Friday, July 01, 2016

Sanggeetham 143 | சங்கீதம் 143 | Psalms 143

கர்த்தாவே,  என்  ஜெபத்தைக்  கேளும்,  என்  விண்ணப்பங்களுக்குச்  செவிகொடும்;  உமது  உண்மையின்படியும்  உமது  நீதியின்படியும்  எனக்கு  உத்தரவு  அருளிச்செய்யும்.  (சங்கீதம்  143:1)

karththaavea,  en  jebaththaik  kea'lum,  en  vi'n'nappangga'lukkuch  sevikodum;  umathu  u'nmaiyinpadiyum  umathu  neethiyinpadiyum  enakku  uththaravu  aru'lichseyyum.  (sanggeetham  143:1)

ஜீவனுள்ள  ஒருவனும்  உமக்கு  முன்பாக  நீதிமான்  அல்லாததினாலே,  அடியேனை  நியாயந்தீர்க்கப்  பிரவேசியாதேயும்.  (சங்கீதம்  143:2)

jeevanu'l'la  oruvanum  umakku  munbaaga  neethimaan  allaathathinaalea,  adiyeanai  niyaayantheerkkap  piraveasiyaatheayum.  (sanggeetham  143:2)

சத்துரு  என்  ஆத்துமாவைத்  தொடர்ந்து,  என்  பிராணனைத்  தரையோடே  நசுக்கி,  வெகுகாலத்துக்குமுன்  மரித்தவர்கள்போல்  என்னை  இருளில்  இருக்கப்பண்ணுகிறான்.  (சங்கீதம்  143:3)

saththuru  en  aaththumaavaith  thodarnthu,  en  piraa'nanaith  tharaiyoadea  nasukki,  vegukaalaththukkumun  mariththavarga'lpoal  ennai  iru'lil  irukkappa'n'nugi’raan.  (sanggeetham  143:3)

என்  ஆவி  என்னில்  தியங்குகிறது;  என்  இருதயம்  எனக்குள்  சோர்ந்துபோகிறது.  (சங்கீதம்  143:4)

en  aavi  ennil  thiyanggugi’rathu;  en  iruthayam  enakku'l  soarnthupoagi’rathu.  (sanggeetham  143:4)

பூர்வநாட்களை  நினைக்கிறேன்,  உமது  செய்கைகளையெல்லாம்  தியானிக்கிறேன்;  உமது  கரத்தின்  கிரியைகளை  யோசிக்கிறேன்.  (சங்கீதம்  143:5)

poorvanaadka'lai  ninaikki’rean,  umathu  seygaiga'laiyellaam  thiyaanikki’rean;  umathu  karaththin  kiriyaiga'lai  yoasikki’rean.  (sanggeetham  143:5)

என்  கைகளை  உமக்கு  நேராக  விரிக்கிறேன்;  வறண்ட  நிலத்தைப்போல்  என்  ஆத்துமா  உம்மேல்  தாகமாயிருக்கிறது.  (சேலா.)  (சங்கீதம்  143:6)

en  kaiga'lai  umakku  nearaaga  virikki’rean;  va’ra'nda  nilaththaippoal  en  aaththumaa  ummeal  thaagamaayirukki’rathu.  (sealaa.)  (sanggeetham  143:6)

கர்த்தாவே,  சீக்கிரமாய்  எனக்குச்  செவிகொடும்,  என்  ஆவி  தொய்ந்துபோகிறது;  நான்  குழியில்  இறங்குகிறவர்களுக்கு  ஒப்பாகாதபடிக்கு,  உமது  முகத்தை  எனக்கு  மறையாதேயும்.  (சங்கீதம்  143:7)

karththaavea,  seekkiramaay  enakkuch  sevikodum,  en  aavi  thoynthupoagi’rathu;  naan  kuzhiyil  i’ranggugi’ravarga'lukku  oppaagaathapadikku,  umathu  mugaththai  enakku  ma’raiyaatheayum.  (sanggeetham  143:7)

அதிகாலையில்  உமது  கிருபையைக்  கேட்கப்பண்ணும்,  உம்மை  நம்பியிருக்கிறேன்,  நான்  நடக்கவேண்டிய  வழியை  எனக்குக்  காண்பியும்;  உம்மிடத்தில்  என்  ஆத்துமாவை  உயர்த்துகிறேன்.  (சங்கீதம்  143:8)

athikaalaiyil  umathu  kirubaiyaik  keadkappa'n'num,  ummai  nambiyirukki’rean,  naan  nadakkavea'ndiya  vazhiyai  enakkuk  kaa'nbiyum;  ummidaththil  en  aaththumaavai  uyarththugi’rean.  (sanggeetham  143:8)

கர்த்தாவே,  என்  சத்துருக்களுக்கு  என்னைத்  தப்புவியும்;  உம்மைப்  புகலிடமாகக்  கொள்ளுகிறேன்.  (சங்கீதம்  143:9)

karththaavea,  en  saththurukka'lukku  ennaith  thappuviyum;  ummaip  pugalidamaagak  ko'l'lugi’rean.  (sanggeetham  143:9)

உமக்குப்  பிரியமானதைச்  செய்ய  எனக்குப்  போதித்தருளும்,  நீரே  என்  தேவன்;  உம்முடைய  நல்ல  ஆவி  என்னைச்  செம்மையான  வழியிலே  நடத்துவாராக.  (சங்கீதம்  143:10)

umakkup  piriyamaanathaich  seyya  enakkup  poathiththaru'lum,  neerea  en  theavan;  ummudaiya  nalla  aavi  ennaich  semmaiyaana  vazhiyilea  nadaththuvaaraaga.  (sanggeetham  143:10)

கர்த்தாவே,  உம்முடைய  நாமத்தினிமித்தம்  என்னை  உயிர்ப்பியும்;  உம்முடைய  நீதியின்படி  என்  ஆத்துமாவை  இடுக்கத்திற்கு  நீங்கலாக்கிவிடும்.  (சங்கீதம்  143:11)

karththaavea,  ummudaiya  naamaththinimiththam  ennai  uyirppiyum;  ummudaiya  neethiyinpadi  en  aaththumaavai  idukkaththi’rku  neenggalaakkividum.  (sanggeetham  143:11)

உம்முடைய  கிருபையின்படி  என்  சத்துருக்களை  அழித்து,  என்  ஆத்துமாவை  ஒடுக்குகிற  யாவரையும்  சங்காரம்பண்ணும்;  நான்  உமது  அடியேன்.  (சங்கீதம்  143:12)

ummudaiya  kirubaiyinpadi  en  saththurukka'lai  azhiththu,  en  aaththumaavai  odukkugi’ra  yaavaraiyum  sanggaarampa'n'num;  naan  umathu  adiyean.  (sanggeetham  143:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!