Monday, July 04, 2016

Neethimozhiga'l 27 | நீதிமொழிகள் 27 | Proverbs 27

நாளையத்தினத்தைக்குறித்துப்  பெருமைபாராட்டாதே;  ஒருநாள்  பிறப்பிப்பதை  அறியாயே.  (நீதிமொழிகள்  27:1)

naa'laiyaththinaththaikku’riththup  perumaipaaraattaathea;  orunaa'l  pi’rappippathai  a’riyaayea.  (neethimozhiga’l  27:1)

உன்  வாய்  அல்ல,  புறத்தியானே  உன்னைப்  புகழட்டும்;  உன்  உதடு  அல்ல,  அந்நியனே  உன்னைப்  புகழட்டும்.  (நீதிமொழிகள்  27:2)

un  vaay  alla,  pu’raththiyaanea  unnaip  pugazhattum;  un  uthadu  alla,  anniyanea  unnaip  pugazhattum.  (neethimozhiga’l  27:2)

கல்  கனமும்,  மணல்  பாரமுமாயிருக்கும்;  மூடனுடைய  கோபமோ  இவ்விரண்டிலும்  பாரமாம்.  (நீதிமொழிகள்  27:3)

kal  kanamum,  ma'nal  baaramumaayirukkum;  moodanudaiya  koabamoa  ivvira'ndilum  baaramaam.  (neethimozhiga’l  27:3)

உக்கிரம்  கொடுமையுள்ளது,  கோபம்  நிஷ்டூரமுள்ளது;  பொறாமையோவென்றால்,  அதற்கு  முன்னிற்கத்தக்கவன்  யார்?  (நீதிமொழிகள்  27:4)

ukkiram  kodumaiyu'l'lathu,  koabam  nishdooramu'l'lathu;  po’raamaiyoaven’raal,  atha’rku  munni’rkaththakkavan  yaar?  (neethimozhiga’l  27:4)

மறைவான  சிநேகத்தைப்பார்க்கிலும்  வெளிப்படையான  கடிந்துகொள்ளுதல்  நல்லது.  (நீதிமொழிகள்  27:5)

ma’raivaana  sineagaththaippaarkkilum  ve'lippadaiyaana  kadinthuko'l'luthal  nallathu.  (neethimozhiga’l  27:5)

சிநேகிதன்  அடிக்கும்  அடிகள்  உண்மையானவைகள்;  சத்துரு  இடும்  முத்தங்களோ  வஞ்சனையுள்ளவைகள்.  (நீதிமொழிகள்  27:6)

sineagithan  adikkum  adiga'l  u'nmaiyaanavaiga'l;  saththuru  idum  muththangga'loa  vagnchanaiyu'l'lavaiga'l.  (neethimozhiga’l  27:6)

திருப்தியடைந்தவன்  தேன்கூட்டையும்  மிதிப்பான்;  பசியுள்ளவனுக்கோ  கசப்பான  பதார்த்தங்களும்  தித்திப்பாயிருக்கும்.  (நீதிமொழிகள்  27:7)

thirupthiyadainthavan  theankoottaiyum  mithippaan;  pasiyu'l'lavanukkoa  kasappaana  pathaarththangga'lum  thiththippaayirukkum.  (neethimozhiga’l  27:7)

தன்  கூட்டைவிட்டு  அலைகிற  குருவி  எப்படியிருக்கிறதோ,  அப்படியே  தன்  ஸ்தானத்தைவிட்டு  அலைகிற  மனுஷனும்  இருக்கிறான்.  (நீதிமொழிகள்  27:8)

than  koottaivittu  alaigi’ra  kuruvi  eppadiyirukki’rathoa,  appadiyea  than  sthaanaththaivittu  alaigi’ra  manushanum  irukki’raan.  (neethimozhiga’l  27:8)

பரிமளதைலமும்  சுகந்ததூபமும்  இருதயத்தைக்  களிப்பாக்குவதுபோல,  ஒருவனுடைய  சிநேகிதன்  உட்கருத்தான  ஆலோசனையினால்  பாராட்டும்  இன்பமானது  களிப்பாக்கும்.  (நீதிமொழிகள்  27:9)

parima'lathailamum  suganthathoobamum  iruthayaththaik  ka'lippaakkuvathupoala,  oruvanudaiya  sineagithan  udkaruththaana  aaloasanaiyinaal  paaraattum  inbamaanathu  ka'lippaakkum.  (neethimozhiga’l  27:9)

