Monday, July 04, 2016

Neethimozhiga'l 23 | நீதிமொழிகள் 23 | Proverbs 23

நீ  ஒரு  அதிபதியோடே  போஜனம்பண்ண  உட்கார்ந்தால்,  உனக்கு  முன்பாக  இருக்கிறதை  நன்றாய்க்  கவனித்துப்பார்.  (நீதிமொழிகள்  23:1)

nee  oru  athibathiyoadea  poajanampa'n'na  udkaarnthaal,  unakku  munbaaga  irukki’rathai  nan’raayk  kavaniththuppaar.  (neethimozhiga’l  23:1)

நீ  போஜனப்பிரியனாயிருந்தால்,  உன்  தொண்டையிலே  கத்தியை  வை.  (நீதிமொழிகள்  23:2)

nee  poajanappiriyanaayirunthaal,  un  tho'ndaiyilea  kaththiyai  vai.  (neethimozhiga’l  23:2)

அவனுடைய  ருசியுள்ள  பதார்த்தங்களை  இச்சியாதே;  அவைகள்  கள்ளப்போஜனமாமே.  (நீதிமொழிகள்  23:3)

avanudaiya  rusiyu'l'la  pathaarththangga'lai  ichchiyaathea;  avaiga'l  ka'l'lappoajanamaamea.  (neethimozhiga’l  23:3)

ஐசுவரியவானாகவேண்டுமென்று  பிரயாசப்படாதே;  சுயபுத்தியைச்  சாராதே.  (நீதிமொழிகள்  23:4)

aisuvariyavaanaagavea'ndumen’ru  pirayaasappadaathea;  suyabuththiyaich  saaraathea.  (neethimozhiga’l  23:4)

இல்லாமற்போகும்  பொருள்மேல்  உன்  கண்களைப்  பறக்கவிடுவானேன்?  அது  கழுகைப்போலச்  சிறகுகளைத்  தனக்கு  உண்டுபண்ணிக்கொண்டு,  ஆகாயமார்க்கமாய்ப்  பறந்துபோம்.  (நீதிமொழிகள்  23:5)

illaama’rpoagum  poru'lmeal  un  ka'nga'laip  pa’rakkaviduvaanean?  athu  kazhugaippoalach  si’raguga'laith  thanakku  u'ndupa'n'nikko'ndu,  aagaayamaarkkamaayp  pa’ranthupoam.  (neethimozhiga’l  23:5)

வன்கண்ணனுடைய  ஆகாரத்தைப்  புசியாதே;  அவனுடைய  ருசியுள்ள  பதார்த்தங்களை  இச்சியாதே.  (நீதிமொழிகள்  23:6)

vanka'n'nanudaiya  aagaaraththaip  pusiyaathea;  avanudaiya  rusiyu'l'la  pathaarththangga'lai  ichchiyaathea.  (neethimozhiga’l  23:6)

அவன்  இருதயத்தின்  நினைவு  எப்படியோ,  அப்படியே  அவன்  இருக்கிறான்;  புசியும்,  பானம்பண்ணும்  என்று  அவன்  உன்னோடே  சொன்னாலும்,  அவன்  இருதயம்  உன்னோடே  இராது.  (நீதிமொழிகள்  23:7)

avan  iruthayaththin  ninaivu  eppadiyoa,  appadiyea  avan  irukki’raan;  pusiyum,  baanampa'n'num  en’ru  avan  unnoadea  sonnaalum,  avan  iruthayam  unnoadea  iraathu.  (neethimozhiga’l  23:7)

நீ  புசித்த  துணிக்கையை  வாந்திபண்ணி,  உன்  இனிய  சொற்களை  இழந்துபோவாய்.  (நீதிமொழிகள்  23:8)

nee  pusiththa  thu'nikkaiyai  vaanthipa'n'ni,  un  iniya  so’rka'lai  izhanthupoavaay.  (neethimozhiga’l  23:8)

