Wednesday, July 27, 2016

Oasiyaa 1 | ஓசியா 1 | Hosea 1

யூதா  தேசத்து  ராஜாக்களாகிய  உசியா,  யோதாம்,  ஆகாஸ்,  எசேக்கியா  என்பவர்களின்  நாட்களிலும்,  யோவாசின்  குமாரனாகிய  யெஸ்ரயேலின்  ராஜாவாகிய  யெரொபெயாம்  என்பவனின்  நாட்களிலும்,  பெயேரியின்  குமாரனாகிய  ஓசியாவுக்கு  உண்டான  கர்த்தருடைய  வசனம்.  (ஓசியா  1:1)

yoothaa  theasaththu  raajaakka'laagiya  usiyaa,  yoathaam,  aagaas,  eseakkiyaa  enbavarga'lin  naadka'lilum,  yoavaasin  kumaaranaagiya  yesrayealin  raajaavaagiya  yerobeyaam  enbavanin  naadka'lilum,  beyeariyin  kumaaranaagiya  oasiyaavukku  u'ndaana  karththarudaiya  vasanam.  (oasiyaa  1:1)

கர்த்தர்  ஓசியாவைக்கொண்டு  உரைக்கத்தொடங்கினபோது,  கர்த்தர்  ஓசியாவை  நோக்கி:  நீ  போய்,  ஒரு  சோரஸ்திரீயையும்  சோரப்பிள்ளைகளையும்  உன்னிடமாகச்  சேர்த்துக்கொள்;  தேசம்  கர்த்தரை  விட்டு  விலகிச்  சோரம்போயிற்று  என்றார்.  (ஓசியா  1:2)

karththar  oasiyaavaikko'ndu  uraikkaththodangginapoathu,  karththar  oasiyaavai  noakki:  nee  poay,  oru  soarasthireeyaiyum  soarappi'l'laiga'laiyum  unnidamaagach  searththukko'l;  theasam  karththarai  vittu  vilagich  soarampoayit’ru  en’raar.  (oasiyaa  1:2)

அவன்  போய்,  திப்லாயிமின்  குமாரத்தியாகிய  கோமேரைச்  சேர்த்துக்கொண்டான்;  அவள்  கர்ப்பந்தரித்து,  அவனுக்கு  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  (ஓசியா  1:3)

avan  poay,  thiblaayimin  kumaaraththiyaagiya  koamearaich  searththukko'ndaan;  ava'l  karppanthariththu,  avanukku  oru  kumaaranaip  pet’raa'l.  (oasiyaa  1:3)

அப்பொழுது  கர்த்தர்  அவனை  நோக்கி:  இவனுக்கு  யெஸ்ரயேல்  என்னும்  பேரிடு;  ஏனெனில்  இன்னும்  கொஞ்சக்காலத்திலே  நான்  ஏகூவின்  வம்சத்தாரிடத்திலே  யெஸ்ரயேலின்  இரத்தப்பழியை  விசாரித்து,  இஸ்ரவேல்  வம்சத்தாரின்  ராஜ்யபாரத்தை  ஒழியப்பண்ணுவேன்.  (ஓசியா  1:4)

appozhuthu  karththar  avanai  noakki:  ivanukku  yesrayeal  ennum  pearidu;  eanenil  innum  kognchakkaalaththilea  naan  eagoovin  vamsaththaaridaththilea  yesrayealin  iraththappazhiyai  visaariththu,  israveal  vamsaththaarin  raajyabaaraththai  ozhiyappa'n'nuvean.  (oasiyaa  1:4)

அந்நாளில்  யெஸ்ரயேலின்  பள்ளத்தாக்கிலே  இஸ்ரவேலின்  வில்லை  முறிப்பேன்  என்றார்.  (ஓசியா  1:5)

annaa'lil  yesrayealin  pa'l'laththaakkilea  isravealin  villai  mu’rippean  en’raar.  (oasiyaa  1:5)

