Sunday, July 24, 2016

Sagariyaa 8 | சகரியா 8 | Zechariah 8

சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தை  உண்டாகி,  அவர்:  (சகரியா  8:1)

seanaiga'ludaiya  karththarin  vaarththai  u'ndaagi,  avar:  (sagariyaa  8:1)

நான்  சீயோனுக்காக  கடும்  வைராக்கியங்கொண்டேன்;  அதற்காக  மகா  உக்கிரமான  வைராக்கியங்கொண்டேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:2)

naan  seeyoanukkaaga  kadum  vairaakkiyangko'ndean;  atha’rkaaga  mahaa  ukkiramaana  vairaakkiyangko'ndean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:2)

நான்  சீயோனிடத்தில்  திரும்பி,  எருசலேமின்  நடுவிலே  வாசம்பண்ணுவேன்;  எருசலேம்  சத்திய  நகரம்  என்றும்,  சேனைகளுடைய  கர்த்தரின்  பர்வதம்  பரிசுத்த  பர்வதம்  என்றும்  அழைக்கப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:3)

naan  seeyoanidaththil  thirumbi,  erusaleamin  naduvilea  vaasampa'n'nuvean;  erusaleam  saththiya  nagaram  en’rum,  seanaiga'ludaiya  karththarin  parvatham  parisuththa  parvatham  en’rum  azhaikkappadum  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  8:3)

திரும்பவும்  எருசலேமின்  வீதிகளில்  முதிர்வயதினாலே  தங்கள்  கைகளில்  கோலைப்பிடித்து  நடக்கிற  கிழவரும்  கிழவிகளும்  குடியிருப்பார்கள்.  (சகரியா  8:4)

thirumbavum  erusaleamin  veethiga'lil  muthirvayathinaalea  thangga'l  kaiga'lil  koalaippidiththu  nadakki’ra  kizhavarum  kizhaviga'lum  kudiyiruppaarga'l.  (sagariyaa  8:4)

நகரத்தின்  தெருக்களிலே  விளையாடுகிற  ஆண்பிள்ளைகளும்  பெண்பிள்ளைகளும்  அதின்  வீதிகளில்  நிறைந்திருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:5)

nagaraththin  therukka'lilea  vi'laiyaadugi’ra  aa'npi'l'laiga'lum  pe'npi'l'laiga'lum  athin  veethiga'lil  ni’rainthirukkum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:5)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  அது  இந்த  ஜனத்தில்  மீதியானவர்களின்  பார்வைக்கு  இந்நாட்களில்  ஆச்சரியமாயிருந்தாலும்,  என்  பார்வைக்கும்  ஆச்சரியமாயிருக்குமோ  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:6)

seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  athu  intha  janaththil  meethiyaanavarga'lin  paarvaikku  innaadka'lil  aachchariyamaayirunthaalum,  en  paarvaikkum  aachchariyamaayirukkumoa  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:6)

இதோ,  கிழக்குதேசத்திலும்  மேற்கு  தேசத்திலுமிருந்து  என்  ஜனங்களை  நான்  இரட்சித்து,  (சகரியா  8:7)

ithoa,  kizhakkutheasaththilum  mea’rku  theasaththilumirunthu  en  janangga'lai  naan  iradchiththu,  (sagariyaa  8:7)

அவர்களை  அழைத்துக்கொண்டுவருவேன்;  அவர்கள்  எருசலேமின்  நடுவிலே  குடியிருப்பார்கள்;  அவர்கள்  எனக்கு  உண்மையும்  நீதியுமான  ஜனமாயிருப்பார்கள்,  நான்  அவர்களுக்குத்  தேவனாயிருப்பேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:8)

avarga'lai  azhaiththukko'nduvaruvean;  avarga'l  erusaleamin  naduvilea  kudiyiruppaarga'l;  avarga'l  enakku  u'nmaiyum  neethiyumaana  janamaayiruppaarga'l,  naan  avarga'lukkuth  theavanaayiruppean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:8)

சேனைகளுடைய  கர்த்தரின்  வீடாகிய  ஆலயம்  கட்டப்படும்படிக்கு  அதின்  அஸ்திபாரங்கள்  போடப்பட்ட  நாள்முதற்  கொண்டிருக்கிற  தீர்க்கதரிசிகளின்  வாயினால்  இந்த  வார்த்தைகளை  இந்நாட்களில்  கேட்டுவருகிறவர்களே,  உங்கள்  கைகள்  திடப்படக்கடவது  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:9)

seanaiga'ludaiya  karththarin  veedaagiya  aalayam  kattappadumpadikku  athin  asthibaarangga'l  poadappatta  naa'lmutha’r  ko'ndirukki’ra  theerkkatharisiga'lin  vaayinaal  intha  vaarththaiga'lai  innaadka'lil  keattuvarugi’ravarga'lea,  ungga'l  kaiga'l  thidappadakkadavathu  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:9)