மூடனுடைய  செவிகள்  கேட்கப்பேசாதே;  அவன்  உன்  வார்த்தைகளின்  ஞானத்தை  அசட்டைபண்ணுவான்.  (நீதிமொழிகள்  23:9)

moodanudaiya  seviga'l  keadkappeasaathea;  avan  un  vaarththaiga'lin  gnaanaththai  asattaipa'n'nuvaan.  (neethimozhiga’l  23:9)

பூர்வ  எல்லைக்குறியை  மாற்றாதே;  திக்கற்ற  பிள்ளைகளுடைய  நிலங்களை  அபகரித்துக்கொள்ளாதே.  (நீதிமொழிகள்  23:10)

poorva  ellaikku’riyai  maat’raathea;  thikkat’ra  pi'l'laiga'ludaiya  nilangga'lai  abagariththukko'l'laathea.  (neethimozhiga’l  23:10)

அவர்களுடைய  மீட்பர்  வல்லவர்;  அவர்  உன்னுடனே  அவர்களுக்காக  வழக்காடுவார்.  (நீதிமொழிகள்  23:11)

avarga'ludaiya  meedpar  vallavar;  avar  unnudanea  avarga'lukkaaga  vazhakkaaduvaar.  (neethimozhiga’l  23:11)

உன்  இருதயத்தைப்  புத்திமதிக்கும்,  உன்  செவிகளை  அறிவின்  வார்த்தைகளுக்கும்  சாய்ப்பாயாக.  (நீதிமொழிகள்  23:12)

un  iruthayaththaip  buththimathikkum,  un  seviga'lai  a’rivin  vaarththaiga'lukkum  saayppaayaaga.  (neethimozhiga’l  23:12)

பிள்ளையை  தண்டியாமல்  விடாதே;  அவனைப்  பிரம்பினால்  அடித்தால்  அவன்  சாகான்.  (நீதிமொழிகள்  23:13)

pi'l'laiyai  tha'ndiyaamal  vidaathea;  avanaip  pirambinaal  adiththaal  avan  saagaan.  (neethimozhiga’l  23:13)

நீ  பிரம்பினால்  அவனை  அடிக்கிறதினால்  பாதாளத்துக்கு  அவன்  ஆத்துமாவைத்  தப்புவிப்பாயே.  (நீதிமொழிகள்  23:14)

nee  pirambinaal  avanai  adikki’rathinaal  paathaa'laththukku  avan  aaththumaavaith  thappuvippaayea.  (neethimozhiga’l  23:14)

என்  மகனே,  உன்  இருதயம்  ஞானமுள்ளதாயிருந்தால்,  என்னிலே  என்  இருதயம்  மகிழும்.  (நீதிமொழிகள்  23:15)

en  maganea,  un  iruthayam  gnaanamu'l'lathaayirunthaal,  ennilea  en  iruthayam  magizhum.  (neethimozhiga’l  23:15)

உன்  உதடுகள்  செம்மையானவைகளைப்  பேசினால்,  என்  உள்ளிந்திரியங்கள்  மகிழும்.  (நீதிமொழிகள்  23:16)

un  uthaduga'l  semmaiyaanavaiga'laip  peasinaal,  en  u'l'linthiriyangga'l  magizhum.  (neethimozhiga’l  23:16)

உன்  மனதைப்  பாவிகள்மேல்  பொறாமைகொள்ள  விடாதே;  நீ  நாடோறும்  கர்த்தரைப்  பற்றும்  பயத்தோடிரு.  (நீதிமொழிகள்  23:17)

un  manathaip  paaviga'lmeal  po’raamaiko'l'la  vidaathea;  nee  naadoa’rum  karththaraip  pat’rum  bayaththoadiru.  (neethimozhiga’l  23:17)

நிச்சயமாகவே  முடிவு  உண்டு;  உன்  நம்பிக்கை  வீண்போகாது.  (நீதிமொழிகள்  23:18)

nichchayamaagavea  mudivu  u'ndu;  un  nambikkai  vee'npoagaathu.  (neethimozhiga’l  23:18)

