Sunday, July 24, 2016

Sagariyaa 1 | சகரியா 1 | Zechariah 1

தரியு  அரசாண்ட  இரண்டாம்  வருஷம்  எட்டாம்  மாதத்திலே  இத்தோவின்  மகனான  பெரகியாவின்  குமாரனாகிய  சகரியாவுக்கு  உண்டான  கர்த்தருடைய  வார்த்தை:  (சகரியா  1:1)

thariyu  arasaa'nda  ira'ndaam  varusham  ettaam  maathaththilea  iththoavin  maganaana  berakiyaavin  kumaaranaagiya  sagariyaavukku  u'ndaana  karththarudaiya  vaarththai:  (sagariyaa  1:1)

கர்த்தர்  உங்கள்  பிதாக்களின்மேல்  கடுங்கோபமாயிருந்தார்.  (சகரியா  1:2)

karththar  ungga'l  pithaakka'linmeal  kadungkoabamaayirunthaar.  (sagariyaa  1:2)

ஆகையால்  நீ  அவர்களை  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  என்னிடத்தில்  திரும்புங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்;  அப்பொழுது  நான்  உங்களிடத்துக்குத்  திரும்புவேன்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  1:3)

aagaiyaal  nee  avarga'lai  noakki:  seanaiga'lin  karththar  uraikki’rathu  ennaven’raal:  ennidaththil  thirumbungga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar;  appozhuthu  naan  ungga'lidaththukkuth  thirumbuvean  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (sagariyaa  1:3)

உங்கள்  பிதாக்களைப்போலிராதேயுங்கள்;  முந்தின  தீர்க்கதரிசிகள்  அவர்களை  நோக்கி:  உங்கள்  பொல்லாத  வழிகளையும்  உங்கள்  பொல்லாத  கிரியைகளையும்  விட்டுத்  திரும்புங்கள்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  கூப்பிட்டார்கள்;  ஆனாலும்  எனக்குச்  செவிகொடாமலும்  என்னைக்  கவனியாமலும்  போனார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சகரியா  1:4)

ungga'l  pithaakka'laippoaliraatheayungga'l;  munthina  theerkkatharisiga'l  avarga'lai  noakki:  ungga'l  pollaatha  vazhiga'laiyum  ungga'l  pollaatha  kiriyaiga'laiyum  vittuth  thirumbungga'l  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’ru  kooppittaarga'l;  aanaalum  enakkuch  sevikodaamalum  ennaik  kavaniyaamalum  poanaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (sagariyaa  1:4)

உங்கள்  பிதாக்கள்  எங்கே?  தீர்க்கதரிசிகள்  என்றென்றைக்கும்  உயிரோடிருப்பார்களோ?  (சகரியா  1:5)

ungga'l  pithaakka'l  enggea?  theerkkatharisiga'l  en’ren’raikkum  uyiroadiruppaarga'loa?  (sagariyaa  1:5)

இராமற்போனாலும்,  தீர்க்கதரிசிகளாகிய  என்  ஊழியக்காரருக்கு  நான்  கட்டளையிட்ட  என்  வார்த்தைகளும்  என்  தீர்மானங்களும்  உங்கள்  பிதாக்களிடத்தில்  பலிக்கவில்லையோ?  எங்கள்  வழிகளின்படியேயும்,  எங்கள்  கிரியைகளின்படியேயும்  சேனைகளின்  கர்த்தர்  எங்களுக்குச்  செய்ய  நிர்ணயித்தபடியே  எங்களுக்குச்  செய்தாரென்று  அவர்கள்  திரும்பவந்து  சொன்னதில்லையோ  என்று  சொல்  என்றார்.  (சகரியா  1:6)

iraama’rpoanaalum,  theerkkatharisiga'laagiya  en  oozhiyakkaararukku  naan  katta'laiyitta  en  vaarththaiga'lum  en  theermaanangga'lum  ungga'l  pithaakka'lidaththil  palikkavillaiyoa?  engga'l  vazhiga'linpadiyeayum,  engga'l  kiriyaiga'linpadiyeayum  seanaiga'lin  karththar  engga'lukkuch  seyya  nir'nayiththapadiyea  engga'lukkuch  seythaaren’ru  avarga'l  thirumbavanthu  sonnathillaiyoa  en’ru  sol  en’raar.  (sagariyaa  1:6)

தரியு  அரசாண்ட  இரண்டாம்  வருஷம்,  சேபாத்  மாதமாகிய  பதினோராம்  மாதம்  இருபத்துநாலாந்தேதியிலே,  கர்த்தருடைய  வார்த்தை  இத்தோவின்  மகனான  பெரகியாவின்  குமாரன்  சகரியா  என்னும்  தீர்க்கதரிசிக்கு  உண்டாயிற்று;  அவன்  சொன்னது:  (சகரியா  1:7)

thariyu  arasaa'nda  ira'ndaam  varusham,  seabaath  maathamaagiya  pathinoaraam  maatham  irubaththunaalaantheathiyilea,  karththarudaiya  vaarththai  iththoavin  maganaana  berakiyaavin  kumaaran  sagariyaa  ennum  theerkkatharisikku  u'ndaayit’ru;  avan  sonnathu:  (sagariyaa  1:7)

