Wednesday, July 13, 2016

Pulambal 4 | புலம்பல் 4 | Lamentations 4


ஐயோ!  பொன்  மங்கி,  பசும்பொன்மாறி,  பரிசுத்த  ஸ்தலத்தின்  கற்கள்  சகல  வீதிகளின்  முனையிலும்  கொட்டுண்டுபோயிற்றே.  (புலம்பல்  4:1)

aiyoa!  pon  manggi,  pasumponmaa’ri,  parisuththa  sthalaththin  ka’rka'l  sagala  veethiga'lin  munaiyilum  kottu'ndupoayit’rea.  (pulambal  4:1)

ஐயோ!  தங்கத்துக்கொப்பான  விலையேறப்பெற்ற  சீயோன்  குமாரர்  குயவனுடைய  கைவேலையான  மண்பாண்டங்களாய்  எண்ணப்படுகிறார்களே.  (புலம்பல்  4:2)

aiyoa!  thanggaththukkoppaana  vilaiyea’rappet’ra  seeyoan  kumaarar  kuyavanudaiya  kaivealaiyaana  ma'npaa'ndangga'laay  e'n'nappadugi’raarga'lea.  (pulambal  4:2)

திமிங்கிலங்கள்  முதலாய்க்  கொங்கைகளை  நீட்டி,  தங்கள்  குட்டிகளுக்குப்  பால்  கொடுக்கும்;  என்  ஜனமாகிய  குமாரத்தியோ  வனாந்தரத்திலுள்ள  தீக்குருவியைப்போல்  குரூரமாயிருக்கிறாளே.  (புலம்பல்  4:3)

thiminggilangga'l  muthalaayk  konggaiga'lai  neetti,  thangga'l  kuttiga'lukkup  paal  kodukkum;  en  janamaagiya  kumaaraththiyoa  vanaantharaththilu'l'la  theekkuruviyaippoal  kurooramaayirukki’raa'lea.  (pulambal  4:3)

குழந்தைகளின்  நாவு  தாகத்தால்  மேல்வாயோடே  ஒட்டிக்கொண்டிருக்கிறது;  பிள்ளைகள்  அப்பங்கேட்கிறார்கள்,  அவர்களுக்குக்  கொடுப்பாரில்லை.  (புலம்பல்  4:4)

kuzhanthaiga'lin  naavu  thaagaththaal  mealvaayoadea  ottikko'ndirukki’rathu;  pi'l'laiga'l  appangkeadki’raarga'l,  avarga'lukkuk  koduppaarillai.  (pulambal  4:4)

ருசியான  பதார்த்தங்களைச்  சாப்பிட்டவர்கள்  வீதிகளில்  பாழாய்க்கிடக்கிறார்கள்;  இரத்தாம்பரம்  உடுத்தி  வளர்ந்தவர்கள்  குப்பைமேடுகளை  அணைத்துக்  கொள்ளுகிறார்கள்.  (புலம்பல்  4:5)

rusiyaana  pathaarththangga'laich  saappittavarga'l  veethiga'lil  paazhaaykkidakki’raarga'l;  iraththaambaram  uduththi  va'larnthavarga'l  kuppaimeaduga'lai  a'naiththuk  ko'l'lugi’raarga'l.  (pulambal  4:5)

கைச்செய்கை  இல்லாமல்  ஒரு  நிமிஷத்திலே  கவிழ்க்கப்பட்ட  சோதோமின்  பாவத்துக்கு  வந்த  தண்டனையைப்பார்க்கிலும்  என்  ஜனமாகிய  குமாரத்தியின்  அக்கிரமத்துக்கு  வந்த  தண்டனை  பெரிதாயிருக்கிறது.  (புலம்பல்  4:6)

kaichseygai  illaamal  oru  nimishaththilea  kavizhkkappatta  soathoamin  paavaththukku  vantha  tha'ndanaiyaippaarkkilum  en  janamaagiya  kumaaraththiyin  akkiramaththukku  vantha  tha'ndanai  perithaayirukki’rathu.  (pulambal  4:6)

