கர்த்தருடைய ஆலயத்திற்குப்
போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள்
சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். (சங்கீதம்
122:1)
karththarudaiya aalayaththi’rkup poavoam vaarungga'l en’ru enakku
avarga'l sonnapoathu magizhchchiyaayirunthean.
(sanggeetham 122:1)
எருசலேமே, உன் வாசல்களில் எங்கள்
கால்கள் நிற்கலாயிற்று. (சங்கீதம்
122:2)
erusaleamea, un vaasalga'lil engga'l kaalga'l ni’rkalaayit’ru. (sanggeetham 122:2)
எருசலேம் இசைவிணைப்பான
நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. (சங்கீதம்
122:3)
erusaleam isaivi'naippaana nagaramaayk kattappattirukki’rathu. (sanggeetham
122:3)
அங்கே
இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய
ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின்
நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
(சங்கீதம் 122:4)
anggea
isravealukkuch saadchiyaagak karththarudaiya janangga'laagiya koaththirangga'l karththarin naamaththai
sthoaththirippatha’rkup poagum. (sanggeetham
122:4)
அங்கே
தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள்
வைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 122:5)
anggea
thaaveethin vamsaththaarudaiya singgaasanangga'laagiya niyaayaasanangga'l vaikkappattirukki’rathu. (sanggeetham
122:5)
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. (சங்கீதம்
122:6)
erusaleamin samaathaanaththukkaaga vea'ndikko'l'lungga'l; unnai neasikki’ravarga'l sugiththiruppaarga'laaga. (sanggeetham
122:6)
உன்
அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும்
இருப்பதாக. (சங்கீதம் 122:7)
un alanggaththi’rku'l'lea samaathaanamum, un aramanaiga'lukku'l'lea sugamum
iruppathaaga. (sanggeetham
122:7)
என்
சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும்,
உன்னில் சமாதானம் இருப்பதாக
என்பேன். (சங்கீதம் 122:8)
en sagoatharar nimiththamum
en sineagithar nimiththamum, unnil samaathaanam iruppathaaga enbean. (sanggeetham
122:8)
எங்கள்
தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு
நன்மையுண்டாகத் தேடுவேன். (சங்கீதம்
122:9)
engga'l
theavanaagiya karththarin
aalayaththinimiththam unakku nanmaiyu'ndaagath theaduvean.
(sanggeetham 122:9)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!