இதோ,  இன்று  ராத்திரி  சிவப்புக்  குதிரையின்மேல்  ஏறியிருந்த  ஒரு  புருஷனைக்  கண்டேன்;  அவர்  பள்ளத்தாக்கில்  இருக்கிற  மிருதுச்செடிகளுக்குள்ளே  நின்றார்;  அவருக்குப்  பின்னாலே  சிவப்பும்  மங்கின  நிறமும்  வெண்மையுமான  குதிரைகள்  இருந்தன.  (சகரியா  1:8)

ithoa,  in’ru  raaththiri  sivappuk  kuthiraiyinmeal  ea’riyiruntha  oru  purushanaik  ka'ndean;  avar  pa'l'laththaakkil  irukki’ra  miruthuchsediga'lukku'l'lea  nin’raar;  avarukkup  pinnaalea  sivappum  manggina  ni’ramum  ve'nmaiyumaana  kuthiraiga'l  irunthana.  (sagariyaa  1:8)

அப்பொழுது  நான்:  என்  ஆண்டவரே,  இவர்கள்  யாரென்று  கேட்டேன்;  என்னோடே  பேசுகிற  தூதனானவர்:  இவர்கள்  யாரென்று  நான்  உனக்குக்  காண்பிப்பேன்  என்று  சொன்னார்.  (சகரியா  1:9)

appozhuthu  naan:  en  aa'ndavarea,  ivarga'l  yaaren’ru  keattean;  ennoadea  peasugi’ra  thoothanaanavar:  ivarga'l  yaaren’ru  naan  unakkuk  kaa'nbippean  en’ru  sonnaar.  (sagariyaa  1:9)

அப்பொழுது  மிருதுச்செடிகளுக்குள்ளே  நின்ற  அந்தப்  புருஷன்  பிரதியுத்தரமாக:  இவர்கள்  பூமியெங்கும்  சுற்றிப்பார்க்கக்  கர்த்தர்  அனுப்பினவர்கள்  என்றார்.  (சகரியா  1:10)

appozhuthu  miruthuchsediga'lukku'l'lea  nin’ra  anthap  purushan  pirathiyuththaramaaga:  ivarga'l  boomiyenggum  sut’rippaarkkak  karththar  anuppinavarga'l  en’raar.  (sagariyaa  1:10)

பின்பு  அவர்கள்  மிருதுச்செடிகளுக்குள்ளே  நின்ற  கர்த்தருடைய  தூதனை  நோக்கி:  நாங்கள்  பூமியெங்கும்  சுற்றிப்பார்த்தோம்;  இதோ,  பூமி  முழுவதும்  அமைதலும்  அமரிக்கையுமாய்  இருக்கிறது  என்றார்கள்.  (சகரியா  1:11)

pinbu  avarga'l  miruthuchsediga'lukku'l'lea  nin’ra  karththarudaiya  thoothanai  noakki:  naangga'l  boomiyenggum  sut’rippaarththoam;  ithoa,  boomi  muzhuvathum  amaithalum  amarikkaiyumaay  irukki’rathu  en’raarga'l.  (sagariyaa  1:11)

அப்பொழுது  கர்த்தருடைய  தூதன்  மறுமொழியாக:  சேனைகளின்  கர்த்தாவே,  இந்த  எழுபது  வருஷமாய்  நீர்  கோபங்கொண்டிருக்கிற  எருசலேமின்மேலும்  யூதா  பட்டணங்களின்மேலும்  எந்தமட்டும்  இரங்காதிருப்பீர்  என்று  சொல்ல,  (சகரியா  1:12)

appozhuthu  karththarudaiya  thoothan  ma’rumozhiyaaga:  seanaiga'lin  karththaavea,  intha  ezhubathu  varushamaay  neer  koabangko'ndirukki’ra  erusaleaminmealum  yoothaa  patta'nangga'linmealum  enthamattum  iranggaathiruppeer  en’ru  solla,  (sagariyaa  1:12)

அப்பொழுது  கர்த்தர்,  என்னோடே  பேசின  தூதனுக்கு  நல்வார்த்தைகளையும்  ஆறுதலான  வார்த்தைகளையும்  பிரதியுத்தரமாகச்  சொன்னார்.  (சகரியா  1:13)

appozhuthu  karththar,  ennoadea  peasina  thoothanukku  nalvaarththaiga'laiyum  aa’ruthalaana  vaarththaiga'laiyum  pirathiyuththaramaagach  sonnaar.  (sagariyaa  1:13)