இந்நாட்களுக்கு  முன்னே  மனுஷனுடைய  வேலையால்  பலனுமில்லை,  மிருகஜீவனுடைய  வேலையால்  பலனுமில்லை;  போகிறவனுக்கும்  வருகிறவனுக்கும்  நெருக்கிடையினிமித்தம்  சமாதானமுமில்லை;  எல்லா  மனுஷரையும்  ஒருவரையொருவர்  விரோதிக்கச்செய்தேன்.  (சகரியா  8:10)

innaadka'lukku  munnea  manushanudaiya  vealaiyaal  palanumillai,  mirugajeevanudaiya  vealaiyaal  palanumillai;  poagi’ravanukkum  varugi’ravanukkum  nerukkidaiyinimiththam  samaathaanamumillai;  ellaa  manusharaiyum  oruvaraiyoruvar  viroathikkachseythean.  (sagariyaa  8:10)

இப்போதோ  இந்த  ஜனத்தில்  மீதியானவர்களுக்கு  நான்  முந்தினநாட்களில்  இருந்ததுபோல  இருக்கமாட்டேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:11)

ippoathoa  intha  janaththil  meethiyaanavarga'lukku  naan  munthinanaadka'lil  irunthathupoala  irukkamaattean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:11)

விதைப்புச்  சமாதானமுள்ளதாயிருக்கும்;  திராட்சச்செடி  தன்  கனியைத்  தரும்;  பூமி  தன்  பலனைத்  தரும்;  வானம்  தன்  பனியைத்  தரும்;  இந்த  ஜனத்தில்  மீதியானவர்கள்  இதையெல்லாம்  சுதந்தரிக்கக்  கட்டளையிடுவேன்.  (சகரியா  8:12)

vithaippuch  samaathaanamu'l'lathaayirukkum;  thiraadchachsedi  than  kaniyaith  tharum;  boomi  than  palanaith  tharum;  vaanam  than  paniyaith  tharum;  intha  janaththil  meethiyaanavarga'l  ithaiyellaam  suthantharikkak  katta'laiyiduvean.  (sagariyaa  8:12)

சம்பவிப்பதென்னவென்றால்:  யூதா  வம்சத்தாரே,  இஸ்ரவேல்  வம்சத்தாரே,  நீங்கள்  புறஜாதிகளுக்குள்ளே  சாபமாயிருந்ததுபோலவே,  ஆசீர்வாதமாயிருக்கும்படி  நான்  உங்களை  இரட்சிப்பேன்;  பயப்படாதேயுங்கள்,  உங்கள்  கைகள்  திடப்படக்கடவது.  (சகரியா  8:13)

sambavippathennaven’raal:  yoothaa  vamsaththaarea,  israveal  vamsaththaarea,  neengga'l  pu’rajaathiga'lukku'l'lea  saabamaayirunthathupoalavea,  aaseervaathamaayirukkumpadi  naan  ungga'lai  iradchippean;  bayappadaatheayungga'l,  ungga'l  kaiga'l  thidappadakkadavathu.  (sagariyaa  8:13)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  உங்கள்  பிதாக்கள்  எனக்குக்  கோபமூட்டினபோது  நான்  உங்களைத்  தண்டிக்க  நினைத்து,  மனம்  மாறாமல்  இருந்ததுபோல,  (சகரியா  8:14)

seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  ungga'l  pithaakka'l  enakkuk  koabamoottinapoathu  naan  ungga'laith  tha'ndikka  ninaiththu,  manam  maa’raamal  irunthathupoala,  (sagariyaa  8:14)

இந்நாட்களில்  எருசலேமுக்கும்  யூதாவுக்கும்  நன்மைசெய்யும்படித்  திரும்ப  நினைத்தேன்;  பயப்படாதேயுங்கள்.  (சகரியா  8:15)

innaadka'lil  erusaleamukkum  yoothaavukkum  nanmaiseyyumpadith  thirumba  ninaiththean;  bayappadaatheayungga'l.  (sagariyaa  8:15)

நீங்கள்  செய்யவேண்டிய  காரியங்கள்  என்னவென்றால்:  அவனவன்  பிறனோடே  உண்மையைப்  பேசுங்கள்;  உங்கள்  வாசல்களில்  சத்தியத்துக்கும்  சமாதானத்துக்கும்  ஏற்க  நியாயந்தீருங்கள்.  (சகரியா  8:16)

neengga'l  seyyavea'ndiya  kaariyangga'l  ennaven’raal:  avanavan  pi’ranoadea  u'nmaiyaip  peasungga'l;  ungga'l  vaasalga'lil  saththiyaththukkum  samaathaanaththukkum  ea’rka  niyaayantheerungga'l.  (sagariyaa  8:16)

