Friday, July 01, 2016

Sanggeetham 135 | சங்கீதம் 135 | Psalms 135

அல்லேலூயா,  கர்த்தருடைய  நாமத்தைத்  துதியுங்கள்;  கர்த்தரின்  ஊழியக்காரரே,  துதியுங்கள்.  (சங்கீதம்  135:1)

allealooyaa,  karththarudaiya  naamaththaith  thuthiyungga'l;  karththarin  oozhiyakkaararea,  thuthiyungga'l.  (sanggeetham  135:1)

கர்த்தருடைய  வீட்டிலும்,  நமது  தேவனுடைய  ஆலயப்பிராகாரங்களிலும்  நிற்கிறவர்களே,  கர்த்தரைத்  துதியுங்கள்.  (சங்கீதம்  135:2)

karththarudaiya  veettilum,  namathu  theavanudaiya  aalayappiraagaarangga'lilum  ni’rki’ravarga'lea,  karththaraith  thuthiyungga'l.  (sanggeetham  135:2)

கர்த்தர்  நல்லவர்;  அவருடைய  நாமத்தைக்  கீர்த்தனம்பண்ணுங்கள்;  அது  இன்பமானது.  (சங்கீதம்  135:3)

karththar  nallavar;  avarudaiya  naamaththaik  keerththanampa'n'nungga'l;  athu  inbamaanathu.  (sanggeetham  135:3)

கர்த்தர்  யாக்கோபைத்  தமக்காகவும்,  இஸ்ரவேலைத்  தமக்குச்  சொந்தமாகவும்  தெரிந்துகொண்டார்.  (சங்கீதம்  135:4)

karththar  yaakkoabaith  thamakkaagavum,  isravealaith  thamakkuch  sonthamaagavum  therinthuko'ndaar.  (sanggeetham  135:4)

கர்த்தர்  பெரியவர்  என்றும்,  நம்முடைய  ஆண்டவர்  எல்லா  தேவர்களுக்கும்  மேலானவர்  என்றும்  நான்  அறிவேன்.  (சங்கீதம்  135:5)

karththar  periyavar  en’rum,  nammudaiya  aa'ndavar  ellaa  theavarga'lukkum  mealaanavar  en’rum  naan  a’rivean.  (sanggeetham  135:5)

வானத்திலும்  பூமியிலும்,  சமுத்திரங்களிலும்,  எல்லா  ஆழங்களிலும்,  கர்த்தர்  தமக்குச்  சித்தமானதையெல்லாம்  செய்கிறார்.  (சங்கீதம்  135:6)

vaanaththilum  boomiyilum,  samuththirangga'lilum,  ellaa  aazhangga'lilum,  karththar  thamakkuch  siththamaanathaiyellaam  seygi’raar.  (sanggeetham  135:6)

அவர்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து  மேகங்களை  எழும்பப்பண்ணி,  மழையுடன்  மின்னலையும்  உண்டாக்கி,  காற்றைத்  தமது  பண்டசாலைகளிலிருந்து  புறப்படப்பண்ணுகிறார்.  (சங்கீதம்  135:7)

avar  boomiyin  kadaiyaantharangga'lilirunthu  meagangga'lai  ezhumbappa'n'ni,  mazhaiyudan  minnalaiyum  u'ndaakki,  kaat’raith  thamathu  pa'ndasaalaiga'lilirunthu  pu’rappadappa'n'nugi’raar.  (sanggeetham  135:7)

அவர்  எகிப்திலே  மனுஷருடைய  தலைப்பிள்ளைகளையும்  மிருகத்தின்  தலையீற்றுகளையும்  அடித்தார்.  (சங்கீதம்  135:8)

avar  egipthilea  manusharudaiya  thalaippi'l'laiga'laiyum  mirugaththin  thalaiyeet’ruga'laiyum  adiththaar.  (sanggeetham  135:8)

எகிப்துதேசமே,  உன்  நடுவில்  பார்வோன்மேலும்  அவனுடைய  எல்லா  ஊழியக்காரர்மேலும்  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  அனுப்பினார்.  (சங்கீதம்  135:9)

egipthutheasamea,  un  naduvil  paarvoanmealum  avanudaiya  ellaa  oozhiyakkaararmealum  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum  anuppinaar.  (sanggeetham  135:9)

அவர்  அநேகம்  ஜாதிகளை  அடித்து,  பலத்த  ராஜாக்களைக்  கொன்று;  (சங்கீதம்  135:10)

avar  aneagam  jaathiga'lai  adiththu,  balaththa  raajaakka'laik  kon’ru;  (sanggeetham  135:10)