என்  மகனே,  நீ  செவிகொடுத்து  ஞானமடைந்து,  உன்  இருதயத்தை  நல்வழியிலே  நடத்து.  (நீதிமொழிகள்  23:19)

en  maganea,  nee  sevikoduththu  gnaanamadainthu,  un  iruthayaththai  nalvazhiyilea  nadaththu.  (neethimozhiga’l  23:19)

மதுபானப்பிரியரையும்  மாம்சப்பெருந்தீனிக்காரரையும்  சேராதே.  (நீதிமொழிகள்  23:20)

mathubaanappiriyaraiyum  maamsapperuntheenikkaararaiyum  searaathea.  (neethimozhiga’l  23:20)

குடியனும்  போஜனப்பிரியனும்  தரித்திரராவார்கள்;  தூக்கம்  கந்தைகளை  உடுத்துவிக்கும்.  (நீதிமொழிகள்  23:21)

kudiyanum  poajanappiriyanum  thariththiraraavaarga'l;  thookkam  kanthaiga'lai  uduththuvikkum.  (neethimozhiga’l  23:21)

உன்னைப்  பெற்ற  தகப்பனுக்குச்  செவிகொடு;  உன்  தாய்  வயதுசென்றவளாகும்போது  அவளை  அசட்டைபண்ணாதே.  (நீதிமொழிகள்  23:22)

unnaip  pet’ra  thagappanukkuch  sevikodu;  un  thaay  vayathusen’rava'laagumpoathu  ava'lai  asattaipa'n'naathea.  (neethimozhiga’l  23:22)

சத்தியத்தை  வாங்கு,  அதை  விற்காதே;  அப்படியே  ஞானத்தையும்  உபதேசத்தையும்  புத்தியையும்  வாங்கு.  (நீதிமொழிகள்  23:23)

saththiyaththai  vaanggu,  athai  vi’rkaathea;  appadiyea  gnaanaththaiyum  ubatheasaththaiyum  buththiyaiyum  vaanggu.  (neethimozhiga’l  23:23)

நீதிமானுடைய  தகப்பன்  மிகவும்  களிகூருவான்;  ஞானமுள்ள  பிள்ளையைப்  பெற்றவன்  அவனால்  மகிழுவான்.  (நீதிமொழிகள்  23:24)

neethimaanudaiya  thagappan  migavum  ka'likooruvaan;  gnaanamu'l'la  pi'l'laiyaip  pet’ravan  avanaal  magizhuvaan.  (neethimozhiga’l  23:24)

உன்  தகப்பனும்  உன்  தாயும்  சந்தோஷப்படுவார்கள்;  உன்னைப்  பெற்றவள்  மகிழுவாள்.  (நீதிமொழிகள்  23:25)

un  thagappanum  un  thaayum  santhoashappaduvaarga'l;  unnaip  pet’rava'l  magizhuvaa'l.  (neethimozhiga’l  23:25)

என்  மகனே,  உன்  இருதயத்தை  எனக்குத்  தா;  உன்  கண்கள்  என்  வழிகளை  நோக்குவதாக.  (நீதிமொழிகள்  23:26)

en  maganea,  un  iruthayaththai  enakkuth  thaa;  un  ka'nga'l  en  vazhiga'lai  noakkuvathaaga.  (neethimozhiga’l  23:26)

வேசி  ஆழமான  படுகுழி;  பரஸ்திரீ  இடுக்கமான  கிணறு.  (நீதிமொழிகள்  23:27)

veasi  aazhamaana  padukuzhi;  parasthiree  idukkamaana  ki'na’ru.  (neethimozhiga’l  23:27)

