Friday, July 01, 2016

Sanggeetham 112 | சங்கீதம் 112 | Psalms 112

அல்லேலூயா,  கர்த்தருக்குப்  பயந்து,  அவருடைய  கட்டளைகளில்  மிகவும்  பிரியமாயிருக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (சங்கீதம்  112:1)

allealooyaa,  karththarukkup  bayanthu,  avarudaiya  katta'laiga'lil  migavum  piriyamaayirukki’ra  manushan  baakkiyavaan.  (sanggeetham  112:1)

அவன்  சந்ததி  பூமியில்  பலத்திருக்கும்,  செம்மையானவர்களின்  வம்சம்  ஆசீர்வதிக்கப்படும்.  (சங்கீதம்  112:2)

avan  santhathi  boomiyil  balaththirukkum,  semmaiyaanavarga'lin  vamsam  aaseervathikkappadum.  (sanggeetham  112:2)

ஆஸ்தியும்  ஐசுவரியமும்  அவன்  வீட்டிலிருக்கும்;  அவனுடைய  நீதி  என்றைக்கும்  நிற்கும்.  (சங்கீதம்  112:3)

aasthiyum  aisuvariyamum  avan  veettilirukkum;  avanudaiya  neethi  en’raikkum  ni’rkum.  (sanggeetham  112:3)

செம்மையானவர்களுக்கு  இருளிலே  வெளிச்சம்  உதிக்கும்;  அவன்  இரக்கமும்  மனஉருக்கமும்  நீதியுமுள்ளவன்.  (சங்கீதம்  112:4)

semmaiyaanavarga'lukku  iru'lilea  ve'lichcham  uthikkum;  avan  irakkamum  manaurukkamum  neethiyumu'l'lavan.  (sanggeetham  112:4)

இரங்கிக்  கடன்கொடுத்து,  தன்  காரியங்களை  நியாயமானபடி  நடப்பிக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (சங்கீதம்  112:5)

iranggik  kadankoduththu,  than  kaariyangga'lai  niyaayamaanapadi  nadappikki’ra  manushan  baakkiyavaan.  (sanggeetham  112:5)

அவன்  என்றென்றைக்கும்  அசைக்கப்படாதிருப்பான்;  நீதிமான்  நித்திய  கீர்த்தியுள்ளவன்.  (சங்கீதம்  112:6)

avan  en’ren’raikkum  asaikkappadaathiruppaan;  neethimaan  niththiya  keerththiyu'l'lavan.  (sanggeetham  112:6)

துர்ச்செய்தியைக்  கேட்கிறதினால்  பயப்படான்;  அவன்  இருதயம்  கர்த்தரை  நம்பித்  திடனாயிருக்கும்.  (சங்கீதம்  112:7)

thurchseythiyaik  keadki’rathinaal  bayappadaan;  avan  iruthayam  karththarai  nambith  thidanaayirukkum.  (sanggeetham  112:7)

அவன்  இருதயம்  உறுதியாயிருக்கும்;  அவன்  தன்  சத்துருக்களில்  சரிக்கட்டுதலைக்  காணுமட்டும்  பயப்படாதிருப்பான்.  (சங்கீதம்  112:8)

avan  iruthayam  u’ruthiyaayirukkum;  avan  than  saththurukka'lil  sarikkattuthalaik  kaa'numattum  bayappadaathiruppaan.  (sanggeetham  112:8)

வாரியிறைத்தான்,  ஏழைகளுக்குக்  கொடுத்தான்,  அவனுடைய  நீதி  என்றென்றைக்கும்  நிற்கும்;  அவன்  கொம்பு  மகிமையாய்  உயர்த்தப்படும்.  (சங்கீதம்  112:9)

vaariyi’raiththaan,  eazhaiga'lukkuk  koduththaan,  avanudaiya  neethi  en’ren’raikkum  ni’rkum;  avan  kombu  magimaiyaay  uyarththappadum.  (sanggeetham  112:9)

துன்மார்க்கன்  அதைக்  கண்டு  மனமடிவாகி,  தன்  பற்களைக்  கடித்துக்  கரைந்துபோவான்;  துன்மார்க்கருடைய  ஆசை  அழியும்.  (சங்கீதம்  112:10)

thunmaarkkan  athaik  ka'ndu  manamadivaagi,  than  pa’rka'laik  kadiththuk  karainthupoavaan;  thunmaarkkarudaiya  aasai  azhiyum.  (sanggeetham  112:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!