Wednesday, July 27, 2016

Oasiyaa 13 | ஓசியா 13 | Hosea 13

எப்பிராயீம்  பேசினபோது  நடுக்கமுண்டாயிற்று;  அவன்  இஸ்ரவேலிலே  மேன்மைபெற்றான்;  அவன்  பாகால்  விஷயத்தில்  குற்றஞ்செய்து  மடிந்துபோனான்.  (ஓசியா  13:1)

eppiraayeem  peasinapoathu  nadukkamu'ndaayit’ru;  avan  isravealilea  meanmaipet’raan;  avan  baagaal  vishayaththil  kut’ragnseythu  madinthupoanaan.  (oasiyaa  13:1)

இப்போதும்  அவர்கள்  அதிகமதிகமாய்ப்  பாவஞ்செய்து,  தங்கள்  வெள்ளியினால்  வார்ப்பித்த  சுரூபங்களையும்,  தங்கள்  புத்திக்கேற்க  விக்கிரகங்களையும்  தங்களுக்கு  உண்டுபண்ணுகிறார்கள்;  இவைகளெல்லாம்  தட்டாருடைய  வேலை;  மனுஷரில்  பலியிடுகிறவர்கள்  கன்றுக்குட்டிகளை  முத்தமிடலாமென்று  இவைகளைக்குறித்துச்  சொல்லுகிறார்கள்.  (ஓசியா  13:2)

ippoathum  avarga'l  athigamathigamaayp  paavagnseythu,  thangga'l  ve'l'liyinaal  vaarppiththa  suroobangga'laiyum,  thangga'l  buththikkea’rka  vikkiragangga'laiyum  thangga'lukku  u'ndupa'n'nugi’raarga'l;  ivaiga'lellaam  thattaarudaiya  vealai;  manusharil  baliyidugi’ravarga'l  kan’rukkuttiga'lai  muththamidalaamen’ru  ivaiga'laikku’riththuch  sollugi’raarga'l.  (oasiyaa  13:2)

ஆகையால்  அவர்கள்  காலையில்  காணும்  மேகத்தைப்போலவும்,  விடியற்காலையில்  ஒழிந்துபோகிற  பனியைப்போலவும்,  பெருங்காற்று  களத்திலிருந்து  பறக்கடிக்கிற  பதரைப்போலவும்,  புகைக்கூண்டில்  ஏறிப்போகிற  புகையைப்போலவும்  இருப்பார்கள்.  (ஓசியா  13:3)

aagaiyaal  avarga'l  kaalaiyil  kaa'num  meagaththaippoalavum,  vidiya’rkaalaiyil  ozhinthupoagi’ra  paniyaippoalavum,  perungkaat’ru  ka'laththilirunthu  pa’rakkadikki’ra  patharaippoalavum,  pugaikkoo'ndil  ea’rippoagi’ra  pugaiyaippoalavum  iruppaarga'l.  (oasiyaa  13:3)

நான்  உன்னை  எகிப்து  தேசத்திலிருந்து  அழைத்துவந்ததுமுதல்  உன்  தேவனாகிய  கர்த்தராயிருக்கிறேன்;  ஆகையால்  நீ  என்னையன்றி  வேறே  தேவனை  அறியவேண்டாம்;  என்னையன்றி  இரட்சகர்  ஒருவரும்  இல்லை.  (ஓசியா  13:4)

naan  unnai  egipthu  theasaththilirunthu  azhaiththuvanthathumuthal  un  theavanaagiya  karththaraayirukki’rean;  aagaiyaal  nee  ennaiyan’ri  vea’rea  theavanai  a’riyavea'ndaam;  ennaiyan’ri  iradchagar  oruvarum  illai.  (oasiyaa  13:4)

நான்  உன்னை  மகா  வறட்சியான  தேசமாகிய  வனாந்தரத்திலே  அறிந்துகொண்டேன்.  (ஓசியா  13:5)

naan  unnai  mahaa  va’radchiyaana  theasamaagiya  vanaantharaththilea  a’rinthuko'ndean.  (oasiyaa  13:5)

தங்களுக்கு  இருந்த  மேய்ச்சலினால்  திருப்தியானார்கள்;  திருப்தியானபின்பு  அவர்கள்  இருதயம்  மேட்டிமையாயிற்று;  அதினால்  என்னை  மறந்தார்கள்.  (ஓசியா  13:6)

thangga'lukku  iruntha  meaychchalinaal  thirupthiyaanaarga'l;  thirupthiyaanapinbu  avarga'l  iruthayam  meattimaiyaayit’ru;  athinaal  ennai  ma’ranthaarga'l.  (oasiyaa  13:6)

ஆகையால்  நான்  அவர்களுக்குச்  சிங்கத்தைப்போல்  இருப்பேன்;  சிவிங்கியைப்போல்  வழியருகே  பதிவிருப்பேன்.  (ஓசியா  13:7)

aagaiyaal  naan  avarga'lukkuch  singgaththaippoal  iruppean;  sivinggiyaippoal  vazhiyarugea  pathiviruppean.  (oasiyaa  13:7)

குட்டிகளைப்  பறிகொடுத்த  கரடியைப்போல  நான்  அவர்களை  எதிர்த்து,  அவர்கள்  ஈரற்குலையைக்  கிழித்து,  அவர்களை  அங்கே  சிங்கம்  பட்சிக்கிறதுபோல்  பட்சித்துப்போடுவேன்;  காட்டுமிருகங்கள்  அவர்களைப்  பீறிப்போடும்.  (ஓசியா  13:8)

kuttiga'laip  pa’rikoduththa  karadiyaippoala  naan  avarga'lai  ethirththu,  avarga'l  eera’rkulaiyaik  kizhiththu,  avarga'lai  anggea  singgam  padchikki’rathupoal  padchiththuppoaduvean;  kaattumirugangga'l  avarga'laip  pee’rippoadum.  (oasiyaa  13:8)

