Sunday, July 24, 2016

Sagariyaa 7 | சகரியா 7 | Zechariah 7


தரியு  ராஜா  அரசாண்ட  நாலாம்  வருஷம்,  கிஸ்லே  என்னும்  ஒன்பதாம்  மாதம்,  நாலாந்தேதியிலே,  சகரியாவுக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாயிற்று.  (சகரியா  7:1)

thariyu  raajaa  arasaa'nda  naalaam  varusham,  kislea  ennum  onbathaam  maatham,  naalaantheathiyilea,  sagariyaavukkuk  karththarudaiya  vaarththai  u'ndaayit’ru.  (sagariyaa  7:1)

கர்த்தருடைய  சமுகத்தில்  விண்ணப்பம்பண்ணவும்,  (சகரியா  7:2)

karththarudaiya  samugaththil  vi'n'nappampa'n'navum,  (sagariyaa  7:2)

நாங்கள்  இத்தனை  வருஷம்வரையிலே  செய்ததுபோல  ஐந்தாம்  மாதத்திலே  அழுது  ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ  என்று  சேனைகளுடைய  கர்த்தரின்  ஆலயத்திலிருக்கும்  ஆசாரியரிடத்திலும்  தீர்க்கதரிசிகளிடத்திலும்  கேட்கவும்,  சரேத்சேரும்  ரெகெம்மெலேகும்  அவனுடைய  மனுஷரும்  தேவனுடைய  ஆலயத்துக்கு  அனுப்பப்பட்டார்கள்.  (சகரியா  7:3)

naangga'l  iththanai  varushamvaraiyilea  seythathupoala  ainthaam  maathaththilea  azhuthu  odukkaththilirukkavea'ndumoa  en’ru  seanaiga'ludaiya  karththarin  aalayaththilirukkum  aasaariyaridaththilum  theerkkatharisiga'lidaththilum  keadkavum,  sareathsearum  regemmeleakum  avanudaiya  manusharum  theavanudaiya  aalayaththukku  anuppappattaarga'l.  (sagariyaa  7:3)

அப்பொழுது  சேனைகளுடைய  கர்த்தரின்  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (சகரியா  7:4)

appozhuthu  seanaiga'ludaiya  karththarin  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (sagariyaa  7:4)

நீ  தேசத்தின்  எல்லா  ஜனத்தோடும்  ஆசாரியர்களோடும்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  நீங்கள்  இந்த  எழுபது  வருஷமாக  ஐந்தாம்  மாதத்திலும்  ஏழாம்  மாதத்திலும்  உபவாசம்பண்ணி  துக்கங்கொண்டாடினபோது  நீங்கள்  எனக்கென்றுதானா  உபவாசம்பண்ணினீர்கள்?  (சகரியா  7:5)

nee  theasaththin  ellaa  janaththoadum  aasaariyarga'loadum  sollavea'ndiyathu  ennaven’raal,  neengga'l  intha  ezhubathu  varushamaaga  ainthaam  maathaththilum  eazhaam  maathaththilum  ubavaasampa'n'ni  thukkangko'ndaadinapoathu  neengga'l  enakken’ruthaanaa  ubavaasampa'n'nineerga'l?  (sagariyaa  7:5)

நீங்கள்  புசிக்கிறபோதும்  குடிக்கிறபோதும்  உங்களுக்கென்றல்லவா  புசிக்கிறீர்கள்?  உங்களுக்கென்றல்லவா  குடிக்கிறீர்கள்?  (சகரியா  7:6)

neengga'l  pusikki’rapoathum  kudikki’rapoathum  ungga'lukken’rallavaa  pusikki’reerga'l?  ungga'lukken’rallavaa  kudikki’reerga'l?  (sagariyaa  7:6)

எருசலேமும்  அதைச்  சுற்றிலும்  இருந்த  பட்டணங்களும்  குடிநிறைந்து  சுகமாயிருந்த  காலத்திலும்  தெற்கு  நாடும்  சமபூமியும்  குடியேறியிருந்த  காலத்திலும்  முன்னிருந்த  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  கர்த்தர்  கூறின  வார்த்தைகள்  இவைகள்  அல்லவோ  என்று  சொல்  என்றார்.  (சகரியா  7:7)

erusaleamum  athaich  sut’rilum  iruntha  patta'nangga'lum  kudini’rainthu  sugamaayiruntha  kaalaththilum  the’rku  naadum  samaboomiyum  kudiyea’riyiruntha  kaalaththilum  munniruntha  theerkkatharisiga'laikko'ndu  karththar  koo’rina  vaarththaiga'l  ivaiga'l  allavoa  en’ru  sol  en’raar.  (sagariyaa  7:7)

