Sunday, July 24, 2016

Sagariyaa 12 | சகரியா 12 | Zechariah 12

இஸ்ரவேலைக்குறித்துக்  கர்த்தர்  சொன்ன  வார்த்தையின்  பாரம்;  வானங்களை  விரித்து,  பூமியை  அஸ்திபாரப்படுத்தி,  மனுஷனுடைய  ஆவியை  அவனுக்குள்  உண்டாக்குகிற  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  (சகரியா  12:1)

isravealaikku’riththuk  karththar  sonna  vaarththaiyin  baaram;  vaanangga'lai  viriththu,  boomiyai  asthibaarappaduththi,  manushanudaiya  aaviyai  avanukku'l  u'ndaakkugi’ra  karththar  sollugi’rathu  ennaven’raal:  (sagariyaa  12:1)

இதோ,  சுற்றிலும்  இருக்கிற  எல்லா  ஜனங்களுக்கும்  நான்  எருசலேமைத்  தத்தளிப்பின்  பாத்திரமாக்குகிறேன்;  எருசலேமுக்கு  விரோதமாய்ப்  போடப்படும்  முற்றிகையிலே  யூதாவும்  அப்படியேயாகும்.  (சகரியா  12:2)

ithoa,  sut’rilum  irukki’ra  ellaa  janangga'lukkum  naan  erusaleamaith  thaththa'lippin  paaththiramaakkugi’rean;  erusaleamukku  viroathamaayp  poadappadum  mut’rigaiyilea  yoothaavum  appadiyeayaagum.  (sagariyaa  12:2)

அந்நாளிலே  நான்  எருசலேமைச்  சகல  ஜனங்களுக்கும்  பாரமான  கல்லாக்குவேன்;  அதைக்  கிளப்புகிற  யாவரும்  சிதைக்கப்படுவார்கள்;  பூமியிலுள்ள  ஜாதிகளெல்லாம்  அதற்கு  விரோதமாய்க்  கூடிக்கொள்வார்கள்.  (சகரியா  12:3)

annaa'lilea  naan  erusaleamaich  sagala  janangga'lukkum  baaramaana  kallaakkuvean;  athaik  ki'lappugi’ra  yaavarum  sithaikkappaduvaarga'l;  boomiyilu'l'la  jaathiga'lellaam  atha’rku  viroathamaayk  koodikko'lvaarga'l.  (sagariyaa  12:3)

அந்நாளிலே  நான்  குதிரைகளுக்கெல்லாம்  திகைப்பையும்,  அவைகளின்மேல்  ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம்  புத்திமயக்கத்தையும்  வரப்பண்ணி,  யூதாவம்சத்தின்மேல்  என்  கண்களைத்  திறந்துவைத்து,  ஜனங்களுடைய  எல்லாக்  குதிரைகளுக்கும்  குருட்டாட்டத்தை  உண்டுபண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  12:4)

annaa'lilea  naan  kuthiraiga'lukkellaam  thigaippaiyum,  avaiga'linmeal  ea’riyirukki’ravarga'lukkellaam  buththimayakkaththaiyum  varappa'n'ni,  yoothaavamsaththinmeal  en  ka'nga'laith  thi’ranthuvaiththu,  janangga'ludaiya  ellaak  kuthiraiga'lukkum  kuruttaattaththai  u'ndupa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  12:4)

எருசலேமின்  குடிகள்,  சேனைகளின்  கர்த்தராகிய  தங்கள்  தேவனுடைய  துணையினால்  எங்களுக்குப்  பெலனானவர்கள்  என்று  அப்போது  யூதாவின்  தலைவர்  தங்கள்  இருதயத்திலே  சொல்லுவார்கள்.  (சகரியா  12:5)

erusaleamin  kudiga'l,  seanaiga'lin  karththaraagiya  thangga'l  theavanudaiya  thu'naiyinaal  engga'lukkup  belanaanavarga'l  en’ru  appoathu  yoothaavin  thalaivar  thangga'l  iruthayaththilea  solluvaarga'l.  (sagariyaa  12:5)

அந்நாளிலே  யூதாவின்  தலைவரை  விறகுகளுக்குள்ளே  எரிகிற  அக்கினி  அடுப்புக்கும்,  வைக்கோல்  கட்டுகளுக்குள்ளே  எரிகிற  தீவட்டிக்கும்  ஒப்பாக்குவேன்;  அவர்கள்  வலதுபுறமும்  இடதுபுறமுமாகப்  புறப்பட்டு,  சுற்றிலும்  இருக்கிற  எல்லா  ஜனங்களையும்  பட்சிப்பார்கள்;  எருசலேம்  திரும்பவும்  தன்  ஸ்தானமாகிய  எருசலேமிலே  குடியேற்றப்பட்டிருக்கும்.  (சகரியா  12:6)

annaa'lilea  yoothaavin  thalaivarai  vi’raguga'lukku'l'lea  erigi’ra  akkini  aduppukkum,  vaikkoal  kattuga'lukku'l'lea  erigi’ra  theevattikkum  oppaakkuvean;  avarga'l  valathupu’ramum  idathupu’ramumaagap  pu’rappattu,  sut’rilum  irukki’ra  ellaa  janangga'laiyum  padchippaarga'l;  erusaleam  thirumbavum  than  sthaanamaagiya  erusaleamilea  kudiyeat’rappattirukkum.  (sagariyaa  12:6)

