Wednesday, July 13, 2016

Pulambal 2 | புலம்பல் 2 | Lamentations 2


ஐயோ!  ஆண்டவர்  தமது  கோபத்தில்  சீயோன்  குமாரத்தியை  மந்தாரத்தினால்  மூடினார்;  அவர்  தமது  கோபத்தின்  நாளிலே  தமது  பாதபீடத்தை  நினையாமல்  இஸ்ரவேலின்  மகிமையை  வானத்திலிருந்து  தரையிலே  விழத்தள்ளினார்.  (புலம்பல்  2:1)

aiyoa!  aa'ndavar  thamathu  koabaththil  seeyoan  kumaaraththiyai  manthaaraththinaal  moodinaar;  avar  thamathu  koabaththin  naa'lilea  thamathu  paathapeedaththai  ninaiyaamal  isravealin  magimaiyai  vaanaththilirunthu  tharaiyilea  vizhaththa'l'linaar.  (pulambal  2:1)

ஆண்டவர்  தப்பவிடாமல்  யாக்கோபின்  வாசஸ்தலங்களையெல்லாம்  விழுங்கினார்;  அவர்  யூதா  குமாரத்தியின்  அரண்களையெல்லாம்  தமது  சினத்திலே  இடித்து,  தரையோடே  தரையாக்கிப்போட்டார்;  ராஜ்யத்தையும்  அதின்  பிரபுக்களையும்  பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.  (புலம்பல்  2:2)

aa'ndavar  thappavidaamal  yaakkoabin  vaasasthalangga'laiyellaam  vizhungginaar;  avar  yoothaa  kumaaraththiyin  ara'nga'laiyellaam  thamathu  sinaththilea  idiththu,  tharaiyoadea  tharaiyaakkippoattaar;  raajyaththaiyum  athin  pirabukka'laiyum  parisuththakkulaichchalaakkinaar.  (pulambal  2:2)

அவர்  தமது  உக்கிரகோபத்திலே  இஸ்ரவேலின்  கொம்பு  முழுவதையும்  வெட்டிப்போட்டார்;  சத்துருவுக்கு  முன்பாக  அவர்  தமது  வலதுகரத்தைப்  பின்னாகத்  திருப்பி,  சுற்றிலும்  இருப்பதைப்  பட்சிக்கிற  அக்கினிஜுவாலையைப்போல்  யாக்கோபுக்கு  விரோதமாக  எரித்தார்.  (புலம்பல்  2:3)

avar  thamathu  ukkirakoabaththilea  isravealin  kombu  muzhuvathaiyum  vettippoattaar;  saththuruvukku  munbaaga  avar  thamathu  valathukaraththaip  pinnaagath  thiruppi,  sut’rilum  iruppathaip  padchikki’ra  akkinijuvaalaiyaippoal  yaakkoabukku  viroathamaaga  eriththaar.  (pulambal  2:3)

பகைஞனைப்போல்  தம்முடைய  வில்லை  நாணேற்றினார்;  சத்துருவைப்போல்  தம்முடைய  வலதுகரத்தை  நீட்டிநின்று,  கண்ணுக்கு  இன்பமானதையெல்லாம்  அழித்துப்போட்டார்;  சீயோன்  குமாரத்தியின்  கூடாரத்திலே  தம்முடைய  உக்கிரத்தை  அக்கினியைப்போல்  சொரியப்பண்ணினார்.  (புலம்பல்  2:4)

pagaignanaippoal  thammudaiya  villai  naa'neat’rinaar;  saththuruvaippoal  thammudaiya  valathukaraththai  neettinin’ru,  ka'n'nukku  inbamaanathaiyellaam  azhiththuppoattaar;  seeyoan  kumaaraththiyin  koodaaraththilea  thammudaiya  ukkiraththai  akkiniyaippoal  soriyappa'n'ninaar.  (pulambal  2:4)

