Sunday, July 24, 2016

Sagariyaa 11 | சகரியா 11 | Zechariah 11

லீபனோனே,  அக்கினி  உன்  கேதுருமரங்களைப்  பட்சிக்கும்படி  உன்  வாசல்களைத்  திற.  (சகரியா  11:1)

leebanoanea,  akkini  un  keathurumarangga'laip  padchikkumpadi  un  vaasalga'laith  thi’ra.  (sagariyaa  11:1)

தேவதாரு  விருட்சங்களே,  புலம்புங்கள்;  கேதுருமரங்கள்  விழுந்ததே;  பிரபலமானவைகள்  பாழாக்கப்பட்டன.  பாசானின்  கர்வாலிமரங்களே,  புலம்புங்கள்;  அரணுள்ள  சோலை  கீழே  தள்ளப்பட்டது.  (சகரியா  11:2)

theavathaaru  virudchangga'lea,  pulambungga'l;  keathurumarangga'l  vizhunthathea;  pirabalamaanavaiga'l  paazhaakkappattana.  baasaanin  karvaalimarangga'lea,  pulambungga'l;  ara'nu'l'la  soalai  keezhea  tha'l'lappattathu.  (sagariyaa  11:2)

மேய்ப்பர்களின்  மகிமை  அழிந்துபோனபடியால்,  அவர்கள்  அலறுகிற  சத்தம்  கேட்கப்படுகிறது;  யோர்தானின்  பெருமை  அழிந்துபோனபடியால்,  பாலசிங்கங்கள்  கர்ச்சிக்கிற  சத்தம்  கேட்கப்படுகிறது.  (சகரியா  11:3)

meaypparga'lin  magimai  azhinthupoanapadiyaal,  avarga'l  ala’rugi’ra  saththam  keadkappadugi’rathu;  yoarthaanin  perumai  azhinthupoanapadiyaal,  baalasinggangga'l  karchchikki’ra  saththam  keadkappadugi’rathu.  (sagariyaa  11:3)

என்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  கொலையுண்கிற  ஆடுகளை  மேய்க்கக்கடவாய்.  (சகரியா  11:4)

en  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal,  kolaiyu'ngi’ra  aaduga'lai  meaykkakkadavaay.  (sagariyaa  11:4)

அவைகளை  உடையவர்கள்,  அவைகளைக்  கொன்றுபோட்டுத்  தங்களுக்குக்  குற்றமில்லையென்று  எண்ணுகிறார்கள்.  அவைகளை  விற்கிறவர்கள்,  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்,  நாங்கள்  ஐசுவரியமுள்ளவர்களானோம்  என்கிறார்கள்;  அவைகளை  மேய்க்கிறவர்கள்,  அவைகள்மேல்  இரக்கம்வைக்கிறதில்லை.  (சகரியா  11:5)

avaiga'lai  udaiyavarga'l,  avaiga'laik  kon’rupoattuth  thangga'lukkuk  kut’ramillaiyen’ru  e'n'nugi’raarga'l.  avaiga'lai  vi’rki’ravarga'l,  karththarukku  sthoaththiram,  naangga'l  aisuvariyamu'l'lavarga'laanoam  engi’raarga'l;  avaiga'lai  meaykki’ravarga'l,  avaiga'lmeal  irakkamvaikki’rathillai.  (sagariyaa  11:5)

நான்  இனித்  தேசத்துக்  குடிகளின்மேல்  இரக்கம்வையாமல்  மனுஷரில்  யாவரையும்  அவனவனுடைய  அயலான்  கையிலும்,  அவனவனுடைய  ராஜாவின்  கையிலும்  அகப்படப்பண்ணுவேன்;  அவர்கள்  தேசத்தை  அழித்தும்,  நான்  இவர்களை  அவர்கள்  கைக்குத்  தப்புவிப்பதில்லையென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  11:6)

naan  inith  theasaththuk  kudiga'linmeal  irakkamvaiyaamal  manusharil  yaavaraiyum  avanavanudaiya  ayalaan  kaiyilum,  avanavanudaiya  raajaavin  kaiyilum  agappadappa'n'nuvean;  avarga'l  theasaththai  azhiththum,  naan  ivarga'lai  avarga'l  kaikkuth  thappuvippathillaiyen’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  11:6)