உன்  சிநேகிதனையும்,  உன்  தகப்பனுடைய  சிநேகிதனையும்  விட்டுவிடாதே;  உன்  ஆபத்துக்காலத்தில்  உன்  சகோதரனுடைய  வீட்டிற்குப்  போகாதே;  தூரத்திலுள்ள  சகோதரனிலும்  சமீபத்திலுள்ள  அயலானே  வாசி.  (நீதிமொழிகள்  27:10)

un  sineagithanaiyum,  un  thagappanudaiya  sineagithanaiyum  vittuvidaathea;  un  aabaththukkaalaththil  un  sagoatharanudaiya  veetti’rkup  poagaathea;  thooraththilu'l'la  sagoatharanilum  sameebaththilu'l'la  ayalaanea  vaasi.  (neethimozhiga’l  27:10)

என்  மகனே,  என்னை  நிந்திக்கிறவனுக்கு  நான்  உத்தரவுகொடுக்கத்தக்கதாக,  நீ  ஞானவானாகி,  என்  இருதயத்தைச்  சந்தோஷப்படுத்து.  (நீதிமொழிகள்  27:11)

en  maganea,  ennai  ninthikki’ravanukku  naan  uththaravukodukkaththakkathaaga,  nee  gnaanavaanaagi,  en  iruthayaththaich  santhoashappaduththu.  (neethimozhiga’l  27:11)

விவேகி  ஆபத்தைக்  கண்டு  மறைந்துகொள்ளுகிறான்;  பேதைகளோ  நெடுகப்போய்த்  தண்டிக்கப்படுகிறார்கள்.  (நீதிமொழிகள்  27:12)

viveagi  aabaththaik  ka'ndu  ma’rainthuko'l'lugi’raan;  peathaiga'loa  nedugappoayth  tha'ndikkappadugi’raarga'l.  (neethimozhiga’l  27:12)

அந்நியனுக்காகப்  பிணைப்படுகிறவனுடைய  வஸ்திரத்தை  எடுத்துக்கொள்,  அந்நிய  ஸ்திரீக்காக  ஈடுவாங்கிக்கொள்.  (நீதிமொழிகள்  27:13)

anniyanukkaagap  pi'naippadugi’ravanudaiya  vasthiraththai  eduththukko'l,  anniya  sthireekkaaga  eeduvaanggikko'l.  (neethimozhiga’l  27:13)

ஒருவன்  அதிகாலையிலே  எழுந்து  உரத்தசத்தத்தோடே  தன்  சிநேகிதனுக்குச்  சொல்லும்  ஆசீர்வாதம்  சாபமாக  எண்ணப்படும்.  (நீதிமொழிகள்  27:14)

oruvan  athikaalaiyilea  ezhunthu  uraththasaththaththoadea  than  sineagithanukkuch  sollum  aaseervaatham  saabamaaga  e'n'nappadum.  (neethimozhiga’l  27:14)

அடைமழைநாளில்  ஓயாத  ஒழுக்கும்  சண்டைக்காரியான  ஸ்திரீயும்  சரி.  (நீதிமொழிகள்  27:15)

adaimazhainaa'lil  oayaatha  ozhukkum  sa'ndaikkaariyaana  sthireeyum  sari.  (neethimozhiga’l  27:15)

அவளை  அடக்கப்பார்க்கிறவன்  காற்றை  அடக்கித்  தன்  வலதுகையினால்  எண்ணெயைப்  பிடிக்கப்பார்க்கிறான்.  (நீதிமொழிகள்  27:16)

ava'lai  adakkappaarkki’ravan  kaat’rai  adakkith  than  valathukaiyinaal  e'n'neyaip  pidikkappaarkki’raan.  (neethimozhiga’l  27:16)

இரும்பை  இரும்பு  கருக்கிடும்;  அப்படியே  மனுஷனும்  தன்  சிநேகிதனுடைய  முகத்தைக்  கருக்கிடுகிறான்.  (நீதிமொழிகள்  27:17)

irumbai  irumbu  karukkidum;  appadiyea  manushanum  than  sineagithanudaiya  mugaththaik  karukkidugi’raan.  (neethimozhiga’l  27:17)

