Friday, July 01, 2016

Sanggeetham 138 | சங்கீதம் 138 | Psalms 138

உம்மை  என்  முழு  இருதயத்தோடும்  துதிப்பேன்;  தேவர்களுக்கு  முன்பாக  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  138:1)

ummai  en  muzhu  iruthayaththoadum  thuthippean;  theavarga'lukku  munbaaga  ummaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  138:1)

உமது  பரிசுத்த  ஆலயத்திற்கு  நேராக  நான்  பணிந்து,  உமது  கிருபையினிமித்தமும்  உமது  உண்மையினிமித்தமும்  உமது  நாமத்தைத்  துதிப்பேன்;  உமது  சகல  பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும்  உமது  வார்த்தையை  நீர்  மகிமைப்படுத்தியிருக்கிறீர்.  (சங்கீதம்  138:2)

umathu  parisuththa  aalayaththi’rku  nearaaga  naan  pa'ninthu,  umathu  kirubaiyinimiththamum  umathu  u'nmaiyinimiththamum  umathu  naamaththaith  thuthippean;  umathu  sagala  pirasthaabaththaippaarkkilum  umathu  vaarththaiyai  neer  magimaippaduththiyirukki’reer.  (sanggeetham  138:2)

நான்  கூப்பிட்ட  நாளிலே  எனக்கு  மறுஉத்தரவு  அருளினீர்;  என்  ஆத்துமாவிலே  பெலன்தந்து  என்னைத்  தைரியப்படுத்தினீர்;  (சங்கீதம்  138:3)

naan  kooppitta  naa'lilea  enakku  ma’ruuththaravu  aru'lineer;  en  aaththumaavilea  belanthanthu  ennaith  thairiyappaduththineer;  (sanggeetham  138:3)

கர்த்தாவே,  பூமியின்  ராஜாக்களெல்லாரும்  உமது  வாயின்  வார்த்தைகளைக்  கேட்கும்போது  உம்மைத்  துதிப்பார்கள்.  (சங்கீதம்  138:4)

karththaavea,  boomiyin  raajaakka'lellaarum  umathu  vaayin  vaarththaiga'laik  keadkumpoathu  ummaith  thuthippaarga'l.  (sanggeetham  138:4)

கர்த்தரின்  மகிமை  பெரிதாயிருப்பதினால்,  அவர்கள்  கர்த்தரின்  வழிகளைப்  பாடுவார்கள்.  (சங்கீதம்  138:5)

karththarin  magimai  perithaayiruppathinaal,  avarga'l  karththarin  vazhiga'laip  paaduvaarga'l.  (sanggeetham  138:5)

கர்த்தர்  உயர்ந்தவராயிருந்தும்,  தாழ்மையுள்ளவனை  நோக்கிப்  பார்க்கிறார்;  மேட்டிமையானவனையோ  தூரத்திலிருந்து  அறிகிறார்.  (சங்கீதம்  138:6)

karththar  uyarnthavaraayirunthum,  thaazhmaiyu'l'lavanai  noakkip  paarkki’raar;  meattimaiyaanavanaiyoa  thooraththilirunthu  a’rigi’raar.  (sanggeetham  138:6)

நான்  துன்பத்தின்  நடுவில்  நடந்தாலும்  நீர்  என்னை  உயிர்ப்பிப்பீர்;  என்  சத்துருக்களின்  கோபத்துக்கு  விரோதமாக  உமது  கையை  நீட்டுவீர்;  உமது  வலதுகரம்  என்னை  இரட்சிக்கும்.  (சங்கீதம்  138:7)

naan  thunbaththin  naduvil  nadanthaalum  neer  ennai  uyirppippeer;  en  saththurukka'lin  koabaththukku  viroathamaaga  umathu  kaiyai  neettuveer;  umathu  valathukaram  ennai  iradchikkum.  (sanggeetham  138:7)

கர்த்தர்  எனக்காக  யாவையும்  செய்து  முடிப்பார்;  கர்த்தாவே,  உமது  கிருபை  என்றுமுள்ளது;  உமது  கரத்தின்  கிரியைகளை  நெகிழவிடாதிருப்பீராக.  (சங்கீதம்  138:8)

karththar  enakkaaga  yaavaiyum  seythu  mudippaar;  karththaavea,  umathu  kirubai  en’rumu'l'lathu;  umathu  karaththin  kiriyaiga'lai  negizhavidaathiruppeeraaga.  (sanggeetham  138:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!