அப்பொழுது  என்னோடே  பேசின  தூதன்  என்னை  நோக்கி:  சேனைகளின்  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்:  நான்  எருசலேமுக்காகவும்  சீயோனுக்காகவும்  மகா  வைராக்கியம்  கொண்டிருக்கிறேன்.  (சகரியா  1:14)

appozhuthu  ennoadea  peasina  thoothan  ennai  noakki:  seanaiga'lin  karththar  uraikki’rathu  ennaven’raal:  naan  erusaleamukkaagavum  seeyoanukkaagavum  mahaa  vairaakkiyam  ko'ndirukki’rean.  (sagariyaa  1:14)

நான்  கொஞ்சங்  கோபங்கொண்டிருந்தபோது  அவர்கள்  தங்கள்  கேட்டை  அதிகரிக்கத்  தேடினபடியினால்,  சுகமாய்  வாழுகிற  புறஜாதிகள்பேரில்  நான்  கடுங்கோபங்கொண்டேன்.  (சகரியா  1:15)

naan  kognchang  koabangko'ndirunthapoathu  avarga'l  thangga'l  keattai  athigarikkath  theadinapadiyinaal,  sugamaay  vaazhugi’ra  pu’rajaathiga'lpearil  naan  kadungkoabangko'ndean.  (sagariyaa  1:15)

ஆகையால்  மனஉருக்கத்தோடே  எருசலேமினிடத்தில்  திரும்பினேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  என்  ஆலயம்  அதிலே  கட்டப்படும்;  எருசலேமின்மேல்  அளவுநூல்  பிடிக்கப்படும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  கூறு  என்றார்.  (சகரியா  1:16)

aagaiyaal  manaurukkaththoadea  erusaleaminidaththil  thirumbinean  en’ru  karththar  sollugi’raar;  en  aalayam  athilea  kattappadum;  erusaleaminmeal  a'lavunool  pidikkappadum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’ru  koo’ru  en’raar.  (sagariyaa  1:16)

இன்னும்  என்  பட்டணங்கள்  நன்மையினால்  பரம்பியிருக்கும்;  இன்னும்  கர்த்தர்  சீயோனைத்  தேற்றரவுபண்ணுவார்;  இன்னும்  எருசலேமைத்  தெரிந்துகொள்ளுவார்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  பின்னும்  கூறு  என்றார்.  (சகரியா  1:17)

innum  en  patta'nangga'l  nanmaiyinaal  parambiyirukkum;  innum  karththar  seeyoanaith  theat’raravupa'n'nuvaar;  innum  erusaleamaith  therinthuko'l'luvaar  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar  en’ru  pinnum  koo’ru  en’raar.  (sagariyaa  1:17)

நான்  என்  கண்களை  ஏறெடுத்துப்  பார்த்தபோது,  இதோ,  நாலு  கொம்புகளைக்  கண்டேன்.  (சகரியா  1:18)

naan  en  ka'nga'lai  ea’reduththup  paarththapoathu,  ithoa,  naalu  kombuga'laik  ka'ndean.  (sagariyaa  1:18)

அவைகள்  என்னவென்று  என்னோடே  பேசின  தூதனைக்  கேட்டேன்;  அதற்கு  அவர்:  இவைகள்  யூதாவையும்  இஸ்ரவேலையும்  எருசலேமையும்  சிதறடித்த  கொம்புகள்  என்றார்.  (சகரியா  1:19)

avaiga'l  ennaven’ru  ennoadea  peasina  thoothanaik  keattean;  atha’rku  avar:  ivaiga'l  yoothaavaiyum  isravealaiyum  erusaleamaiyum  sitha’radiththa  kombuga'l  en’raar.  (sagariyaa  1:19)

பின்பு  கர்த்தர்  எனக்கு  நாலு  தொழிலாளிகளைக்  காண்பித்தார்.  (சகரியா  1:20)

pinbu  karththar  enakku  naalu  thozhilaa'liga'laik  kaa'nbiththaar.  (sagariyaa  1:20)

இவர்கள்  என்னசெய்ய  வருகிறார்களென்று  கேட்டேன்;  அதற்கு  அவர்:  ஒருவனும்  தன்  தலையை  ஏறெடுக்கக்கூடாதபடி  அந்தக்  கொம்புகள்  யூதாவைச்  சிதறடித்ததே,  அவைகளுக்குப்  பயமுறுத்துகிறதற்கும்,  யூதாவின்  தேசத்தைப்  பாழாக்கத்  தங்கள்  கொம்பை  எடுத்த  ஜாதிகளுடைய  கொம்புகளை  விழத்தள்ளுகிறதற்கும்  இவர்கள்  வந்தார்கள்  என்றார்.  (சகரியா  1:21)

ivarga'l  ennaseyya  varugi’raarga'len’ru  keattean;  atha’rku  avar:  oruvanum  than  thalaiyai  ea’redukkakkoodaathapadi  anthak  kombuga'l  yoothaavaich  sitha’radiththathea,  avaiga'lukkup  bayamu’ruththugi’ratha’rkum,  yoothaavin  theasaththaip  paazhaakkath  thangga'l  kombai  eduththa  jaathiga'ludaiya  kombuga'lai  vizhaththa'l'lugi’ratha’rkum  ivarga'l  vanthaarga'l  en’raar.  (sagariyaa  1:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!