Wednesday, July 13, 2016

Pulambal 3 | புலம்பல் 3 | Lamentations 3


ஆண்டவருடைய  சினத்தின்  மிலாற்றினால்  உண்டான  சிறுமையைக்  கண்ட  புருஷன்  நான்.  (புலம்பல்  3:1)

aa'ndavarudaiya  sinaththin  milaat’rinaal  u'ndaana  si’rumaiyaik  ka'nda  purushan  naan.  (pulambal  3:1)

அவர்  என்னை  வெளிச்சத்திலே  அல்ல,  இருளிலே  அழைத்து  நடத்திவந்தார்.  (புலம்பல்  3:2)

avar  ennai  ve'lichchaththilea  alla,  iru'lilea  azhaiththu  nadaththivanthaar.  (pulambal  3:2)

அவர்  தமது  கையை  எனக்கு  விரோதமாகவே  நித்தமும்  திருப்பினார்.  (புலம்பல்  3:3)

avar  thamathu  kaiyai  enakku  viroathamaagavea  niththamum  thiruppinaar.  (pulambal  3:3)

என்  சதையையும்  என்  தோலையும்  முற்றலாக்கினார்;  என்  எலும்புகளை  நொறுக்கினார்.  (புலம்பல்  3:4)

en  sathaiyaiyum  en  thoalaiyum  mut’ralaakkinaar;  en  elumbuga'lai  no’rukkinaar.  (pulambal  3:4)

அவர்  எனக்கு  விரோதமாகக்  கொத்தளங்கட்டி,  கசப்பினாலும்  வருத்தத்தினாலும்  என்னை  வளைந்துகொண்டார்.  (புலம்பல்  3:5)

avar  enakku  viroathamaagak  koththa'langkatti,  kasappinaalum  varuththaththinaalum  ennai  va'lainthuko'ndaar.  (pulambal  3:5)

பூர்வகாலத்தில்  செத்துக்கிடக்கிறவர்களைப்போல  என்னை  இருளான  இடங்களில்  கிடக்கப்பண்ணினார்.  (புலம்பல்  3:6)

poorvakaalaththil  seththukkidakki’ravarga'laippoala  ennai  iru'laana  idangga'lil  kidakkappa'n'ninaar.  (pulambal  3:6)

நான்  புறப்படக்கூடாதபடி  என்னைச்  சூழ  வேலியடைத்தார்;  என்  விலங்கைப்  பாரமாக்கினார்.  (புலம்பல்  3:7)

naan  pu’rappadakkoodaathapadi  ennaich  soozha  vealiyadaiththaar;  en  vilanggaip  baaramaakkinaar.  (pulambal  3:7)

நான்  சத்தமிட்டுக்  கூப்பிட்டாலும்,  என்  ஜெபத்துக்கு  வழியை  அடைத்துப்போட்டார்.  (புலம்பல்  3:8)

naan  saththamittuk  kooppittaalum,  en  jebaththukku  vazhiyai  adaiththuppoattaar.  (pulambal  3:8)

வெட்டின  கற்களின்  சுவரால்  என்  வழிகளை  அடைத்துப்போட்டார்,  என்  பாதைகளைத்  தாறுமாறாக்கினார்.  (புலம்பல்  3:9)

vettina  ka’rka'lin  suvaraal  en  vazhiga'lai  adaiththuppoattaar,  en  paathaiga'laith  thaa’rumaa’raakkinaar.  (pulambal  3:9)

அவர்  எனக்குப்  பதிவிருக்கிற  கரடியும்,  மறைவிடங்களில்  தங்குகிற  சிங்கமுமாயிருக்கிறார்.  (புலம்பல்  3:10)

avar  enakkup  pathivirukki’ra  karadiyum,  ma’raividangga'lil  thanggugi’ra  singgamumaayirukki’raar.  (pulambal  3:10)

என்  வழிகளை  அப்புறப்படுத்தி,  என்னைத்  துண்டித்துப்போட்டார்;  என்னைப்  பாழாக்கிவிட்டார்.  (புலம்பல்  3:11)

en  vazhiga'lai  appu’rappaduththi,  ennaith  thu'ndiththuppoattaar;  ennaip  paazhaakkivittaar.  (pulambal  3:11)

