Friday, July 01, 2016

Sanggeetham 129 | சங்கீதம் 129 | Psalms 129

என்  சிறுவயது  தொடங்கி  அநேகந்தரம்  என்னை  நெருக்கினார்கள்.  (சங்கீதம்  129:1)

en  si’ruvayathu  thodanggi  aneagantharam  ennai  nerukkinaarga'l.  (sanggeetham  129:1)

என்  சிறுவயது  தொடங்கி  அநேகந்தரம்  என்னை  நெருக்கியும்,  என்னை  மேற்கொள்ளாமற்போனார்கள்.  (சங்கீதம்  129:2)

en  si’ruvayathu  thodanggi  aneagantharam  ennai  nerukkiyum,  ennai  mea’rko'l'laama’rpoanaarga'l.  (sanggeetham  129:2)

உழுகிறவர்கள்  என்  முதுகின்மேல்  உழுது,  தங்கள்  படைச்சால்களை  நீளமாக்கினார்கள்.  (சங்கீதம்  129:3)

uzhugi’ravarga'l  en  muthuginmeal  uzhuthu,  thangga'l  padaichchaalga'lai  nee'lamaakkinaarga'l.  (sanggeetham  129:3)

கர்த்தரோ  நீதியுள்ளவர்;  துன்மார்க்கருடைய  கயிறுகளை  அவர்  அறுத்தார்  என்று,  இஸ்ரவேல்  இப்பொழுது  சொல்வதாக.  (சங்கீதம்  129:4)

karththaroa  neethiyu'l'lavar;  thunmaarkkarudaiya  kayi’ruga'lai  avar  a’ruththaar  en’ru,  israveal  ippozhuthu  solvathaaga.  (sanggeetham  129:4)

சீயோனைப்  பகைக்கிற  அனைவரும்  வெட்கிப்  பின்னிட்டுத்  திரும்பக்கடவர்கள்.  (சங்கீதம்  129:5)

seeyoanaip  pagaikki’ra  anaivarum  vedkip  pinnittuth  thirumbakkadavarga'l.  (sanggeetham  129:5)

வீட்டின்மேல்  முளைக்கும்  புல்லுக்கு  அவர்கள்  ஒப்பாவார்களாக;  அது  வளருமுன்  உலர்ந்துபோம்.  (சங்கீதம்  129:6)

veettinmeal  mu'laikkum  pullukku  avarga'l  oppaavaarga'laaga;  athu  va'larumun  ularnthupoam.  (sanggeetham  129:6)

அறுக்கிறவன்  அதினால்  தன்  கையையும்,  அரிகளைக்  கட்டுகிறவன்  தன்  மடியையும்  நிரப்புவதில்லை.  (சங்கீதம்  129:7)

a’rukki’ravan  athinaal  than  kaiyaiyum,  ariga'laik  kattugi’ravan  than  madiyaiyum  nirappuvathillai.  (sanggeetham  129:7)

கர்த்தருடைய  ஆசீர்வாதம்  உங்களுக்கு  உண்டாவதாக;  கர்த்தரின்  நாமத்தினால்  உங்களை  ஆசீர்வதிக்கிறோம்  என்று  வழிப்போக்கர்  சொல்வதுமில்லை.  (சங்கீதம்  129:8)

karththarudaiya  aaseervaatham  ungga'lukku  u'ndaavathaaga;  karththarin  naamaththinaal  ungga'lai  aaseervathikki’roam  en’ru  vazhippoakkar  solvathumillai.  (sanggeetham  129:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!