அவளுடைய  நசரேயர்  உறைந்த  மழையைப்பார்க்கிலும்  சுத்தமும்,  பாலைப்பார்க்கிலும்  வெண்மையும்,  பவளத்தைப்பார்க்கிலும்  சிவப்பும்,  இந்திரநீலத்தைப்பார்க்கிலும்  மேனியுமாயிருந்தார்கள்.  (புலம்பல்  4:7)

ava'ludaiya  nasareayar  u’raintha  mazhaiyaippaarkkilum  suththamum,  paalaippaarkkilum  ve'nmaiyum,  pava'laththaippaarkkilum  sivappum,  inthiraneelaththaippaarkkilum  meaniyumaayirunthaarga'l.  (pulambal  4:7)

இப்பொழுதோ  அவர்களுடைய  முகம்  கரியிலும்  கறுத்துப்போயிற்று;  வீதிகளில்  அறியப்படார்கள்;  அவர்கள்  தோல்  அவர்கள்  எலும்புகளோடு  ஒட்டிக்கொண்டு,  காய்ந்த  மரத்துக்கு  ஒப்பாயிற்று.  (புலம்பல்  4:8)

ippozhuthoa  avarga'ludaiya  mugam  kariyilum  ka’ruththuppoayit’ru;  veethiga'lil  a’riyappadaarga'l;  avarga'l  thoal  avarga'l  elumbuga'loadu  ottikko'ndu,  kaayntha  maraththukku  oppaayit’ru.  (pulambal  4:8)

பசியினால்  கொலையுண்டவர்களைப்பார்க்கிலும்  பட்டயத்தால்  கொலையுண்டவர்கள்  பாக்கியவான்களாயிருக்கிறார்கள்;  அவர்கள்  வயலின்  வரத்தில்லாமையால்  குத்துண்டு,  கரைந்துபோகிறார்கள்.  (புலம்பல்  4:9)

pasiyinaal  kolaiyu'ndavarga'laippaarkkilum  pattayaththaal  kolaiyu'ndavarga'l  baakkiyavaanga'laayirukki’raarga'l;  avarga'l  vayalin  varaththillaamaiyaal  kuththu'ndu,  karainthupoagi’raarga'l.  (pulambal  4:9)

இரக்கமுள்ள  ஸ்திரீகளின்  கைகள்  தங்கள்  பிள்ளைகளைச்  சமைத்தன,  என்  ஜனமாகிய  குமாரத்தியின்  அழிவில்  அவைகள்  அவர்களுக்கு  ஆகாரமாயின.  (புலம்பல்  4:10)

irakkamu'l'la  sthireega'lin  kaiga'l  thangga'l  pi'l'laiga'laich  samaiththana,  en  janamaagiya  kumaaraththiyin  azhivil  avaiga'l  avarga'lukku  aagaaramaayina.  (pulambal  4:10)

கர்த்தர்  தமது  கோபத்தை  நிறைவேற்றி,  தமது  உக்கிரகோபத்தை  ஊற்றி,  சீயோனில்  அக்கினியைக்  கொளுத்தினார்;  அது  அதின்  அஸ்திபாரங்களைப்  பட்சித்துப்போட்டது.  (புலம்பல்  4:11)

karththar  thamathu  koabaththai  ni’raiveat’ri,  thamathu  ukkirakoabaththai  oot’ri,  seeyoanil  akkiniyaik  ko'luththinaar;  athu  athin  asthibaarangga'laip  padchiththuppoattathu.  (pulambal  4:11)

