Sunday, July 24, 2016

Sagariyaa 4 | சகரியா 4 | Zechariah 4

என்னோடே  பேசின  தூதன்  திரும்பிவந்து  நித்திரைபண்ணுகிற  ஒருவனை  எழுப்புவதுபோல்  என்னை  எழுப்பி:  (சகரியா  4:1)

ennoadea  peasina  thoothan  thirumbivanthu  niththiraipa'n'nugi’ra  oruvanai  ezhuppuvathupoal  ennai  ezhuppi:  (sagariyaa  4:1)

நீ  காண்கிறது  என்னவென்று  கேட்டார்;  அதற்கு  நான்:  இதோ,  முழுவதும்  பொன்னினால்  செய்யப்பட்ட  குத்துவிளக்கைக்  காண்கிறேன்;  அதின்  உச்சியில்  அதின்  கிண்ணமும்,  அதின்மேல்  அதின்  ஏழு  அகல்களும்,  அதின்  உச்சியில்  இருக்கிற  அகல்களுக்குப்போகிற  ஏழு  குழாய்களும்  இருக்கிறது.  (சகரியா  4:2)

nee  kaa'ngi’rathu  ennaven’ru  keattaar;  atha’rku  naan:  ithoa,  muzhuvathum  ponninaal  seyyappatta  kuththuvi'lakkaik  kaa'ngi’rean;  athin  uchchiyil  athin  ki'n'namum,  athinmeal  athin  eazhu  agalga'lum,  athin  uchchiyil  irukki’ra  agalga'lukkuppoagi’ra  eazhu  kuzhaayga'lum  irukki’rathu.  (sagariyaa  4:2)

அதின்  அருகில்  கிண்ணத்திற்கு  வலதுபுறமாக  ஒன்றும்,  அதற்கு  இடதுபுறமாக  ஒன்றும்,  ஆக  இரண்டு  ஒலிவமரங்கள்  இருக்கிறது  என்றேன்.  (சகரியா  4:3)

athin  arugil  ki'n'naththi’rku  valathupu’ramaaga  on’rum,  atha’rku  idathupu’ramaaga  on’rum,  aaga  ira'ndu  olivamarangga'l  irukki’rathu  en’rean.  (sagariyaa  4:3)

நான்  என்னோடே  பேசின  தூதனை  நோக்கி:  ஆண்டவனே,  இவைகள்  என்னவென்று  கேட்டேன்.  (சகரியா  4:4)

naan  ennoadea  peasina  thoothanai  noakki:  aa'ndavanea,  ivaiga'l  ennaven’ru  keattean.  (sagariyaa  4:4)

என்னோடே  பேசின  தூதன்  மறுமொழியாக:  இவைகள்  இன்னதென்று  உனக்குத்  தெரியாதா  என்றார்;  ஆண்டவனே,  எனக்குத்  தெரியாது  என்றேன்.  (சகரியா  4:5)

ennoadea  peasina  thoothan  ma’rumozhiyaaga:  ivaiga'l  innathen’ru  unakkuth  theriyaathaa  en’raar;  aa'ndavanea,  enakkuth  theriyaathu  en’rean.  (sagariyaa  4:5)

அப்பொழுது  அவர்:  செருபாபேலுக்குச்  சொல்லப்படுகிற  கர்த்தருடைய  வார்த்தை  என்னவென்றால்,  பலத்தினாலும்  அல்ல,  பராக்கிரமத்தினாலும்  அல்ல,  என்னுடைய  ஆவியினாலேயே  ஆகும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  4:6)

appozhuthu  avar:  serubaabealukkuch  sollappadugi’ra  karththarudaiya  vaarththai  ennaven’raal,  balaththinaalum  alla,  baraakkiramaththinaalum  alla,  ennudaiya  aaviyinaaleayea  aagum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  4:6)

பெரிய  பர்வதமே,  நீ  எம்மாத்திரம்?  செருபாபேலுக்கு  முன்பாக  நீ  சமபூமியாவாய்;  தலைக்கல்லை  அவன்  கொண்டுவருவான்;  அதற்குக்  கிருபையுண்டாவதாக,  கிருபையுண்டாவதாக  என்று  ஆர்ப்பரிப்பார்கள்  என்றார்.  (சகரியா  4:7)

periya  parvathamea,  nee  emmaaththiram?  serubaabealukku  munbaaga  nee  samaboomiyaavaay;  thalaikkallai  avan  ko'nduvaruvaan;  atha’rkuk  kirubaiyu'ndaavathaaga,  kirubaiyu'ndaavathaaga  en’ru  aarpparippaarga'l  en’raar.  (sagariyaa  4:7)

