Wednesday, July 27, 2016

Oasiyaa 12 | ஓசியா 12 | Hosea 12

எப்பிராயீம்  காற்றை  மேய்ந்து,  கொண்டற்காற்றைப்  பின்தொடருகிறான்;  அவன்  நாள்தோறும்  பொய்யையும்  கேட்டையும்  வர்த்திக்கப்பண்ணி,  அசீரியரோடே  உடன்படிக்கைபண்ணுகிறான்;  எகிப்துக்கு  எண்ணெய்  கொண்டுபோகப்படுகிறது.  (ஓசியா  12:1)

eppiraayeem  kaat’rai  meaynthu,  ko'nda’rkaat’raip  pinthodarugi’raan;  avan  naa'lthoa’rum  poyyaiyum  keattaiyum  varththikkappa'n'ni,  aseeriyaroadea  udanpadikkaipa'n'nugi’raan;  egipthukku  e'n'ney  ko'ndupoagappadugi’rathu.  (oasiyaa  12:1)

யூதாவோடும்  கர்த்தருக்கு  வழக்கு  இருக்கிறது;  அவர்  யாக்கோபை  அவன்  வழிகளுக்குத்தக்கதாக  விசாரிக்கப்போகிறார்;  அவன்  கிரியைகளுக்குத்தக்கதாக  அவனுக்கு  நீதியைச்  சரிக்கட்டுவார்.  (ஓசியா  12:2)

yoothaavoadum  karththarukku  vazhakku  irukki’rathu;  avar  yaakkoabai  avan  vazhiga'lukkuththakkathaaga  visaarikkappoagi’raar;  avan  kiriyaiga'lukkuththakkathaaga  avanukku  neethiyaich  sarikkattuvaar.  (oasiyaa  12:2)

அவன்  தாயின்  கர்ப்பத்திலே  தன்  சகோதரனுடைய  குதிகாலைப்  பிடித்தான்;  தன்  பெலத்தினால்  தேவனோடே  போராடினான்.  (ஓசியா  12:3)

avan  thaayin  karppaththilea  than  sagoatharanudaiya  kuthikaalaip  pidiththaan;  than  belaththinaal  theavanoadea  poaraadinaan.  (oasiyaa  12:3)

அவன்  தூதனானவரோடே  போராடி  மேற்கொண்டான்,  அழுது  அவரை  நோக்கிக்  கெஞ்சினான்;  பெத்தேலிலே  அவர்  அவனைக்  கண்டு  சந்தித்து,  அவ்விடத்திலும்  நம்மோடே  பேசினார்.  (ஓசியா  12:4)

avan  thoothanaanavaroadea  poaraadi  mea’rko'ndaan,  azhuthu  avarai  noakkik  kegnchinaan;  beththealilea  avar  avanaik  ka'ndu  santhiththu,  avvidaththilum  nammoadea  peasinaar.  (oasiyaa  12:4)

கர்த்தராகிய  அவர்  சேனைகளின்  தேவன்;  யேகோவா  என்பது  அவருடைய  நாமசங்கீர்த்தனம்.  (ஓசியா  12:5)

karththaraagiya  avar  seanaiga'lin  theavan;  yeagoavaa  enbathu  avarudaiya  naamasanggeerththanam.  (oasiyaa  12:5)

இப்போதும்  நீ  உன்  தேவனிடத்தில்  திரும்பு;  தயவையும்  நியாயத்தையும்  கைக்கொண்டு,  இடைவிடாமல்  உன்  தேவனை  நம்பிக்கொண்டிரு.  (ஓசியா  12:6)

ippoathum  nee  un  theavanidaththil  thirumbu;  thayavaiyum  niyaayaththaiyum  kaikko'ndu,  idaividaamal  un  theavanai  nambikko'ndiru.  (oasiyaa  12:6)

அவன்  வியாபாரி,  கள்ளத்தராசு  அவன்  கையில்  இருக்கிறது;  அநியாயஞ்செய்ய  விரும்புகிறான்.  (ஓசியா  12:7)

avan  viyaabaari,  ka'l'laththaraasu  avan  kaiyil  irukki’rathu;  aniyaayagnseyya  virumbugi’raan.  (oasiyaa  12:7)

