்  கின்னரத்தினாலும்  அவரைக்  கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.  (சங்கீதம்  149:3)

avarudaiya  naamaththai  nadanaththoadea  thuthiththu,  thamburinaalum  kinnaraththinaalum  avaraik  keerththanampa'n'nakkadavarga'l.  (sanggeetham  149:3)

கர்த்தர்  தம்முடைய  ஜனத்தின்மேல்  பிரியம்  வைக்கிறார்;  சாந்தகுணமுள்ளவர்களை  இரட்சிப்பினால்  அலங்கரிப்பார்.  (சங்கீதம்  149:4)

karththar  thammudaiya  janaththinmeal  piriyam  vaikki’raar;  saanthaku'namu'l'lavarga'lai  iradchippinaal  alanggarippaar.  (sanggeetham  149:4)

பரிசுத்தவான்கள்  மகிமையோடே  களிகூர்ந்து,  தங்கள்  படுக்கைகளின்மேல்  கெம்பீரிப்பார்கள்.  (சங்கீதம்  149:5)

parisuththavaanga'l  magimaiyoadea  ka'likoornthu,  thangga'l  padukkaiga'linmeal  kembeerippaarga'l.  (sanggeetham  149:5)

ஜாதிகளிடத்தில்  பழிவாங்கவும்,  ஜனங்களைத்  தண்டிக்கவும்,  (சங்கீதம்  149:6)

jaathiga'lidaththil  pazhivaanggavum,  janangga'laith  tha'ndikkavum,  (sanggeetham  149:6)

அவர்களுடைய  ராஜாக்களைச்  சங்கிலிகளாலும்,  அவர்களுடைய  மேன்மக்களை  இருப்பு  விலங்குகளாலும்  கட்டவும்,  எழுதப்பட்ட  நியாயத்தீர்ப்பை  அவர்கள்பேரில்  செலுத்தவும்,  (சங்கீதம்  149:7)

avarga'ludaiya  raajaakka'laich  sanggiliga'laalum,  avarga'ludaiya  meanmakka'lai  iruppu  vilangguga'laalum  kattavum,  ezhuthappatta  niyaayaththeerppai  avarga'lpearil  seluththavum,  (sanggeetham  149:7)

அவர்கள்  வாயில்  கர்த்தரை  உயர்த்தும்  துதியும்,  அவர்கள்  கையில்  இருபுறமும்  கருக்குள்ள  பட்டயமும்  இருக்கும்.  (சங்கீதம்  149:8)

avarga'l  vaayil  karththarai  uyarththum  thuthiyum,  avarga'l  kaiyil  irupu’ramum  karukku'l'la  pattayamum  irukkum.  (sanggeetham  149:8)

இந்தக்  கனம்  அவருடைய  பரிசுத்தவான்கள்  யாவருக்கும்  உண்டாகும்.  அல்லேலூயா.  (சங்கீதம்  149:9)

inthak  kanam  avarudaiya  parisuththavaanga'l  yaavarukkum  u'ndaagum.  allealooyaa.  (sanggeetham  149:9)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!