கொலையுண்கிற  மந்தையாகிய  சிறுமைப்பட்ட  உங்களை  நான்  மேய்ப்பேன்;  நான்  இரண்டு  கோல்களை  எடுத்து,  ஒன்றிற்கு  அநுக்கிரகம்  என்றும்,  ஒன்றிற்கு  நிக்கிரகம்  என்றும்  பேரிட்டு  மந்தையை  மேய்த்து,  (சகரியா  11:7)

kolaiyu'ngi’ra  manthaiyaagiya  si’rumaippatta  ungga'lai  naan  meayppean;  naan  ira'ndu  koalga'lai  eduththu,  on’ri’rku  anukkiragam  en’rum,  on’ri’rku  nikkiragam  en’rum  pearittu  manthaiyai  meayththu,  (sagariyaa  11:7)

ஒரே  மாதத்திலே  மூன்று  மேய்ப்பரையும்  அதம்பண்ணினேன்;  என்  ஆத்துமா  அவர்களை  அரோசித்தது;  அவர்கள்  ஆத்துமா  என்னையும்  வெறுத்தது.  (சகரியா  11:8)

orea  maathaththilea  moon’ru  meaypparaiyum  athampa'n'ninean;  en  aaththumaa  avarga'lai  aroasiththathu;  avarga'l  aaththumaa  ennaiyum  ve’ruththathu.  (sagariyaa  11:8)

இனி  நான்  உங்களை  மேய்ப்பதில்லை;  சாகிறது  சாகட்டும்,  அதமாகிறது  அதமாகட்டும்;  மீதியானவைகளோவென்றால்,  ஒன்றின்  மாம்சத்தை  ஒன்று  தின்னக்கடவது  என்று  நான்  சொல்லி,  (சகரியா  11:9)

ini  naan  ungga'lai  meayppathillai;  saagi’rathu  saagattum,  athamaagi’rathu  athamaagattum;  meethiyaanavaiga'loaven’raal,  on’rin  maamsaththai  on’ru  thinnakkadavathu  en’ru  naan  solli,  (sagariyaa  11:9)

அநுக்கிரகம்  என்னப்பட்ட  என்  கோலை  எடுத்து,  நான்  அந்த  ஜனங்களெல்லாரோடும்  பண்ணியிருந்த  என்  உடன்படிக்கை  அற்றுப்போகும்படிக்கு  அதை  முறித்துப்போட்டேன்.  (சகரியா  11:10)

anukkiragam  ennappatta  en  koalai  eduththu,  naan  antha  janangga'lellaaroadum  pa'n'niyiruntha  en  udanpadikkai  at’ruppoagumpadikku  athai  mu’riththuppoattean.  (sagariyaa  11:10)

அந்நாளிலே  அது  அற்றுப்போயிற்று;  அப்படியே  மந்தையில்  எனக்குக்  காத்திருந்த  சிறுமைப்பட்டவைகள்  அது  கர்த்தருடைய  வார்த்தையென்று  அறிந்துகொண்டன.  (சகரியா  11:11)

annaa'lilea  athu  at’ruppoayit’ru;  appadiyea  manthaiyil  enakkuk  kaaththiruntha  si’rumaippattavaiga'l  athu  karththarudaiya  vaarththaiyen’ru  a’rinthuko'ndana.  (sagariyaa  11:11)

உங்கள்  பார்வைக்கு  நன்றாய்க்  கண்டால்,  என்  கூலியைத்  தாருங்கள்;  இல்லாவிட்டால்  இருக்கட்டும்  என்று  அவர்களோடே  சொன்னேன்;  அப்பொழுது  எனக்குக்  கூலியாக  முப்பது  வெள்ளிக்காசை  நிறுத்தார்கள்.  (சகரியா  11:12)

ungga'l  paarvaikku  nan’raayk  ka'ndaal,  en  kooliyaith  thaarungga'l;  illaavittaal  irukkattum  en’ru  avarga'loadea  sonnean;  appozhuthu  enakkuk  kooliyaaga  muppathu  ve'l'likkaasai  ni’ruththaarga'l.  (sagariyaa  11:12)

