Sunday, July 24, 2016

Sagariyaa 14 | சகரியா 14 | Zechariah 14

இதோ,  கர்த்தருடைய  நாள்  வருகிறது,  உன்னில்  கொள்ளையானது  உன்  நடுவிலே  பங்கிடப்படும்.  (சகரியா  14:1)

ithoa,  karththarudaiya  naa'l  varugi’rathu,  unnil  ko'l'laiyaanathu  un  naduvilea  panggidappadum.  (sagariyaa  14:1)

எருசலேமுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணச்  சகல  ஜாதிகளையும்  கூட்டுவேன்;  நகரம்  பிடிக்கப்படும்;  வீடுகள்  கொள்ளையாகும்;  ஸ்திரீகள்  அவமானப்படுவார்கள்;  நகரத்தாரில்  பாதி  மனுஷர்  சிறைப்பட்டுப்போவார்கள்;  மீதியான  ஜனமோ  நகரத்தை  விட்டு  அறுப்புண்டுபோவதில்லை.  (சகரியா  14:2)

erusaleamukku  viroathamaaga  yuththampa'n'nach  sagala  jaathiga'laiyum  koottuvean;  nagaram  pidikkappadum;  veeduga'l  ko'l'laiyaagum;  sthireega'l  avamaanappaduvaarga'l;  nagaraththaaril  paathi  manushar  si’raippattuppoavaarga'l;  meethiyaana  janamoa  nagaraththai  vittu  a’ruppu'ndupoavathillai.  (sagariyaa  14:2)

கர்த்தர்  புறப்பட்டு,  யுத்தநாளிலே  போராடுவதுபோல்  அந்த  ஜாதிகளோடே  போராடுவார்.  (சகரியா  14:3)

karththar  pu’rappattu,  yuththanaa'lilea  poaraaduvathupoal  antha  jaathiga'loadea  poaraaduvaar.  (sagariyaa  14:3)

அந்நாளிலே  அவருடைய  பாதங்கள்  கிழக்கே  எருசலேமுக்கு  எதிரே  இருக்கிற  ஒலிவமலையின்மேல்  நிற்கும்;  அப்பொழுது  மகா  பெரிய  பள்ளத்தாக்கு  உண்டாகும்படி  ஒலிவமலை  தன்  நடுமையத்திலே  கிழக்கு  மேற்காய்  எதிராகப்  பிளந்துபோம்;  அதினாலே,  ஒரு  பாதி  வடபக்கத்திலும்  ஒரு  பாதி  தென்பக்கத்திலும்  சாயும்.  (சகரியா  14:4)

annaa'lilea  avarudaiya  paathangga'l  kizhakkea  erusaleamukku  ethirea  irukki’ra  olivamalaiyinmeal  ni’rkum;  appozhuthu  mahaa  periya  pa'l'laththaakku  u'ndaagumpadi  olivamalai  than  nadumaiyaththilea  kizhakku  mea’rkaay  ethiraagap  pi'lanthupoam;  athinaalea,  oru  paathi  vadapakkaththilum  oru  paathi  thenpakkaththilum  saayum.  (sagariyaa  14:4)

அப்பொழுது  என்  மலைகளின்  பள்ளத்தாக்கு  வழியாய்  ஓடிப்போவீர்கள்;  மலைகளின்  பள்ளத்தாக்கு  ஆத்சால்மட்டும்  போகும்;  நீங்கள்  யூதாவின்  ராஜாவாகிய  உசியாவின்  நாட்களில்  பூமியதிர்ச்சிக்குத்  தப்பி  ஓடிப்போனதுபோல்  ஓடிப்போவீர்கள்;  என்  தேவனாகிய  கர்த்தர்  வருவார்;  தேவரீரோடே  எல்லாப்  பரிசுத்தவான்களும்  வருவார்கள்.  (சகரியா  14:5)

appozhuthu  en  malaiga'lin  pa'l'laththaakku  vazhiyaay  oadippoaveerga'l;  malaiga'lin  pa'l'laththaakku  aathsaalmattum  poagum;  neengga'l  yoothaavin  raajaavaagiya  usiyaavin  naadka'lil  boomiyathirchchikkuth  thappi  oadippoanathupoal  oadippoaveerga'l;  en  theavanaagiya  karththar  varuvaar;  theavareeroadea  ellaap  parisuththavaanga'lum  varuvaarga'l.  (sagariyaa  14:5)

