Sunday, July 24, 2016

Sagariyaa 2 | சகரியா 2 | Zechariah 2


நான்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  இதோ,  தன்  கையிலே  அளவுநூல்  பிடித்திருந்த  ஒரு  புருஷனைக்  கண்டேன்.  (சகரியா  2:1)

naan  en  ka'nga'lai  ea’reduththup  paarththapoathu,  ithoa,  than  kaiyilea  a'lavunool  pidiththiruntha  oru  purushanaik  ka'ndean.  (sagariyaa  2:1)

நீர்  எவ்விடத்துக்குப்  போகிறீர்  என்று  கேட்டேன்;  அதற்கு  அவர்:  எருசலேமின்  அகலம்  இவ்வளவு  என்றும்  அதின்  நீளம்  இவ்வளவு  என்றும்  அறியும்படி  அதை  அளக்கிறதற்குப்  போகிறேன்  என்றார்.  (சகரியா  2:2)

neer  evvidaththukkup  poagi’reer  en’ru  keattean;  atha’rku  avar:  erusaleamin  agalam  ivva'lavu  en’rum  athin  nee'lam  ivva'lavu  en’rum  a’riyumpadi  athai  a'lakki’ratha’rkup  poagi’rean  en’raar.  (sagariyaa  2:2)

இதோ,  என்னோடே  பேசின  தூதன்  புறப்பட்டபோது,  வேறொரு  தூதன்  அவரைச்  சந்திக்கும்படிப்  புறப்பட்டுவந்தான்.  (சகரியா  2:3)

ithoa,  ennoadea  peasina  thoothan  pu’rappattapoathu,  vea’roru  thoothan  avaraich  santhikkumpadip  pu’rappattuvanthaan.  (sagariyaa  2:3)

இவனை  அவர்  நோக்கி:  நீ  ஓடி  இந்த  வாலிபனிடத்தில்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  எருசலேம்  தன்  நடுவிலே  கூடும்  மனுஷரின்  திரளினாலும்  மிருகஜீவன்களின்  திரளினாலும்  மதிலில்லாத  பட்டணங்கள்போல்  வாசஸ்தலமாகும்.  (சகரியா  2:4)

ivanai  avar  noakki:  nee  oadi  intha  vaalibanidaththil  sollavea'ndiyathu  ennaven’raal,  erusaleam  than  naduvilea  koodum  manusharin  thira'linaalum  mirugajeevanga'lin  thira'linaalum  mathilillaatha  patta'nangga'lpoal  vaasasthalamaagum.  (sagariyaa  2:4)

நான்  அதற்குச்  சுற்றிலும்  அக்கினி  மதிலாயிருந்து,  அதின்  நடுவில்  மகிமையாக  இருப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  2:5)

naan  atha’rkuch  sut’rilum  akkini  mathilaayirunthu,  athin  naduvil  magimaiyaaga  iruppean  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  2:5)

ஓகோ,  நீங்கள்  எழும்பி  வடதேசத்திலிருந்து  ஓடிவாருங்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆகாயத்து  நான்கு  திசைகளிலும்  உங்களை  நான்  சிதறப்பண்ணினேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  2:6)

oahoa,  neengga'l  ezhumbi  vadatheasaththilirunthu  oadivaarungga'l  en’ru  karththar  sollugi’raar;  aagaayaththu  naangu  thisaiga'lilum  ungga'lai  naan  sitha’rappa'n'ninean  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  2:6)

பாபிலோன்  குமாரத்தியினிடத்தில்  குடியிருக்கிற  சீயோனே,  உன்னை  விடுவித்துக்கொள்.  (சகரியா  2:7)

baabiloan  kumaaraththiyinidaththil  kudiyirukki’ra  seeyoanea,  unnai  viduviththukko'l.  (sagariyaa  2:7)

பிற்பாடு  மகிமையுண்டாகும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  உங்களைக்  கொள்ளையிட்ட  ஜாதிகளிடத்துக்கு  என்னை  அனுப்பினார்;  உங்களைத்  தொடுகிறவன்  அவருடைய  கண்மணியைத்  தொடுகிறான்.  (சகரியா  2:8)

pi’rpaadu  magimaiyu'ndaagum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  ungga'laik  ko'l'laiyitta  jaathiga'lidaththukku  ennai  anuppinaar;  ungga'laith  thodugi’ravan  avarudaiya  ka'nma'niyaith  thodugi’raan.  (sagariyaa  2:8)

இதோ,  நான்  என்  கையை  அவர்களுக்கு  விரோதமாக  அசைப்பேன்;  அதினால்  அவர்கள்  தங்கள்  அடிமைகளுக்குக்  கொள்ளையாவார்கள்;  அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  என்னை  அனுப்பினாரென்று  அறிவீர்கள்.  (சகரியா  2:9)

ithoa,  naan  en  kaiyai  avarga'lukku  viroathamaaga  asaippean;  athinaal  avarga'l  thangga'l  adimaiga'lukkuk  ko'l'laiyaavaarga'l;  appozhuthu  seanaiga'lin  karththar  ennai  anuppinaaren’ru  a’riveerga'l.  (sagariyaa  2:9)

சீயோன்  குமாரத்தியே,  கெம்பீரித்துப்பாடு;  இதோ,  நான்  வந்து  உன்  நடுவில்  வாசம்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  2:10)

seeyoan  kumaaraththiyea,  kembeeriththuppaadu;  ithoa,  naan  vanthu  un  naduvil  vaasampa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  2:10)

அந்நாளிலே  அநேகம்  ஜாதிகள்  கர்த்தரைச்  சேர்ந்து  என்  ஜனமாவார்கள்;  நான்  உன்  நடுவில்  வாசமாயிருப்பேன்;  அப்பொழுது  சேனைகளின்  கர்த்தர்  என்னை  உன்னிடத்தில்  அனுப்பினாரென்று  அறிவாய்.  (சகரியா  2:11)

annaa'lilea  aneagam  jaathiga'l  karththaraich  searnthu  en  janamaavaarga'l;  naan  un  naduvil  vaasamaayiruppean;  appozhuthu  seanaiga'lin  karththar  ennai  unnidaththil  anuppinaaren’ru  a’rivaay.  (sagariyaa  2:11)

கர்த்தர்  பரிசுத்த  தேசத்திலே  யூதாவாகிய  தமது  பங்கைச்  சுதந்தரித்து,  திரும்பவும்  எருசலேமைத்  தெரிந்துகொள்வார்.  (சகரியா  2:12)

karththar  parisuththa  theasaththilea  yoothaavaagiya  thamathu  panggaich  suthanthariththu,  thirumbavum  erusaleamaith  therinthuko'lvaar.  (sagariyaa  2:12)

மாம்சமான  சகலமான  பேர்களே,  கர்த்தருக்கு  முன்பாக  மௌனமாயிருங்கள்;  அவர்  தமது  பரிசுத்த  வாசஸ்தலத்திலிருந்து  எழுந்தருளினார்  என்று  சொல்  என்றார்.  (சகரியா  2:13)

maamsamaana  sagalamaana  pearga'lea,  karththarukku  munbaaga  maunamaayirungga'l;  avar  thamathu  parisuththa  vaasasthalaththilirunthu  ezhuntharu'linaar  en’ru  sol  en’raar.  (sagariyaa  2:13)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!