கர்த்தர்  என்னை  நோக்கி:  அதைக்  குயவனிடத்தில்  எறிந்துவிடு  என்றார்;  இதுவே  நான்  அவர்களால்  மதிக்கப்பட்ட  மேன்மையான  மதிப்பு;  நான்  அந்த  முப்பது  வெள்ளிக்காசை  எடுத்து,  அவைகளைக்  குயவனுக்கென்று  கர்த்தருடைய  ஆலயத்திலே  எறிந்துவிட்டேன்.  (சகரியா  11:13)

karththar  ennai  noakki:  athaik  kuyavanidaththil  e’rinthuvidu  en’raar;  ithuvea  naan  avarga'laal  mathikkappatta  meanmaiyaana  mathippu;  naan  antha  muppathu  ve'l'likkaasai  eduththu,  avaiga'laik  kuyavanukken’ru  karththarudaiya  aalayaththilea  e’rinthuvittean.  (sagariyaa  11:13)

நான்  யூதாவுக்கும்  இஸ்ரவேலுக்கும்  இருக்கிற  சகோதரக்கட்டை  அற்றுப்போகப்பண்ணும்படிக்கு,  நிக்கிரகம்  என்னப்பட்ட  என்  இரண்டாம்  கோலையும்  முறித்தேன்.  (சகரியா  11:14)

naan  yoothaavukkum  isravealukkum  irukki’ra  sagoatharakkattai  at’ruppoagappa'n'numpadikku,  nikkiragam  ennappatta  en  ira'ndaam  koalaiyum  mu’riththean.  (sagariyaa  11:14)

கர்த்தர்  என்னை  நோக்கி:  நீ  மதியற்ற  ஒரு  மேய்ப்பனுடைய  ஆயுதங்களை  இன்னும்  எடுத்துக்கொள்.  (சகரியா  11:15)

karththar  ennai  noakki:  nee  mathiyat’ra  oru  meayppanudaiya  aayuthangga'lai  innum  eduththukko'l.  (sagariyaa  11:15)

இதோ,  நான்  தேசத்திலே  ஒரு  மேய்ப்பனை  எழும்பப்பண்ணுவேன்;  அவன்  அதமாகிறவைகளைப்  பராமரிக்காமலும்,  சிதறுண்டதைத்  தேடாமலும்,  நொறுங்குண்டதைக்  குணமாக்காமலும்,  இளைத்திருக்கிறதை  ஆதரிக்காமலும்,  கொழுத்ததின்  மாம்சத்தைத்  தின்று,  அவைகளுடைய  குளம்புகளை  உடைத்துப்போடுவான்.  (சகரியா  11:16)

ithoa,  naan  theasaththilea  oru  meayppanai  ezhumbappa'n'nuvean;  avan  athamaagi’ravaiga'laip  paraamarikkaamalum,  sitha’ru'ndathaith  theadaamalum,  no’runggu'ndathaik  ku'namaakkaamalum,  i'laiththirukki’rathai  aatharikkaamalum,  kozhuththathin  maamsaththaith  thin’ru,  avaiga'ludaiya  ku'lambuga'lai  udaiththuppoaduvaan.  (sagariyaa  11:16)

மந்தையைக்  கைவிடுகிற  அபத்தமான  மேய்ப்பனுக்கு  ஐயோ!  பட்டயம்  அவன்  புயத்தின்மேலும்  அவன்  வலதுகண்ணின்மேலும்  வரும்;  அவன்  புயமுழுதும்  சூம்பிப்போம்;  அவன்  வலதுகண்  முற்றிலும்  இருள்  அடையும்  என்றார்.  (சகரியா  11:17)

manthaiyaik  kaividugi’ra  abaththamaana  meayppanukku  aiyoa!  pattayam  avan  puyaththinmealum  avan  valathuka'n'ninmealum  varum;  avan  puyamuzhuthum  soombippoam;  avan  valathuka'n  mut’rilum  iru'l  adaiyum  en’raar.  (sagariyaa  11:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!