அந்நாளில்  வெளிச்சம்  இல்லாமல்,  ஒருவேளை  பிரகாசமும்  ஒருவேளை  மப்புமாயிருக்கும்.  (சகரியா  14:6)

annaa'lil  ve'lichcham  illaamal,  oruvea'lai  piragaasamum  oruvea'lai  mappumaayirukkum.  (sagariyaa  14:6)

ஒருநாள்  உண்டு,  அது  கர்த்தருக்குத்  தெரிந்தது;  அது  பகலுமல்ல  இரவுமல்ல;  ஆனாலும்  சாயங்காலத்திலே  வெளிச்சமுண்டாகும்.  (சகரியா  14:7)

orunaa'l  u'ndu,  athu  karththarukkuth  therinthathu;  athu  pagalumalla  iravumalla;  aanaalum  saayanggaalaththilea  ve'lichchamu'ndaagum.  (sagariyaa  14:7)

அந்நாளிலே  ஜீவத்தண்ணீர்கள்  எருசலேமிலிருந்து  புறப்பட்டு,  பாதி  கிழக்குச்  சமுத்திரத்துக்கும்,  பாதி  மேற்குச்  சமுத்திரத்துக்கும்  போய்,  மாரிகாலத்துக்கும்  கோடைகாலத்துக்கும்  இருக்கும்.  (சகரியா  14:8)

annaa'lilea  jeevaththa'n'neerga'l  erusaleamilirunthu  pu’rappattu,  paathi  kizhakkuch  samuththiraththukkum,  paathi  mea’rkuch  samuththiraththukkum  poay,  maarikaalaththukkum  koadaikaalaththukkum  irukkum.  (sagariyaa  14:8)

அப்பொழுது  கர்த்தர்  பூமியின்மீதெங்கும்  ராஜாவாயிருப்பார்;  அந்நாளில்  ஒரே  கர்த்தர்  இருப்பார்,  அவருடைய  நாமமும்  ஒன்றாயிருக்கும்.  (சகரியா  14:9)

appozhuthu  karththar  boomiyinmeethenggum  raajaavaayiruppaar;  annaa'lil  orea  karththar  iruppaar,  avarudaiya  naamamum  on’raayirukkum.  (sagariyaa  14:9)

தேசமெல்லாம்  கேபாதொடங்கி  எருசலேமுக்குத்  தெற்கே  இருக்கிற  ரிம்மோன்வரைக்கும்  சமபூமியாகத்  திருத்தப்படும்;  எருசலேமோ  உயர்ந்ததாகி,  தன்  ஸ்தானத்திலே  பென்யமீன்  வாசல்தொடங்கி  முதல்வாசலென்கிற  ஸ்தலமட்டும்  கோடிவாசல்வரைக்கும்,  அனானெயேல்  கோபுரம்  துவக்கி  ராஜாவின்  திராட்ச  ஆலைகள்மட்டும்  குடியேற்றப்பட்டிருக்கும்.  (சகரியா  14:10)

theasamellaam  keabaathodanggi  erusaleamukkuth  the’rkea  irukki’ra  rimmoanvaraikkum  samaboomiyaagath  thiruththappadum;  erusaleamoa  uyarnthathaagi,  than  sthaanaththilea  benyameen  vaasalthodanggi  muthalvaasalengi’ra  sthalamattum  koadivaasalvaraikkum,  anaaneyeal  koapuram  thuvakki  raajaavin  thiraadcha  aalaiga'lmattum  kudiyeat’rappattirukkum.  (sagariyaa  14:10)