ஆண்டவர்  பகைஞன்போலானார்;  இஸ்ரவேலை  விழுங்கினார்;  அதின்  அரமனைகளையெல்லாம்  விழுங்கினார்;  அதின்  அரண்களை  அழித்து,  யூதா  குமாரத்திக்கு  மிகுந்த  துக்கிப்பையும்  சலிப்பையும்  உண்டாக்கினார்.  (புலம்பல்  2:5)

aa'ndavar  pagaignanpoalaanaar;  isravealai  vizhungginaar;  athin  aramanaiga'laiyellaam  vizhungginaar;  athin  ara'nga'lai  azhiththu,  yoothaa  kumaaraththikku  miguntha  thukkippaiyum  salippaiyum  u'ndaakkinaar.  (pulambal  2:5)

தோட்டத்தின்  வேலியைப்போல  இருந்த  தம்முடைய  வேலியைப்  பலவந்தமாய்ப்  பிடுங்கிப்போட்டார்;  சபைகூடுகிற  தம்முடைய  ஸ்தலங்களை  அழித்தார்;  கர்த்தர்  சீயோனிலே  பண்டிகையையும்  ஓய்வுநாளையும்  மறக்கப்பண்ணி,  தமது  உக்கிரமான  கோபத்தில்  ராஜாவையும்  ஆசாரியனையும்  புறக்கணித்துவிட்டார்.  (புலம்பல்  2:6)

thoattaththin  vealiyaippoala  iruntha  thammudaiya  vealiyaip  balavanthamaayp  pidunggippoattaar;  sabaikoodugi’ra  thammudaiya  sthalangga'lai  azhiththaar;  karththar  seeyoanilea  pa'ndigaiyaiyum  oayvunaa'laiyum  ma’rakkappa'n'ni,  thamathu  ukkiramaana  koabaththil  raajaavaiyum  aasaariyanaiyum  pu’rakka'niththuvittaar.  (pulambal  2:6)

ஆண்டவர்  தமது  பலிபீடத்தை  ஒழித்துவிட்டார்;  தமது  பரிசுத்த  ஸ்தலத்தை  வெறுத்துவிட்டார்;  அதினுடைய  அரமனைகளின்  மதில்களைச்  சத்துருவின்  கையில்  ஒப்புக்கொடுத்தார்;  பண்டிகைநாளில்  ஆரவாரம்பண்ணுகிறதுபோல்  கர்த்தரின்  ஆலயத்தில்  ஆரவாரம்பண்ணினார்கள்.  (புலம்பல்  2:7)

aa'ndavar  thamathu  balipeedaththai  ozhiththuvittaar;  thamathu  parisuththa  sthalaththai  ve’ruththuvittaar;  athinudaiya  aramanaiga'lin  mathilga'laich  saththuruvin  kaiyil  oppukkoduththaar;  pa'ndigainaa'lil  aaravaarampa'n'nugi’rathupoal  karththarin  aalayaththil  aaravaarampa'n'ninaarga'l.  (pulambal  2:7)

கர்த்தர்  சீயோன்  குமாரத்தியின்  அலங்கத்தை  நிர்மூலமாக்க  நினைத்தார்;  நூலைப்போட்டார்;  அழிக்காதபடித்  தம்முடைய  கையை  அவர்  முடக்கிக்கொண்டதில்லை;  அரணிப்பையும்  அலங்கத்தையும்  புலம்பச்செய்தார்;  அவைகள்  முற்றிலும்  பெலனற்றுக்  கிடக்கிறது.  (புலம்பல்  2:8)

karththar  seeyoan  kumaaraththiyin  alanggaththai  nirmoolamaakka  ninaiththaar;  noolaippoattaar;  azhikkaathapadith  thammudaiya  kaiyai  avar  mudakkikko'ndathillai;  ara'nippaiyum  alanggaththaiyum  pulambachseythaar;  avaiga'l  mut’rilum  belanat’ruk  kidakki’rathu.  (pulambal  2:8)

அவள்  வாசல்கள்  தரையில்  அமிழ்ந்திக்கிடக்கிறது;  அவள்  தாழ்ப்பாள்களை  முறித்து  உடைத்துப்போட்டார்;  அவள்  ராஜாவும்  அவள்  பிரபுக்களும்  புறஜாதியாருக்குள்  இருக்கிறார்கள்;  வேதமுமில்லை;  அவள்  தீர்க்கதரிசிகளுக்குக்  கர்த்தரால்  தரிசனம்  கிடைக்கிறதுமில்லை.  (புலம்பல்  2:9)

ava'l  vaasalga'l  tharaiyil  amizhnthikkidakki’rathu;  ava'l  thaazhppaa'lga'lai  mu’riththu  udaiththuppoattaar;  ava'l  raajaavum  ava'l  pirabukka'lum  pu’rajaathiyaarukku'l  irukki’raarga'l;  veathamumillai;  ava'l  theerkkatharisiga'lukkuk  karththaraal  tharisanam  kidaikki’rathumillai.  (pulambal  2:9)

