Sunday, July 24, 2016

Sagariyaa 3 | சகரியா 3 | Zechariah 3

அவர்  பிரதான  ஆசாரியனாகிய  யோசுவாவை  எனக்குக்  காண்பித்தார்;  அவன்  கர்த்தருடைய  தூதனுக்கு  முன்பாக  நின்றான்;  சாத்தான்  அவனுக்கு  விரோதஞ்செய்ய  அவன்  வலதுபக்கத்திலே  நின்றான்.  (சகரியா  3:1)

avar  pirathaana  aasaariyanaagiya  yoasuvaavai  enakkuk  kaa'nbiththaar;  avan  karththarudaiya  thoothanukku  munbaaga  nin’raan;  saaththaan  avanukku  viroathagnseyya  avan  valathupakkaththilea  nin’raan.  (sagariyaa  3:1)

அப்பொழுது  கர்த்தர்  சாத்தானை  நோக்கி:  கர்த்தர்  உன்னைக்  கடிந்துகொள்வாராக;  சாத்தானே,  எருசலேமைத்  தெரிந்துகொண்ட  கர்த்தர்  உன்னைக்  கடிந்துகொள்வாராக;  இவன்  அக்கினியினின்று  தப்புவிக்கப்பட்ட  கொள்ளி  அல்லவா  என்றார்.  (சகரியா  3:2)

appozhuthu  karththar  saaththaanai  noakki:  karththar  unnaik  kadinthuko'lvaaraaga;  saaththaanea,  erusaleamaith  therinthuko'nda  karththar  unnaik  kadinthuko'lvaaraaga;  ivan  akkiniyinin’ru  thappuvikkappatta  ko'l'li  allavaa  en’raar.  (sagariyaa  3:2)

யோசுவாவோவெனில்  அழுக்கு  வஸ்திரம்  தரித்தவனாய்த்  தூதனுக்கு  முன்பாக  நின்றிருந்தான்.  (சகரியா  3:3)

yoasuvaavoavenil  azhukku  vasthiram  thariththavanaayth  thoothanukku  munbaaga  nin’rirunthaan.  (sagariyaa  3:3)

அவர்  தமக்கு  முன்பாக  நிற்கிறவர்களை  நோக்கி:  இவன்மேல்  இருக்கிற  அழுக்கு  வஸ்திரங்களைக்  களைந்துபோடுங்கள்  என்றார்;  பின்பு  அவனை  நோக்கி:  பார்,  நான்  உன்  அக்கிரமத்தை  உன்னிலிருந்து  நீங்கச்செய்து,  உனக்குச்  சிறந்த  வஸ்திரங்களைத்  தரிப்பித்தேன்  என்றார்.  (சகரியா  3:4)

avar  thamakku  munbaaga  ni’rki’ravarga'lai  noakki:  ivanmeal  irukki’ra  azhukku  vasthirangga'laik  ka'lainthupoadungga'l  en’raar;  pinbu  avanai  noakki:  paar,  naan  un  akkiramaththai  unnilirunthu  neenggachseythu,  unakkuch  si’rantha  vasthirangga'laith  tharippiththean  en’raar.  (sagariyaa  3:4)

அவன்  சிரசின்மேல்  சுத்தமான  பாகையை  வைப்பார்களாக  என்றார்;  அப்பொழுது  சுத்தமான  பாகையை  அவன்  சிரசின்மேல்  வைத்து,  அவனுக்கு  வஸ்திரங்களைத்  தரிப்பித்தார்கள்;  கர்த்தருடைய  தூதன்  அங்கே  நின்றார்.  (சகரியா  3:5)

avan  sirasinmeal  suththamaana  paagaiyai  vaippaarga'laaga  en’raar;  appozhuthu  suththamaana  paagaiyai  avan  sirasinmeal  vaiththu,  avanukku  vasthirangga'laith  tharippiththaarga'l;  karththarudaiya  thoothan  anggea  nin’raar.  (sagariyaa  3:5)

கர்த்தருடைய  தூதன்  யோசுவாவுக்குச்  சாட்சியாக:  (சகரியா  3:6)

karththarudaiya  thoothan  yoasuvaavukkuch  saadchiyaaga:  (sagariyaa  3:6)

சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நீ  என்  வழிகளில்  நடந்து  என்  காவலைக்  காத்தால்,  நீ  என்  ஆலயத்தில்  நியாயம்  விசாரிப்பாய்;  என்  பிராகாரங்களையும்  காவல்காப்பாய்;  இங்கே  நிற்கிறவர்களுக்குள்ளே  உலாவுகிறதற்கு  இடம்  நான்  உனக்குக்  கட்டளையிடுவேன்.  (சகரியா  3:7)

seanaiga'lin  karththar  uraikki’rathu  ennaven’raal:  nee  en  vazhiga'lil  nadanthu  en  kaavalaik  kaaththaal,  nee  en  aalayaththil  niyaayam  visaarippaay;  en  piraagaarangga'laiyum  kaavalkaappaay;  inggea  ni’rki’ravarga'lukku'l'lea  ulaavugi’ratha’rku  idam  naan  unakkuk  katta'laiyiduvean.  (sagariyaa  3:7)

இப்போதும்,  பிரதான  ஆசாரியனாகிய  யோசுவாவே,  நீ  கேள்;  உனக்கு  முன்பாக  உட்கார்ந்திருக்கிற  உன்  தோழரும்  கேட்கக்கடவர்கள்;  இவர்கள்  அடையாளமாயிருக்கிற  புருஷர்;  இதோ,  கிளை  என்னப்பட்டவராகிய  என்  தாசனை  நான்  வரப்பண்ணுவேன்.  (சகரியா  3:8)

ippoathum,  pirathaana  aasaariyanaagiya  yoasuvaavea,  nee  kea'l;  unakku  munbaaga  udkaarnthirukki’ra  un  thoazharum  keadkakkadavarga'l;  ivarga'l  adaiyaa'lamaayirukki’ra  purushar;  ithoa,  ki'lai  ennappattavaraagiya  en  thaasanai  naan  varappa'n'nuvean.  (sagariyaa  3:8)

இதோ,  நான்  யோசுவாவுக்கு  முன்பாக  வைத்த  கல்;  இந்த  ஒரே  கல்லின்மேல்  ஏழு  கண்களும்  வைக்கப்பட்டிருக்கிறது;  இதோ,  நான்  அதின்  சித்திரவேலையை  நிறைவேற்றி,  இந்தத்  தேசத்தில்  அக்கிரமத்தை  ஒரேநாளிலே  நீக்கிப்போடுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  3:9)

ithoa,  naan  yoasuvaavukku  munbaaga  vaiththa  kal;  intha  orea  kallinmeal  eazhu  ka'nga'lum  vaikkappattirukki’rathu;  ithoa,  naan  athin  siththiravealaiyai  ni’raiveat’ri,  inthath  theasaththil  akkiramaththai  oreanaa'lilea  neekkippoaduvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  3:9)

அந்நாளிலே  நீங்கள்  ஒருவரையொருவர்  திராட்சச்செடியின்கீழும்  அத்திமரத்தின்கீழும்  வரவழைப்பீர்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (சகரியா  3:10)

annaa'lilea  neengga'l  oruvaraiyoruvar  thiraadchachsediyinkeezhum  aththimaraththinkeezhum  varavazhaippeerga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’raar.  (sagariyaa  3:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!