Sunday, July 24, 2016

Sagariyaa 13 | சகரியா 13 | Zechariah 13

அந்நாளிலே  பாவத்தையும்  அழுக்கையும்  நீக்க,  தாவீதின்  குடும்பத்தாருக்கும்  எருசலேமின்  குடிகளுக்கும்  திறக்கப்பட்ட  ஒரு  ஊற்று  உண்டாயிருக்கும்.  (சகரியா  13:1)

annaa'lilea  paavaththaiyum  azhukkaiyum  neekka,  thaaveethin  kudumbaththaarukkum  erusaleamin  kudiga'lukkum  thi’rakkappatta  oru  oot’ru  u'ndaayirukkum.  (sagariyaa  13:1)

அந்நாளிலே  நான்  விக்கிரகங்களின்பேரும்  தேசத்தில்  இராதபடிக்கு  அழிப்பேன்;  அவைகள்  இனி  நினைக்கப்படுவதில்லை;  தரிசனம்  சொல்லுகிறவர்களையும்,  அசுத்த  ஆவியையும்  தேசத்திலிருந்து  போய்விடவும்  பண்ணுவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  13:2)

annaa'lilea  naan  vikkiragangga'linpearum  theasaththil  iraathapadikku  azhippean;  avaiga'l  ini  ninaikkappaduvathillai;  tharisanam  sollugi’ravarga'laiyum,  asuththa  aaviyaiyum  theasaththilirunthu  poayvidavum  pa'n'nuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  13:2)

இனி  ஒருவன்  தரிசனம்  சொன்னால்,  அவனைப்பெற்ற  அவன்  தகப்பனும்  அவன்  தாயும்  அவனை  நோக்கி:  நீ  கர்த்தருடைய  நாமத்தைக்கொண்டு  பொய்பேசுகிறபடியால்  நீ  உயிரோடிருக்கப்படாது  என்று  சொல்லி,  அவனைப்  பெற்ற  அவன்  தகப்பனும்  அவன்  தாயும்  அவன்  தரிசனம்  சொல்லும்போது  அவனைக்  குத்திப்போடுவார்கள்.  (சகரியா  13:3)

ini  oruvan  tharisanam  sonnaal,  avanaippet’ra  avan  thagappanum  avan  thaayum  avanai  noakki:  nee  karththarudaiya  naamaththaikko'ndu  poypeasugi’rapadiyaal  nee  uyiroadirukkappadaathu  en’ru  solli,  avanaip  pet’ra  avan  thagappanum  avan  thaayum  avan  tharisanam  sollumpoathu  avanaik  kuththippoaduvaarga'l.  (sagariyaa  13:3)

அந்நாளிலே  தரிசனம்  சொல்லுகிற  அவனவன்  தான்  சொன்ன  தரிசனத்தினால்  வெட்கப்பட்டு,  பொய்சொல்லும்படிக்கு  இனி  மயிர்ப்போர்வையைப்  போர்த்துக்கொள்ளாமல்,  (சகரியா  13:4)

annaa'lilea  tharisanam  sollugi’ra  avanavan  thaan  sonna  tharisanaththinaal  vedkappattu,  poysollumpadikku  ini  mayirppoarvaiyaip  poarththukko'l'laamal,  (sagariyaa  13:4)

நான்  தரிசனம்  சொல்லுகிறவன்  அல்ல,  நான்  நிலத்தைப்  பயிரிடுகிறவன்;  என்  சிறுவயதுமுதல்  ஒருவன்  என்னை  வேலைகொண்டான்  என்பான்.  (சகரியா  13:5)

naan  tharisanam  sollugi’ravan  alla,  naan  nilaththaip  payiridugi’ravan;  en  si’ruvayathumuthal  oruvan  ennai  vealaiko'ndaan  enbaan.  (sagariyaa  13:5)

அப்பொழுது  ஒருவன்  அவனை  நோக்கி:  உன்  கைகளில்  இருக்கிற  இந்த  வடுக்கள்  ஏதென்று  கேட்டால்,  என்  சிநேகிதரின்  வீட்டிலே  காயப்பட்டதினால்  உண்டானவைகள்  என்பான்.  (சகரியா  13:6)

appozhuthu  oruvan  avanai  noakki:  un  kaiga'lil  irukki’ra  intha  vadukka'l  eathen’ru  keattaal,  en  sineagitharin  veettilea  kaayappattathinaal  u'ndaanavaiga'l  enbaan.  (sagariyaa  13:6)

பட்டயமே,  என்  மேய்ப்பன்மேலும்  என்  தோழனாகிய  புருஷன்மேலும்  எழும்பு  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  மேய்ப்பனை  வெட்டு,  அப்பொழுது  ஆடுகள்  சிதறிப்போகும்;  ஆனாலும்  என்  கரத்தைச்  சிறுவர்மேல்  திரும்ப  வைப்பேன்.  (சகரியா  13:7)

pattayamea,  en  meayppanmealum  en  thoazhanaagiya  purushanmealum  ezhumbu  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  meayppanai  vettu,  appozhuthu  aaduga'l  sitha’rippoagum;  aanaalum  en  karaththaich  si’ruvarmeal  thirumba  vaippean.  (sagariyaa  13:7)

தேசமெங்கும்  சம்பவிக்கும்  காரியம்  என்னவென்றால்,  அதில்  இருக்கிற  இரண்டு  பங்கு  மனுஷர்  சங்கரிக்கப்பட்டு  மாண்டுபோவார்கள்;  மூன்றாம்  பங்கோ  அதில்  மீதியாயிருக்கும்.  (சகரியா  13:8)

theasamenggum  sambavikkum  kaariyam  ennaven’raal,  athil  irukki’ra  ira'ndu  panggu  manushar  sanggarikkappattu  maa'ndupoavaarga'l;  moon’raam  panggoa  athil  meethiyaayirukkum.  (sagariyaa  13:8)

அந்த  மூன்றாம்  பங்கை  நான்  அக்கினிக்குட்படப்பண்ணி,  வெள்ளியை  உருக்குகிறதுபோல  அவர்களை  உருக்கி,  பொன்னைப்  புடமிடுகிறதுபோல  அவர்களைப்  புடமிடுவேன்;  அவர்கள்  என்  நாமத்தைத்  தொழுதுகொள்வார்கள்;  நான்  அவர்கள்  விண்ணப்பத்தைக்  கேட்பேன்;  இது  என்  ஜனமென்று  நான்  சொல்லுவேன்,  கர்த்தர்  என்  தேவன்  என்று  அவர்கள்  சொல்லுவார்கள்.  (சகரியா  13:9)

antha  moon’raam  panggai  naan  akkinikkudpadappa'n'ni,  ve'l'liyai  urukkugi’rathupoala  avarga'lai  urukki,  ponnaip  pudamidugi’rathupoala  avarga'laip  pudamiduvean;  avarga'l  en  naamaththaith  thozhuthuko'lvaarga'l;  naan  avarga'l  vi'n'nappaththaik  keadpean;  ithu  en  janamen’ru  naan  solluvean,  karththar  en  theavan  en’ru  avarga'l  solluvaarga'l.  (sagariyaa  13:9)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!