சீயோன்  குமாரத்தியின்  மூப்பர்கள்  தரையில்  உட்கார்ந்து  மௌனமாய்  இருக்கிறார்கள்;  தங்கள்  தலைகளின்மேல்  புழுதியைப்  போட்டுக்கொள்ளுகிறார்கள்;  இரட்டு  உடுத்தியிருக்கிறார்கள்;  எருசலேமின்  கன்னியர்கள்  தலைகவிழ்ந்து  தரையை  நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  (புலம்பல்  2:10)

seeyoan  kumaaraththiyin  moopparga'l  tharaiyil  udkaarnthu  maunamaay  irukki’raarga'l;  thangga'l  thalaiga'linmeal  puzhuthiyaip  poattukko'l'lugi’raarga'l;  irattu  uduththiyirukki’raarga'l;  erusaleamin  kanniyarga'l  thalaikavizhnthu  tharaiyai  noakkikko'ndirukki’raarga'l.  (pulambal  2:10)

என்  ஜனமாகிய  குமாரத்தியின்  நொறுங்குதலினிமித்தம்  கண்ணீர்  சொரிகிறதினால்  என்  கண்கள்  பூத்துப்போகிறது;  என்  குடல்கள்  கொதிக்கிறது;  என்  ஈரல்  இளகித்  தரையிலே  வடிகிறது;  குழந்தைகளும்  பாலகரும்  நகரத்தின்  வீதிகளிலே  மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.  (புலம்பல்  2:11)

en  janamaagiya  kumaaraththiyin  no’rungguthalinimiththam  ka'n'neer  sorigi’rathinaal  en  ka'nga'l  pooththuppoagi’rathu;  en  kudalga'l  kothikki’rathu;  en  eeral  i'lagith  tharaiyilea  vadigi’rathu;  kuzhanthaiga'lum  paalagarum  nagaraththin  veethiga'lilea  moorchchiththukkidakki’raarga'l.  (pulambal  2:11)

அவைகள்  குத்துண்டவர்களைப்போல  நகரத்தின்  வீதிகளிலே  மூர்ச்சித்துக்கிடக்கும்போதும்,  தங்கள்  தாய்களின்  மடியிலே  தங்கள்  பிராணனை  விடும்போதும்,  தங்கள்  தாய்களை  நோக்கி:  தானியமும்  திராட்சரசமும்  எங்கே  என்கிறார்கள்.  (புலம்பல்  2:12)

avaiga'l  kuththu'ndavarga'laippoala  nagaraththin  veethiga'lilea  moorchchiththukkidakkumpoathum,  thangga'l  thaayga'lin  madiyilea  thangga'l  piraa'nanai  vidumpoathum,  thangga'l  thaayga'lai  noakki:  thaaniyamum  thiraadcharasamum  enggea  engi’raarga'l.  (pulambal  2:12)

எருசலேம்  குமாரத்தியே,  நான்  உனக்குச்  சாட்சியாக  என்னத்தைச்  சொல்லுவேன்?  உன்னை  எதற்கு  ஒப்பிடுவேன்?  சீயோன்  குமாரத்தியாகிய  கன்னிகையே,  நான்  உன்னைத்  தேற்றும்படிக்கு  உன்னை  எதற்கு  நிகர்சொல்லுவேன்?  உன்  காயம்  சமுத்திரத்தைப்போல்  பெரிதாயிருக்கிறதே,  உன்னைக்  குணமாக்குகிறவன்  யார்?  (புலம்பல்  2:13)

erusaleam  kumaaraththiyea,  naan  unakkuch  saadchiyaaga  ennaththaich  solluvean?  unnai  etha’rku  oppiduvean?  seeyoan  kumaaraththiyaagiya  kannigaiyea,  naan  unnaith  theat’rumpadikku  unnai  etha’rku  nigarsolluvean?  un  kaayam  samuththiraththaippoal  perithaayirukki’rathea,  unnaik  ku'namaakkugi’ravan  yaar?  (pulambal  2:13)

