Wednesday, July 27, 2016

Oasiyaa 2 | ஓசியா 2 | Hosea 2


உங்கள்  சகோதரரைப்பார்த்து  அம்மீ  என்றும்,  உங்கள்  சகோதரிகளைப்பார்த்து  ருகாமா  என்றும்  சொல்லுங்கள்.  (ஓசியா  2:1)

ungga'l  sagoathararaippaarththu  ammee  en’rum,  ungga'l  sagoathariga'laippaarththu  rugaamaa  en’rum  sollungga'l.  (oasiyaa  2:1)

உங்கள்  தாயோடே  வழக்காடுங்கள்;  அவள்  எனக்கு  மனைவியுமல்ல,  நான்  அவளுக்குப்  புருஷனுமல்ல;  அவள்  தன்  வேசித்தனங்களைத்  தன்  முகத்தினின்றும்,  தன்  விபசாரங்களைத்  தன்  ஸ்தனங்களின்  நடுவினின்றும்  விலக்கிப்போடக்கடவள்.  (ஓசியா  2:2)

ungga'l  thaayoadea  vazhakkaadungga'l;  ava'l  enakku  manaiviyumalla,  naan  ava'lukkup  purushanumalla;  ava'l  than  veasiththanangga'laith  than  mugaththinin’rum,  than  vibasaarangga'laith  than  sthanangga'lin  naduvinin’rum  vilakkippoadakkadava'l.  (oasiyaa  2:2)

இல்லாவிட்டால்  நான்  அவளை  நிர்வாணமாக  உரிந்து,  அவள்  பிறந்தநாளில்  இருந்தவண்ணமாக  அவளை  நிறுத்தி,  அவளை  அந்தரவெளியைப்போலாக்கி,  அவளை  வறண்டபூமியைப்போல்  விட்டு,  அவளைத்  தாகத்தால்  சாகப்பண்ணுவேன்;  (ஓசியா  2:3)

illaavittaal  naan  ava'lai  nirvaa'namaaga  urinthu,  ava'l  pi’ranthanaa'lil  irunthava'n'namaaga  ava'lai  ni’ruththi,  ava'lai  antharave'liyaippoalaakki,  ava'lai  va’ra'ndaboomiyaippoal  vittu,  ava'laith  thaagaththaal  saagappa'n'nuvean;  (oasiyaa  2:3)

அவளுடைய  பிள்ளைகள்  சோரப்பிள்ளைகளாகையால்  அவர்களுக்கு  இரங்காதிருப்பேன்.  (ஓசியா  2:4)

ava'ludaiya  pi'l'laiga'l  soarappi'l'laiga'laagaiyaal  avarga'lukku  iranggaathiruppean.  (oasiyaa  2:4)

அவர்களுடைய  தாய்  சோரம்போனாள்,  அவர்களைக்  கர்ப்பந்தரித்தவள்  இலச்சையான  காரியங்களைச்  செய்தாள்;  அப்பத்தையும்,  தண்ணீரையும்,  ஆட்டுமயிரையும்,  பஞ்சையும்,  எண்ணெயையும்,  பானங்களையும்  கொடுத்துவருகிற  என்  நேசர்களைப்  பின்பற்றிப்போவேன்  என்றாள்.  (ஓசியா  2:5)

avarga'ludaiya  thaay  soarampoanaa'l,  avarga'laik  karppanthariththava'l  ilachchaiyaana  kaariyangga'laich  seythaa'l;  appaththaiyum,  tha'n'neeraiyum,  aattumayiraiyum,  pagnchaiyum,  e'n'neyaiyum,  baanangga'laiyum  koduththuvarugi’ra  en  neasarga'laip  pinpat’rippoavean  en’raa'l.  (oasiyaa  2:5)

ஆகையால்,  இதோ,  நான்  உன்  வழியை  முள்ளுகளினால்  அடைப்பேன்;  அவள்  தன்  பாதைகளைக்  கண்டுபிடிக்கக்  கூடாதபடிக்கு  மதிலை  எழுப்புவேன்.  (ஓசியா  2:6)

aagaiyaal,  ithoa,  naan  un  vazhiyai  mu'l'luga'linaal  adaippean;  ava'l  than  paathaiga'laik  ka'ndupidikkak  koodaathapadikku  mathilai  ezhuppuvean.  (oasiyaa  2:6)

