Sunday, July 24, 2016

Sagariyaa 9 | சகரியா 9 | Zechariah 9


ஆதிராக்  தேசத்துக்கு  விரோதமானதும்,  தமஸ்குவின்மேல்  வந்து  தங்குவதுமான  கர்த்தருடைய  வார்த்தையாகிய  பாரம்;  மனுஷரின்  கண்களும்  இஸ்ரவேலுடைய  சகல  கோத்திரங்களின்  கண்களும்  கர்த்தரை  நோக்கிக்கொண்டிருக்கும்.  (சகரியா  9:1)

aathiraak  theasaththukku  viroathamaanathum,  thamaskuvinmeal  vanthu  thangguvathumaana  karththarudaiya  vaarththaiyaagiya  baaram;  manusharin  ka'nga'lum  isravealudaiya  sagala  koaththirangga'lin  ka'nga'lum  karththarai  noakkikko'ndirukkum.  (sagariyaa  9:1)

ஆமாத்தும்,  மிகவும்  ஞானமுள்ள  தீருவும்  சீதோனும்  அதின்  எல்லைக்குள்ளாயிருக்கும்.  (சகரியா  9:2)

aamaaththum,  migavum  gnaanamu'l'la  theeruvum  seethoanum  athin  ellaikku'l'laayirukkum.  (sagariyaa  9:2)

தீரு  தனக்கு  அரணைக்கட்டி,  தூளைப்போல்  வெள்ளியையும்,  வீதிகளின்  சேற்றைப்போல்  பசும்பொன்னையும்  சேர்த்துவைத்தது.  (சகரியா  9:3)

theeru  thanakku  ara'naikkatti,  thoo'laippoal  ve'l'liyaiyum,  veethiga'lin  seat’raippoal  pasumponnaiyum  searththuvaiththathu.  (sagariyaa  9:3)

இதோ,  ஆண்டவர்  அதைத்  தள்ளிவிட்டு,  சமுத்திரத்தில்  அதின்  பலத்தை  முறித்துப்போடுவார்;  அது  அக்கினிக்கு  இரையாகும்.  (சகரியா  9:4)

ithoa,  aa'ndavar  athaith  tha'l'livittu,  samuththiraththil  athin  balaththai  mu’riththuppoaduvaar;  athu  akkinikku  iraiyaagum.  (sagariyaa  9:4)

அஸ்கலோன்  அதைக்  கண்டு  பயப்படும்,  காத்சாவும்  அதைக்கண்டு  மிகவும்  துக்கிக்கும்,  எக்ரோனும்  தன்  நம்பிக்கை  அற்றுப்போனபடியால்  மிகவும்  பிரலாபிக்கும்;  காத்சாவில்  ராஜா  அழிந்துபோவான்;  அஸ்கலோன்  குடியற்றிருக்கும்.  (சகரியா  9:5)

askaloan  athaik  ka'ndu  bayappadum,  kaathsaavum  athaikka'ndu  migavum  thukkikkum,  ekroanum  than  nambikkai  at’ruppoanapadiyaal  migavum  piralaabikkum;  kaathsaavil  raajaa  azhinthupoavaan;  askaloan  kudiyat’rirukkum.  (sagariyaa  9:5)

அஸ்தோத்தில்  வேசிப்பிள்ளைகள்  வாசம்பண்ணுவார்கள்;  நான்  பெலிஸ்தரின்  கர்வத்தை  அழிப்பேன்.  (சகரியா  9:6)

asthoaththil  veasippi'l'laiga'l  vaasampa'n'nuvaarga'l;  naan  pelistharin  karvaththai  azhippean.  (sagariyaa  9:6)

அவனுடைய  இரத்தத்தை  அவன்  வாயிலிருந்தும்,  அவனுடைய  அருவருப்புகளை  அவன்  பல்லுகளின்  நடுவிலிருந்தும்  நீக்கிப்போடுவேன்;  அவனோ  நம்முடைய  தேவனுக்கென்று  மீதியாக  வைக்கப்பட்டு,  யூதாவிலே  பிரபுவைப்போல  இருப்பான்;  எக்ரோன்  எபூசியனைப்போல  இருப்பான்.  (சகரியா  9:7)

avanudaiya  iraththaththai  avan  vaayilirunthum,  avanudaiya  aruvaruppuga'lai  avan  palluga'lin  naduvilirunthum  neekkippoaduvean;  avanoa  nammudaiya  theavanukken’ru  meethiyaaga  vaikkappattu,  yoothaavilea  pirabuvaippoala  iruppaan;  ekroan  eboosiyanaippoala  iruppaan.  (sagariyaa  9:7)