உன்  தீர்க்கதரிசிகள்  அபத்தமும்  வியர்த்தமுமான  தரிசனங்களை  உனக்காகத்  தரிசித்தார்கள்;  அவர்கள்  உன்  சிறையிருப்பை  விலக்கும்படி  உன்  அக்கிரமத்தை  எடுத்துக்காட்டாமல்,  அபத்தமானவைகளையும்  கேடானவைகளையும்  உனக்காகத்  தரிசித்தார்கள்.  (புலம்பல்  2:14)

un  theerkkatharisiga'l  abaththamum  viyarththamumaana  tharisanangga'lai  unakkaagath  tharisiththaarga'l;  avarga'l  un  si’raiyiruppai  vilakkumpadi  un  akkiramaththai  eduththukkaattaamal,  abaththamaanavaiga'laiyum  keadaanavaiga'laiyum  unakkaagath  tharisiththaarga'l.  (pulambal  2:14)

வழிப்போக்கர்  யாவரும்  உன்பேரில்  கை  கொட்டுகிறார்கள்;  எருசலேம்  குமாரத்தியின்பேரில்  ஈசற்போட்டு,  தங்கள்  தலைகளைத்  துலுக்கி:  பூரணவடிவும்  சர்வபூமியின்  மகிழ்ச்சியுமான  நகரம்  இதுதானா  என்கிறார்கள்.  (புலம்பல்  2:15)

vazhippoakkar  yaavarum  unpearil  kai  kottugi’raarga'l;  erusaleam  kumaaraththiyinpearil  eesa’rpoattu,  thangga'l  thalaiga'laith  thulukki:  poora'navadivum  sarvaboomiyin  magizhchchiyumaana  nagaram  ithuthaanaa  engi’raarga'l.  (pulambal  2:15)

உன்  பகைஞர்  எல்லாரும்  உன்பேரில்  தங்கள்  வாயைத்  திறக்கிறார்கள்;  ஈசற்போட்டுப்  பற்கடிக்கிறார்கள்;  அதை  விழுங்கினோம்,  நாம்  காத்திருந்த  நாள்  இதுவே,  இப்பொழுது  நமக்குக்  கிடைத்தது,  அதைக்  கண்டோம்  என்கிறார்கள்.  (புலம்பல்  2:16)

un  pagaignar  ellaarum  unpearil  thangga'l  vaayaith  thi’rakki’raarga'l;  eesa’rpoattup  pa’rkadikki’raarga'l;  athai  vizhungginoam,  naam  kaaththiruntha  naa'l  ithuvea,  ippozhuthu  namakkuk  kidaiththathu,  athaik  ka'ndoam  engi’raarga'l.  (pulambal  2:16)

கர்த்தர்  தாம்  நினைத்ததைச்  செய்தார்;  பூர்வநாட்கள்  முதற்கொண்டு  தாம்  கட்டளையிட்ட  தமது  வார்த்தையை  நிறைவேற்றினார்;  அவர்  தப்பவிடாமல்  நிர்மூலமாக்கி,  உன்மேல்  பகைஞன்  சந்தோஷிக்கும்படி  செய்தார்;  உன்  சத்துருக்களின்  கொம்பை  உயர்த்தினார்.  (புலம்பல்  2:17)

karththar  thaam  ninaiththathaich  seythaar;  poorvanaadka'l  mutha’rko'ndu  thaam  katta'laiyitta  thamathu  vaarththaiyai  ni’raiveat’rinaar;  avar  thappavidaamal  nirmoolamaakki,  unmeal  pagaignan  santhoashikkumpadi  seythaar;  un  saththurukka'lin  kombai  uyarththinaar.  (pulambal  2:17)

அவர்கள்  இருதயம்  ஆண்டவரை  நோக்கிக்  கூப்பிடுகிறது;  சீயோன்  குமாரத்தியின்  மதிலே,  இரவும்  பகலும்  நதியவ்வளவு  கண்ணீர்  விடு,  ஓய்ந்திராதே,  உன்  கண்ணின்  கறுப்புவிழி  சும்மாயிருக்கவொட்டாதே.  (புலம்பல்  2:18)

avarga'l  iruthayam  aa'ndavarai  noakkik  kooppidugi’rathu;  seeyoan  kumaaraththiyin  mathilea,  iravum  pagalum  nathiyavva'lavu  ka'n'neer  vidu,  oaynthiraathea,  un  ka'n'nin  ka’ruppuvizhi  summaayirukkavottaathea.  (pulambal  2:18)

