Friday, July 01, 2016

Sanggeetham 123 | சங்கீதம் 123 | Psalms 123

பரலோகத்தில்  வாசமாயிருக்கிறவரே,  உம்மிடத்திற்கு  என்  கண்களை  ஏறெடுக்கிறேன்.  (சங்கீதம்  123:1)

paraloagaththil  vaasamaayirukki’ravarea,  ummidaththi’rku  en  ka'nga'lai  ea’redukki’rean.  (sanggeetham  123:1)

இதோ,  வேலைக்காரரின்  கண்கள்  தங்கள்  எஜமான்களின்  கையை  நோக்கியிருக்குமாப்போலவும்,  வேலைக்காரியின்  கண்கள்  தன்  எஜமாட்டியின்  கையை  நோக்கியிருக்குமாப்போலவும்,  எங்கள்  தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு  இரக்கஞ்செய்யும்வரைக்கும்,  எங்கள்  கண்கள்  அவரை  நோக்கியிருக்கிறது.  (சங்கீதம்  123:2)

ithoa,  vealaikkaararin  ka'nga'l  thangga'l  ejamaanga'lin  kaiyai  noakkiyirukkumaappoalavum,  vealaikkaariyin  ka'nga'l  than  ejamaattiyin  kaiyai  noakkiyirukkumaappoalavum,  engga'l  theavanaagiya  karththar  engga'lukku  irakkagnseyyumvaraikkum,  engga'l  ka'nga'l  avarai  noakkiyirukki’rathu.  (sanggeetham  123:2)

எங்களுக்கு  இரங்கும்  கர்த்தாவே,  எங்களுக்கு  இரங்கும்;  நிந்தனையினால்  மிகவும்  நிறைந்திருக்கிறோம்.  (சங்கீதம்  123:3)

engga'lukku  iranggum  karththaavea,  engga'lukku  iranggum;  ninthanaiyinaal  migavum  ni’rainthirukki’roam.  (sanggeetham  123:3)

சுகஜீவிகளுடைய  நிந்தனையினாலும்,  அகங்காரிகளுடைய  இகழ்ச்சியினாலும்,  எங்கள்  ஆத்துமா  மிகவும்  நிறைந்திருக்கிறது.  (சங்கீதம்  123:4)

sugajeeviga'ludaiya  ninthanaiyinaalum,  aganggaariga'ludaiya  igazhchchiyinaalum,  engga'l  aaththumaa  migavum  ni’rainthirukki’rathu.  (sanggeetham  123:4)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!