Friday, July 01, 2016

Sanggeetham 142 | சங்கீதம் 142 | Psalms 142

கர்த்தரை  நோக்கிச்  சத்தமிட்டுக்  கூப்பிடுகிறேன்;  கர்த்தரை  நோக்கிச்  சத்தமிட்டுக்  கெஞ்சுகிறேன்.  (சங்கீதம்  142:1)

karththarai  noakkich  saththamittuk  kooppidugi’rean;  karththarai  noakkich  saththamittuk  kegnchugi’rean.  (sanggeetham  142:1)

அவருக்கு  முன்பாக  என்  சஞ்சலத்தை  ஊற்றுகிறேன்;  அவருக்கு  முன்பாக  என்  நெருக்கத்தை  அறிக்கையிடுகிறேன்.  (சங்கீதம்  142:2)

avarukku  munbaaga  en  sagnchalaththai  oot’rugi’rean;  avarukku  munbaaga  en  nerukkaththai  a’rikkaiyidugi’rean.  (sanggeetham  142:2)

என்  ஆவி  என்னில்  தியங்கும்போது,  நீர்  என்  பாதையை  அறிந்திருக்கிறீர்;  நான்  நடக்கிற  வழியில்  மறைவாக  எனக்குக்  கண்ணிவைத்தார்கள்.  (சங்கீதம்  142:3)

en  aavi  ennil  thiyanggumpoathu,  neer  en  paathaiyai  a’rinthirukki’reer;  naan  nadakki’ra  vazhiyil  ma’raivaaga  enakkuk  ka'n'nivaiththaarga'l.  (sanggeetham  142:3)

வலதுபுறமாய்க்  கண்ணோக்கிப்பாரும்,  என்னை  அறிவார்  ஒருவரும்  இல்லை;  எனக்கு  அடைக்கலமில்லாமற்போயிற்று;  என்  ஆத்துமாவை  விசாரிப்பார்  ஒருவரும்  இல்லை.  (சங்கீதம்  142:4)

valathupu’ramaayk  ka'n'noakkippaarum,  ennai  a’rivaar  oruvarum  illai;  enakku  adaikkalamillaama’rpoayit’ru;  en  aaththumaavai  visaarippaar  oruvarum  illai.  (sanggeetham  142:4)

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்;  நீரே  என்  அடைக்கலமும்,  ஜீவனுள்ளோர்  தேசத்திலே  என்  பங்குமாயிருக்கிறீர்  என்றேன்.  (சங்கீதம்  142:5)

karththaavea,  ummai  noakkik  kooppidugi’rean;  neerea  en  adaikkalamum,  jeevanu'l'loar  theasaththilea  en  panggumaayirukki’reer  en’rean.  (sanggeetham  142:5)

என்  கூக்குரலுக்குச்  செவிகொடும்,  நான்  மிகவும்  தாழ்த்தப்பட்டேன்;  என்னைப்  பின்தொடருகிறவர்களுக்கு  என்னைத்  தப்புவியும்,  அவர்கள்  என்னிலும்  பலவான்களாயிருக்கிறார்கள்.  (சங்கீதம்  142:6)

en  kookkuralukkuch  sevikodum,  naan  migavum  thaazhththappattean;  ennaip  pinthodarugi’ravarga'lukku  ennaith  thappuviyum,  avarga'l  ennilum  balavaanga'laayirukki’raarga'l.  (sanggeetham  142:6)

உமது  நாமத்தை  நான்  துதிக்கும்படி,  என்  ஆத்துமாவைக்  காவலுக்கு  நீங்கலாக்கிவிடும்;  எனக்கு  நீர்  தயவுசெய்யும்போது  நீதிமான்கள்  என்னைச்  சூழ்ந்துகொள்ளுவார்கள்.  (சங்கீதம்  142:7)

umathu  naamaththai  naan  thuthikkumpadi,  en  aaththumaavaik  kaavalukku  neenggalaakkividum;  enakku  neer  thayavuseyyumpoathu  neethimaanga'l  ennaich  soozhnthuko'l'luvaarga'l.  (sanggeetham  142:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!