Friday, July 01, 2016

Sanggeetham 126 | சங்கீதம் 126 | Psalms 126

சீயோனின்  சிறையிருப்பைக்  கர்த்தர்  திருப்பும்போது,  சொப்பனம்  காண்கிறவர்கள்போல்  இருந்தோம்.  (சங்கீதம்  126:1)

seeyoanin  si’raiyiruppaik  karththar  thiruppumpoathu,  soppanam  kaa'ngi’ravarga'lpoal  irunthoam.  (sanggeetham  126:1)

அப்பொழுது  நம்முடைய  வாய்  நகைப்பினாலும்,  நம்முடைய  நாவு  ஆனந்தசத்தத்தினாலும்  நிறைந்திருந்தது;  அப்பொழுது:  கர்த்தர்  இவர்களுக்குப்  பெரிய  காரியங்களைச்  செய்தார்  என்று  புறஜாதிகளுக்குள்ளே  சொல்லிக்கொண்டார்கள்.  (சங்கீதம்  126:2)

appozhuthu  nammudaiya  vaay  nagaippinaalum,  nammudaiya  naavu  aananthasaththaththinaalum  ni’rainthirunthathu;  appozhuthu:  karththar  ivarga'lukkup  periya  kaariyangga'laich  seythaar  en’ru  pu’rajaathiga'lukku'l'lea  sollikko'ndaarga'l.  (sanggeetham  126:2)

கர்த்தர்  நமக்குப்  பெரிய  காரியங்களைச்  செய்தார்;  இதினிமித்தம்  நாம்  மகிழ்ந்திருக்கிறோம்.  (சங்கீதம்  126:3)

karththar  namakkup  periya  kaariyangga'laich  seythaar;  ithinimiththam  naam  magizhnthirukki’roam.  (sanggeetham  126:3)

கர்த்தாவே,  தெற்கத்தி  வெள்ளங்களைத்  திருப்புவதுபோல,  எங்கள்  சிறையிருப்பைத்  திருப்பும்.  (சங்கீதம்  126:4)

karththaavea,  the’rkaththi  ve'l'langga'laith  thiruppuvathupoala,  engga'l  si’raiyiruppaith  thiruppum.  (sanggeetham  126:4)

கண்ணீரோடே  விதைக்கிறவர்கள்  கெம்பீரத்தோடே  அறுப்பார்கள்.  (சங்கீதம்  126:5)

ka'n'neeroadea  vithaikki’ravarga'l  kembeeraththoadea  a’ruppaarga'l.  (sanggeetham  126:5)

அள்ளித்தூவும்  விதையைச்  சுமக்கிறவன்  அழுதுகொண்டு  போகிறான்;  ஆனாலும்  தான்  அறுத்த  அரிகளைச்  சுமந்துகொண்டு  கெம்பீரத்தோடே  திரும்பிவருவான்.  (சங்கீதம்  126:6)

a'l'liththoovum  vithaiyaich  sumakki’ravan  azhuthuko'ndu  poagi’raan;  aanaalum  thaan  a’ruththa  ariga'laich  sumanthuko'ndu  kembeeraththoadea  thirumbivaruvaan.  (sanggeetham  126:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!