Sunday, July 24, 2016

Sagariyaa 6 | சகரியா 6 | Zechariah 6

நான்  திரும்பவும்  என்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  இரண்டு  பர்வதங்களின்  நடுவாகப்  புறப்பட்டுவருகிற  நாலு  இரதங்களைக்  கண்டேன்;  அந்தப்  பர்வதங்கள்  வெண்கலப்  பர்வதங்களாயிருந்தன.  (சகரியா  6:1)

naan  thirumbavum  en  ka'nga'lai  ea’reduththu,  ithoa,  ira'ndu  parvathangga'lin  naduvaagap  pu’rappattuvarugi’ra  naalu  irathangga'laik  ka'ndean;  anthap  parvathangga'l  ve'ngalap  parvathangga'laayirunthana.  (sagariyaa  6:1)

முதலாம்  இரதத்தில்  சிவப்புக்  குதிரைகளும்,  இரண்டாம்  இரதத்தில்  கறுப்புக்  குதிரைகளும்,  (சகரியா  6:2)

muthalaam  irathaththil  sivappuk  kuthiraiga'lum,  ira'ndaam  irathaththil  ka’ruppuk  kuthiraiga'lum,  (sagariyaa  6:2)

மூன்றாம்  இரதத்தில்  வெள்ளைக்  குதிரைகளும்,  நான்காம்  இரதத்தில்  புள்ளிபுள்ளியான  சிவப்புக்  குதிரைகளும்  பூட்டியிருந்தன.  (சகரியா  6:3)

moon’raam  irathaththil  ve'l'laik  kuthiraiga'lum,  naangaam  irathaththil  pu'l'lipu'l'liyaana  sivappuk  kuthiraiga'lum  poottiyirunthana.  (sagariyaa  6:3)

நான்  என்னோடே  பேசின  தூதனை  நோக்கி:  ஆண்டவனே,  இவைகள்  என்னவென்று  கேட்டேன்.  (சகரியா  6:4)

naan  ennoadea  peasina  thoothanai  noakki:  aa'ndavanea,  ivaiga'l  ennaven’ru  keattean.  (sagariyaa  6:4)

அந்தத்  தூதன்  எனக்குப்  பிரதியுத்தரமாக:  இவைகள்  சர்வலோகத்துக்கும்  ஆண்டவராயிருக்கிறவருடைய  சமுகத்தில்  நின்று  புறப்படுகிற  வானத்தினுடைய  நாலு  ஆவிகள்  என்றார்.  (சகரியா  6:5)

anthath  thoothan  enakkup  pirathiyuththaramaaga:  ivaiga'l  sarvaloagaththukkum  aa'ndavaraayirukki’ravarudaiya  samugaththil  nin’ru  pu’rappadugi’ra  vaanaththinudaiya  naalu  aaviga'l  en’raar.  (sagariyaa  6:5)

ஒன்றில்  பூட்டப்பட்டிருந்த  கறுப்புக்குதிரைகள்  வடதேசத்துக்குப்  புறப்பட்டுப்போயின;  வெண்மையான  குதிரைகள்  அவைகளின்  பின்னாலே  புறப்பட்டுப்போயின;  புள்ளிபுள்ளியான  குதிரைகள்  தென்தேசத்துக்குப்  புறப்பட்டுப்போயின.  (சகரியா  6:6)

on’ril  poottappattiruntha  ka’ruppukkuthiraiga'l  vadatheasaththukkup  pu’rappattuppoayina;  ve'nmaiyaana  kuthiraiga'l  avaiga'lin  pinnaalea  pu’rappattuppoayina;  pu'l'lipu'l'liyaana  kuthiraiga'l  thentheasaththukkup  pu’rappattuppoayina.  (sagariyaa  6:6)

சிவப்புக்  குதிரைகளோவென்றால்  புறப்பட்டுப்போய்,  பூமியிலே  சுற்றித்திரியும்படி  கேட்டுக்கொண்டன;  அதற்கு  அவர்:  போய்ப்  பூமியில்  சுற்றித்திரியுங்கள்  என்றார்;  அப்படியே  பூமியிலே  சுற்றித்திரிந்தன.  (சகரியா  6:7)

sivappuk  kuthiraiga'loaven’raal  pu’rappattuppoay,  boomiyilea  sut’riththiriyumpadi  keattukko'ndana;  atha’rku  avar:  poayp  boomiyil  sut’riththiriyungga'l  en’raar;  appadiyea  boomiyilea  sut’riththirinthana.  (sagariyaa  6:7)

பின்பு  அவர்  என்னைக்  கூப்பிட்டு:  பார்,  வடதேசத்துக்குப்  புறப்பட்டுப்போனவைகள்,  வடதேசத்திலே  என்  கோபத்தைச்  சாந்திபண்ணிற்று  என்று  என்னோடே  சொன்னார்.  (சகரியா  6:8)

pinbu  avar  ennaik  kooppittu:  paar,  vadatheasaththukkup  pu’rappattuppoanavaiga'l,  vadatheasaththilea  en  koabaththaich  saanthipa'n'nit’ru  en’ru  ennoadea  sonnaar.  (sagariyaa  6:8)