அதிலே  ஜனங்கள்  வாசம்பண்ணுவார்கள்;  இனிச்  சங்கரிப்பில்லாமல்  எருசலேம்  சுகமாய்த்  தங்கியிருக்கும்.  (சகரியா  14:11)

athilea  janangga'l  vaasampa'n'nuvaarga'l;  inich  sanggarippillaamal  erusaleam  sugamaayth  thanggiyirukkum.  (sagariyaa  14:11)

எருசலேமுக்கு  விரோதமாக  யுத்தம்பண்ணின  எல்லா  ஜனங்களையும்  கர்த்தர்  வாதிக்கும்  வாதையாவது:  அவர்கள்  காலூன்றி  நிற்கையிலும்  அவர்களுடைய  சதை  அழிந்துபோகும்;  அவர்கள்  கண்கள்  தங்கள்  குழிகளிலே  கெட்டுப்போகும்;  அவர்கள்  நாவு  அவர்கள்  வாயிலே  அழுகிப்போகும்.  (சகரியா  14:12)

erusaleamukku  viroathamaaga  yuththampa'n'nina  ellaa  janangga'laiyum  karththar  vaathikkum  vaathaiyaavathu:  avarga'l  kaaloon’ri  ni’rkaiyilum  avarga'ludaiya  sathai  azhinthupoagum;  avarga'l  ka'nga'l  thangga'l  kuzhiga'lilea  kettuppoagum;  avarga'l  naavu  avarga'l  vaayilea  azhugippoagum.  (sagariyaa  14:12)

அந்நாளிலே  கர்த்தரால்  பெரிய  கலக்கம்  அவர்களுக்குள்  உண்டாகும்;  அவனவன்  தன்  தன்  அயலானின்  கையைப்  பிடிப்பான்;  அவனவனுடைய  கை  அவனவன்  அயலானுடைய  கைக்கு  விரோதமாக  எழும்பும்.  (சகரியா  14:13)

annaa'lilea  karththaraal  periya  kalakkam  avarga'lukku'l  u'ndaagum;  avanavan  than  than  ayalaanin  kaiyaip  pidippaan;  avanavanudaiya  kai  avanavan  ayalaanudaiya  kaikku  viroathamaaga  ezhumbum.  (sagariyaa  14:13)

யூதாவும்  எருசலேமிலே  யுத்தம்பண்ணும்;  அப்பொழுது  சுற்றிலும்  இருக்கிற  சகல  ஜாதிகளுடைய  ஆஸ்தியாகிய  பொன்னும்  வெள்ளியும்  வஸ்திரங்களும்  மகா  திரளாகக்  கூட்டப்படும்.  (சகரியா  14:14)

yoothaavum  erusaleamilea  yuththampa'n'num;  appozhuthu  sut’rilum  irukki’ra  sagala  jaathiga'ludaiya  aasthiyaagiya  ponnum  ve'l'liyum  vasthirangga'lum  mahaa  thira'laagak  koottappadum.  (sagariyaa  14:14)

அந்தப்  பாளையங்களில்  இருக்கும்  குதிரைகள்  கோவேறு  கழுதைகள்  ஒட்டகங்கள்  கழுதைகள்  முதலான  எல்லா  மிருகஜீவன்களுக்கும்  வரும்  வாதையும்,  அந்த  வாதையைப்  போலவே  இருக்கும்.  (சகரியா  14:15)

anthap  paa'laiyangga'lil  irukkum  kuthiraiga'l  koavea’ru  kazhuthaiga'l  ottagangga'l  kazhuthaiga'l  muthalaana  ellaa  mirugajeevanga'lukkum  varum  vaathaiyum,  antha  vaathaiyaip  poalavea  irukkum.  (sagariyaa  14:15)

பின்பு,  எருசலேமுக்கு  விரோதமாக  வந்திருந்த  எல்லா  ஜாதிகளிலும்  மீதியான  யாவரும்  சேனைகளின்  கர்த்தராகிய  ராஜாவைத்  தொழுதுகொள்ளும்படிக்கும்,  கூடாரப்பண்டிகையை  ஆசரிக்கும்படிக்கும்,  வருஷாவருஷம்  வருவார்கள்.  (சகரியா  14:16)

pinbu,  erusaleamukku  viroathamaaga  vanthiruntha  ellaa  jaathiga'lilum  meethiyaana  yaavarum  seanaiga'lin  karththaraagiya  raajaavaith  thozhuthuko'l'lumpadikkum,  koodaarappa'ndigaiyai  aasarikkumpadikkum,  varushaavarusham  varuvaarga'l.  (sagariyaa  14:16)

