Sunday, July 24, 2016

Sagariyaa 5 | சகரியா 5 | Zechariah 5

நான்  திரும்பவும்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்க்கையில்,  இதோ,  பறக்கிற  ஒரு  புஸ்தகச்சுருளைக்  கண்டேன்.  (சகரியா  5:1)

naan  thirumbavum  en  ka'nga'lai  ea’reduththup  paarkkaiyil,  ithoa,  pa’rakki’ra  oru  pusthagachsuru'laik  ka'ndean.  (sagariyaa  5:1)

தூதன்:  நீ  காண்கிறது  என்னவென்று  கேட்டார்;  பறக்கிற  ஒரு  புஸ்தகச்சுருளைக்  காண்கிறேன்,  அதின்  நீளம்  இருபது  முழமும்  அதின்  அகலம்  பத்து  முழமுமாயிருக்கிறது  என்றேன்.  (சகரியா  5:2)

thoothan:  nee  kaa'ngi’rathu  ennaven’ru  keattaar;  pa’rakki’ra  oru  pusthagachsuru'laik  kaa'ngi’rean,  athin  nee'lam  irubathu  muzhamum  athin  agalam  paththu  muzhamumaayirukki’rathu  en’rean.  (sagariyaa  5:2)

அப்பொழுது  அவர்:  இது  பூமியின்மீதெங்கும்  புறப்பட்டுப்போகிற  சாபம்;  எந்தத்  திருடனும்  அதின்  ஒரு  புறத்திலிருக்கிறதின்படியே  அழிக்கப்பட்டுப்போவான்;  ஆணையிடுகிற  எவனும்,  அதின்  மறுபுறத்தில்  இருக்கிறதின்படியே  அழிக்கப்பட்டுப்போவான்.  (சகரியா  5:3)

appozhuthu  avar:  ithu  boomiyinmeethenggum  pu’rappattuppoagi’ra  saabam;  enthath  thirudanum  athin  oru  pu’raththilirukki’rathinpadiyea  azhikkappattuppoavaan;  aa'naiyidugi’ra  evanum,  athin  ma’rupu’raththil  irukki’rathinpadiyea  azhikkappattuppoavaan.  (sagariyaa  5:3)

அது  திருடன்  வீட்டிலும்,  என்  நாமத்தைக்கொண்டு  பொய்யாணையிடுகிறவன்  வீட்டிலும்  வந்து,  அவனவன்  வீட்டின்  நடுவிலே  தங்கி,  அதை  அதின்  மரங்களோடும்  அதின்  கல்லுகளோடுங்கூட  நிர்மூலமாக்கும்படி  அதைப்  புறப்பட்டுப்போகப்பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (சகரியா  5:4)

athu  thirudan  veettilum,  en  naamaththaikko'ndu  poyyaa'naiyidugi’ravan  veettilum  vanthu,  avanavan  veettin  naduvilea  thanggi,  athai  athin  marangga'loadum  athin  kalluga'loadungkooda  nirmoolamaakkumpadi  athaip  pu’rappattuppoagappa'n'nuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’raar.  (sagariyaa  5:4)

பின்பு  என்னோடே  பேசின  தூதன்  வெளியே  வந்து  என்னை  நோக்கி:  நீ  உன்  கண்களை  ஏறெடுத்து,  புறப்பட்டுவருகிறதை  என்னவென்று  பார்  என்றார்.  (சகரியா  5:5)

pinbu  ennoadea  peasina  thoothan  ve'liyea  vanthu  ennai  noakki:  nee  un  ka'nga'lai  ea’reduththu,  pu’rappattuvarugi’rathai  ennaven’ru  paar  en’raar.  (sagariyaa  5:5)