சேனையானது  புறப்படும்போதும்,  திரும்பி  வரும்போதும்,  என்  ஆலயம்  காக்கப்படும்படி  அதைச்  சுற்றிலும்  பாளயம்போடுவேன்;  இனி  ஒடுக்குகிறவன்  அவர்களிடத்தில்  கடந்துவருவதில்லை;  அதை  என்  கண்களினாலே  பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  (சகரியா  9:8)

seanaiyaanathu  pu’rappadumpoathum,  thirumbi  varumpoathum,  en  aalayam  kaakkappadumpadi  athaich  sut’rilum  paa'layampoaduvean;  ini  odukkugi’ravan  avarga'lidaththil  kadanthuvaruvathillai;  athai  en  ka'nga'linaalea  paarththukko'ndirukki’rean.  (sagariyaa  9:8)

சீயோன்  குமாரத்தியே,  மிகவும்  களிகூரு;  எருசலேம்  குமாரத்தியே,  கெம்பீரி;  இதோ,  உன்  ராஜா  உன்னிடத்தில்  வருகிறார்;  அவர்  நீதியுள்ளவரும்  இரட்சிக்கிறவரும்  தாழ்மையுள்ளவரும்,  கழுதையின்மேலும்  கழுதைக்குட்டியாகிய  மறியின்மேலும்  ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.  (சகரியா  9:9)

seeyoan  kumaaraththiyea,  migavum  ka'likooru;  erusaleam  kumaaraththiyea,  kembeeri;  ithoa,  un  raajaa  unnidaththil  varugi’raar;  avar  neethiyu'l'lavarum  iradchikki’ravarum  thaazhmaiyu'l'lavarum,  kazhuthaiyinmealum  kazhuthaikkuttiyaagiya  ma’riyinmealum  ea’rivarugi’ravarumaayirukki’raar.  (sagariyaa  9:9)

எப்பிராயீமினின்று  இரதங்களையும்  எருசலேமினின்று  குதிரைகளையும்  அற்றுப்போகப்பண்ணுவேன்,  யுத்தவில்லும்  இல்லாமற்போகும்;  அவர்  ஜாதிகளுக்குச்  சமாதானம்  கூறுவார்;  அவருடைய  ஆளுகை  ஒரு  சமுத்திரந்தொடங்கி  மறுசமுத்திரம்வரைக்கும்,  நதிதொடங்கிப்  பூமியின்  எல்லைகள்பரியந்தமும்  செல்லும்.  (சகரியா  9:10)

eppiraayeeminin’ru  irathangga'laiyum  erusaleaminin’ru  kuthiraiga'laiyum  at’ruppoagappa'n'nuvean,  yuththavillum  illaama’rpoagum;  avar  jaathiga'lukkuch  samaathaanam  koo’ruvaar;  avarudaiya  aa'lugai  oru  samuththiranthodanggi  ma’rusamuththiramvaraikkum,  nathithodanggip  boomiyin  ellaiga'lpariyanthamum  sellum.  (sagariyaa  9:10)

உனக்கு  நான்  செய்வதென்னவென்றால்,  தண்ணீரில்லாத  குழியிலே  அடைபட்டிருக்கிற  உன்னுடையவர்களை  நான்  உன்  உடன்படிக்கையின்  இரத்தத்தினாலே  விடுதலைபண்ணுவேன்.  (சகரியா  9:11)

unakku  naan  seyvathennaven’raal,  tha'n'neerillaatha  kuzhiyilea  adaipattirukki’ra  unnudaiyavarga'lai  naan  un  udanpadikkaiyin  iraththaththinaalea  viduthalaipa'n'nuvean.  (sagariyaa  9:11)