அவள்  திரும்பக்  கர்ப்பந்தரித்து,  ஒரு  குமாரத்தியைப்  பெற்றாள்;  அப்பொழுது  அவர்  அவனை  நோக்கி:  இவளுக்கு  லோருகாமா  என்னும்  பேரிடு;  ஏனெனில்  நான்  இனி  இஸ்ரவேல்  வம்சத்தாருக்கு  இரக்கஞ்செய்வதில்லை,  நான்  அவர்களை  முழுவதும்  அகற்றிவிடுவேன்.  (ஓசியா  1:6)

ava'l  thirumbak  karppanthariththu,  oru  kumaaraththiyaip  pet’raa'l;  appozhuthu  avar  avanai  noakki:  iva'lukku  loarugaamaa  ennum  pearidu;  eanenil  naan  ini  israveal  vamsaththaarukku  irakkagnseyvathillai,  naan  avarga'lai  muzhuvathum  agat’rividuvean.  (oasiyaa  1:6)

யூதாவின்  வம்சத்தாருக்கோ  நான்  இரக்கஞ்செய்வேன்;  வில்லினாலும்,  பட்டயத்தினாலும்,  யுத்தத்தினாலும்,  குதிரைகளினாலும்,  குதிரைவீரரினாலும்  நான்  அவர்களை  இரட்சியாமல்,  அவர்களுடைய  தேவனாகிய  கர்த்தராலே  அவர்களை  இரட்சிப்பேன்  என்றார்.  (ஓசியா  1:7)

yoothaavin  vamsaththaarukkoa  naan  irakkagnseyvean;  villinaalum,  pattayaththinaalum,  yuththaththinaalum,  kuthiraiga'linaalum,  kuthiraiveerarinaalum  naan  avarga'lai  iradchiyaamal,  avarga'ludaiya  theavanaagiya  karththaraalea  avarga'lai  iradchippean  en’raar.  (oasiyaa  1:7)

அவள்  லோருகாமாவை  முலை  மறக்கப்பண்ணினபிற்பாடு,  கர்ப்பந்தரித்து  ஒரு  குமாரனைப்  பெற்றாள்.  (ஓசியா  1:8)

ava'l  loarugaamaavai  mulai  ma’rakkappa'n'ninapi’rpaadu,  karppanthariththu  oru  kumaaranaip  pet’raa'l.  (oasiyaa  1:8)

அப்பொழுது  அவர்:  இவனுக்கு  லோகம்மீ  என்னும்  பேரிடு;  ஏனெனில்  நீங்கள்  என்  ஜனமல்ல,  நான்  உங்கள்  தேவனாயிருப்பதில்லை.  (ஓசியா  1:9)

appozhuthu  avar:  ivanukku  loagammee  ennum  pearidu;  eanenil  neengga'l  en  janamalla,  naan  ungga'l  theavanaayiruppathillai.  (oasiyaa  1:9)

என்றாலும்,  இஸ்ரவேல்  புத்திரரின்  தொகை  அளக்கவும்  எண்ணவுங்கூடாத  கடற்கரை  மணலைப்போலிருக்கும்;  நீங்கள்  என்  ஜனமல்ல  என்று  அவர்களுக்குச்  சொல்வதற்குப்  பதிலாக  நீங்கள்  ஜீவனுள்ள  தேவனுடைய  பிள்ளைகள்  என்று  அவர்களுக்குச்  சொல்லப்படும்.  (ஓசியா  1:10)

en’raalum,  israveal  puththirarin  thogai  a'lakkavum  e'n'navungkoodaatha  kada’rkarai  ma'nalaippoalirukkum;  neengga'l  en  janamalla  en’ru  avarga'lukkuch  solvatha’rkup  bathilaaga  neengga'l  jeevanu'l'la  theavanudaiya  pi'l'laiga'l  en’ru  avarga'lukkuch  sollappadum.  (oasiyaa  1:10)

அப்பொழுது  யூதா  புத்திரரும்  இஸ்ரவேல்  புத்திரரும்  ஏகமாய்க்  கூட்டப்பட்டு,  தங்களுக்கு  ஒரே  அதிபதியை  ஏற்படுத்தி,  தேசத்திலிருந்து  புறப்பட்டு  வருவார்கள்;  யெஸ்ரயேலின்  நாள்  பெரிதாயிருக்கும்.  (ஓசியா  1:11)

appozhuthu  yoothaa  puththirarum  israveal  puththirarum  eagamaayk  koottappattu,  thangga'lukku  orea  athibathiyai  ea’rpaduththi,  theasaththilirunthu  pu’rappattu  varuvaarga'l;  yesrayealin  naa'l  perithaayirukkum.  (oasiyaa  1:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!