தமது  வில்லை  நாணேற்றி,  என்னை  அம்புக்கு  இலக்காக  வைத்தார்.  (புலம்பல்  3:12)

thamathu  villai  naa'neat’ri,  ennai  ambukku  ilakkaaga  vaiththaar.  (pulambal  3:12)

தம்முடைய  அம்பறாத்தூணியின்  அம்புகளை  என்  உள்ளிந்திரியங்களில்  படப்பண்ணினார்.  (புலம்பல்  3:13)

thammudaiya  amba’raaththoo'niyin  ambuga'lai  en  u'l'linthiriyangga'lil  padappa'n'ninaar.  (pulambal  3:13)

நான்  என்  ஜனத்தார்  யாவருக்கும்  பரியாசமும்,  நித்தம்  அவர்கள்  கின்னரப்  பாடலுமானேன்.  (புலம்பல்  3:14)

naan  en  janaththaar  yaavarukkum  pariyaasamum,  niththam  avarga'l  kinnarap  paadalumaanean.  (pulambal  3:14)

கசப்பினால்  என்னை  நிரப்பி,  எட்டியினால்  என்னை  வெறிக்கச்செய்தார்.  (புலம்பல்  3:15)

kasappinaal  ennai  nirappi,  ettiyinaal  ennai  ve’rikkachseythaar.  (pulambal  3:15)

அவர்  பருக்கைக்கற்களால்  என்  பற்களை  நொறுக்கி,  என்னைச்  சாம்பலில்  புரளப்பண்ணினார்.  (புலம்பல்  3:16)

avar  parukkaikka’rka'laal  en  pa’rka'lai  no’rukki,  ennaich  saambalil  pura'lappa'n'ninaar.  (pulambal  3:16)

என்  ஆத்துமாவைச்  சமாதானத்துக்குத்  தூரமாக்கினார்;  சுகத்தை  மறந்தேன்.  (புலம்பல்  3:17)

en  aaththumaavaich  samaathaanaththukkuth  thooramaakkinaar;  sugaththai  ma’ranthean.  (pulambal  3:17)

என்  பெலனும்  நான்  கர்த்தருக்குக்  காத்திருந்த  நம்பிக்கையும்  அழிந்துபோயிற்று  என்றேன்.  (புலம்பல்  3:18)

en  belanum  naan  karththarukkuk  kaaththiruntha  nambikkaiyum  azhinthupoayit’ru  en’rean.  (pulambal  3:18)

எட்டியும்  பிச்சுமாகிய  என்  சிறுமையையும்  என்  தவிப்பையும்  நினைத்தருளும்.  (புலம்பல்  3:19)

ettiyum  pichchumaagiya  en  si’rumaiyaiyum  en  thavippaiyum  ninaiththaru'lum.  (pulambal  3:19)

என்  ஆத்துமா  அவைகளை  நினைத்து  நினைத்து  எனக்குள்  முறிந்துபோகிறது.  (புலம்பல்  3:20)

en  aaththumaa  avaiga'lai  ninaiththu  ninaiththu  enakku'l  mu’rinthupoagi’rathu.  (pulambal  3:20)

இதை  என்  மனதிலே  வைத்து,  நம்பிக்கைகொண்டிருப்பேன்.  (புலம்பல்  3:21)

ithai  en  manathilea  vaiththu,  nambikkaiko'ndiruppean.  (pulambal  3:21)

நாம்  நிர்மூலமாகாதிருக்கிறது  கர்த்தருடைய  கிருபையே,  அவருடைய  இரக்கங்களுக்கு  முடிவில்லை.  (புலம்பல்  3:22)

naam  nirmoolamaagaathirukki’rathu  karththarudaiya  kirubaiyea,  avarudaiya  irakkangga'lukku  mudivillai.  (pulambal  3:22)

அவைகள்  காலைதோறும்  புதியவைகள்;  உமது  உண்மை  பெரிதாயிருக்கிறது.  (புலம்பல்  3:23)

avaiga'l  kaalaithoa’rum  puthiyavaiga'l;  umathu  u'nmai  perithaayirukki’rathu.  (pulambal  3:23)

