Friday, July 01, 2016

Sanggeetham 140 | சங்கீதம் 140 | Psalms 140

கர்த்தாவே,  பொல்லாத  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவியும்;  கொடுமையுள்ளவனுக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்.  (சங்கீதம்  140:1)

karththaavea,  pollaatha  manushanukku  ennaith  thappuviyum;  kodumaiyu'l'lavanukku  ennai  vilakki  iradchiyum.  (sanggeetham  140:1)

அவர்கள்  தங்கள்  இருதயத்தில்  பொல்லாப்புகளைச்  சிந்தித்து,  யுத்தஞ்செய்ய  நாள்தோறும்  கூட்டங்கூடுகிறார்கள்.  (சங்கீதம்  140:2)

avarga'l  thangga'l  iruthayaththil  pollaappuga'laich  sinthiththu,  yuththagnseyya  naa'lthoa’rum  koottangkoodugi’raarga'l.  (sanggeetham  140:2)

சர்ப்பத்தைப்போல்  தங்கள்  நாவைக்  கூர்மையாக்குகிறார்கள்;  அவர்கள்  உதடுகளின்கீழ்  விரியன்  பாம்பின்விஷம்  இருக்கிறது.  (சேலா.)  (சங்கீதம்  140:3)

sarppaththaippoal  thangga'l  naavaik  koormaiyaakkugi’raarga'l;  avarga'l  uthaduga'linkeezh  viriyan  paambinvisham  irukki’rathu.  (sealaa.)  (sanggeetham  140:3)

கர்த்தாவே,  துன்மார்க்கனுடைய  கைகளுக்கு  என்னை  நீங்கலாக்கி,  கொடியவனுக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்;  அவர்கள்  என்  நடைகளைக்  கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.  (சங்கீதம்  140:4)

karththaavea,  thunmaarkkanudaiya  kaiga'lukku  ennai  neenggalaakki,  kodiyavanukku  ennai  vilakki  iradchiyum;  avarga'l  en  nadaiga'laik  kavizhkkappaarkki’raarga'l.  (sanggeetham  140:4)

அகங்காரிகள்  எனக்குக்  கண்ணியையும்  கயிறுகளையும்  மறைவாய்  வைக்கிறார்கள்;  வழியோரத்திலே  வலையை  விரித்து,  எனக்குச்  சுருக்குகளை  வைக்கிறார்கள்.  (சேலா.)  (சங்கீதம்  140:5)

aganggaariga'l  enakkuk  ka'n'niyaiyum  kayi’ruga'laiyum  ma’raivaay  vaikki’raarga'l;  vazhiyoaraththilea  valaiyai  viriththu,  enakkuch  surukkuga'lai  vaikki’raarga'l.  (sealaa.)  (sanggeetham  140:5)

நான்  கர்த்தரை  நோக்கி:  நீர்  என்  தேவன்  என்றேன்;  கர்த்தாவே,  என்  விண்ணப்பங்களின்  சத்தத்துக்குச்  செவிகொடும்.  (சங்கீதம்  140:6)

naan  karththarai  noakki:  neer  en  theavan  en’rean;  karththaavea,  en  vi'n'nappangga'lin  saththaththukkuch  sevikodum.  (sanggeetham  140:6)

ஆண்டவராகிய  கர்த்தாவே,  என்  இரட்சிப்பின்  பெலனே,  யுத்தநாளில்  என்  தலையை  மூடினீர்.  (சங்கீதம்  140:7)

aa'ndavaraagiya  karththaavea,  en  iradchippin  belanea,  yuththanaa'lil  en  thalaiyai  moodineer.  (sanggeetham  140:7)

கர்த்தாவே,  துன்மார்க்கனுடைய  ஆசைகள்  சித்தியாதபடி  செய்யும்;  அவன்  தன்னை  உயர்த்தாதபடி  அவனுடைய  யோசனையை  நடந்தேறவொட்டாதேயும்.  (சேலா.)  (சங்கீதம்  140:8)

karththaavea,  thunmaarkkanudaiya  aasaiga'l  siththiyaathapadi  seyyum;  avan  thannai  uyarththaathapadi  avanudaiya  yoasanaiyai  nadanthea’ravottaatheayum.  (sealaa.)  (sanggeetham  140:8)

என்னை  வளைந்துகொள்ளுகிறவர்களுடைய  உதடுகளின்  தீவினைகள்  அவர்கள்  தலைகளையே  மூடுவதாக.  (சங்கீதம்  140:9)

ennai  va'lainthuko'l'lugi’ravarga'ludaiya  uthaduga'lin  theevinaiga'l  avarga'l  thalaiga'laiyea  mooduvathaaga.  (sanggeetham  140:9)

நெருப்புத்தழல்  அவர்கள்மேல்  விழுவதாக;  அக்கினியிலும்,  அவர்கள்  எழுந்திருக்கக்கூடாத  படுகுழிகளிலும்  தள்ளப்படுவார்களாக.  (சங்கீதம்  140:10)

neruppuththazhal  avarga'lmeal  vizhuvathaaga;  akkiniyilum,  avarga'l  ezhunthirukkakkoodaatha  padukuzhiga'lilum  tha'l'lappaduvaarga'laaga.  (sanggeetham  140:10)

பொல்லாத  நாவுள்ளவன்  பூமியிலே  நிலைப்பதில்லை;  கொடுமையான  மனுஷனை  பறக்கடிக்கப்  பொல்லாப்பு  அவனை  வேட்டையாடும்.  (சங்கீதம்  140:11)

pollaatha  naavu'l'lavan  boomiyilea  nilaippathillai;  kodumaiyaana  manushanai  pa’rakkadikkap  pollaappu  avanai  veattaiyaadum.  (sanggeetham  140:11)

சிறுமையானவனின்  வழக்கையும்,  எளியவர்களின்  நியாயத்தையும்  கர்த்தர்  விசாரிப்பாரென்று  அறிவேன்.  (சங்கீதம்  140:12)

si’rumaiyaanavanin  vazhakkaiyum,  e'liyavarga'lin  niyaayaththaiyum  karththar  visaarippaaren’ru  a’rivean.  (sanggeetham  140:12)

நீதிமான்கள்  உமது  நாமத்தைத்  துதிப்பார்கள்;  செம்மையானவர்கள்  உமது  சமுகத்தில்  வாசம்பண்ணுவார்கள்.  (சங்கீதம்  140:13)

neethimaanga'l  umathu  naamaththaith  thuthippaarga'l;  semmaiyaanavarga'l  umathu  samugaththil  vaasampa'n'nuvaarga'l.  (sanggeetham  140:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!