Friday, July 01, 2016

Sanggeetham 141 | சங்கீதம் 141 | Psalms 141

கர்த்தாவே,  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்,  என்னிடத்திற்கு  வரத்தீவிரியும்;  நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகையில்,  என்  சத்தத்திற்குச்  செவிகொடும்.  (சங்கீதம்  141:1)

karththaavea,  ummai  noakkik  kooppidugi’rean,  ennidaththi’rku  varaththeeviriyum;  naan  ummai  noakkik  kooppidugaiyil,  en  saththaththi’rkuch  sevikodum.  (sanggeetham  141:1)

என்  விண்ணப்பம்  உமக்கு  முன்பாகத்  தூபமாகவும்,  என்  கையெடுப்பு  அந்திப்பலியாகவும்  இருக்கக்கடவது.  (சங்கீதம்  141:2)

en  vi'n'nappam  umakku  munbaagath  thoobamaagavum,  en  kaiyeduppu  anthipbaliyaagavum  irukkakkadavathu.  (sanggeetham  141:2)

கர்த்தாவே,  என்  வாய்க்குக்  காவல்  வையும்;  என்  உதடுகளின்  வாசலைக்  காத்துக்கொள்ளும்.  (சங்கீதம்  141:3)

karththaavea,  en  vaaykkuk  kaaval  vaiyum;  en  uthaduga'lin  vaasalaik  kaaththukko'l'lum.  (sanggeetham  141:3)

அக்கிரமஞ்செய்கிற  மனுஷரோடே  ஆகாமியக்  கிரியைகளை  நடப்பிக்கும்படி  என்  இருதயத்தைத்  துன்மார்க்கத்திற்கு  இணங்கவொட்டாதேயும்;  அவர்களுடைய  ருசியுள்ள  பதார்த்தங்களில்  ஒன்றையும்  நான்  சாப்பிடாமல்  இருப்பேனாக.  (சங்கீதம்  141:4)

akkiramagnseygi’ra  manusharoadea  aagaamiyak  kiriyaiga'lai  nadappikkumpadi  en  iruthayaththaith  thunmaarkkaththi’rku  i'nanggavottaatheayum;  avarga'ludaiya  rusiyu'l'la  pathaarththangga'lil  on’raiyum  naan  saappidaamal  iruppeanaaga.  (sanggeetham  141:4)

நீதிமான்  என்னைத்  தயவாய்க்குட்டி,  என்னைக்  கடிந்துகொள்ளட்டும்;  அது  என்  தலைக்கு  எண்ணெயைப்போலிருக்கும்;  என்  தலை  அதை  அல்லத்தட்டுவதில்லை;  அவர்கள்  இக்கட்டுகளில்  நான்  இன்னும்  ஜெபம்பண்ணுவேன்.  (சங்கீதம்  141:5)

neethimaan  ennaith  thayavaaykkutti,  ennaik  kadinthuko'l'lattum;  athu  en  thalaikku  e'n'neyaippoalirukkum;  en  thalai  athai  allaththattuvathillai;  avarga'l  ikkattuga'lil  naan  innum  jebampa'n'nuvean.  (sanggeetham  141:5)

அவர்களுடைய  நியாயாதிபதிகள்  கன்மலைச்  சார்புகளிலிருந்து  தள்ளுண்டுபோகிறபோது,  என்  வார்த்தைகள்  இன்பமானவைகளென்று  கேட்பார்கள்.  (சங்கீதம்  141:6)

avarga'ludaiya  niyaayaathibathiga'l  kanmalaich  saarbuga'lilirunthu  tha'l'lu'ndupoagi’rapoathu,  en  vaarththaiga'l  inbamaanavaiga'len’ru  keadpaarga'l.  (sanggeetham  141:6)

பூமியின்மேல்  ஒருவன்  மரத்தை  வெட்டிப்  பிளக்கிறதுபோல,  எங்கள்  எலும்புகள்  பாதாளவாய்க்கு  நேராய்ச்  சிதறடிக்கப்பட்டிருக்கிறது.  (சங்கீதம்  141:7)

boomiyinmeal  oruvan  maraththai  vettip  pi'lakki’rathupoala,  engga'l  elumbuga'l  paathaa'lavaaykku  nearaaych  sitha’radikkappattirukki’rathu.  (sanggeetham  141:7)

ஆனாலும்  ஆண்டவராகிய  கர்த்தாவே,  என்  கண்கள்  உம்மை  நோக்கியிருக்கிறது;  உம்மை  நம்பியிருக்கிறேன்;  என்  ஆத்துமாவை  வெறுமையாக  விடாதேயும்.  (சங்கீதம்  141:8)

aanaalum  aa'ndavaraagiya  karththaavea,  en  ka'nga'l  ummai  noakkiyirukki’rathu;  ummai  nambiyirukki’rean;  en  aaththumaavai  ve’rumaiyaaga  vidaatheayum.  (sanggeetham  141:8)

அவர்கள்  எனக்கு  வைத்த  கண்ணியின்  சிக்குகளுக்கும்,  அக்கிரமக்காரரின்  சுருக்குகளுக்கும்  என்னை  விலக்கி  இரட்சியும்.  (சங்கீதம்  141:9)

avarga'l  enakku  vaiththa  ka'n'niyin  sikkuga'lukkum,  akkiramakkaararin  surukkuga'lukkum  ennai  vilakki  iradchiyum.  (sanggeetham  141:9)

துன்மார்க்கர்  தங்கள்  வலைகளில்  அகப்படுவார்களாக;  நானோ  அதற்குத்  தப்பிக்  கடந்துபோவேன்.  (சங்கீதம்  141:10)

thunmaarkkar  thangga'l  valaiga'lil  agappaduvaarga'laaga;  naanoa  atha’rkuth  thappik  kadanthupoavean.  (sanggeetham  141:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!