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  சகரியாவுக்கு  உண்டாகி,  அவர்:  (சகரியா  7:8)

pinbu  karththarudaiya  vaarththai  sagariyaavukku  u'ndaagi,  avar:  (sagariyaa  7:8)

சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  நீங்கள்  உண்மையாய்  நியாயந்தீர்த்து,  அவனவன்  தன்தன்  சகோதரனுக்குத்  தயவும்  இரக்கமும்  செய்து,  (சகரியா  7:9)

seanaiga'lin  karththar  uraikki’rathu  ennaven’raal,  neengga'l  u'nmaiyaay  niyaayantheerththu,  avanavan  thanthan  sagoatharanukkuth  thayavum  irakkamum  seythu,  (sagariyaa  7:9)

விதவையையும்  திக்கற்ற  பிள்ளையையும்  பரதேசியையும்  சிறுமையானவனையும்  ஒடுக்காமலும்,  உங்களில்  ஒருவனும்  தன்  சகோதரனுக்கு  விரோதமாய்த்  தன்  இருதயத்தில்  தீங்கு  நினையாமலும்  இருங்கள்  என்றார்.  (சகரியா  7:10)

vithavaiyaiyum  thikkat’ra  pi'l'laiyaiyum  paratheasiyaiyum  si’rumaiyaanavanaiyum  odukkaamalum,  ungga'lil  oruvanum  than  sagoatharanukku  viroathamaayth  than  iruthayaththil  theenggu  ninaiyaamalum  irungga'l  en’raar.  (sagariyaa  7:10)

அவர்களோ  கவனிக்க  மனதில்லாமல்,  தங்கள்  தோளை  முரட்டுத்தனமாய்  விலக்கி,  கேளாதபடிக்குத்  தங்கள்  செவிகளை  அடைத்துக்கொண்டார்கள்.  (சகரியா  7:11)

avarga'loa  kavanikka  manathillaamal,  thangga'l  thoa'lai  murattuththanamaay  vilakki,  kea'laathapadikkuth  thangga'l  seviga'lai  adaiththukko'ndaarga'l.  (sagariyaa  7:11)

வேதத்தையும்  சேனைகளின்  கர்த்தர்  தம்முடைய  ஆவியின்  மூலமாய்  முந்தின  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  சொல்லியனுப்பின  வார்த்தைகளையும்  கேளாதபடிக்குத்  தங்கள்  இருதயத்தை  வைரமாக்கினார்கள்;  ஆகையால்  மகா  கடுங்கோபம்  சேனைகளின்  கர்த்தரிடத்திலிருந்து  உண்டாயிற்று.  (சகரியா  7:12)

veathaththaiyum  seanaiga'lin  karththar  thammudaiya  aaviyin  moolamaay  munthina  theerkkatharisiga'laikko'ndu  solliyanuppina  vaarththaiga'laiyum  kea'laathapadikkuth  thangga'l  iruthayaththai  vairamaakkinaarga'l;  aagaiyaal  mahaa  kadungkoabam  seanaiga'lin  karththaridaththilirunthu  u'ndaayit’ru.  (sagariyaa  7:12)

ஆதலால்  நான்  கூப்பிட்டபோது,  அவர்கள்  எப்படிக்  கேளாமற்போனார்களோ,  அப்படியே  அவர்கள்  கூப்பிட்டபோது  நானும்  கேளாமலிருந்தேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  7:13)

aathalaal  naan  kooppittapoathu,  avarga'l  eppadik  kea'laama’rpoanaarga'loa,  appadiyea  avarga'l  kooppittapoathu  naanum  kea'laamalirunthean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  7:13)

அவர்கள்  அறியாத  புறஜாதிகளுக்குள்ளே  அவர்களைப்  பறக்கடித்தேன்;  அதினால்  அவர்கள்  பின்வைத்துப்போன  தேசம்  போக்குவரத்தில்லாமல்  பாழாய்ப்போயிற்று;  அவர்கள்  இன்பமான  தேசத்தைப்  பாழாய்ப்போகப்  பண்ணினார்கள்  என்றார்.  (சகரியா  7:14)

avarga'l  a’riyaatha  pu’rajaathiga'lukku'l'lea  avarga'laip  pa’rakkadiththean;  athinaal  avarga'l  pinvaiththuppoana  theasam  poakkuvaraththillaamal  paazhaayppoayit’ru;  avarga'l  inbamaana  theasaththaip  paazhaayppoagap  pa'n'ninaarga'l  en’raar.  (sagariyaa  7:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!