அது  என்னவென்று  கேட்டேன்;  அதற்கு  அவர்:  அது  புறப்பட்டுவருகிறதாகிய  ஒரு  மரக்கால்  என்றார்.  பின்னும்  அவர்:  பூமியெங்கும்  இதுதான்  அவர்களுடைய  கண்ணோக்கம்  என்றார்.  (சகரியா  5:6)

athu  ennaven’ru  keattean;  atha’rku  avar:  athu  pu’rappattuvarugi’rathaagiya  oru  marakkaal  en’raar.  pinnum  avar:  boomiyenggum  ithuthaan  avarga'ludaiya  ka'n'noakkam  en’raar.  (sagariyaa  5:6)

இதோ,  ஒரு  தாலந்து  நிறையான  ஈயமூடி  தூக்கிவரப்பட்டது;  மரக்காலின்  நடுவிலே  ஒரு  ஸ்திரீ  உட்கார்ந்திருந்தாள்.  (சகரியா  5:7)

ithoa,  oru  thaalanthu  ni’raiyaana  eeyamoodi  thookkivarappattathu;  marakkaalin  naduvilea  oru  sthiree  udkaarnthirunthaa'l.  (sagariyaa  5:7)

அப்பொழுது  அவர்:  இவள்  அக்கிரமக்காரி  என்று  சொல்லி,  அவளை  மரக்காலுக்குள்ளே  தள்ளி  ஈயக்கட்டியை  அதின்  வாயிலே  போட்டார்.  (சகரியா  5:8)

appozhuthu  avar:  iva'l  akkiramakkaari  en’ru  solli,  ava'lai  marakkaalukku'l'lea  tha'l'li  eeyakkattiyai  athin  vaayilea  poattaar.  (sagariyaa  5:8)

அப்பொழுது  நான்  என்  கண்களை  ஏறெடுத்து,  இதோ,  புறப்பட்டுவருகிற  இரண்டு  ஸ்திரீகளைக்  கண்டேன்;  அவர்களுக்கு  நாரையின்  செட்டைகளுக்கொத்த  செட்டைகள்  இருந்தது;  அவர்கள்  செட்டைகளில்  காற்றிருந்தது;  இவர்கள்  மரக்காலைப்  பூமிக்கும்  வானத்துக்கும்  நடுவாய்த்  தூக்கிக்கொண்டு  போனார்கள்.  (சகரியா  5:9)

appozhuthu  naan  en  ka'nga'lai  ea’reduththu,  ithoa,  pu’rappattuvarugi’ra  ira'ndu  sthireega'laik  ka'ndean;  avarga'lukku  naaraiyin  settaiga'lukkoththa  settaiga'l  irunthathu;  avarga'l  settaiga'lil  kaat’rirunthathu;  ivarga'l  marakkaalaip  boomikkum  vaanaththukkum  naduvaayth  thookkikko'ndu  poanaarga'l.  (sagariyaa  5:9)

நான்  என்னோடே  பேசின  தூதனை  நோக்கி:  இவர்கள்  மரக்காலை  எங்கே  கொண்டுபோகிறார்கள்  என்று  கேட்டேன்.  (சகரியா  5:10)

naan  ennoadea  peasina  thoothanai  noakki:  ivarga'l  marakkaalai  enggea  ko'ndupoagi’raarga'l  en’ru  keattean.  (sagariyaa  5:10)

அதற்கு  அவர்:  சிநெயார்  தேசத்திலே  அதற்கு  ஒரு  வீட்டைக்  கட்டும்படிக்கு  அதைக்  கொண்டுபோகிறார்கள்;  அங்கே  அது  ஸ்தாபிக்கப்பட்டு,  தன்  நிலையிலே  வைக்கப்படும்  என்றார்.  (சகரியா  5:11)

atha’rku  avar:  sineyaar  theasaththilea  atha’rku  oru  veettaik  kattumpadikku  athaik  ko'ndupoagi’raarga'l;  anggea  athu  sthaabikkappattu,  than  nilaiyilea  vaikkappadum  en’raar.  (sagariyaa  5:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!