Friday, July 01, 2016

Sanggeetham 116 | சங்கீதம் 116 | Psalms 116

கர்த்தர்  என்  சத்தத்தையும்  என்  விண்ணப்பத்தையும்  கேட்டதினால்,  அவரில்  அன்புகூருகிறேன்.  (சங்கீதம்  116:1)

karththar  en  saththaththaiyum  en  vi'n'nappaththaiyum  keattathinaal,  avaril  anbukoorugi’rean.  (sanggeetham  116:1)

அவர்  தமது  செவியை  எனக்குச்  சாய்த்தபடியால்,  நான்  உயிரோடிருக்குமளவும்  அவரைத்  தொழுதுகொள்ளுவேன்.  (சங்கீதம்  116:2)

avar  thamathu  seviyai  enakkuch  saayththapadiyaal,  naan  uyiroadirukkuma'lavum  avaraith  thozhuthuko'l'luvean.  (sanggeetham  116:2)

மரணக்கட்டுகள்  என்னைச்  சுற்றிக்கொண்டது,  பாதாள  இடுக்கண்கள்  என்னைப்  பிடித்தது;  இக்கட்டையும்  சஞ்சலத்தையும்  அடைந்தேன்.  (சங்கீதம்  116:3)

mara'nakkattuga'l  ennaich  sut’rikko'ndathu,  paathaa'la  idukka'nga'l  ennaip  pidiththathu;  ikkattaiyum  sagnchalaththaiyum  adainthean.  (sanggeetham  116:3)

அப்பொழுது  நான்  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொண்டு:  கர்த்தாவே,  என்  ஆத்துமாவை  விடுவியும்  என்று  கெஞ்சினேன்.  (சங்கீதம்  116:4)

appozhuthu  naan  karththarudaiya  naamaththaith  thozhuthuko'ndu:  karththaavea,  en  aaththumaavai  viduviyum  en’ru  kegnchinean.  (sanggeetham  116:4)

கர்த்தர்  கிருபையும்  நீதியுமுள்ளவர்,  நம்முடைய  தேவன்  மனஉருக்கமானவர்.  (சங்கீதம்  116:5)

karththar  kirubaiyum  neethiyumu'l'lavar,  nammudaiya  theavan  manaurukkamaanavar.  (sanggeetham  116:5)

கர்த்தர்  கபடற்றவர்களைக்  காக்கிறார்;  நான்  மெலிந்துபோனேன்,  அவர்  என்னை  இரட்சித்தார்.  (சங்கீதம்  116:6)

karththar  kabadat’ravarga'laik  kaakki’raar;  naan  melinthupoanean,  avar  ennai  iradchiththaar.  (sanggeetham  116:6)

என்  ஆத்துமாவே,  கர்த்தர்  உனக்கு  நன்மை  செய்தபடியால்,  நீ  உன்  இளைப்பாறுதலுக்குத்  திரும்பு.  (சங்கீதம்  116:7)

en  aaththumaavea,  karththar  unakku  nanmai  seythapadiyaal,  nee  un  i'laippaa’ruthalukkuth  thirumbu.  (sanggeetham  116:7)

என்  ஆத்துமாவை  மரணத்துக்கும்,  என்  கண்ணைக்  கண்ணீருக்கும்,  என்  காலை  இடறுதலுக்கும்  தப்புவித்தீர்.  (சங்கீதம்  116:8)

en  aaththumaavai  mara'naththukkum,  en  ka'n'naik  ka'n'neerukkum,  en  kaalai  ida’ruthalukkum  thappuviththeer.  (sanggeetham  116:8)

நான்  கர்த்தருக்கு  முன்பாக  ஜீவனுள்ளோர்  தேசத்திலே  நடப்பேன்.  (சங்கீதம்  116:9)

naan  karththarukku  munbaaga  jeevanu'l'loar  theasaththilea  nadappean.  (sanggeetham  116:9)