பின்பு  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (சகரியா  6:9)

pinbu  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (sagariyaa  6:9)

சிறையிருப்பின்  மனுஷராகிய  எல்தாயும்,  தொபியாவும்,  யெதாயாவும்  பாபிலோனிலிருந்து  வந்திருக்கும்  அந்நாளிலே  நீ  போய்,  செப்பனியாவின்  குமாரனாகிய  யோசியாவின்  வீட்டுக்குள்  பிரவேசித்து,  (சகரியா  6:10)

si’raiyiruppin  manusharaagiya  elthaayum,  thobiyaavum,  yethaayaavum  baabiloanilirunthu  vanthirukkum  annaa'lilea  nee  poay,  seppaniyaavin  kumaaranaagiya  yoasiyaavin  veettukku'l  piraveasiththu,  (sagariyaa  6:10)

அங்கே  அவர்கள்  கையிலே  வெள்ளியையும்  பொன்னையும்  வாங்கி,  கிரீடங்களைச்  செய்வித்து,  யோத்சதாக்கின்  குமாரனாகிய  யோசுவா  என்னும்  பிரதான  ஆசாரியனுடைய  சிரசிலே  வைத்து,  (சகரியா  6:11)

anggea  avarga'l  kaiyilea  ve'l'liyaiyum  ponnaiyum  vaanggi,  kireedangga'laich  seyviththu,  yoathsathaakkin  kumaaranaagiya  yoasuvaa  ennum  pirathaana  aasaariyanudaiya  sirasilea  vaiththu,  (sagariyaa  6:11)

அவனோடே  சொல்லவேண்டியது:  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இதோ,  ஒரு  புருஷன்,  அவருடைய  நாமம்  கிளை  என்னப்படும்;  அவர்  தம்முடைய  ஸ்தானத்திலிருந்து  முளைத்தெழும்பிக்  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுவார்.  (சகரியா  6:12)

avanoadea  sollavea'ndiyathu:  seanaiga'lin  karththar  uraikki’rathu  ennaven’raal,  ithoa,  oru  purushan,  avarudaiya  naamam  ki'lai  ennappadum;  avar  thammudaiya  sthaanaththilirunthu  mu'laiththezhumbik  karththarudaiya  aalayaththaik  kattuvaar.  (sagariyaa  6:12)

அவரே  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கட்டுவார்;  அவர்  மகிமைபொருந்தினவராய்,  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்து  ஆளுகை  செய்வார்;  தம்முடைய  சிங்காசனத்தின்மேல்  ஆசாரியராயும்  இருப்பார்;  இவ்விரண்டின்  நடுவாகச்  சமாதானத்தின்  ஆலோசனை  விளங்கும்.  (சகரியா  6:13)

avarea  karththarudaiya  aalayaththaik  kattuvaar;  avar  magimaiporunthinavaraay,  thammudaiya  singgaasanaththinmeal  veet’rirunthu  aa'lugai  seyvaar;  thammudaiya  singgaasanaththinmeal  aasaariyaraayum  iruppaar;  ivvira'ndin  naduvaagach  samaathaanaththin  aaloasanai  vi'langgum.  (sagariyaa  6:13)

இந்தக்  கிரீடங்களோவென்றால்,  கர்த்தருடைய  ஆலயத்திலே,  ஏலேமுக்கும்,  தொபியாவுக்கும்,  யெதாயாவுக்கும்,  செப்பனியாவின்  குமாரனாகிய  ஏனுக்கும்  நினைப்பூட்டுதலுக்கென்று  வைக்கப்படுவதாக.  (சகரியா  6:14)

inthak  kireedangga'loaven’raal,  karththarudaiya  aalayaththilea,  ealeamukkum,  thobiyaavukkum,  yethaayaavukkum,  seppaniyaavin  kumaaranaagiya  eanukkum  ninaippoottuthalukken’ru  vaikkappaduvathaaga.  (sagariyaa  6:14)

தூரத்திலுள்ளவர்கள்  வந்து  கர்த்தருடைய  ஆலயத்தைக்  கூட  இருந்து  கட்டுவார்கள்;  அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  என்னை  உங்களிடத்திற்கு  அனுப்பினாரென்று  அறிந்துகொள்வீர்கள்;  நீங்கள்  உங்கள்  தேவனாகிய  கர்த்தரின்  சத்தத்தைக்  கேட்டு  நடந்தீர்களானால்  இது  நிறைவேறும்  என்று  சொல்  என்றார்.  (சகரியா  6:15)

thooraththilu'l'lavarga'l  vanthu  karththarudaiya  aalayaththaik  kooda  irunthu  kattuvaarga'l;  appozhuthu  seanaiga'lin  karththar  ennai  ungga'lidaththi’rku  anuppinaaren’ru  a’rinthuko'lveerga'l;  neengga'l  ungga'l  theavanaagiya  karththarin  saththaththaik  keattu  nadantheerga'laanaal  ithu  ni’raivea’rum  en’ru  sol  en’raar.  (sagariyaa  6:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!