சத்துருவும்  பகைஞனும்  எருசலேமின்  வாசல்களுக்குள்  பிரவேசிப்பான்  என்கிறதைப்  பூமியின்  ராஜாக்களும்  பூச்சக்கரத்தின்  சகல  குடிகளும்  நம்பமாட்டாதிருந்தார்கள்.  (புலம்பல்  4:12)

saththuruvum  pagaignanum  erusaleamin  vaasalga'lukku'l  piraveasippaan  engi’rathaip  boomiyin  raajaakka'lum  poochchakkaraththin  sagala  kudiga'lum  nambamaattaathirunthaarga'l.  (pulambal  4:12)

அதின்  நடுவில்  நீதிமான்களின்  இரத்தத்தைச்  சிந்தின  அதின்  தீர்க்கதரிசிகளின்  பாவங்களினாலும்,  அதின்  ஆசாரியர்களின்  அக்கிரமங்களினாலும்  இப்படி  வந்தது.  (புலம்பல்  4:13)

athin  naduvil  neethimaanga'lin  iraththaththaich  sinthina  athin  theerkkatharisiga'lin  paavangga'linaalum,  athin  aasaariyarga'lin  akkiramangga'linaalum  ippadi  vanthathu.  (pulambal  4:13)

குருடர்போல  வீதிகளில்  அலைந்து,  ஒருவரும்  அவர்கள்  வஸ்திரங்களைத்  தொடக்கூடாதபடி  இரத்தத்தால்  கறைப்பட்டிருந்தார்கள்.  (புலம்பல்  4:14)

kurudarpoala  veethiga'lil  alainthu,  oruvarum  avarga'l  vasthirangga'laith  thodakkoodaathapadi  iraththaththaal  ka’raippattirunthaarga'l.  (pulambal  4:14)

விலகுங்கள்,  தீட்டுப்பட்டவர்களே,  தொடாமல்  விலகுங்கள்,  விலகுங்கள்,  என்று  அவர்களை  நோக்கிக்  கூப்பிட்டார்கள்;  மெய்யாய்ப்  பறந்தோடி  அலைந்து  போனார்கள்;  இனித்  தங்கித்  தரிக்கமாட்டார்கள்  என்று  புறஜாதிகளுக்குள்ளே  சொல்லப்பட்டது.  (புலம்பல்  4:15)

vilagungga'l,  theettuppattavarga'lea,  thodaamal  vilagungga'l,  vilagungga'l,  en’ru  avarga'lai  noakkik  kooppittaarga'l;  meyyaayp  pa’ranthoadi  alainthu  poanaarga'l;  inith  thanggith  tharikkamaattaarga'l  en’ru  pu’rajaathiga'lukku'l'lea  sollappattathu.  (pulambal  4:15)

கர்த்தருடைய  கோபம்  அவர்களைச்  சிதறடித்தது,  அவர்களை  இனி  அவர்  நோக்கார்;  ஆசாரியருடைய  முகத்தைப்  பாராமலும்  முதியோரை  மதியாமலும்போனார்கள்.  (புலம்பல்  4:16)

karththarudaiya  koabam  avarga'laich  sitha’radiththathu,  avarga'lai  ini  avar  noakkaar;  aasaariyarudaiya  mugaththaip  paaraamalum  muthiyoarai  mathiyaamalumpoanaarga'l.  (pulambal  4:16)

இன்னும்  எங்களுக்குச்  சகாயம்  வருமென்று  நாங்கள்  வீணாய்  எதிர்பார்த்திருந்ததினாலே  எங்கள்  கண்கள்  பூத்துப்போயின;  இரட்சிக்கமாட்டாத  ஜாதிக்கு  எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.  (புலம்பல்  4:17)

innum  engga'lukkuch  sagaayam  varumen’ru  naangga'l  vee'naay  ethirpaarththirunthathinaalea  engga'l  ka'nga'l  pooththuppoayina;  iradchikkamaattaatha  jaathikku  ethirpaarththukko'ndirunthoam.  (pulambal  4:17)