கர்த்தர்  என்  பங்கு  என்று  என்  ஆத்துமா  சொல்லும்;  ஆகையால்  அவரிடத்தில்  நம்பிக்கைகொண்டிருப்பேன்.  (புலம்பல்  3:24)

karththar  en  panggu  en’ru  en  aaththumaa  sollum;  aagaiyaal  avaridaththil  nambikkaiko'ndiruppean.  (pulambal  3:24)

தமக்குக்  காத்திருக்கிறவர்களுக்கும்  தம்மைத்  தேடுகிற  ஆத்துமாவுக்கும்  கர்த்தர்  நல்லவர்.  (புலம்பல்  3:25)

thamakkuk  kaaththirukki’ravarga'lukkum  thammaith  theadugi’ra  aaththumaavukkum  karththar  nallavar.  (pulambal  3:25)

கர்த்தருடைய  இரட்சிப்புக்கு  நம்பிக்கையோடு  காத்திருக்கிறது  நல்லது.  (புலம்பல்  3:26)

karththarudaiya  iradchippukku  nambikkaiyoadu  kaaththirukki’rathu  nallathu.  (pulambal  3:26)

தன்  இளம்பிராயத்தில்  நுகத்தைச்  சுமக்கிறது  மனுஷனுக்கு  நல்லது.  (புலம்பல்  3:27)

than  i'lampiraayaththil  nugaththaich  sumakki’rathu  manushanukku  nallathu.  (pulambal  3:27)

அவரே  அதைத்  தன்மேல்  வைத்தாரென்று  அவன்  தனித்திருந்து  மௌனமாயிருக்கக்கடவன்.  (புலம்பல்  3:28)

avarea  athaith  thanmeal  vaiththaaren’ru  avan  thaniththirunthu  maunamaayirukkakkadavan.  (pulambal  3:28)

நம்பிக்கைக்கு  இடமுண்டோ  என்று  தன்  வாயைத்  தூளில்  நுழுந்துவானாக.  (புலம்பல்  3:29)

nambikkaikku  idamu'ndoa  en’ru  than  vaayaith  thoo'lil  nuzhunthuvaanaaga.  (pulambal  3:29)

தன்னை  அடிக்கிறவனுக்குத்  தன்  கன்னத்தைக்  காட்டி,  நிந்தையால்  நிறைந்திருப்பானாக.  (புலம்பல்  3:30)

thannai  adikki’ravanukkuth  than  kannaththaik  kaatti,  ninthaiyaal  ni’rainthiruppaanaaga.  (pulambal  3:30)

ஆண்டவர்  என்றென்றைக்கும்  கைவிடமாட்டார்.  (புலம்பல்  3:31)

aa'ndavar  en’ren’raikkum  kaividamaattaar.  (pulambal  3:31)

அவர்  சஞ்சலப்படுத்தினாலும்  தமது  மிகுந்த  கிருபையின்படி  இரங்குவார்.  (புலம்பல்  3:32)

avar  sagnchalappaduththinaalum  thamathu  miguntha  kirubaiyinpadi  irangguvaar.  (pulambal  3:32)

அவர்  மனப்பூர்வமாய்  மனுபுத்திரரைச்  சிறுமையாக்கிச்  சஞ்சலப்படுத்துகிறதில்லை.  (புலம்பல்  3:33)

avar  manappoorvamaay  manupuththiraraich  si’rumaiyaakkich  sagnchalappaduththugi’rathillai.  (pulambal  3:33)

ஒருவன்  பூமியில்  சிறைப்பட்டவர்கள்  யாவரையும்  தன்  கால்களின்கீழ்  நசுக்குகிறதையும்,  (புலம்பல்  3:34)

oruvan  boomiyil  si’raippattavarga'l  yaavaraiyum  than  kaalga'linkeezh  nasukkugi’rathaiyum,  (pulambal  3:34)