அவள்  தன்  நேசர்களைப்  பின்தொடர்ந்தும்  அவர்களைச்  சேருவதில்லை,  அவர்களைத்  தேடியும்  கண்டுபிடிப்பதில்லை;  அப்பொழுது  அவள்:  நான்  என்  முந்தின  புருஷனிடத்துக்குத்  திரும்பிப்போவேன்;  இப்பொழுது  இருக்கிறதைப்பார்க்கிலும்  அப்பொழுது  எனக்கு  நன்மையாயிருந்தது  என்பாள்.  (ஓசியா  2:7)

ava'l  than  neasarga'laip  pinthodarnthum  avarga'laich  searuvathillai,  avarga'laith  theadiyum  ka'ndupidippathillai;  appozhuthu  ava'l:  naan  en  munthina  purushanidaththukkuth  thirumbippoavean;  ippozhuthu  irukki’rathaippaarkkilum  appozhuthu  enakku  nanmaiyaayirunthathu  enbaa'l.  (oasiyaa  2:7)

தனக்கு  நான்  தானியத்தையும்  திராட்சரசத்தையும்  எண்ணெயையும்  கொடுத்தவரென்றும்,  தனக்கு  நான்  வெள்ளியையும்  பொன்னையும்  பெருகப்பண்ணினவரென்றும்  அவள்  அறியாமற்போனாள்;  அவைகளை  அவர்கள்  பாகாலுடையதாக்கினார்கள்.  (ஓசியா  2:8)

thanakku  naan  thaaniyaththaiyum  thiraadcharasaththaiyum  e'n'neyaiyum  koduththavaren’rum,  thanakku  naan  ve'l'liyaiyum  ponnaiyum  perugappa'n'ninavaren’rum  ava'l  a’riyaama’rpoanaa'l;  avaiga'lai  avarga'l  baagaaludaiyathaakkinaarga'l.  (oasiyaa  2:8)

ஆதலால்  நான்  என்  தானியத்தை  அதின்  காலத்திலும்,  என்  திராட்சரசத்தை  அதின்  காலத்திலும்  திரும்ப  எடுத்துக்கொண்டு,  அவளுடைய  நிர்வாணத்தை  மூடுகிறதற்கு  நான்  கொடுத்திருந்த  ஆட்டுமயிரையும்  சணலையும்  திரும்பப்  பிடுங்கிக்கொள்ளுவேன்.  (ஓசியா  2:9)

aathalaal  naan  en  thaaniyaththai  athin  kaalaththilum,  en  thiraadcharasaththai  athin  kaalaththilum  thirumba  eduththukko'ndu,  ava'ludaiya  nirvaa'naththai  moodugi’ratha’rku  naan  koduththiruntha  aattumayiraiyum  sa'nalaiyum  thirumbap  pidunggikko'l'luvean.  (oasiyaa  2:9)

இப்போதும்  அவளுடைய  நேசர்களின்  கண்களுக்கு  முன்பாக  அவளுடைய  அவலட்சணத்தை  வெளிப்படுத்துவேன்;  ஒருவரும்  அவளை  என்  கைக்கு  நீங்கலாக்கி  விடுவிப்பதில்லை.  (ஓசியா  2:10)

ippoathum  ava'ludaiya  neasarga'lin  ka'nga'lukku  munbaaga  ava'ludaiya  avaladcha'naththai  ve'lippaduththuvean;  oruvarum  ava'lai  en  kaikku  neenggalaakki  viduvippathillai.  (oasiyaa  2:10)

அவளுடைய  எல்லா  மகிழ்ச்சியையும்,  அவளுடைய  பண்டிகைகளையும்,  அவளுடைய  மாதப்பிறப்புகளையும்,  அவளுடைய  ஓய்வுநாட்களையும்,  சபைகூடுகிற  அவளுடைய  எல்லா  ஆசரிப்புகளையும்  ஒழியப்பண்ணுவேன்.  (ஓசியா  2:11)

ava'ludaiya  ellaa  magizhchchiyaiyum,  ava'ludaiya  pa'ndigaiga'laiyum,  ava'ludaiya  maathappi’rappuga'laiyum,  ava'ludaiya  oayvunaadka'laiyum,  sabaikoodugi’ra  ava'ludaiya  ellaa  aasarippuga'laiyum  ozhiyappa'n'nuvean.  (oasiyaa  2:11)