எழுந்திரு,  இராத்திரியிலே  முதற்சாமத்தில்  கூப்பிடு;  ஆண்டவரின்  சமுகத்தில்  உன்  இருதயத்தைத்  தண்ணீரைப்போல  ஊற்றிவிடு;  எல்லாத்  தெருக்களின்  முனையிலும்  பசியினால்  மூர்ச்சித்துப்போகிற  உன்  குழந்தைகளின்  பிராணனுக்காக  உன்  கைகளை  அவரிடத்திற்கு  ஏறெடு.  (புலம்பல்  2:19)

ezhunthiru,  iraaththiriyilea  mutha’rsaamaththil  kooppidu;  aa'ndavarin  samugaththil  un  iruthayaththaith  tha'n'neeraippoala  oot’rividu;  ellaath  therukka'lin  munaiyilum  pasiyinaal  moorchchiththuppoagi’ra  un  kuzhanthaiga'lin  piraa'nanukkaaga  un  kaiga'lai  avaridaththi’rku  ea’redu.  (pulambal  2:19)

கர்த்தாவே,  யாருக்கு  இந்தப்பிரகாரமாகச்  செய்தீரென்று  நோக்கிப்பாரும்;  ஸ்திரீகள்  கைக்குழந்தைகளாகிய  தங்கள்  கர்ப்பக்கனியைத்  தின்னவேண்டுமோ?  ஆண்டவருடைய  பரிசுத்த  ஸ்தலத்தில்  ஆசாரியனும்  தீர்க்கதரிசியும்  கொலைசெய்யப்படவேண்டுமோ?  (புலம்பல்  2:20)

karththaavea,  yaarukku  inthappiragaaramaagach  seytheeren’ru  noakkippaarum;  sthireega'l  kaikkuzhanthaiga'laagiya  thangga'l  karppakkaniyaith  thinnavea'ndumoa?  aa'ndavarudaiya  parisuththa  sthalaththil  aasaariyanum  theerkkatharisiyum  kolaiseyyappadavea'ndumoa?  (pulambal  2:20)

இளைஞனும்  முதிர்வயதுள்ளவனும்  தெருக்களில்  தரையிலே  கிடக்கிறார்கள்;  என்  கன்னிகைகளும்  என்  வாலிபரும்  பட்டயத்தால்  விழுந்தார்கள்;  உமது  கோபத்தின்  நாளிலே  வெட்டி,  அவர்களைத்  தப்பவிடாமல்  கொன்றுபோட்டீர்.  (புலம்பல்  2:21)

i'laignanum  muthirvayathu'l'lavanum  therukka'lil  tharaiyilea  kidakki’raarga'l;  en  kannigaiga'lum  en  vaalibarum  pattayaththaal  vizhunthaarga'l;  umathu  koabaththin  naa'lilea  vetti,  avarga'laith  thappavidaamal  kon’rupoatteer.  (pulambal  2:21)

பண்டிகைநாளில்  கும்புகளை  வரவழைப்பதுபோல்  சுற்றிலுமிருந்து  எனக்குத்  திகில்களை  வரவழைத்தீர்;  கர்த்தருடைய  கோபத்தின்  நாளிலே  தப்பினவனும்  மீதியானவனுமில்லை;  நான்  கைகளில்  ஏந்தி  வளர்த்தவர்களை  என்  பகைஞன்  நாசம்பண்ணினான்.  (புலம்பல்  2:22)

pa'ndigainaa'lil  kumbuga'lai  varavazhaippathupoal  sut’rilumirunthu  enakkuth  thigilga'lai  varavazhaiththeer;  karththarudaiya  koabaththin  naa'lilea  thappinavanum  meethiyaanavanumillai;  naan  kaiga'lil  eanthi  va'larththavarga'lai  en  pagaignan  naasampa'n'ninaan.  (pulambal  2:22)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!