உன்னதமானவரின்  சமுகத்தில்  மனுஷருடைய  நியாயத்தைப்  புரட்டுகிறதையும்,  (புலம்பல்  3:35)

unnathamaanavarin  samugaththil  manusharudaiya  niyaayaththaip  purattugi’rathaiyum,  (pulambal  3:35)

மனுஷனை  அவனுடைய  வழக்கிலே  மாறுபாடாக்குகிறதையும்,  ஆண்டவர்  காணாதிருப்பாரோ?  (புலம்பல்  3:36)

manushanai  avanudaiya  vazhakkilea  maa’rupaadaakkugi’rathaiyum,  aa'ndavar  kaa'naathiruppaaroa?  (pulambal  3:36)

ஆண்டவர்  கட்டளையிடாதிருக்கக்  காரியம்  சம்பவிக்கும்  என்று  சொல்லுகிறவன்  யார்?  (புலம்பல்  3:37)

aa'ndavar  katta'laiyidaathirukkak  kaariyam  sambavikkum  en’ru  sollugi’ravan  yaar?  (pulambal  3:37)

உன்னதமானவருடைய  வாயிலிருந்து  தீமையும்  நன்மையும்  புறப்படுகிறதில்லையோ?  (புலம்பல்  3:38)

unnathamaanavarudaiya  vaayilirunthu  theemaiyum  nanmaiyum  pu’rappadugi’rathillaiyoa?  (pulambal  3:38)

உயிருள்ள  மனுஷன்  முறையிடுவானேன்?  அவன்  தன்  பாவத்துக்கு  வரும்  தண்டனையைக்குறித்து  முறையிடுகிறதென்ன?  (புலம்பல்  3:39)

uyiru'l'la  manushan  mu’raiyiduvaanean?  avan  than  paavaththukku  varum  tha'ndanaiyaikku’riththu  mu’raiyidugi’rathenna?  (pulambal  3:39)

நாம்  நம்முடைய  வழிகளைச்  சோதித்து  ஆராய்ந்து,  கர்த்தரிடத்தில்  திரும்பக்கடவோம்.  (புலம்பல்  3:40)

naam  nammudaiya  vazhiga'laich  soathiththu  aaraaynthu,  karththaridaththil  thirumbakkadavoam.  (pulambal  3:40)

நாம்  நம்முடைய  கைகளோடுங்கூட  நம்முடைய  இருதயத்தையும்  பரலோகத்திலிருக்கிற  தேவனிடத்திற்கு  ஏறெடுக்கக்கடவோம்.  (புலம்பல்  3:41)

naam  nammudaiya  kaiga'loadungkooda  nammudaiya  iruthayaththaiyum  paraloagaththilirukki’ra  theavanidaththi’rku  ea’redukkakkadavoam.  (pulambal  3:41)

நாங்கள்  துரோகஞ்செய்து,  கலகம்பண்ணினோம்;  ஆகையால்  தேவரீர்  மன்னியாதிருந்தீர்.  (புலம்பல்  3:42)

naangga'l  thuroagagnseythu,  kalagampa'n'ninoam;  aagaiyaal  theavareer  manniyaathiruntheer.  (pulambal  3:42)

தேவரீர்  கோபத்தால்  மூடிக்கொண்டு,  எங்களைத்  தப்பவிடாமல்  பின்தொடர்ந்து  கொன்றீர்.  (புலம்பல்  3:43)

theavareer  koabaththaal  moodikko'ndu,  engga'laith  thappavidaamal  pinthodarnthu  kon’reer.  (pulambal  3:43)

ஜெபம்  உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு  உம்மை  மேகத்தால்  மூடிக்கொண்டீர்.  (புலம்பல்  3:44)

jebam  udpiraveasikkakkoodaathapadikku  ummai  meagaththaal  moodikko'ndeer.  (pulambal  3:44)

ஜனங்களுக்குள்ளே  எங்களைக்  குப்பையும்  அருவருப்புமாக்கினீர்.  (புலம்பல்  3:45)

janangga'lukku'l'lea  engga'laik  kuppaiyum  aruvaruppumaakkineer.  (pulambal  3:45)

