Friday, July 01, 2016

Sanggeetham 118 | சங்கீதம் 118 | Psalms 118

கர்த்தரைத்  துதியுங்கள்,  அவர்  நல்லவர்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  (சங்கீதம்  118:1)

karththaraith  thuthiyungga'l,  avar  nallavar;  avar  kirubai  en’rumu'l'lathu.  (sanggeetham  118:1)

அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று  இஸ்ரவேல்  சொல்வதாக.  (சங்கீதம்  118:2)

avar  kirubai  en’rumu'l'lathen’ru  israveal  solvathaaga.  (sanggeetham  118:2)

அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று,  ஆரோனின்  குடும்பத்தார்  சொல்வார்களாக.  (சங்கீதம்  118:3)

avar  kirubai  en’rumu'l'lathen’ru,  aaroanin  kudumbaththaar  solvaarga'laaga.  (sanggeetham  118:3)

அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று,  கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்கள்  சொல்வார்களாக.  (சங்கீதம்  118:4)

avar  kirubai  en’rumu'l'lathen’ru,  karththarukkup  bayappadugi’ravarga'l  solvaarga'laaga.  (sanggeetham  118:4)

நெருக்கத்திலிருந்து  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டேன்,  கர்த்தர்  என்னைக்  கேட்டருளி  விசாலத்திலே  வைத்தார்.  (சங்கீதம்  118:5)

nerukkaththilirunthu  karththarai  noakkik  kooppittean,  karththar  ennaik  keattaru'li  visaalaththilea  vaiththaar.  (sanggeetham  118:5)

கர்த்தர்  என்  பட்சத்தில்  இருக்கிறார்,  நான்  பயப்படேன்;  மனுஷன்  எனக்கு  என்னசெய்வான்?  (சங்கீதம்  118:6)

karththar  en  padchaththil  irukki’raar,  naan  bayappadean;  manushan  enakku  ennaseyvaan?  (sanggeetham  118:6)

எனக்கு  அநுகூலம்  பண்ணுகிறவர்கள்  நடுவில்  கர்த்தர்  என்  பட்சத்தில்  இருக்கிறார்;  என்  சத்துருக்களில்  சரிக்கட்டுதலைக்  காண்பேன்.  (சங்கீதம்  118:7)

enakku  anugoolam  pa'n'nugi’ravarga'l  naduvil  karththar  en  padchaththil  irukki’raar;  en  saththurukka'lil  sarikkattuthalaik  kaa'nbean.  (sanggeetham  118:7)

மனுஷனை  நம்புவதைப்பார்க்கிலும்,  கர்த்தர்  பேரில்  பற்றுதலாயிருப்பதே  நலம்.  (சங்கீதம்  118:8)

manushanai  nambuvathaippaarkkilum,  karththar  pearil  pat’ruthalaayiruppathea  nalam.  (sanggeetham  118:8)

பிரபுக்களை  நம்புவதைப்பார்க்கிலும்,  கர்த்தர்  பேரில்  பற்றுதலாயிருப்பதே  நலம்.  (சங்கீதம்  118:9)

pirabukka'lai  nambuvathaippaarkkilum,  karththar  pearil  pat’ruthalaayiruppathea  nalam.  (sanggeetham  118:9)

எல்லா  ஜாதியாரும்  என்னை  வளைந்துகொள்ளுகிறார்கள்;  கர்த்தருடைய  நாமத்தினால்  அவர்களைச்  சங்கரிப்பேன்.  (சங்கீதம்  118:10)

ellaa  jaathiyaarum  ennai  va'lainthuko'l'lugi’raarga'l;  karththarudaiya  naamaththinaal  avarga'laich  sanggarippean.  (sanggeetham  118:10)

என்னைச்  சுற்றிலும்  வளைந்துகொள்ளுகிறார்கள்;  கர்த்தருடைய  நாமத்தினால்  அவர்களைச்  சங்கரிப்பேன்.  (சங்கீதம்  118:11)

ennaich  sut’rilum  va'lainthuko'l'lugi’raarga'l;  karththarudaiya  naamaththinaal  avarga'laich  sanggarippean.  (sanggeetham  118:11)

தேனீக்களைப்போல  என்னை  வளைந்துகொள்ளுகிறார்கள்;  முள்ளில்  பற்றின  நெருப்பைப்போல  அணைந்து  போவார்கள்;  கர்த்தருடைய  நாமத்தினால்  அவர்களைச்  சங்கரிப்பேன்.  (சங்கீதம்  118:12)

theaneekka'laippoala  ennai  va'lainthuko'l'lugi’raarga'l;  mu'l'lil  pat’rina  neruppaippoala  a'nainthu  poavaarga'l;  karththarudaiya  naamaththinaal  avarga'laich  sanggarippean.  (sanggeetham  118:12)

நான்  விழும்படி  நீ  என்னைத்  தள்ளினாய்;  கர்த்தரோ  எனக்கு  உதவிசெய்தார்.  (சங்கீதம்  118:13)

naan  vizhumpadi  nee  ennaith  tha'l'linaay;  karththaroa  enakku  uthaviseythaar.  (sanggeetham  118:13)

கர்த்தர்  என்  பெலனும்,  என்  கீதமுமானவர்;  அவர்  எனக்கு  இரட்சிப்புமானார்.  (சங்கீதம்  118:14)

karththar  en  belanum,  en  keethamumaanavar;  avar  enakku  iradchippumaanaar.  (sanggeetham  118:14)

நீதிமான்களுடைய  கூடாரங்களில்  இரட்சிப்பின்  கெம்பீரசத்தம்  உண்டு;  கர்த்தரின்  வலதுகரம்  பராக்கிரமஞ்செய்யும்.  (சங்கீதம்  118:15)

neethimaanga'ludaiya  koodaarangga'lil  iradchippin  kembeerasaththam  u'ndu;  karththarin  valathukaram  baraakkiramagnseyyum.  (sanggeetham  118:15)

