Friday, July 01, 2016

Sanggeetham 146 | சங்கீதம் 146 | Psalms 146

அல்லேலூயா,  என்  ஆத்துமாவே,  கர்த்தரைத்  துதி.  (சங்கீதம்  146:1)

allealooyaa,  en  aaththumaavea,  karththaraith  thuthi.  (sanggeetham  146:1)

நான்  உயிரோடிருக்குமட்டும்  கர்த்தரைத்  துதிப்பேன்;  நான்  உள்ளளவும்  என்  தேவனைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  146:2)

naan  uyiroadirukkumattum  karththaraith  thuthippean;  naan  u'l'la'lavum  en  theavanaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  146:2)

பிரபுக்களையும்,  இரட்சிக்கத்திராணியில்லாத  மனுபுத்திரனையும்  நம்பாதேயுங்கள்.  (சங்கீதம்  146:3)

pirabukka'laiyum,  iradchikkaththiraa'niyillaatha  manupuththiranaiyum  nambaatheayungga'l.  (sanggeetham  146:3)

அவனுடைய  ஆவி  பிரியும்,  அவன்  தன்  மண்ணுக்குத்  திரும்புவான்;  அந்நாளிலே  அவன்  யோசனைகள்  அழிந்துபோம்.  (சங்கீதம்  146:4)

avanudaiya  aavi  piriyum,  avan  than  ma'n'nukkuth  thirumbuvaan;  annaa'lilea  avan  yoasanaiga'l  azhinthupoam.  (sanggeetham  146:4)

யாக்கோபின்  தேவனைத்  தன்  துணையாகக்  கொண்டிருந்து,  தன்  தேவனாகிய  கர்த்தர்மேல்  நம்பிக்கையை  வைக்கிறவன்  பாக்கியவான்.  (சங்கீதம்  146:5)

yaakkoabin  theavanaith  than  thu'naiyaagak  ko'ndirunthu,  than  theavanaagiya  karththarmeal  nambikkaiyai  vaikki’ravan  baakkiyavaan.  (sanggeetham  146:5)

அவர்  வானத்தையும்  பூமியையும்  சமுத்திரத்தையும்  அவைகளிலுள்ள  யாவையும்  உண்டாக்கினவர்;  அவர்  என்றென்றைக்கும்  உண்மையைக்  காக்கிறவர்.  (சங்கீதம்  146:6)

avar  vaanaththaiyum  boomiyaiyum  samuththiraththaiyum  avaiga'lilu'l'la  yaavaiyum  u'ndaakkinavar;  avar  en’ren’raikkum  u'nmaiyaik  kaakki’ravar.  (sanggeetham  146:6)

அவர்  ஒடுக்கப்பட்டவர்களுக்கு  நியாயஞ்செய்கிறார்;  பசியாயிருக்கிறவர்களுக்கு  ஆகாரங்  கொடுக்கிறார்;  கட்டுண்டவர்களைக்  கர்த்தர்  விடுதலையாக்குகிறார்.  (சங்கீதம்  146:7)

avar  odukkappattavarga'lukku  niyaayagnseygi’raar;  pasiyaayirukki’ravarga'lukku  aagaarang  kodukki’raar;  kattu'ndavarga'laik  karththar  viduthalaiyaakkugi’raar.  (sanggeetham  146:7)

குருடரின்  கண்களைக்  கர்த்தர்  திறக்கிறார்;  மடங்கடிக்கப்பட்டவர்களைக்  கர்த்தர்  தூக்கிவிடுகிறார்;  நீதிமான்களைக்  கர்த்தர்  சிநேகிக்கிறார்.  (சங்கீதம்  146:8)

kurudarin  ka'nga'laik  karththar  thi’rakki’raar;  madanggadikkappattavarga'laik  karththar  thookkividugi’raar;  neethimaanga'laik  karththar  sineagikki’raar.  (sanggeetham  146:8)

பரதேசிகளைக்  கர்த்தர்  காப்பாற்றுகிறார்;  அவர்  திக்கற்ற  பிள்ளையையும்  விதவையையும்  ஆதரிக்கிறார்;  துன்மார்க்கரின்  வழியையோ  கவிழ்த்துப்போடுகிறார்.  (சங்கீதம்  146:9)

paratheasiga'laik  karththar  kaappaat’rugi’raar;  avar  thikkat’ra  pi'l'laiyaiyum  vithavaiyaiyum  aatharikki’raar;  thunmaarkkarin  vazhiyaiyoa  kavizhththuppoadugi’raar.  (sanggeetham  146:9)

கர்த்தர்  சதாகாலங்களிலும்  அரசாளுகிறார்;  சீயோனே,  உன்  தேவன்  தலைமுறை  தலைமுறையாகவும்  ராஜரிகம்பண்ணுகிறார்.  அல்லேலூயா.  (சங்கீதம்  146:10)

karththar  sathaakaalangga'lilum  arasaa'lugi’raar;  seeyoanea,  un  theavan  thalaimu’rai  thalaimu’raiyaagavum  raajarigampa'n'nugi’raar.  allealooyaa.  (sanggeetham  146:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!