Wednesday, July 27, 2016

Oasiyaa 10 | ஓசியா 10 | Hosea 10

இஸ்ரவேல்  பலனற்ற  திராட்சச்செடி,  அது  தனக்குத்தானே  கனிகொடுக்கிறது;  அவன்  தன்  கனியின்  திரளுக்குச்  சரியாய்ப்  பலிபீடங்களைத்  திரளாக்குகிறான்;  தங்கள்  தேசத்தின்  செழிப்புக்குச்  சரியாய்ச்  சிறப்பான  சிலைகளைச்  செய்கிறார்கள்.  (ஓசியா  10:1)

israveal  balanat’ra  thiraadchachsedi,  athu  thanakkuththaanea  kanikodukki’rathu;  avan  than  kaniyin  thira'lukkuch  sariyaayp  balipeedangga'laith  thira'laakkugi’raan;  thangga'l  theasaththin  sezhippukkuch  sariyaaych  si’rappaana  silaiga'laich  seygi’raarga'l.  (oasiyaa  10:1)

அவர்கள்  இருதயம்  பிரிக்கப்பட்டிருக்கிறது;  இப்போதும்  குற்றஞ்சுமத்தப்படுவார்கள்;  அவர்கள்  பலிபீடங்களை  இடித்து,  அவர்கள்  சிலைகளை  நாசமாக்குவார்.  (ஓசியா  10:2)

avarga'l  iruthayam  pirikkappattirukki’rathu;  ippoathum  kut’ragnsumaththappaduvaarga'l;  avarga'l  balipeedangga'lai  idiththu,  avarga'l  silaiga'lai  naasamaakkuvaar.  (oasiyaa  10:2)

நாம்  கர்த்தருக்குப்  பயப்படாமற்போனபடியினால்  நமக்கு  ராஜா  இல்லை;  ராஜா  இருந்தாலும்  நமக்காக  என்ன  செய்வான்  என்று  இனிச்  சொல்லுவார்கள்.  (ஓசியா  10:3)

naam  karththarukkup  bayappadaama’rpoanapadiyinaal  namakku  raajaa  illai;  raajaa  irunthaalum  namakkaaga  enna  seyvaan  en’ru  inich  solluvaarga'l.  (oasiyaa  10:3)

பொய்யாணையிடுகிற  வார்த்தைகளைச்  சொல்லி,  உடன்படிக்கை  பண்ணிக்கொண்டார்கள்;  ஆகையால்  வயல்வெளியின்  படைச்சால்களில்  விஷப்பூண்டுகளைப்போல  நியாயத்தீர்ப்பு  முளைக்கும்.  (ஓசியா  10:4)

poyyaa'naiyidugi’ra  vaarththaiga'laich  solli,  udanpadikkai  pa'n'nikko'ndaarga'l;  aagaiyaal  vayalve'liyin  padaichchaalga'lil  vishappoo'nduga'laippoala  niyaayaththeerppu  mu'laikkum.  (oasiyaa  10:4)

சமாரியாவின்  குடிகள்  பெத்தாவேனிலுள்ள  கன்றுக்குட்டியினிமித்தம்  பயம்  அடைவார்கள்;  அதற்காகக்  களிகூர்ந்த  அதின்  ஜனமும்,  அதின்  பூசாசாரிகளும்  அதின்  மகிமை  அதைவிட்டு  நீங்கிப்போயிற்றென்று  அதற்காகத்  துக்கங்கொண்டாடுவார்கள்.  (ஓசியா  10:5)

samaariyaavin  kudiga'l  beththaaveanilu'l'la  kan’rukkuttiyinimiththam  bayam  adaivaarga'l;  atha’rkaagak  ka'likoorntha  athin  janamum,  athin  poosaasaariga'lum  athin  magimai  athaivittu  neenggippoayit’ren’ru  atha’rkaagath  thukkangko'ndaaduvaarga'l.  (oasiyaa  10:5)

அதுவும்  அசீரியாவிலே  யாரேப்  ராஜாவுக்குக்  காணிக்கையாகக்  கொண்டுபோகப்படும்;  எப்பிராயீம்  இலச்சையடைவான்;  இஸ்ரவேல்  தன்  ஆலோசனையினாலே  வெட்கப்படுவான்.  (ஓசியா  10:6)

athuvum  aseeriyaavilea  yaareab  raajaavukkuk  kaa'nikkaiyaagak  ko'ndupoagappadum;  eppiraayeem  ilachchaiyadaivaan;  israveal  than  aaloasanaiyinaalea  vedkappaduvaan.  (oasiyaa  10:6)

சமாரியாவின்  ராஜா  தண்ணீரின்மேல்  இருக்கிற  நுரையைப்போல்  அழிந்துபோவான்.  (ஓசியா  10:7)

samaariyaavin  raajaa  tha'n'neerinmeal  irukki’ra  nuraiyaippoal  azhinthupoavaan.  (oasiyaa  10:7)

இஸ்ரவேலுடைய  பாவமாகிய  ஆபேனின்  மேடைகள்  அழிக்கப்படும்;  முட்செடிகளும்  முட்பூண்டுகளும்  அவர்கள்  பலிபீடங்களின்மேல்  முளைக்கும்;  பர்வதங்களைப்பார்த்து  எங்களை  மூடுங்கள்  என்றும்,  குன்றுகளைப்பார்த்து  எங்கள்மேல்  விழுங்கள்  என்றும்  சொல்லுவார்கள்.  (ஓசியா  10:8)

isravealudaiya  paavamaagiya  aabeanin  meadaiga'l  azhikkappadum;  mudchediga'lum  mudpoo'nduga'lum  avarga'l  balipeedangga'linmeal  mu'laikkum;  parvathangga'laippaarththu  engga'lai  moodungga'l  en’rum,  kun’ruga'laippaarththu  engga'lmeal  vizhungga'l  en’rum  solluvaarga'l.  (oasiyaa  10:8)