என்  நேசர்கள்  எனக்குக்  கொடுத்த  பணையம்  என்று  அவள்  சொன்ன  அவளுடைய  திராட்சச்செடிகளையும்,  அவளுடைய  அத்திமரங்களையும்  நான்  பாழாக்கி,  அவைகளைக்  காடாய்ப்போகப்பண்ணுவேன்;  காட்டுமிருகங்கள்  அவைகளைத்  தின்னும்.  (ஓசியா  2:12)

en  neasarga'l  enakkuk  koduththa  pa'naiyam  en’ru  ava'l  sonna  ava'ludaiya  thiraadchachsediga'laiyum,  ava'ludaiya  aththimarangga'laiyum  naan  paazhaakki,  avaiga'laik  kaadaayppoagappa'n'nuvean;  kaattumirugangga'l  avaiga'laith  thinnum.  (oasiyaa  2:12)

அவள்  பாகால்களுக்குத்  தூபங்காட்டி,  தன்  நெற்றிப்பட்டங்களினாலும்  தன்  ஆபரணங்களினாலும்  தன்னைச்  சிங்காரித்துக்கொண்டு,  தன்  நேசரைப்  பின்தொடர்ந்து,  என்னை  மறந்துபோன  நாட்களினிமித்தம்  அவளை  விசாரிப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (ஓசியா  2:13)

ava'l  baagaalga'lukkuth  thoobangkaatti,  than  net’rippattangga'linaalum  than  aabara'nangga'linaalum  thannaich  singgaariththukko'ndu,  than  neasaraip  pinthodarnthu,  ennai  ma’ranthupoana  naadka'linimiththam  ava'lai  visaarippean  en’ru  karththar  sollugi’raar.  (oasiyaa  2:13)

ஆயினும்,  இதோ,  நான்  அவளுக்கு  நயங்காட்டி,  அவளை  வனாந்தரத்தில்  அழைத்துக்கொண்டுபோய்,  அவளோடே  பட்சமாய்ப்  பேசி,  (ஓசியா  2:14)

aayinum,  ithoa,  naan  ava'lukku  nayangkaatti,  ava'lai  vanaantharaththil  azhaiththukko'ndupoay,  ava'loadea  padchamaayp  peasi,  (oasiyaa  2:14)

அவ்விடத்திலிருந்து  அவளுக்கு  அவளுடைய  திராட்சத்தோட்டங்களையும்,  நம்பிக்கையின்  வாசலாக  ஆகோரின்  பள்ளத்தாக்கையும்  கொடுப்பேன்;  அப்பொழுது  அவள்  அங்கே,  தன்  இளவயதின்  நாட்களிலும்  தான்  எகிப்துதேசத்திலிருந்து  வந்த  நாளிலும்  பாடினதுபோல்  பாடுவாள்.  (ஓசியா  2:15)

avvidaththilirunthu  ava'lukku  ava'ludaiya  thiraadchaththoattangga'laiyum,  nambikkaiyin  vaasalaaga  aakoarin  pa'l'laththaakkaiyum  koduppean;  appozhuthu  ava'l  anggea,  than  i'lavayathin  naadka'lilum  thaan  egipthutheasaththilirunthu  vantha  naa'lilum  paadinathupoal  paaduvaa'l.  (oasiyaa  2:15)

அக்காலத்தில்  நீ  என்னை  இனி  பாகாலி  என்று  சொல்லாமல்,  ஈஷி  என்று  சொல்லுவாய்  என்று  கர்த்தர்  உரைக்கிறார்.  (ஓசியா  2:16)

akkaalaththil  nee  ennai  ini  baagaali  en’ru  sollaamal,  eeshi  en’ru  solluvaay  en’ru  karththar  uraikki’raar.  (oasiyaa  2:16)

பாகால்களுடைய  நாமங்களை  அவள்  வாயிலிருந்து  அற்றுப்போகப்பண்ணுவேன்;  இனி  அவைகளின்  பேரைச்சொல்லி,  அவைகளை  நினைக்கிற  நினைப்பும்  இல்லாமற்போகும்.  (ஓசியா  2:17)

baagaalga'ludaiya  naamangga'lai  ava'l  vaayilirunthu  at’ruppoagappa'n'nuvean;  ini  avaiga'lin  pearaichsolli,  avaiga'lai  ninaikki’ra  ninaippum  illaama’rpoagum.  (oasiyaa  2:17)