அவள்  கொள்ளைக்காரனைப்போல்  பதிவிருந்து,  மனுஷருக்குள்ளே  பாதகரைப்  பெருகப்பண்ணுகிறாள்.  (நீதிமொழிகள்  23:28)

ava'l  ko'l'laikkaaranaippoal  pathivirunthu,  manusharukku'l'lea  paathagaraip  perugappa'n'nugi’raa'l.  (neethimozhiga’l  23:28)

ஐயோ!  யாருக்கு  வேதனை?  யாருக்குத்  துக்கம்?  யாருக்குச்  சண்டைகள்?  யாருக்குப்  புலம்பல்?  யாருக்குக்  காரணமில்லாத  காயங்கள்?  யாருக்கு  இரத்தங்கலங்கின  கண்கள்?  (நீதிமொழிகள்  23:29)

aiyoa!  yaarukku  veathanai?  yaarukkuth  thukkam?  yaarukkuch  sa'ndaiga'l?  yaarukkup  pulambal?  yaarukkuk  kaara'namillaatha  kaayangga'l?  yaarukku  iraththangkalanggina  ka'nga'l?  (neethimozhiga’l  23:29)

மதுபானம்  இருக்கும்  இடத்திலே  தங்கித்  தரிப்பவர்களுக்கும்,  கலப்புள்ள  சாராயத்தை  நாடுகிறவர்களுக்குந்தானே.  (நீதிமொழிகள்  23:30)

mathubaanam  irukkum  idaththilea  thanggith  tharippavarga'lukkum,  kalappu'l'la  saaraayaththai  naadugi’ravarga'lukkunthaanea.  (neethimozhiga’l  23:30)

மதுபானம்  இரத்தவருணமாயிருந்து,  பாத்திரத்தில்  பளபளப்பாய்த்  தோன்றும்போது,  நீ  அதைப்  பாராதே;  அது  மெதுவாய்  இறங்கும்.  (நீதிமொழிகள்  23:31)

mathubaanam  iraththavaru'namaayirunthu,  paaththiraththil  pa'lapa'lappaayth  thoan’rumpoathu,  nee  athaip  paaraathea;  athu  methuvaay  i’ranggum.  (neethimozhiga’l  23:31)

முடிவிலே  அது  பாம்பைப்போல்  கடிக்கும்,  விரியனைப்போல்  தீண்டும்.  (நீதிமொழிகள்  23:32)

mudivilea  athu  paambaippoal  kadikkum,  viriyanaippoal  thee'ndum.  (neethimozhiga’l  23:32)

உன்  கண்கள்  பரஸ்திரீகளை  நோக்கும்;  உன்  உள்ளம்  தாறுமாறானவைகளைப்  பேசும்.  (நீதிமொழிகள்  23:33)

un  ka'nga'l  parasthireega'lai  noakkum;  un  u'l'lam  thaa’rumaa’raanavaiga'laip  peasum.  (neethimozhiga’l  23:33)

நீ  நடுக்கடலிலே  சயனித்திருக்கிறவனைப்போலும்,  பாய்மரத்தட்டிலே  படுத்திருக்கிறவனைப்போலும்  இருப்பாய்.  (நீதிமொழிகள்  23:34)

nee  nadukkadalilea  sayaniththirukki’ravanaippoalum,  paaymaraththattilea  paduththirukki’ravanaippoalum  iruppaay.  (neethimozhiga’l  23:34)

என்னை  அடித்தார்கள்,  எனக்கு  நோகவில்லை;  என்னை  அறைந்தார்கள்,  எனக்குச்  சுரணையில்லை;  நான்  அதைப்  பின்னும்  தொடர்ந்து  தேட  எப்பொழுது  விழிப்பேன்  என்பாய்.  (நீதிமொழிகள்  23:35)

ennai  adiththaarga'l,  enakku  noagavillai;  ennai  a’rainthaarga'l,  enakkuch  sura'naiyillai;  naan  athaip  pinnum  thodarnthu  theada  eppozhuthu  vizhippean  enbaay.  (neethimozhiga’l  23:35)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!