தாவீது  வம்சத்தாரின்  மகிமையும்,  எருசலேமின்  குடிகளுடைய  மகிமையும்,  யூதாவின்மேல்  தன்னை  உயர்த்தாதபடிக்கு,  கர்த்தர்  யூதாவின்  கூடாரங்களை  முதல்முதல்  இரட்சிப்பார்.  (சகரியா  12:7)

thaaveethu  vamsaththaarin  magimaiyum,  erusaleamin  kudiga'ludaiya  magimaiyum,  yoothaavinmeal  thannai  uyarththaathapadikku,  karththar  yoothaavin  koodaarangga'lai  muthalmuthal  iradchippaar.  (sagariyaa  12:7)

அந்நாளிலே  கர்த்தர்  எருசலேமின்  குடிகளைக்  காப்பாற்றுவார்;  அவர்களில்  தள்ளாடினவன்  அந்நாளிலே  தாவீதைப்போல  இருப்பான்;  தாவீது  குடும்பத்தார்  அவர்களுக்கு  முன்பாகத்  தேவனைப்போலும்  கர்த்தருடைய  தூதனைப்போலும்  இருப்பார்கள்.  (சகரியா  12:8)

annaa'lilea  karththar  erusaleamin  kudiga'laik  kaappaat’ruvaar;  avarga'lil  tha'l'laadinavan  annaa'lilea  thaaveethaippoala  iruppaan;  thaaveethu  kudumbaththaar  avarga'lukku  munbaagath  theavanaippoalum  karththarudaiya  thoothanaippoalum  iruppaarga'l.  (sagariyaa  12:8)

அந்நாளிலே  எருசலேமுக்கு  விரோதமாய்  வருகிற  எல்லா  ஜாதிகளையும்  அழிக்கப்  பார்ப்பேன்.  (சகரியா  12:9)

annaa'lilea  erusaleamukku  viroathamaay  varugi’ra  ellaa  jaathiga'laiyum  azhikkap  paarppean.  (sagariyaa  12:9)

நான்  தாவீது  குடும்பத்தாரின்மேலும்  எருசலேம்  குடிகளின்மேலும்  கிருபையின்  ஆவியையும்  விண்ணப்பங்களின்  ஆவியையும்  ஊற்றுவேன்;  அப்பொழுது  அவர்கள்  தாங்கள்  குத்தின  என்னை  நோக்கிப்பார்த்து,  ஒருவன்  தன்  ஒரே  பேறானவனுக்காகப்  புலம்புகிறதுபோல  எனக்காகப்  புலம்பி,  ஒருவன்  தன்  தலைச்சன்  பிள்ளைக்காகத்  துக்கிக்கிறதுபோல  எனக்காக  மனங்கசந்து  துக்கிப்பார்கள்.  (சகரியா  12:10)

naan  thaaveethu  kudumbaththaarinmealum  erusaleam  kudiga'linmealum  kirubaiyin  aaviyaiyum  vi'n'nappangga'lin  aaviyaiyum  oot’ruvean;  appozhuthu  avarga'l  thaangga'l  kuththina  ennai  noakkippaarththu,  oruvan  than  orea  pea’raanavanukkaagap  pulambugi’rathupoala  enakkaagap  pulambi,  oruvan  than  thalaichchan  pi'l'laikkaagath  thukkikki’rathupoala  enakkaaga  manangkasanthu  thukkippaarga'l.  (sagariyaa  12:10)

அந்நாளிலே  மெகிதோன்  பட்டணத்துப்  பள்ளத்தாக்கின்  ஊராகிய  ஆதாத்ரிம்மோனின்  புலம்பலைப்போல  எருசலேமின்  புலம்பல்  பெரிதாயிருக்கும்.  (சகரியா  12:11)

annaa'lilea  megithoan  patta'naththup  pa'l'laththaakkin  ooraagiya  aathaathrimmoanin  pulambalaippoala  erusaleamin  pulambal  perithaayirukkum.  (sagariyaa  12:11)

தேசம்  புலம்பிக்கொண்டிருக்கும்;  ஒவ்வொரு  வம்சமும்  தனித்தனியாகப்  புலம்பும்;  தாவீது  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  நாத்தான்  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  (சகரியா  12:12)

theasam  pulambikko'ndirukkum;  ovvoru  vamsamum  thaniththaniyaagap  pulambum;  thaaveethu  kudumbaththaar  thaniyeayum,  avarga'l  sthireega'l  thaniyeayum,  naaththaan  kudumbaththaar  thaniyeayum,  avarga'l  sthireega'l  thaniyeayum,  (sagariyaa  12:12)

லேவி  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  சீமேயி  குடும்பத்தார்  தனியேயும்,  அவர்கள்  ஸ்திரீகள்  தனியேயும்,  (சகரியா  12:13)

leavi  kudumbaththaar  thaniyeayum,  avarga'l  sthireega'l  thaniyeayum,  seemeayi  kudumbaththaar  thaniyeayum,  avarga'l  sthireega'l  thaniyeayum,  (sagariyaa  12:13)

மற்றுமுண்டான  சகல  குடும்பங்களிலும்  ஒவ்வொரு  குடும்பத்தின்  மனுஷர்  தனித்தனியேயும்  அவர்களுடைய  ஸ்திரீகள்  தனித்தனியேயும்  புலம்புவார்கள்.  (சகரியா  12:14)

mat’rumu'ndaana  sagala  kudumbangga'lilum  ovvoru  kudumbaththin  manushar  thaniththaniyeayum  avarga'ludaiya  sthireega'l  thaniththaniyeayum  pulambuvaarga'l.  (sagariyaa  12:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!