Wednesday, July 27, 2016

Oasiyaa 3 | ஓசியா 3 | Hosea 3

பின்பு  கர்த்தர்  என்னை  நோக்கி:  அந்நிய  தேவர்களை  மதித்து,  திராட்சரசமுள்ள  பாத்திரங்களை  விரும்புகிறவர்களான  இஸ்ரவேல்  புத்திரர்பேரில்  கர்த்தர்  வைத்திருக்கிற  அன்புக்கு  ஒப்பாக  நீ  இன்னும்  போய்,  தன்  நேசரால்  நேசிக்கப்பட்டவளும்,  விபசாரியுமான  ஒரு  ஸ்திரீயை  நேசித்துக்கொள்  என்று  சொன்னார்.  (ஓசியா  3:1)

pinbu  karththar  ennai  noakki:  anniya  theavarga'lai  mathiththu,  thiraadcharasamu'l'la  paaththirangga'lai  virumbugi’ravarga'laana  israveal  puththirarpearil  karththar  vaiththirukki’ra  anbukku  oppaaga  nee  innum  poay,  than  neasaraal  neasikkappattava'lum,  vibasaariyumaana  oru  sthireeyai  neasiththukko'l  en’ru  sonnaar.  (oasiyaa  3:1)

அப்பொழுது  நான்  அவளை  எனக்குப்  பதினைந்து  வெள்ளிக்காசுக்கும்,  ஒன்றரைக்கலம்  வாற்கோதுமைக்கும்  கொண்டு,  (ஓசியா  3:2)

appozhuthu  naan  ava'lai  enakkup  pathinainthu  ve'l'likkaasukkum,  on’raraikkalam  vaa’rkoathumaikkum  ko'ndu,  (oasiyaa  3:2)

அவளை  நோக்கி:  நீ  வேசித்தனம்பண்ணாமலும்,  ஒருவனையும்  சேராமலும்  அநேகநாள்  எனக்காகக்  காத்திரு;  உனக்காக  நானும்  காத்திருப்பேன்  என்றேன்.  (ஓசியா  3:3)

ava'lai  noakki:  nee  veasiththanampa'n'naamalum,  oruvanaiyum  searaamalum  aneaganaa'l  enakkaagak  kaaththiru;  unakkaaga  naanum  kaaththiruppean  en’rean.  (oasiyaa  3:3)

இஸ்ரவேல்  புத்திரர்  அநேகநாள்  ராஜா  இல்லாமலும்,  அதிபதி  இல்லாமலும்,  பலி  இல்லாமலும்,  சிலை  இல்லாமலும்,  ஏபோத்  வஸ்திரம்  இல்லாமலும்,  தேராபீம்  இல்லாமலும்  இருப்பார்கள்.  (ஓசியா  3:4)

israveal  puththirar  aneaganaa'l  raajaa  illaamalum,  athibathi  illaamalum,  bali  illaamalum,  silai  illaamalum,  eaboath  vasthiram  illaamalum,  thearaapeem  illaamalum  iruppaarga'l.  (oasiyaa  3:4)

பின்பு  இஸ்ரவேல்  புத்திரர்  திரும்பி,  தங்கள்  தேவனாகிய  கர்த்தரையும்,  தங்கள்  ராஜாவாகிய  தாவீதையும்  தேடி,  கடைசிநாட்களில்  கர்த்தரையும்,  அவருடைய  தயவையும்  நாடி  அஞ்சிக்கையாய்  வருவார்கள்.  (ஓசியா  3:5)

pinbu  israveal  puththirar  thirumbi,  thangga'l  theavanaagiya  karththaraiyum,  thangga'l  raajaavaagiya  thaaveethaiyum  theadi,  kadaisinaadka'lil  karththaraiyum,  avarudaiya  thayavaiyum  naadi  agnchikkaiyaay  varuvaarga'l.  (oasiyaa  3:5)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!