எங்கள்  பகைஞர்  எல்லாரும்  எங்களுக்கு  விரோதமாய்த்  தங்கள்  வாயைத்  திறந்தார்கள்.  (புலம்பல்  3:46)

engga'l  pagaignar  ellaarum  engga'lukku  viroathamaayth  thangga'l  vaayaith  thi’ranthaarga'l.  (pulambal  3:46)

திகிலும்  படுகுழியும்  பாழ்க்கடிப்பும்  சங்காரமும்  எங்களுக்கு  நேரிட்டது.  (புலம்பல்  3:47)

thigilum  padukuzhiyum  paazhkkadippum  sanggaaramum  engga'lukku  nearittathu.  (pulambal  3:47)

என்  ஜனமாகிய  குமாரத்தி  அடைந்த  கேட்டினிமித்தம்  என்  கண்களிலிருந்து  நீர்க்கால்கள்  பாய்கிறது.  (புலம்பல்  3:48)

en  janamaagiya  kumaaraththi  adaintha  keattinimiththam  en  ka'nga'lilirunthu  neerkkaalga'l  paaygi’rathu.  (pulambal  3:48)

கர்த்தர்  பரலோகத்திலிருந்து  நோக்கிப்பார்க்குமட்டும்,  (புலம்பல்  3:49)

karththar  paraloagaththilirunthu  noakkippaarkkumattum,  (pulambal  3:49)

என்  கண்  இடைவிடாமல்  ஓய்வின்றிச்  சொரிகிறது.  (புலம்பல்  3:50)

en  ka'n  idaividaamal  oayvin’rich  sorigi’rathu.  (pulambal  3:50)

என்  நகரத்தினுடைய  குமாரத்திகள்  அனைவரினிமித்தமும்,  என்  கண்  என்  ஆத்துமாவுக்கு  நோவுண்டாக்குகிறது.  (புலம்பல்  3:51)

en  nagaraththinudaiya  kumaaraththiga'l  anaivarinimiththamum,  en  ka'n  en  aaththumaavukku  noavu'ndaakkugi’rathu.  (pulambal  3:51)

முகாந்தரம்  இல்லாமல்  என்னைப்  பகைக்கிறவர்கள்  என்னை  ஒரு  பட்சியைப்போல  வேட்டையாடினார்கள்.  (புலம்பல்  3:52)

mugaantharam  illaamal  ennaip  pagaikki’ravarga'l  ennai  oru  padchiyaippoala  veattaiyaadinaarga'l.  (pulambal  3:52)

காவற்கிடங்கிலே  என்  பிராணனை  ஒடுக்கி,  என்மீதில்  கல்லை  வைத்தார்கள்.  (புலம்பல்  3:53)

kaava’rkidanggilea  en  piraa'nanai  odukki,  enmeethil  kallai  vaiththaarga'l.  (pulambal  3:53)

தண்ணீர்  என்  தலையின்மேல்  புரண்டது;  நாசமானேன்  என்றேன்.  (புலம்பல்  3:54)

tha'n'neer  en  thalaiyinmeal  pura'ndathu;  naasamaanean  en’rean.  (pulambal  3:54)

மகா  ஆழமான  கிடங்கிலிருந்து,  கர்த்தாவே,  உம்முடைய  நாமத்தைப்பற்றிக்  கூப்பிட்டேன்.  (புலம்பல்  3:55)

mahaa  aazhamaana  kidanggilirunthu,  karththaavea,  ummudaiya  naamaththaippat’rik  kooppittean.  (pulambal  3:55)

என்  சத்தத்தைக்  கேட்டீர்;  என்  பெருமூச்சுக்கும்  என்  கூப்பிடுதலுக்கும்  உமது  செவியை  அடைத்துக்கொள்ளாதேயும்.  (புலம்பல்  3:56)

en  saththaththaik  keatteer;  en  perumoochchukkum  en  kooppiduthalukkum  umathu  seviyai  adaiththukko'l'laatheayum.  (pulambal  3:56)

நான்  உம்மை  நோக்கிக்  கூப்பிட்ட  நாளிலே  நீர்  அணுகி:  பயப்படாதே  என்றீர்.  (புலம்பல்  3:57)

naan  ummai  noakkik  kooppitta  naa'lilea  neer  a'nugi:  bayappadaathea  en’reer.  (pulambal  3:57)