நாங்கள்  எங்கள்  வீதிகளில்  நடவாதபடிக்கு  எங்கள்  அடிச்சுவடுகளை  வேட்டையாடினார்கள்;  எங்கள்  முடிவு  சமீபித்தது;  எங்கள்  நாட்கள்  நிறைவேறிப்போயின;  எங்கள்  முடிவு  வந்துவிட்டது.  (புலம்பல்  4:18)

naangga'l  engga'l  veethiga'lil  nadavaathapadikku  engga'l  adichsuvaduga'lai  veattaiyaadinaarga'l;  engga'l  mudivu  sameebiththathu;  engga'l  naadka'l  ni’raivea’rippoayina;  engga'l  mudivu  vanthuvittathu.  (pulambal  4:18)

எங்களைப்  பின்தொடர்ந்தவர்கள்  ஆகாயத்துக்  கழுகுகளைப்பார்க்கிலும்  வேகமாயிருந்தார்கள்;  பர்வதங்கள்மேல்  எங்களைப்  பின்தொடர்ந்தார்கள்;  வனாந்தரத்தில்  எங்களுக்குப்  பதிவிருந்தார்கள்.  (புலம்பல்  4:19)

engga'laip  pinthodarnthavarga'l  aagaayaththuk  kazhuguga'laippaarkkilum  veagamaayirunthaarga'l;  parvathangga'lmeal  engga'laip  pinthodarnthaarga'l;  vanaantharaththil  engga'lukkup  pathivirunthaarga'l.  (pulambal  4:19)

கர்த்தரால்  அபிஷேகம்பண்ணப்பட்டவனும்,  எங்கள்  நாசியின்  சுவாசமாயிருந்தவனும்  அவர்களுடைய  படுகுழியில்  அகப்பட்டான்;  அவனுடைய  நிழலிலே  ஜாதிகளுக்குள்ளே  பிழைத்திருப்போம்  என்று  அவனைக்குறித்துச்  சொல்லியிருந்தோமே.  (புலம்பல்  4:20)

karththaraal  abisheagampa'n'nappattavanum,  engga'l  naasiyin  suvaasamaayirunthavanum  avarga'ludaiya  padukuzhiyil  agappattaan;  avanudaiya  nizhalilea  jaathiga'lukku'l'lea  pizhaiththiruppoam  en’ru  avanaikku’riththuch  solliyirunthoamea.  (pulambal  4:20)

ஊத்ஸ்தேசவாசியாகிய  ஏதோம்  குமாரத்தியே,  சந்தோஷித்துக்  களிகூரு;  பாத்திரம்  உன்னிடத்திற்கும்  தாண்டிவரும்,  அப்பொழுது  நீ  வெறித்து,  மானபங்கமாய்க்  கிடப்பாய்.  (புலம்பல்  4:21)

oothstheasavaasiyaagiya  eathoam  kumaaraththiyea,  santhoashiththuk  ka'likooru;  paaththiram  unnidaththi’rkum  thaa'ndivarum,  appozhuthu  nee  ve’riththu,  maanabanggamaayk  kidappaay.  (pulambal  4:21)

சீயோன்  குமாரத்தியே,  உன்  அக்கிரமத்துக்கு  வரும்  தண்டனை  தீர்ந்தது;  அவர்  இனி  உன்னை  அப்புறம்  சிறைப்பட்டுப்போகவிடார்;  ஏதோம்  குமாரத்தியே,  உன்  அக்கிரமத்தை  அவர்  விசாரிப்பார்;  உன்  பாவங்களை  வெளிப்படுத்துவார்.  (புலம்பல்  4:22)

seeyoan  kumaaraththiyea,  un  akkiramaththukku  varum  tha'ndanai  theernthathu;  avar  ini  unnai  appu’ram  si’raippattuppoagavidaar;  eathoam  kumaaraththiyea,  un  akkiramaththai  avar  visaarippaar;  un  paavangga'lai  ve'lippaduththuvaar.  (pulambal  4:22)


1 comment:

  1. Correction(s) made on (March 20, 2019)

    >>>(Lamentations 4:6) kaichsaiygai to kaichseygai

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!