பின்னும்  கர்த்தருடைய  வார்த்தை  எனக்கு  உண்டாகி,  அவர்:  (சகரியா  4:8)

pinnum  karththarudaiya  vaarththai  enakku  u'ndaagi,  avar:  (sagariyaa  4:8)

செருபாபேலின்  கைகள்  இந்த  ஆலயத்துக்கு  அஸ்திபாரம்  போட்டது;  அவன்  கைகளே  இதை  முடித்துத்  தீர்க்கும்;  அதினால்  சேனைகளின்  கர்த்தர்  என்னை  உங்களிடத்திற்கு  அனுப்பினாரென்று  அறிவாய்.  (சகரியா  4:9)

serubaabealin  kaiga'l  intha  aalayaththukku  asthibaaram  poattathu;  avan  kaiga'lea  ithai  mudiththuth  theerkkum;  athinaal  seanaiga'lin  karththar  ennai  ungga'lidaththi’rku  anuppinaaren’ru  a’rivaay.  (sagariyaa  4:9)

அற்பமான  ஆரம்பத்தின்  நாளை  யார்  அசட்டைபண்ணலாம்?  பூமியெங்கும்  சுற்றிப்பார்க்கிறவைகளாகிய  கர்த்தருடைய  ஏழு  கண்களும்  செருபாபேலின்  கையில்  இருக்கிற  தூக்குநூலைச்  சந்தோஷமாய்ப்  பார்க்கிறது  என்றார்.  (சகரியா  4:10)

a’rpamaana  aarambaththin  naa'lai  yaar  asattaipa'n'nalaam?  boomiyenggum  sut’rippaarkki’ravaiga'laagiya  karththarudaiya  eazhu  ka'nga'lum  serubaabealin  kaiyil  irukki’ra  thookkunoolaich  santhoashamaayp  paarkki’rathu  en’raar.  (sagariyaa  4:10)

பின்பு  நான்  அவரை  நோக்கி:  குத்துவிளக்குக்கு  வலதுபுறமாகவும்  அதற்கு  இடதுபுறமாகவும்  இருக்கிற  இந்த  இரண்டு  ஒலிவமரங்கள்  என்னவென்று  கேட்டேன்.  (சகரியா  4:11)

pinbu  naan  avarai  noakki:  kuththuvi'lakkukku  valathupu’ramaagavum  atha’rku  idathupu’ramaagavum  irukki’ra  intha  ira'ndu  olivamarangga'l  ennaven’ru  keattean.  (sagariyaa  4:11)

மறுபடியும்  நான்  அவரை  நோக்கி:  இரண்டு  பொற்குழாய்களின்  வழியாய்த்  தொங்கி,  பொன்னிறமான  எண்ணெயைத்  தங்களிலிருந்து  இறங்கப்பண்ணுகிறவைகளாகிய  ஒலிவமரங்களின்  இரண்டு  கிளைகள்  என்னவென்று  கேட்டேன்.  (சகரியா  4:12)

ma’rupadiyum  naan  avarai  noakki:  ira'ndu  po’rkuzhaayga'lin  vazhiyaayth  thonggi,  ponni’ramaana  e'n'neyaith  thangga'lilirunthu  i’ranggappa'n'nugi’ravaiga'laagiya  olivamarangga'lin  ira'ndu  ki'laiga'l  ennaven’ru  keattean.  (sagariyaa  4:12)

அதற்கு  அவர்:  இவைகள்  இன்னதென்று  உனக்குத்  தெரியாதா  என்றார்;  ஆண்டவனே,  எனக்குத்  தெரியாது  என்றேன்.  (சகரியா  4:13)

atha’rku  avar:  ivaiga'l  innathen’ru  unakkuth  theriyaathaa  en’raar;  aa'ndavanea,  enakkuth  theriyaathu  en’rean.  (sagariyaa  4:13)

அப்பொழுது  அவர்:  இவைகள்  இரண்டும்  சர்வலோகத்துக்கும்  ஆண்டவராயிருக்கிறவரின்  சமுகத்தில்  நிற்கிற  அபிஷேகம்  பெற்றவர்கள்  என்றார்.  (சகரியா  4:14)

appozhuthu  avar:  ivaiga'l  ira'ndum  sarvaloagaththukkum  aa'ndavaraayirukki’ravarin  samugaththil  ni’rki’ra  abisheagam  pet’ravarga'l  en’raar.  (sagariyaa  4:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!