Friday, July 01, 2016

Sanggeetham 111 | சங்கீதம் 111 | Psalms 111

அல்லேலூயா,  செம்மையானவர்களுடைய  சங்கத்திலும்  சபையிலும்  கர்த்தரை  முழு  இருதயத்தோடும்  துதிப்பேன்.  (சங்கீதம்  111:1)

allealooyaa,  semmaiyaanavarga'ludaiya  sanggaththilum  sabaiyilum  karththarai  muzhu  iruthayaththoadum  thuthippean.  (sanggeetham  111:1)

கர்த்தரின்  செய்கைகள்  பெரியவைகளும்,  அவைகளில்  பிரியப்படுகிற  எல்லாராலும்  ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.  (சங்கீதம்  111:2)

karththarin  seygaiga'l  periyavaiga'lum,  avaiga'lil  piriyappadugi’ra  ellaaraalum  aaraayappadugi’ravaiga'lumaayirukki’rathu.  (sanggeetham  111:2)

அவருடைய  செயல்  மகிமையும்  மகத்துவமுமுள்ளது,  அவருடைய  நீதி  என்றென்றைக்கும்  நிற்கும்.  (சங்கீதம்  111:3)

avarudaiya  seyal  magimaiyum  magaththuvamumu'l'lathu,  avarudaiya  neethi  en’ren’raikkum  ni’rkum.  (sanggeetham  111:3)

அவர்  தம்முடைய  அதிசயமான  செய்கைகளை  நினைவுகூரும்படி  செய்தார்,  கர்த்தர்  இரக்கமும்  மனஉருக்கமுமுள்ளவர்.  (சங்கீதம்  111:4)

avar  thammudaiya  athisayamaana  seygaiga'lai  ninaivukoorumpadi  seythaar,  karththar  irakkamum  manaurukkamumu'l'lavar.  (sanggeetham  111:4)

தமக்குப்  பயந்தவர்களுக்கு  ஆகாரம்  கொடுத்தார்;  தமது  உடன்படிக்கையை  என்றென்றைக்கும்  நினைப்பார்.  (சங்கீதம்  111:5)

thamakkup  bayanthavarga'lukku  aagaaram  koduththaar;  thamathu  udanpadikkaiyai  en’ren’raikkum  ninaippaar.  (sanggeetham  111:5)

ஜாதிகளின்  சுதந்தரத்தைத்  தமது  ஜனங்களுக்குக்  கொடுத்ததினால்,  தமது  கிரியைகளின்  பெலத்தை  அவர்களுக்குத்  தெரியப்படுத்தினார்.  (சங்கீதம்  111:6)

jaathiga'lin  suthantharaththaith  thamathu  janangga'lukkuk  koduththathinaal,  thamathu  kiriyaiga'lin  belaththai  avarga'lukkuth  theriyappaduththinaar.  (sanggeetham  111:6)

அவருடைய  கரத்தின்  கிரியைகள்  சத்தியமும்  நியாயமுமானவைகள்;  அவருடைய  கட்டளைகளெல்லாம்  உண்மையானவைகள்.  (சங்கீதம்  111:7)

avarudaiya  karaththin  kiriyaiga'l  saththiyamum  niyaayamumaanavaiga'l;  avarudaiya  katta'laiga'lellaam  u'nmaiyaanavaiga'l.  (sanggeetham  111:7)

அவைகள்  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களுக்கும்  உறுதியானவைகள்,  அவைகள்  உண்மையும்  செம்மையுமாய்ச்  செய்யப்பட்டவைகள்.  (சங்கீதம்  111:8)

avaiga'l  en’ren’raikkumu'l'la  sathaakaalangga'lukkum  u’ruthiyaanavaiga'l,  avaiga'l  u'nmaiyum  semmaiyumaaych  seyyappattavaiga'l.  (sanggeetham  111:8)

அவர்  தமது  ஜனத்திற்கு  மீட்பை  அனுப்பி,  தமது  உடன்படிக்கையை  நித்திய  உடன்படிக்கையாகக்  கட்டளையிட்டார்;  அவருடைய  நாமம்  பரிசுத்தமும்  பயங்கரமுமானது.  (சங்கீதம்  111:9)

avar  thamathu  janaththi’rku  meedpai  anuppi,  thamathu  udanpadikkaiyai  niththiya  udanpadikkaiyaagak  katta'laiyittaar;  avarudaiya  naamam  parisuththamum  bayanggaramumaanathu.  (sanggeetham  111:9)

கர்த்தருக்குப்  பயப்படுதலே  ஞானத்தின்  ஆரம்பம்;  அவருடைய  கற்பனைகளின்படி  செய்கிற  யாவருக்கும்  நற்புத்தியுண்டு;  அவர்  புகழ்ச்சி  என்றைக்கும்  நிற்கும்.  (சங்கீதம்  111:10)

karththarukkup  bayappaduthalea  gnaanaththin  aarambam;  avarudaiya  ka’rpanaiga'linpadi  seygi’ra  yaavarukkum  na’rbuththiyu'ndu;  avar  pugazhchchi  en’raikkum  ni’rkum.  (sanggeetham  111:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!