கர்த்தரின்  வலதுகரம்  உயர்ந்திருக்கிறது;  கர்த்தரின்  வலதுகரம்  பராக்கிரமஞ்செய்யும்.  (சங்கீதம்  118:16)

karththarin  valathukaram  uyarnthirukki’rathu;  karththarin  valathukaram  baraakkiramagnseyyum.  (sanggeetham  118:16)

நான்  சாவாமல்,  பிழைத்திருந்து,  கர்த்தருடைய  செய்கைகளை  விவரிப்பேன்.  (சங்கீதம்  118:17)

naan  saavaamal,  pizhaiththirunthu,  karththarudaiya  seygaiga'lai  vivarippean.  (sanggeetham  118:17)

கர்த்தர்  என்னை  வெகுவாய்த்  தண்டித்தும்,  என்னைச்  சாவுக்கு  ஒப்புக்கொடுக்கவில்லை.  (சங்கீதம்  118:18)

karththar  ennai  veguvaayth  tha'ndiththum,  ennaich  saavukku  oppukkodukkavillai.  (sanggeetham  118:18)

நீதியின்  வாசல்களைத்  திறவுங்கள்;  நான்  அவைகளுக்குள்  பிரவேசித்துக்  கர்த்தரைத்  துதிப்பேன்.  (சங்கீதம்  118:19)

neethiyin  vaasalga'laith  thi’ravungga'l;  naan  avaiga'lukku'l  piraveasiththuk  karththaraith  thuthippean.  (sanggeetham  118:19)

கர்த்தரின்  வாசல்  இதுவே;  நீதிமான்கள்  இதற்குள்  பிரவேசிப்பார்கள்.  (சங்கீதம்  118:20)

karththarin  vaasal  ithuvea;  neethimaanga'l  itha’rku'l  piraveasippaarga'l.  (sanggeetham  118:20)

நீர்  எனக்குச்  செவிகொடுத்து,  எனக்கு  இரட்சிப்பாயிருந்தபடியால்,  நான்  உம்மைத்  துதிப்பேன்.  (சங்கீதம்  118:21)

neer  enakkuch  sevikoduththu,  enakku  iradchippaayirunthapadiyaal,  naan  ummaith  thuthippean.  (sanggeetham  118:21)

வீடுகட்டுகிறவர்கள்  ஆகாதென்று  தள்ளின  கல்லே,  மூலைக்குத்  தலைக்கல்லாயிற்று.  (சங்கீதம்  118:22)

veedukattugi’ravarga'l  aagaathen’ru  tha'l'lina  kallea,  moolaikkuth  thalaikkallaayit’ru.  (sanggeetham  118:22)

அது  கர்த்தராலே  ஆயிற்று,  அது  நம்முடைய  கண்களுக்கு  ஆச்சரியமாயிருக்கிறது.  (சங்கீதம்  118:23)

athu  karththaraalea  aayit’ru,  athu  nammudaiya  ka'nga'lukku  aachchariyamaayirukki’rathu.  (sanggeetham  118:23)

இது  கர்த்தர்  உண்டுபண்ணின  நாள்;  இதிலே  களிகூர்ந்து  மகிழக்கடவோம்.  (சங்கீதம்  118:24)

ithu  karththar  u'ndupa'n'nina  naa'l;  ithilea  ka'likoornthu  magizhakkadavoam.  (sanggeetham  118:24)

கர்த்தாவே,  இரட்சியும்;  கர்த்தாவே,  காரியத்தை  வாய்க்கப்பண்ணும்.  (சங்கீதம்  118:25)

karththaavea,  iradchiyum;  karththaavea,  kaariyaththai  vaaykkappa'n'num.  (sanggeetham  118:25)

கர்த்தருடைய  நாமத்தினாலே  வருகிறவர்  ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;  கர்த்தருடைய  ஆலயத்திலிருந்து  உங்களை  ஆசீர்வதிக்கிறோம்.  (சங்கீதம்  118:26)

karththarudaiya  naamaththinaalea  varugi’ravar  sthoaththirikkappattavar;  karththarudaiya  aalayaththilirunthu  ungga'lai  aaseervathikki’roam.  (sanggeetham  118:26)

கர்த்தர்  நம்மைப்  பிரகாசிப்பிக்கிற  தேவனாயிருக்கிறார்;  பண்டிகைப்பலியைக்  கொண்டுபோய்ப்  பலிபீடத்தின்  கொம்புகளில்  கயிறுகளால்  கட்டுங்கள்.  (சங்கீதம்  118:27)

karththar  nammaip  piragaasippikki’ra  theavanaayirukki’raar;  pa'ndigaipbaliyaik  ko'ndupoayp  balipeedaththin  kombuga'lil  kayi’ruga'laal  kattungga'l.  (sanggeetham  118:27)

நீர்  என்  தேவன்,  நான்  உம்மைத்  துதிப்பேன்;  நீர்  என்  தேவன்,  நான்  உம்மை  உயர்த்துவேன்.  (சங்கீதம்  118:28)

neer  en  theavan,  naan  ummaith  thuthippean;  neer  en  theavan,  naan  ummai  uyarththuvean.  (sanggeetham  118:28)

கர்த்தரைத்  துதியுங்கள்,  அவர்  நல்லவர்;  அவர்  கிருபை  என்றுமுள்ளது.  (சங்கீதம்  118:29)

karththaraith  thuthiyungga'l,  avar  nallavar;  avar  kirubai  en’rumu'l'lathu.  (sanggeetham  118:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!