அப்பொழுது  பூமியின்  வம்சங்களில்  சேனைகளின்  கர்த்தராகிய  ராஜாவைத்  தொழுதுகொள்ள  எருசலேமுக்கு  வராதவர்கள்  எவர்களோ  அவர்கள்மேல்  மழை  வருஷிப்பதில்லை.  (சகரியா  14:17)

appozhuthu  boomiyin  vamsangga'lil  seanaiga'lin  karththaraagiya  raajaavaith  thozhuthuko'l'la  erusaleamukku  varaathavarga'l  evarga'loa  avarga'lmeal  mazhai  varushippathillai.  (sagariyaa  14:17)

மழை  வருஷிக்காத  எகிப்தின்  வம்சம்  வராமலும்  சேராமலும்  போனால்,  கூடாரப்பண்டிகையை  ஆசரிக்கவராத  ஜாதிகளைக்  கர்த்தர்  வாதிக்கும்  வாதையே  அவர்கள்மேலும்  வரும்.  (சகரியா  14:18)

mazhai  varushikkaatha  egipthin  vamsam  varaamalum  searaamalum  poanaal,  koodaarappa'ndigaiyai  aasarikkavaraatha  jaathiga'laik  karththar  vaathikkum  vaathaiyea  avarga'lmealum  varum.  (sagariyaa  14:18)

இது  எகிப்தியருடைய  பாவத்துக்கும்,  கூடாரப்பண்டிகையை  ஆசரிக்க  வராத  சகல  ஜாதிகளுடைய  பாவத்துக்கும்  வரும்  ஆக்கினை.  (சகரியா  14:19)

ithu  egipthiyarudaiya  paavaththukkum,  koodaarappa'ndigaiyai  aasarikka  varaatha  sagala  jaathiga'ludaiya  paavaththukkum  varum  aakkinai.  (sagariyaa  14:19)

அந்நாளிலே  குதிரைகளின்  மணிகளிலே  கர்த்தருக்குப்  பரிசுத்தம்  என்னும்  விலாசம்  எழுதியிருக்கும்;  கர்த்தருடைய  ஆலயத்திலுள்ள  பானைகள்  பலிபீடத்துக்கு  முன்பாக  இருக்கிற  பாத்திரங்களைப்  போலிருக்கும்.  (சகரியா  14:20)

annaa'lilea  kuthiraiga'lin  ma'niga'lilea  karththarukkup  parisuththam  ennum  vilaasam  ezhuthiyirukkum;  karththarudaiya  aalayaththilu'l'la  paanaiga'l  balipeedaththukku  munbaaga  irukki’ra  paaththirangga'laip  poalirukkum.  (sagariyaa  14:20)

அப்பொழுது  எருசலேமிலும்  யூதாவிலுமுள்ள  எல்லாப்  பானைகளும்  சேனைகளின்  கர்த்தருக்குப்  பரிசுத்தமாயிருக்கும்;  பலியிடுகிற  யாவரும்  வந்து  அவைகளில்  எடுத்து,  அவைகளில்  சமைப்பார்கள்;  அந்நாள்முதல்  சேனைகளுடைய  கர்த்தரின்  ஆலயத்திலே  யாதொரு  கானானியனும்  இருப்பதில்லை.  (சகரியா  14:21)

appozhuthu  erusaleamilum  yoothaavilumu'l'la  ellaap  paanaiga'lum  seanaiga'lin  karththarukkup  parisuththamaayirukkum;  baliyidugi’ra  yaavarum  vanthu  avaiga'lil  eduththu,  avaiga'lil  samaippaarga'l;  annaa'lmuthal  seanaiga'ludaiya  karththarin  aalayaththilea  yaathoru  kaanaaniyanum  iruppathillai.  (sagariyaa  14:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!