எமோரியரின்  ராஜாவாகிய  சீகோனையும்,  பாசானின்  ராஜாவாகிய  ஓகையும்,  கானானின்  சகல  ராஜ்யங்களையும்  அழித்து,  (சங்கீதம்  135:11)

emoariyarin  raajaavaagiya  seegoanaiyum,  baasaanin  raajaavaagiya  oakaiyum,  kaanaanin  sagala  raajyangga'laiyum  azhiththu,  (sanggeetham  135:11)

அவர்கள்  தேசத்தைத்  தம்முடைய  ஜனமாகிய  இஸ்ரவேலுக்குச்  சுதந்தரமாகக்  கொடுத்தார்.  (சங்கீதம்  135:12)

avarga'l  theasaththaith  thammudaiya  janamaagiya  isravealukkuch  suthantharamaagak  koduththaar.  (sanggeetham  135:12)

கர்த்தாவே,  உம்முடைய  நாமம்  என்றைக்குமுள்ளது;  கர்த்தாவே,  உம்முடைய  பிரஸ்தாபம்  தலைமுறை  தலைமுறைக்கும்  இருக்கும்.  (சங்கீதம்  135:13)

karththaavea,  ummudaiya  naamam  en’raikkumu'l'lathu;  karththaavea,  ummudaiya  pirasthaabam  thalaimu’rai  thalaimu’raikkum  irukkum.  (sanggeetham  135:13)

கர்த்தர்  தம்முடைய  ஜனத்தின்  நியாயத்தை  விசாரித்து,  தம்முடைய  ஊழியக்காரர்மேல்  பரிதாபப்படுவார்.  (சங்கீதம்  135:14)

karththar  thammudaiya  janaththin  niyaayaththai  visaariththu,  thammudaiya  oozhiyakkaararmeal  parithaabappaduvaar.  (sanggeetham  135:14)

அஞ்ஞானிகளுடைய  விக்கிரகங்கள்  வெள்ளியும்  பொன்னும்,  மனுஷருடைய  கைவேலையுமாயிருக்கிறது.  (சங்கீதம்  135:15)

agngnaaniga'ludaiya  vikkiragangga'l  ve'l'liyum  ponnum,  manusharudaiya  kaivealaiyumaayirukki’rathu.  (sanggeetham  135:15)

அவைகளுக்கு  வாயிருந்தும்  பேசாது,  அவைகளுக்குக்  கண்களிருந்தும்  காணாது.  (சங்கீதம்  135:16)

avaiga'lukku  vaayirunthum  peasaathu,  avaiga'lukkuk  ka'nga'lirunthum  kaa'naathu.  (sanggeetham  135:16)

அவைகளுக்குக்  காதுகளிருந்தும்  கேளாது,  அவைகளுடைய  வாயிலே  சுவாசமுமில்லை.  (சங்கீதம்  135:17)

avaiga'lukkuk  kaathuga'lirunthum  kea'laathu,  avaiga'ludaiya  vaayilea  suvaasamumillai.  (sanggeetham  135:17)

அவைகளைப்  பண்ணுகிறவர்களும்,  அவைகளை  நம்புகிறவர்கள்  யாவரும்,  அவைகளைப்போல்  இருக்கிறார்கள்.  (சங்கீதம்  135:18)

avaiga'laip  pa'n'nugi’ravarga'lum,  avaiga'lai  nambugi’ravarga'l  yaavarum,  avaiga'laippoal  irukki’raarga'l.  (sanggeetham  135:18)

இஸ்ரவேல்  குடும்பத்தாரே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்;  ஆரோன்  குடும்பத்தாரே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  (சங்கீதம்  135:19)

israveal  kudumbaththaarea,  karththarai  sthoaththiriyungga'l;  aaroan  kudumbaththaarea,  karththarai  sthoaththiriyungga'l.  (sanggeetham  135:19)

லேவி  குடும்பத்தாரே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்;  கர்த்தருக்குப்  பயந்தவர்களே,  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்.  (சங்கீதம்  135:20)

leavi  kudumbaththaarea,  karththarai  sthoaththiriyungga'l;  karththarukkup  bayanthavarga'lea,  karththarai  sthoaththiriyungga'l.  (sanggeetham  135:20)

எருசலேமில்  வாசம்பண்ணுகிற  கர்த்தருக்கு  சீயோனிலிருந்து  ஸ்தோத்திரமுண்டாவதாக.  அல்லேலூயா.  (சங்கீதம்  135:21)

erusaleamil  vaasampa'n'nugi’ra  karththarukku  seeyoanilirunthu  sthoaththiramu'ndaavathaaga.  allealooyaa.  (sanggeetham  135:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!