விசுவாசித்தேன்,  ஆகையால்  பேசுகிறேன்;  நான்  மிகுதியும்  வருத்தப்பட்டேன்.  (சங்கீதம்  116:10)

visuvaasiththean,  aagaiyaal  peasugi’rean;  naan  miguthiyum  varuththappattean.  (sanggeetham  116:10)

எந்த  மனுஷனும்  பொய்யன்  என்று  என்  மனக்கலக்கத்திலே  சொன்னேன்.  (சங்கீதம்  116:11)

entha  manushanum  poyyan  en’ru  en  manakkalakkaththilea  sonnean.  (sanggeetham  116:11)

கர்த்தர்  எனக்குச்  செய்த  எல்லா  உபகாரங்களுக்காகவும்,  அவருக்கு  என்னத்தைச்  செலுத்துவேன்.  (சங்கீதம்  116:12)

karththar  enakkuch  seytha  ellaa  ubagaarangga'lukkaagavum,  avarukku  ennaththaich  seluththuvean.  (sanggeetham  116:12)

இரட்சிப்பின்  பாத்திரத்தை  எடுத்துக்கொண்டு,  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவேன்.  (சங்கீதம்  116:13)

iradchippin  paaththiraththai  eduththukko'ndu,  karththarudaiya  naamaththaith  thozhuthuko'l'luvean.  (sanggeetham  116:13)

நான்  கர்த்தருக்குச்  செய்த  பொருத்தனைகளை  அவருடைய  ஜனங்களெல்லாருக்கு  முன்பாகவும்  செலுத்துவேன்.  (சங்கீதம்  116:14)

naan  karththarukkuch  seytha  poruththanaiga'lai  avarudaiya  janangga'lellaarukku  munbaagavum  seluththuvean.  (sanggeetham  116:14)

கர்த்தருடைய  பரிசுத்தவான்களின்  மரணம்  அவர்  பார்வைக்கு  அருமையானது.  (சங்கீதம்  116:15)

karththarudaiya  parisuththavaanga'lin  mara'nam  avar  paarvaikku  arumaiyaanathu.  (sanggeetham  116:15)

கர்த்தாவே,  நான்  உமது  அடியேன்;  நான்  உமது  அடியாளின்  புத்திரனும்,  உமது  ஊழியக்காரனுமாயிருக்கிறேன்;  என்  கட்டுகளை  அவிழ்த்துவிட்டீர்.  (சங்கீதம்  116:16)

karththaavea,  naan  umathu  adiyean;  naan  umathu  adiyaa'lin  puththiranum,  umathu  oozhiyakkaaranumaayirukki’rean;  en  kattuga'lai  avizhththuvitteer.  (sanggeetham  116:16)

நான்  உமக்கு  ஸ்தோத்திரபலியைச்  செலுத்தி,  கர்த்தருடைய  நாமத்தைத்  தொழுதுகொள்ளுவேன்.  (சங்கீதம்  116:17)

naan  umakku  sthoaththirabaliyaich  seluththi,  karththarudaiya  naamaththaith  thozhuthuko'l'luvean.  (sanggeetham  116:17)

நான்  கர்த்தருக்குச்  செய்த  பொருத்தனைகளை  அவருடைய  ஜனங்களெல்லாருக்கு  முன்பாகவும்,  (சங்கீதம்  116:18)

naan  karththarukkuch  seytha  poruththanaiga'lai  avarudaiya  janangga'lellaarukku  munbaagavum,  (sanggeetham  116:18)

கர்த்தருடைய  ஆலயத்தின்  பிராகாரங்களிலும்,  எருசலேமே  உன்  நடுவிலும்  நிறைவேற்றுவேன்.  அல்லேலூயா.  (சங்கீதம்  116:19)

karththarudaiya  aalayaththin  piraagaarangga'lilum,  erusaleamea  un  naduvilum  ni’raiveat’ruvean.  allealooyaa.  (sanggeetham  116:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!