அத்திமரத்தைக்  காக்கிறவன்  அதின்  கனியைப்  புசிப்பான்;  தன்  எஜமானைக்  காக்கிறவன்  கனமடைவான்.  (நீதிமொழிகள்  27:18)

aththimaraththaik  kaakki’ravan  athin  kaniyaip  pusippaan;  than  ejamaanaik  kaakki’ravan  kanamadaivaan.  (neethimozhiga’l  27:18)

தண்ணீரில்  முகத்துக்கு  முகம்  ஒத்திருக்குமாப்போல,  மனுஷரில்  இருதயத்திற்கு  இருதயம்  ஒத்திருக்கும்.  (நீதிமொழிகள்  27:19)

tha'n'neeril  mugaththukku  mugam  oththirukkumaappoala,  manusharil  iruthayaththi’rku  iruthayam  oththirukkum.  (neethimozhiga’l  27:19)

பாதாளமும்  அழிவும்  திருப்தியாகிறதில்லை;  அதுபோல  மனுஷனுடைய  கண்களும்  திருப்தியாகிறதில்லை.  (நீதிமொழிகள்  27:20)

paathaa'lamum  azhivum  thirupthiyaagi’rathillai;  athupoala  manushanudaiya  ka'nga'lum  thirupthiyaagi’rathillai.  (neethimozhiga’l  27:20)

வெள்ளிக்குக்  குகையும்,  பொன்னுக்குப்  புடமும்  சோதனை;  மனுஷனுக்கு  அவனுக்கு  உண்டாகும்  புகழ்ச்சியே  சோதனை.  (நீதிமொழிகள்  27:21)

ve'l'likkuk  kugaiyum,  ponnukkup  pudamum  soathanai;  manushanukku  avanukku  u'ndaagum  pugazhchchiyea  soathanai.  (neethimozhiga’l  27:21)

மூடனை  உரலில்  போட்டு  உலக்கையினால்  நொய்யோடே  நொய்யாகக்  குத்தினாலும்,  அவனுடைய  மூடத்தனம்  அவனை  விட்டு  நீங்காது.  (நீதிமொழிகள்  27:22)

moodanai  uralil  poattu  ulakkaiyinaal  noyyoadea  noyyaagak  kuththinaalum,  avanudaiya  moodaththanam  avanai  vittu  neenggaathu.  (neethimozhiga’l  27:22)

உன்  ஆடுகளின்  நிலைமையை  நன்றாய்  அறிந்துகொள்;  உன்  மந்தைகளின்மேல்  கவனமாயிரு.  (நீதிமொழிகள்  27:23)

un  aaduga'lin  nilaimaiyai  nan’raay  a’rinthuko'l;  un  manthaiga'linmeal  kavanamaayiru.  (neethimozhiga’l  27:23)

செல்வம்  என்றைக்கும்  நிலையாது;  கிரீடம்  தலைமுறை  தலைமுறைதோறும்  நிலைநிற்குமோ?  (நீதிமொழிகள்  27:24)

selvam  en’raikkum  nilaiyaathu;  kireedam  thalaimu’rai  thalaimu’raithoa’rum  nilaini’rkumoa?  (neethimozhiga’l  27:24)

புல்  முளைக்கும்,  பச்சிலைகள்  தோன்றும்,  மலைப்பூண்டுகள்  சேர்க்கப்படும்.  (நீதிமொழிகள்  27:25)

pul  mu'laikkum,  pachchilaiga'l  thoan’rum,  malaippoo'nduga'l  searkkappadum.  (neethimozhiga’l  27:25)

ஆட்டுக்குட்டிகள்  உனக்கு  வஸ்திரத்தையும்,  கடாக்கள்  வயல்  வாங்கத்தக்க  கிரயத்தையும்  கொடுக்கும்.  (நீதிமொழிகள்  27:26)

aattukkuttiga'l  unakku  vasthiraththaiyum,  kadaakka'l  vayal  vaanggaththakka  kirayaththaiyum  kodukkum.  (neethimozhiga’l  27:26)

வெள்ளாட்டுப்பால்  உன்  ஆகாரத்துக்கும்,  உன்  வீட்டாரின்  ஆகாரத்துக்கும்,  உன்  வேலைக்காரிகளின்  பிழைப்புக்கும்  போதுமானபடியிருக்கும்.  (நீதிமொழிகள்  27:27)

ve'l'laattuppaal  un  aagaaraththukkum,  un  veettaarin  aagaaraththukkum,  un  vealaikkaariga'lin  pizhaippukkum  poathumaanapadiyirukkum.  (neethimozhiga’l  27:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!