இஸ்ரவேலே,  நீ  கிபியாவின்  நாட்கள்முதல்  பாவஞ்செய்துவந்தாய்;  கிபியாவிலே  அக்கிரமக்காரர்மேல்  வந்த  யுத்தம்  தங்களைக்  கிட்டுவதில்லையென்று  அந்த  நிலையிலே  நிற்கிறார்கள்.  (ஓசியா  10:9)

isravealea,  nee  kibiyaavin  naadka'lmuthal  paavagnseythuvanthaay;  kibiyaavilea  akkiramakkaararmeal  vantha  yuththam  thangga'laik  kittuvathillaiyen’ru  antha  nilaiyilea  ni’rki’raarga'l.  (oasiyaa  10:9)

நான்  அவர்களைத்  தண்டிக்க  விரும்புகிறேன்;  அவர்கள்  செய்த  இரண்டுவித  பாவங்களினிமித்தம்  கட்டப்படும்போது,  ஜனங்கள்  அவர்களுக்கு  விரோதமாய்க்  கூடுவார்கள்.  (ஓசியா  10:10)

naan  avarga'laith  tha'ndikka  virumbugi’rean;  avarga'l  seytha  ira'nduvitha  paavangga'linimiththam  kattappadumpoathu,  janangga'l  avarga'lukku  viroathamaayk  kooduvaarga'l.  (oasiyaa  10:10)

எப்பிராயீம்  நன்றாய்ப்  பழக்கப்பட்டுப்  போரடிக்க  விரும்புகிற  கடாரியாயிருக்கிறான்;  ஆனாலும்  நான்  அவன்  அழகான  கழுத்தின்மேல்  நுகத்தடியை  வைப்பேன்;  எப்பிராயீமை  ஏர்  பூட்டி  ஓட்டுவேன்;  யூதா  உழுவான்,  யாக்கோபு  அவனுக்குப்  பரம்படிப்பான்.  (ஓசியா  10:11)

eppiraayeem  nan’raayp  pazhakkappattup  poaradikka  virumbugi’ra  kadaariyaayirukki’raan;  aanaalum  naan  avan  azhagaana  kazhuththinmeal  nugaththadiyai  vaippean;  eppiraayeemai  ear  pootti  oattuvean;  yoothaa  uzhuvaan,  yaakkoabu  avanukkup  parampadippaan.  (oasiyaa  10:11)

நீங்கள்  நீதிக்கென்று  விதைவிதையுங்கள்;  தயவுக்கொத்ததாய்  அறுப்பு  அறுங்கள்;  உங்கள்  தரிசுநிலத்தைப்  பண்படுத்துங்கள்;  கர்த்தர்  வந்து  உங்கள்மேல்  நீதியை  வருஷிக்கப்பண்ணுமட்டும்,  அவரைத்  தேடக்  காலமாயிருக்கிறது.  (ஓசியா  10:12)

neengga'l  neethikken’ru  vithaivithaiyungga'l;  thayavukkoththathaay  a’ruppu  a’rungga'l;  ungga'l  tharisunilaththaip  pa'npaduththungga'l;  karththar  vanthu  ungga'lmeal  neethiyai  varushikkappa'n'numattum,  avaraith  theadak  kaalamaayirukki’rathu.  (oasiyaa  10:12)

அநியாயத்தை  உழுதீர்கள்,  தீவினையை  அறுத்தீர்கள்;  பொய்யின்  கனிகளைப்  புசித்தீர்கள்;  உங்கள்  வழியையும்  உங்கள்  பராக்கிரமசாலிகளின்  திரளையும்  நம்பினீர்கள்.  (ஓசியா  10:13)

aniyaayaththai  uzhutheerga'l,  theevinaiyai  a’ruththeerga'l;  poyyin  kaniga'laip  pusiththeerga'l;  ungga'l  vazhiyaiyum  ungga'l  baraakkiramasaaliga'lin  thira'laiyum  nambineerga'l.  (oasiyaa  10:13)

ஆகையால்  உங்கள்  ஜனங்களுக்குள்  அமளி  எழும்பும்;  பிள்ளைகளின்மேல்  தாய்  மோதியடிக்கப்பட்ட  யுத்தநாளிலே  பெத்தார்பேலைச்  சல்மான்  அழித்ததுபோல,  உங்கள்  எல்லா  அரண்களும்  அழிக்கப்படும்.  (ஓசியா  10:14)

aagaiyaal  ungga'l  janangga'lukku'l  ama'li  ezhumbum;  pi'l'laiga'linmeal  thaay  moathiyadikkappatta  yuththanaa'lilea  beththaarbealaich  salmaan  azhiththathupoala,  ungga'l  ellaa  ara'nga'lum  azhikkappadum.  (oasiyaa  10:14)

உங்கள்  கொடிய  பொல்லாப்பினால்  பெத்தேல்  இப்படிப்பட்டதை  உங்களுக்குச்  செய்யும்;  அதிகாலமே  இஸ்ரவேலின்  ராஜா  முற்றிலும்  சங்கரிக்கப்படுவான்.  (ஓசியா  10:15)

ungga'l  kodiya  pollaappinaal  beththeal  ippadippattathai  ungga'lukkuch  seyyum;  athikaalamea  isravealin  raajaa  mut’rilum  sanggarikkappaduvaan.  (oasiyaa  10:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!