ஆண்டவரே,  என்  ஆத்துமாவின்  வழக்கை  நடத்தினீர்;  என்  பிராணனை  மீட்டுக்கொண்டீர்.  (புலம்பல்  3:58)

aa'ndavarea,  en  aaththumaavin  vazhakkai  nadaththineer;  en  piraa'nanai  meettukko'ndeer.  (pulambal  3:58)

கர்த்தாவே,  எனக்கு  உண்டான  அநியாயத்தைக்  கண்டீர்;  என்  நியாயத்தைத்  தீரும்.  (புலம்பல்  3:59)

karththaavea,  enakku  u'ndaana  aniyaayaththaik  ka'ndeer;  en  niyaayaththaith  theerum.  (pulambal  3:59)

அவர்களுடைய  எல்லாக்  குரோதத்தையும்,  அவர்கள்  எனக்கு  விரோதமாக  நினைத்த  எல்லா  நினைவுகளையும்  கண்டீர்.  (புலம்பல்  3:60)

avarga'ludaiya  ellaak  kuroathaththaiyum,  avarga'l  enakku  viroathamaaga  ninaiththa  ellaa  ninaivuga'laiyum  ka'ndeer.  (pulambal  3:60)

கர்த்தாவே,  அவர்கள்  நிந்திக்கும்  நிந்தையையும்,  அவர்கள்  எனக்கு  விரோதமாய்  நினைத்த  எல்லா  நினைவுகளையும்,  (புலம்பல்  3:61)

karththaavea,  avarga'l  ninthikkum  ninthaiyaiyum,  avarga'l  enakku  viroathamaay  ninaiththa  ellaa  ninaivuga'laiyum,  (pulambal  3:61)

எனக்கு  விரோதமாய்  எழும்பினவர்களின்  வாய்மொழிகளையும்,  அவர்கள்  நாள்முழுதும்  எனக்கு  விரோதமாய்  யோசிக்கும்  யோசனைகளையும்  கேட்டீர்.  (புலம்பல்  3:62)

enakku  viroathamaay  ezhumbinavarga'lin  vaaymozhiga'laiyum,  avarga'l  naa'lmuzhuthum  enakku  viroathamaay  yoasikkum  yoasanaiga'laiyum  keatteer.  (pulambal  3:62)

அவர்கள்  உட்கார்ந்திருப்பதையும்  அவர்கள்  எழுந்திருப்பதையும்  நோக்கிப்பாரும்;  நான்  அவர்களுடைய  பாடலாயிருக்கிறேன்.  (புலம்பல்  3:63)

avarga'l  udkaarnthiruppathaiyum  avarga'l  ezhunthiruppathaiyum  noakkippaarum;  naan  avarga'ludaiya  paadalaayirukki’rean.  (pulambal  3:63)

கர்த்தாவே,  அவர்கள்  கைகள்  செய்த  கிரியைகளுக்குத்தக்கதாக  அவர்களுக்குப்  பலன்  அளிப்பீர்.  (புலம்பல்  3:64)

karththaavea,  avarga'l  kaiga'l  seytha  kiriyaiga'lukkuththakkathaaga  avarga'lukkup  palan  a'lippeer.  (pulambal  3:64)

அவர்களுக்கு  இருதய  வேதனையைக்  கொடுப்பீர்,  உம்முடைய  சாபம்  அவர்கள்மேல்  இருக்கும்.  (புலம்பல்  3:65)

avarga'lukku  iruthaya  veathanaiyaik  koduppeer,  ummudaiya  saabam  avarga'lmeal  irukkum.  (pulambal  3:65)

கோபமாய்  அவர்களைப்  பின்தொடர்ந்து  கர்த்தருடைய  வானங்களின்  கீழ்  இராதபடிக்கு  அவர்களை  அழித்துவிடுவீர்.  (புலம்பல்  3:66)

koabamaay  avarga'laip  pinthodarnthu  karththarudaiya  vaanangga'lin  keezh  iraathapadikku  avarga'lai  azhiththuviduveer.  (pulambal  3:66)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!