அல்லேலூயா, வானங்களில்
உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்;
உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
(சங்கீதம் 148:1)
allealooyaa, vaanangga'lil u'l'lavaiga'lea, karththaraith thuthiyungga'l; unnathangga'lil avaraith
thuthiyungga'l. (sanggeetham 148:1)
அவருடைய தூதர்களே,
நீங்கள் யாவரும் அவரைத்
துதியுங்கள்; அவருடைய சேனைகளே,
நீங்கள் யாவரும் அவரைத்
துதியுங்கள். (சங்கீதம் 148:2)
avarudaiya thootharga'lea, neengga'l yaavarum avaraith
thuthiyungga'l; avarudaiya seanaiga'lea, neengga'l yaavarum
avaraith thuthiyungga'l. (sanggeetham 148:2)
சூரிய
சந்திரரே, அவரைத் துதியுங்கள்;
பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத்
துதியுங்கள். (சங்கீதம் 148:3)
sooriya santhirarea, avaraith
thuthiyungga'l; piragaasamu'l'la
sagala nadchaththirangga'lea, avaraith thuthiyungga'l. (sanggeetham 148:3)
வானாதி
வானங்களே, அவரைத் துதியுங்கள்;
ஆகாயமண்டலத்தின்மேலுள்ள தண்ணீர்களே, அவரைத்
துதியுங்கள். (சங்கீதம் 148:4)
vaanaathi vaanangga'lea, avaraith thuthiyungga'l; aagaayama'ndalaththinmealu'l'la tha'n'neerga'lea, avaraith
thuthiyungga'l. (sanggeetham 148:4)
அவைகள்
கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள்
சிருஷ்டிக்கப்பட்டது. (சங்கீதம் 148:5)
avaiga'l
karththarin naamaththaith thuthikkakkadavathu; avar katta'laiyida avaiga'l sirushdikkappattathu. (sanggeetham 148:5)
அவர்
அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி
செய்தார்; மாறாத பிரமாணத்தை
அவைகளுக்கு நியமித்தார். (சங்கீதம்
148:6)
avar avaiga'lai en’raikkumu'l'la sathaakaalangga'lilum nilaikkumpadi seythaar; maa’raatha piramaa'naththai avaiga'lukku niyamiththaar. (sanggeetham 148:6)
பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத்
துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே, (சங்கீதம்
148:7)
boomiyilu'l'lavaiga'lea, karththaraith
thuthiyungga'l; mahaamachchangga'lea, sagala aazhangga'lea, (sanggeetham 148:7)
அக்கினியே, கல்மழையே,
உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும்
பெருங்காற்றே, (சங்கீதம் 148:8)
akkiniyea, kalmazhaiyea, u’rainthamazhaiyea, moodupaniyea,
avar so’rpadi
seyyum perungkaat’rea, (sanggeetham 148:8)
மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே,
சகல கேதுருக்களே, (சங்கீதம்
148:9)
malaiga'lea, sagala
meaduga'lea, kanimarangga'lea,
sagala keathurukka'lea, (sanggeetham 148:9)
காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே,
ஊரும் பிராணிகளே, இறகுள்ள
பறவைகளே, (சங்கீதம் 148:10)
kaattumirugangga'lea, sagala
naattu
mirugangga'lea, oorum piraa'niga'lea, i’ragu'l'la pa’ravaiga'lea, (sanggeetham 148:10)
பூமியின் ராஜாக்களே,
சகல ஜனங்களே, பிரபுக்களே,
பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, (சங்கீதம்
148:11)
boomiyin raajaakka'lea, sagala janangga'lea, pirabukka'lea, boomiyilu'l'la
sagala niyaayaathibathiga'lea, (sanggeetham 148:11)
வாலிபரே, கன்னிகைகளே,
முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத்
துதியுங்கள். (சங்கீதம் 148:12)
vaalibarea, kannigaiga'lea, muthirvayathu'l'lavarga'lea, pi'l'laiga'lea, karththaraith
thuthiyungga'l. (sanggeetham 148:12)
அவர்கள் கர்த்தரின்
நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய
நாமம் மாத்திரம் உயர்ந்தது;
அவருடைய மகிமை பூமிக்கும்
வானத்திற்கும் மேலானது. (சங்கீதம்
148:13)
avarga'l
karththarin naamaththaith thuthikkakkadavarga'l; avarudaiya
naamam maaththiram uyarnthathu;
avarudaiya magimai boomikkum vaanaththi’rkum mealaanathu. (sanggeetham 148:13)
அவர்
தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும்,
தம்மைச் சேர்ந்த ஜனமாகிய
இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக,
தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார்.
அல்லேலூயா. (சங்கீதம் 148:14)
avar thammudaiya parisuththavaanga'l yaavarukkum, thammaich searntha janamaagiya israveal
puththirarukkum ko'ndaattamaaga, thammudaiya
janaththi’rku oru kombai uyarththinaar. allealooyaa.
(sanggeetham 148:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!