நம்பிக்கையுடைய  சிறைகளே,  அரணுக்குத்  திரும்புங்கள்;  இரட்டிப்பான  நன்மையைத்  தருவேன்,  இன்றைக்கே  தருவேன்.  (சகரியா  9:12)

nambikkaiyudaiya  si’raiga'lea,  ara'nukkuth  thirumbungga'l;  irattippaana  nanmaiyaith  tharuvean,  in’raikkea  tharuvean.  (sagariyaa  9:12)

நான்  எனக்கென்று  யூதாவை  நாணேற்றி,  எப்பிராயீமிலே  வில்லை  நிரப்பி,  சீயோனே,  உன்  புத்திரரைக்  கிரேக்குதேசப்  புத்திரருக்கு  விரோதமாக  எழுப்பி,  உன்னைப்  பராக்கிரமசாலியின்  பட்டயத்துக்கு  ஒப்பாக்குவேன்.  (சகரியா  9:13)

naan  enakken’ru  yoothaavai  naa'neat’ri,  eppiraayeemilea  villai  nirappi,  seeyoanea,  un  puththiraraik  kireakkutheasap  puththirarukku  viroathamaaga  ezhuppi,  unnaip  baraakkiramasaaliyin  pattayaththukku  oppaakkuvean.  (sagariyaa  9:13)

அவர்கள்  பட்சத்தில்  கர்த்தர்  காணப்படுவார்;  அவருடைய  அம்பு  மின்னலைப்போலப்  புறப்படும்;  கர்த்தராகிய  ஆண்டவர்  எக்காளம்  ஊதி,  தென்திசைச்  சுழல்காற்றுகளோடே  நடந்துவருவார்.  (சகரியா  9:14)

avarga'l  padchaththil  karththar  kaa'nappaduvaar;  avarudaiya  ambu  minnalaippoalap  pu’rappadum;  karththaraagiya  aa'ndavar  ekkaa'lam  oothi,  thenthisaich  suzhalkaat’ruga'loadea  nadanthuvaruvaar.  (sagariyaa  9:14)

சேனைகளின்  கர்த்தர்  அவர்களைக்  காப்பாற்றுவார்;  அவர்கள்  பட்சித்து,  கவண்கற்களால்  கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்;  அவர்கள்  குடித்துக்  களிப்பினால்  ஆரவாரிப்பார்கள்;  பானபாத்திரங்கள்போலவும்  பலிபீடத்தின்  கோடிகளைப்போலவும்  நிறைந்திருப்பார்கள்.  (சகரியா  9:15)

seanaiga'lin  karththar  avarga'laik  kaappaat’ruvaar;  avarga'l  padchiththu,  kava'nka’rka'laal  keezhppaduththikko'lvaarga'l;  avarga'l  kudiththuk  ka'lippinaal  aaravaarippaarga'l;  baanapaaththirangga'lpoalavum  balipeedaththin  koadiga'laippoalavum  ni’rainthiruppaarga'l.  (sagariyaa  9:15)

அந்நாளில்  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தர்  தம்முடைய  ஜனமான  மந்தையாகிய  அவர்களை  இரட்சிப்பார்;  அவர்கள்  அவருடைய  தேசத்தில்  ஏற்றப்பட்ட  கொடிகளின்  கிரீடத்தில்  பதிந்திருப்பார்கள்.  (சகரியா  9:16)

annaa'lil  avarga'ludaiya  theavanaagiya  karththar  thammudaiya  janamaana  manthaiyaagiya  avarga'lai  iradchippaar;  avarga'l  avarudaiya  theasaththil  eat’rappatta  kodiga'lin  kireedaththil  pathinthiruppaarga'l.  (sagariyaa  9:16)

அவருடைய  காருண்யம்  எத்தனை  பெரியது?  அவருடைய  சௌந்தரியம்  எத்தனை  பெரியது?  தானியம்  வாலிபரையும்,  புது  திராட்சரசம்  கன்னிகைகளையும்  வளர்க்கும்.  (சகரியா  9:17)

avarudaiya  kaaru'nyam  eththanai  periyathu?  avarudaiya  saunthariyam  eththanai  periyathu?  thaaniyam  vaalibaraiyum,  puthu  thiraadcharasam  kannigaiga'laiyum  va'larkkum.  (sagariyaa  9:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!