ஒருவனும்  பிறனுக்கு  விரோதமாய்த்  தன்  இருதயத்தில்  தீங்கு  நினையாமலும்,  பொய்யாணையின்மேல்  பிரியப்படாமலும்  இருங்கள்;  இவைகளெல்லாம்  நான்  வெறுக்கிற  காரியங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:17)

oruvanum  pi’ranukku  viroathamaayth  than  iruthayaththil  theenggu  ninaiyaamalum,  poyyaa'naiyinmeal  piriyappadaamalum  irungga'l;  ivaiga'lellaam  naan  ve’rukki’ra  kaariyangga'l  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  8:17)

சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (சகரியா  8:18)

seanaiga'ludaiya  karththarin  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (sagariyaa  8:18)

நாலாம்  மாதத்தின்  உபவாசமும்,  ஐந்தாம்  மாதத்தின்  உபவாசமும்,  ஏழாம்  மாதத்தின்  உபவாசமும்,  பத்தாம்  மாதத்தின்  உபவாசமும்,  யூதா  வம்சத்தாருக்கு  மகிழ்ச்சியாகவும்  சந்தோஷமாகவும்  நல்ல  பண்டிகைகளாகவும்  மாறிப்போகும்;  ஆகையால்  சத்தியத்தையும்  சமாதானத்தையும்  சிநேகியுங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:19)

naalaam  maathaththin  ubavaasamum,  ainthaam  maathaththin  ubavaasamum,  eazhaam  maathaththin  ubavaasamum,  paththaam  maathaththin  ubavaasamum,  yoothaa  vamsaththaarukku  magizhchchiyaagavum  santhoashamaagavum  nalla  pa'ndigaiga'laagavum  maa’rippoagum;  aagaiyaal  saththiyaththaiyum  samaathaanaththaiyum  sineagiyungga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:19)

இன்னும்  ஜனங்களும்  அநேகம்  பட்டணங்களின்  குடிகளும்  வருவார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  8:20)

innum  janangga'lum  aneagam  patta'nangga'lin  kudiga'lum  varuvaarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  8:20)

ஒரு  பட்டணத்தின்  குடிகள்  மறுபட்டணத்தின்  குடிகளிடத்தில்  போய்,  நாம்  கர்த்தருடைய  சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணவும்  சேனைகளின்  கர்த்தரைத்  தேடவும்  தீவிரித்துப்போவோம்  வாருங்கள்;  நாங்களும்  போவோம்  என்று  சொல்லுவார்கள்.  (சகரியா  8:21)

oru  patta'naththin  kudiga'l  ma’rupatta'naththin  kudiga'lidaththil  poay,  naam  karththarudaiya  samugaththil  vi'n'nappampa'n'navum  seanaiga'lin  karththaraith  theadavum  theeviriththuppoavoam  vaarungga'l;  naangga'lum  poavoam  en’ru  solluvaarga'l.  (sagariyaa  8:21)

அநேக  ஜனங்களும்  பலத்த  ஜாதிகளும்  எருசலேமிலே  சேனைகளின்  கர்த்தரைத்  தேடவும்,  கர்த்தருடைய  சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணவும்  வருவார்கள்.  (சகரியா  8:22)

aneaga  janangga'lum  balaththa  jaathiga'lum  erusaleamilea  seanaiga'lin  karththaraith  theadavum,  karththarudaiya  samugaththil  vi'n'nappampa'n'navum  varuvaarga'l.  (sagariyaa  8:22)

அந்நாட்களில்  பலவித  பாஷைக்காரராகிய  புறஜாதியாரில்  பத்து  மனுஷர்  ஒரு  யூதனுடைய  வஸ்திரத்தொங்கலைப்  பிடித்துக்கொண்டு:  தேவன்  உங்களோடே  இருக்கிறார்  என்று  கேள்விப்பட்டோம்;  ஆகையால்  உங்களோடேகூடப்  போவோம்  என்று  சொல்லி,  அவனைப்  பற்றிக்கொள்வார்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (சகரியா  8:23)

annaadka'lil  palavitha  baashaikkaararaagiya  pu’rajaathiyaaril  paththu  manushar  oru  yoothanudaiya  vasthiraththonggalaip  pidiththukko'ndu:  theavan  ungga'loadea  irukki’raar  en’ru  kea'lvippattoam;  aagaiyaal  ungga'loadeakoodap  poavoam  en’ru  solli,  avanaip  pat’rikko'lvaarga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’raar.  (sagariyaa  8:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!