Friday, July 01, 2016

Sanggeetham 115 | சங்கீதம் 115 | Psalms 115

எங்களுக்கு  அல்ல,  கர்த்தாவே,  எங்களுக்கு  அல்ல,  உமது  கிருபையினிமித்தமும்,  உமது  சத்தியத்தினிமித்தமும்,  உம்முடைய  நாமத்திற்கே  மகிமை  வரப்பண்ணும்.  (சங்கீதம்  115:1)

engga'lukku  alla,  karththaavea,  engga'lukku  alla,  umathu  kirubaiyinimiththamum,  umathu  saththiyaththinimiththamum,  ummudaiya  naamaththi’rkea  magimai  varappa'n'num.  (sanggeetham  115:1)

அவர்களுடைய  தேவன்  இப்பொழுது  எங்கே  என்று  புறஜாதிகள்  சொல்வானேன்?  (சங்கீதம்  115:2)

avarga'ludaiya  theavan  ippozhuthu  enggea  en’ru  pu’rajaathiga'l  solvaanean?  (sanggeetham  115:2)

நம்முடைய  தேவன்  பரலோகத்தில்  இருக்கிறார்;  தமக்குச்  சித்தமான  யாவையும்  செய்கிறார்.  (சங்கீதம்  115:3)

nammudaiya  theavan  paraloagaththil  irukki’raar;  thamakkuch  siththamaana  yaavaiyum  seygi’raar.  (sanggeetham  115:3)

அவர்களுடைய  விக்கிரகங்கள்  வெள்ளியும்  பொன்னும்,  மனுஷருடைய  கைவேலையுமாயிருக்கிறது.  (சங்கீதம்  115:4)

avarga'ludaiya  vikkiragangga'l  ve'l'liyum  ponnum,  manusharudaiya  kaivealaiyumaayirukki’rathu.  (sanggeetham  115:4)

அவைகளுக்கு  வாயிருந்தும்  பேசாது;  அவைகளுக்குக்  கண்களிருந்தும்  காணாது.  (சங்கீதம்  115:5)

avaiga'lukku  vaayirunthum  peasaathu;  avaiga'lukkuk  ka'nga'lirunthum  kaa'naathu.  (sanggeetham  115:5)

அவைகளுக்குக்  காதுகளிருந்தும்  கேளாது;  அவைகளுக்கு  மூக்கிருந்தும்  முகராது.  (சங்கீதம்  115:6)

avaiga'lukkuk  kaathuga'lirunthum  kea'laathu;  avaiga'lukku  mookkirunthum  mugaraathu.  (sanggeetham  115:6)

அவைகளுக்குக்  கைகளிருந்தும்  தொடாது;  அவைகளுக்குக்  கால்களிருந்தும்  நடவாது;  தங்கள்  தொண்டையால்  சத்தமிடவும்  மாட்டாது.  (சங்கீதம்  115:7)

avaiga'lukkuk  kaiga'lirunthum  thodaathu;  avaiga'lukkuk  kaalga'lirunthum  nadavaathu;  thangga'l  tho'ndaiyaal  saththamidavum  maattaathu.  (sanggeetham  115:7)

அவைகளைப்  பண்ணுகிறவர்களும்,  அவைகளை  நம்புகிறவர்கள்  யாவரும்,  அவைகளைப்போலவே  இருக்கிறார்கள்.  (சங்கீதம்  115:8)

avaiga'laip  pa'n'nugi’ravarga'lum,  avaiga'lai  nambugi’ravarga'l  yaavarum,  avaiga'laippoalavea  irukki’raarga'l.  (sanggeetham  115:8)

இஸ்ரவேலே,  கர்த்தரை  நம்பு;  அவரே  அவர்களுக்குத்  துணையும்  அவர்களுக்குக்  கேடகமுமாயிருக்கிறார்.  (சங்கீதம்  115:9)

isravealea,  karththarai  nambu;  avarea  avarga'lukkuth  thu'naiyum  avarga'lukkuk  keadagamumaayirukki’raar.  (sanggeetham  115:9)

ஆரோன்  குடும்பத்தாரே,  கர்த்தரை  நம்புங்கள்;  அவரே  அவர்களுக்குத்  துணையும்  அவர்களுக்குக்  கேடகமுமாயிருக்கிறார்.  (சங்கீதம்  115:10)

aaroan  kudumbaththaarea,  karththarai  nambungga'l;  avarea  avarga'lukkuth  thu'naiyum  avarga'lukkuk  keadagamumaayirukki’raar.  (sanggeetham  115:10)

கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்களே,  கர்த்தரை  நம்புங்கள்;  அவரே  அவர்களுக்குத்  துணையும்  அவர்களுக்குக்  கேடகமுமாயிருக்கிறார்.  (சங்கீதம்  115:11)

karththarukkup  bayappadugi’ravarga'lea,  karththarai  nambungga'l;  avarea  avarga'lukkuth  thu'naiyum  avarga'lukkuk  keadagamumaayirukki’raar.  (sanggeetham  115:11)

கர்த்தர்  நம்மை  நினைத்திருக்கிறார்,  அவர்  ஆசீர்வதிப்பார்;  இஸ்ரவேல்  குடும்பத்தாரை  ஆசீர்வதிப்பார்,  அவர்  ஆரோன்  குடும்பத்தாரை  ஆசீர்வதிப்பார்.  (சங்கீதம்  115:12)

karththar  nammai  ninaiththirukki’raar,  avar  aaseervathippaar;  israveal  kudumbaththaarai  aaseervathippaar,  avar  aaroan  kudumbaththaarai  aaseervathippaar.  (sanggeetham  115:12)

கர்த்தருக்குப்  பயப்படுகிற  பெரியோரையும்  சிறியோரையும்  ஆசீர்வதிப்பார்.  (சங்கீதம்  115:13)

karththarukkup  bayappadugi’ra  periyoaraiyum  si’riyoaraiyum  aaseervathippaar.  (sanggeetham  115:13)

கர்த்தர்  உங்களையும்  உங்கள்  பிள்ளைகளையும்  வர்த்திக்கப்பண்ணுவார்.  (சங்கீதம்  115:14)

karththar  ungga'laiyum  ungga'l  pi'l'laiga'laiyum  varththikkappa'n'nuvaar.  (sanggeetham  115:14)

வானத்தையும்  பூமியையும்  படைத்த  கர்த்தராலே  நீங்கள்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  (சங்கீதம்  115:15)

vaanaththaiyum  boomiyaiyum  padaiththa  karththaraalea  neengga'l  aaseervathikkappattavarga'l.  (sanggeetham  115:15)

வானங்கள்  கர்த்தருடையவைகள்;  பூமியையோ  மனுபுத்திரருக்குக்  கொடுத்தார்.  (சங்கீதம்  115:16)

vaanangga'l  karththarudaiyavaiga'l;  boomiyaiyoa  manupuththirarukkuk  koduththaar.  (sanggeetham  115:16)

மரித்தவர்களும்  மவுனத்தில்  இறங்குகிற  அனைவரும்  கர்த்தரைத்  துதியார்கள்.  (சங்கீதம்  115:17)

mariththavarga'lum  mavunaththil  i’ranggugi’ra  anaivarum  karththaraith  thuthiyaarga'l.  (sanggeetham  115:17)

நாமோ,  இதுமுதல்  என்றென்றைக்கும்  கர்த்தரை  ஸ்தோத்திரிப்போம்.  அல்லேலூயா.  (சங்கீதம்  115:18)

naamoa,  ithumuthal  en’ren’raikkum  karththarai  sthoaththirippoam.  allealooyaa.  (sanggeetham  115:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!