அக்காலத்தில்  நான்  அவர்களுக்காகக்  காட்டு  மிருகங்களோடும்,  ஆகாயத்துப்  பறவைகளோடும்,  பூமியிலே  ஊரும்  பிராணிகளோடும்,  ஒரு  உடன்படிக்கைபண்ணி,  வில்லையும்  பட்டயத்தையும்  யுத்தத்தையும்  தேசத்திலே  இராதபடிக்கு  முறித்து,  அவர்களைச்  சுகமாய்ப்  படுத்துக்  கொண்டிருக்கப்பண்ணுவேன்.  (ஓசியா  2:18)

akkaalaththil  naan  avarga'lukkaagak  kaattu  mirugangga'loadum,  aagaayaththup  pa’ravaiga'loadum,  boomiyilea  oorum  piraa'niga'loadum,  oru  udanpadikkaipa'n'ni,  villaiyum  pattayaththaiyum  yuththaththaiyum  theasaththilea  iraathapadikku  mu’riththu,  avarga'laich  sugamaayp  paduththuk  ko'ndirukkappa'n'nuvean.  (oasiyaa  2:18)

நித்திய  விவாகத்துக்கென்று  உன்னை  எனக்கு  நியமித்துக்கொள்ளுவேன்;  நீதியும்  நியாயமும்  கிருபையும்  உருக்க  இரக்கமுமாய்  உன்னை  எனக்கு  நியமித்துக்கொள்ளுவேன்.  (ஓசியா  2:19)

niththiya  vivaagaththukken’ru  unnai  enakku  niyamiththukko'l'luvean;  neethiyum  niyaayamum  kirubaiyum  urukka  irakkamumaay  unnai  enakku  niyamiththukko'l'luvean.  (oasiyaa  2:19)

உண்மையாய்  உன்னை  எனக்கு  நியமித்துக்கொள்ளுவேன்;  நீ  கர்த்தரை  அறிந்துகொள்ளுவாய்.  (ஓசியா  2:20)

u'nmaiyaay  unnai  enakku  niyamiththukko'l'luvean;  nee  karththarai  a’rinthuko'l'luvaay.  (oasiyaa  2:20)

அக்காலத்தில்  நான்  மறுமொழி  கொடுப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நான்  வானங்களுக்கு  மறுமொழி  கொடுப்பேன்,  அவைகள்  பூமிக்கு  மறுமொழி  கொடுக்கும்.  (ஓசியா  2:21)

akkaalaththil  naan  ma’rumozhi  koduppean  en’ru  karththar  sollugi’raar;  naan  vaanangga'lukku  ma’rumozhi  koduppean,  avaiga'l  boomikku  ma’rumozhi  kodukkum.  (oasiyaa  2:21)

பூமி  தானியத்துக்கும்  திராட்சரசத்துக்கும்  எண்ணெய்க்கும்  மறுமொழி  கொடுக்கும்,  இவைகள்  யெஸ்ரயேலுக்கும்  மறுமொழி  கொடுக்கும்.  (ஓசியா  2:22)

boomi  thaaniyaththukkum  thiraadcharasaththukkum  e'n'neykkum  ma’rumozhi  kodukkum,  ivaiga'l  yesrayealukkum  ma’rumozhi  kodukkum.  (oasiyaa  2:22)

நான்  அவளை  எனக்கென்று  பூமியிலே  விதைத்து,  இரக்கம்  பெறாதிருந்தவளுக்கு  இரங்குவேன்;  என்  ஜனமல்லாதிருந்தவர்களை  நோக்கி  நீ  என்  ஜனமென்று  சொல்லுவேன்;  அவர்கள்  என்  தேவனே  என்பார்கள்  என்றார்.  (ஓசியா  2:23)

naan  ava'lai  enakken’ru  boomiyilea  vithaiththu,  irakkam  pe’raathirunthava'lukku  irangguvean;  en  janamallaathirunthavarga'lai  noakki  nee  en  janamen’ru  solluvean;  avarga'l  en  theavanea  enbaarga'l  en’raar.  (oasiyaa  2:23)


1 comment:

  1. Correction(s) made on (March 20, 2019)

    >>>(Hosea 2:13) net'ruppattangga'linaalum to net'rippattangga'linaalum

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!