இஸ்ரவேலே,  நீ  உனக்குக்  கேடுண்டாக்கிக்கொண்டாய்;  ஆனாலும்  என்னிடத்தில்  உனக்குச்  சகாயம்  உண்டு.  (ஓசியா  13:9)

isravealea,  nee  unakkuk  keadu'ndaakkikko'ndaay;  aanaalum  ennidaththil  unakkuch  sagaayam  u'ndu.  (oasiyaa  13:9)

எனக்கு  ராஜாவையும்  அதிபதிகளையும்  ஏற்படுத்தவேண்டும்  என்றாயே;  இப்போதும்  உன்னுடைய  எல்லாப்  பட்டணங்களிலும்  உன்னை  இரட்சிக்கும்  ராஜா  எங்கே?  உன்  நியாயாதிபதிகள்  எங்கே?  (ஓசியா  13:10)

enakku  raajaavaiyum  athibathiga'laiyum  ea’rpaduththavea'ndum  en’raayea;  ippoathum  unnudaiya  ellaap  patta'nangga'lilum  unnai  iradchikkum  raajaa  enggea?  un  niyaayaathibathiga'l  enggea?  (oasiyaa  13:10)

நான்  கோபத்திலே  உனக்கு  ராஜாவைக்  கொடுத்தேன்;  என்  உக்கிரத்திலே  அவனை  எடுத்துக்கொண்டேன்.  (ஓசியா  13:11)

naan  koabaththilea  unakku  raajaavaik  koduththean;  en  ukkiraththilea  avanai  eduththukko'ndean.  (oasiyaa  13:11)

எப்பிராயீமின்  அக்கிரமம்  கட்டிவைத்திருக்கிறது;  அவன்  பாவம்  பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.  (ஓசியா  13:12)

eppiraayeemin  akkiramam  kattivaiththirukki’rathu;  avan  paavam  paththirappaduththappattirukki’rathu.  (oasiyaa  13:12)

பிரசவஸ்திரீயின்  வேதனை  அவனுக்கு  வரும்;  அவன்  விவேகமில்லாத  பிள்ளை;  பேறுகாலமட்டும்  அவன்  நிற்கவில்லை.  (ஓசியா  13:13)

pirasavasthireeyin  veathanai  avanukku  varum;  avan  viveagamillaatha  pi'l'lai;  pea’rukaalamattum  avan  ni’rkavillai.  (oasiyaa  13:13)

அவர்களை  நான்  பாதாளத்தின்  வல்லமைக்கு  நீங்கலாக்கி  மீட்பேன்;  அவர்களை  மரணத்துக்கு  நீங்கலாக்கி  விடுவிப்பேன்;  மரணமே,  உன்  வாதைகள்  எங்கே?  பாதாளமே,  உன்  சங்காரம்  எங்கே?  மனமாறுதல்  என்  கண்களுக்கு  மறைவானதாயிருக்கும்.  (ஓசியா  13:14)

avarga'lai  naan  paathaa'laththin  vallamaikku  neenggalaakki  meedpean;  avarga'lai  mara'naththukku  neenggalaakki  viduvippean;  mara'namea,  un  vaathaiga'l  enggea?  paathaa'lamea,  un  sanggaaram  enggea?  manamaa’ruthal  en  ka'nga'lukku  ma’raivaanathaayirukkum.  (oasiyaa  13:14)

இவன்  சகோதரருக்குள்ளே  ஜனம்பெருத்தவனாயிருந்தாலும்,  கர்த்தருடைய  காற்றாகிய  கீழ்க்காற்று  வனாந்தரத்திலிருந்து  எழும்பிவரும்;  அதனால்  அவனுடைய  ஊற்றுகள்  வற்றிப்போகும்;  அவனுடைய  துரவு  சுவறிப்போகும்;  அது  இச்சிக்கப்படத்தக்க  சகல  பதார்த்தங்களுள்ள  உத்தம  பதார்த்தங்களையும்  வாரிக்கொண்டுபோகும்.  (ஓசியா  13:15)

ivan  sagoathararukku'l'lea  janamperuththavanaayirunthaalum,  karththarudaiya  kaat’raagiya  keezhkkaat’ru  vanaantharaththilirunthu  ezhumbivarum;  athanaal  avanudaiya  oot’ruga'l  vat’rippoagum;  avanudaiya  thuravu  suva’rippoagum;  athu  ichchikkappadaththakka  sagala  pathaarththangga'lu'l'la  uththama  pathaarththangga'laiyum  vaarikko'ndupoagum.  (oasiyaa  13:15)

சமாரியா  தன்  தேவனுக்கு  விரோதமாகக்  கலகம்பண்ணினபடியால்,  குற்றஞ்  சுமத்தப்பட்டதாயிருக்கும்;  அவர்கள்  பட்டயத்தால்  விழுவார்கள்;  அவர்களுடைய  குழந்தைகள்  மோதியடிக்கப்படும்;  அவர்களுடைய  கர்ப்பவதிகள்  கீறப்பட்டுப்போவார்கள்.  (ஓசியா  13:16)

samaariyaa  than  theavanukku  viroathamaagak  kalagampa'n'ninapadiyaal,  kut’ragn  sumaththappattathaayirukkum;  avarga'l  pattayaththaal  vizhuvaarga'l;  avarga'ludaiya  kuzhanthaiga'l  moathiyadikkappadum;  avarga'ludaiya  karppavathiga'l  kee’rappattuppoavaarga'l.  (oasiyaa  13:16)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!