எப்பிராயீம்:  நான்  ஐசுவரியவானானேன்;  நான்  பொருளைச்  சம்பாதித்தேன்;  நான்  பிரயாசப்பட்டுத்  தேடின  எல்லாவற்றிலும்  பாவமாகிய  அக்கிரமம்  என்னிடத்தில்  கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று  சொல்லுகிறான்.  (ஓசியா  12:8)

eppiraayeem:  naan  aisuvariyavaanaanean;  naan  poru'laich  sambaathiththean;  naan  pirayaasappattuth  theadina  ellaavat’rilum  paavamaagiya  akkiramam  ennidaththil  ka'ndupidikkappaduvathillaiyen’ru  sollugi’raan.  (oasiyaa  12:8)

உன்னை  எகிப்துதேசத்திலிருந்து  அழைத்துவந்தது  முதற்கொண்டு  உன்  தேவனாகிய  கர்த்தராயிருக்கிற  நான்,  பண்டிகை  நாட்களில்  செய்யப்படுகிறதுபோல்,  திரும்பவும்  உன்னைக்  கூடாரங்களில்  தாபரிக்கப்பண்ணுவேன்.  (ஓசியா  12:9)

unnai  egipthutheasaththilirunthu  azhaiththuvanthathu  mutha’rko'ndu  un  theavanaagiya  karththaraayirukki’ra  naan,  pa'ndigai  naadka'lil  seyyappadugi’rathupoal,  thirumbavum  unnaik  koodaarangga'lil  thaabarikkappa'n'nuvean.  (oasiyaa  12:9)

அப்படியே  தீர்க்கதரிசிகளோடே  சொன்னேன்;  நான்  அநேகம்  தரிசனங்களை  அருளினேன்;  தீர்க்கதரிசிகளைக்கொண்டு  உவமைகளால்  பேசினேன்.  (ஓசியா  12:10)

appadiyea  theerkkatharisiga'loadea  sonnean;  naan  aneagam  tharisanangga'lai  aru'linean;  theerkkatharisiga'laikko'ndu  uvamaiga'laal  peasinean.  (oasiyaa  12:10)

கீலேயாத்  அக்கிரம  ஸ்தலமோ?  ஆம்,  அவர்கள்  அபத்தரானார்கள்;  கில்காலிலே  காளைகளைப்  பலியிடுகிறார்கள்;  அவர்களுடைய  பீடங்கள்  வயல்வரப்புகளில்  இருக்கிற  கற்குவியல்களைப்போல்  இருக்கிறது.  (ஓசியா  12:11)

keeleayaath  akkirama  sthalamoa?  aam,  avarga'l  abaththaraanaarga'l;  kilgaalilea  kaa'laiga'laip  baliyidugi’raarga'l;  avarga'ludaiya  peedangga'l  vayalvarappuga'lil  irukki’ra  ka’rkuviyalga'laippoal  irukki’rathu.  (oasiyaa  12:11)

யாக்கோபு  சீரியாதேசத்துக்கு  ஓடிப்போய்,  இஸ்ரவேல்  ஒரு  பெண்ணுக்காக  ஊழியஞ்செய்து,  ஒரு  பெண்ணுக்காக  ஆடு  மேய்த்தான்.  (ஓசியா  12:12)

yaakkoabu  seeriyaatheasaththukku  oadippoay,  israveal  oru  pe'n'nukkaaga  oozhiyagnseythu,  oru  pe'n'nukkaaga  aadu  meayththaan.  (oasiyaa  12:12)

கர்த்தர்  ஒரு  தீர்க்கதரிசியைக்  கொண்டு  இஸ்ரவேலை  எகிப்திலிருந்து  புறப்படப்பண்ணினார்;  தீர்க்கதரிசியினால்  காக்கப்பட்டான்.  (ஓசியா  12:13)

karththar  oru  theerkkatharisiyaik  ko'ndu  isravealai  egipthilirunthu  pu’rappadappa'n'ninaar;  theerkkatharisiyinaal  kaakkappattaan.  (oasiyaa  12:13)

எப்பிராயீமோ  அவரை  மிகவும்  கோபப்படுத்தினான்;  ஆகையால்  அவனுடைய  ஆண்டவர்  அவனுடைய  இரத்தப்பழிகளை  அவன்மேல்  சுமத்தி,  அவன்  செய்த  நிந்தையை  அவன்மேல்  திருப்புவார்.  (ஓசியா  12:14)

eppiraayeemoa  avarai  migavum  koabappaduththinaan;  aagaiyaal  avanudaiya  aa'ndavar  avanudaiya  iraththappazhiga'lai  avanmeal  sumaththi,  avan  seytha  ninthaiyai  avanmeal  thiruppuvaar.  (oasiyaa  12:14)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!