Monday, July 04, 2016

Neethimozhiga'l 22 | நீதிமொழிகள் 22 | Proverbs 22

திரளான  ஐசுவரியத்தைப்பார்க்கிலும்  நற்கீர்த்தியே  தெரிந்துகொள்ளப்படத்தக்கது;  பொன்  வெள்ளியைப்பார்க்கிலும்  தயையே  நலம்.  (நீதிமொழிகள்  22:1)

thira'laana  aisuvariyaththaippaarkkilum  na’rkeerththiyea  therinthuko'l'lappadaththakkathu;  pon  ve'l'liyaippaarkkilum  thayaiyea  nalam.  (neethimozhiga’l  22:1)

ஐசுவரியவானும்  தரித்திரனும்  ஒருவரையொருவர்  சந்திக்கிறார்கள்;  அவர்கள்  அனைவரையும்  உண்டாக்கினவர்  கர்த்தர்.  (நீதிமொழிகள்  22:2)

aisuvariyavaanum  thariththiranum  oruvaraiyoruvar  santhikki’raarga'l;  avarga'l  anaivaraiyum  u'ndaakkinavar  karththar.  (neethimozhiga’l  22:2)

விவேகி  ஆபத்தைக்  கண்டு  மறைந்துகொள்ளுகிறான்;  பேதைகள்  நெடுகப்போய்த்  தண்டிக்கப்படுகிறார்கள்.  (நீதிமொழிகள்  22:3)

viveagi  aabaththaik  ka'ndu  ma’rainthuko'l'lugi’raan;  peathaiga'l  nedugappoayth  tha'ndikkappadugi’raarga'l.  (neethimozhiga’l  22:3)

தாழ்மைக்கும்  கர்த்தருக்குப்  பயப்படுதலுக்கும்  வரும்  பலன்  ஐசுவரியமும்  மகிமையும்  ஜீவனுமாம்.  (நீதிமொழிகள்  22:4)

thaazhmaikkum  karththarukkup  bayappaduthalukkum  varum  palan  aisuvariyamum  magimaiyum  jeevanumaam.  (neethimozhiga’l  22:4)

மாறுபாடுள்ளவனுடைய  வழியிலே  முள்ளுகளும்  கண்ணிகளுமுண்டு;  தன்  ஆத்துமாவைக்  காக்கிறவன்  அவைகளுக்குத்  தூரமாய்  விலகிப்போவான்.  (நீதிமொழிகள்  22:5)

maa’rupaadu'l'lavanudaiya  vazhiyilea  mu'l'luga'lum  ka'n'niga'lumu'ndu;  than  aaththumaavaik  kaakki’ravan  avaiga'lukkuth  thooramaay  vilagippoavaan.  (neethimozhiga’l  22:5)

பிள்ளையானவன்  நடக்கவேண்டிய  வழியிலே  அவனை  நடத்து;  அவன்  முதிர்வயதிலும்  அதை  விடாதிருப்பான்.  (நீதிமொழிகள்  22:6)

pi'l'laiyaanavan  nadakkavea'ndiya  vazhiyilea  avanai  nadaththu;  avan  muthirvayathilum  athai  vidaathiruppaan.  (neethimozhiga’l  22:6)

ஐசுவரியவான்  தரித்திரனை  ஆளுகிறான்;  கடன்வாங்கினவன்  கடன்கொடுத்தவனுக்கு  அடிமை.  (நீதிமொழிகள்  22:7)

aisuvariyavaan  thariththiranai  aa'lugi’raan;  kadanvaangginavan  kadankoduththavanukku  adimai.  (neethimozhiga’l  22:7)

அநியாயத்தை  விதைக்கிறவன்  வருத்தத்தை  அறுப்பான்;  அவன்  உக்கிரத்தின்  மிலாறு  ஒழியும்.  (நீதிமொழிகள்  22:8)

aniyaayaththai  vithaikki’ravan  varuththaththai  a’ruppaan;  avan  ukkiraththin  milaa’ru  ozhiyum.  (neethimozhiga’l  22:8)

கருணைக்கண்ணன்  ஆசீர்வதிக்கப்படுவான்;  அவன்  தன்  ஆகாரத்தில்  தரித்திரனுக்குக்  கொடுக்கிறான்.  (நீதிமொழிகள்  22:9)

karu'naikka'n'nan  aaseervathikkappaduvaan;  avan  than  aagaaraththil  thariththiranukkuk  kodukki’raan.  (neethimozhiga’l  22:9)

பரியாசக்காரனைத்  துரத்திவிடு;  அப்பொழுது  வாது  நீங்கும்,  விரோதமும்  அவமானமும்  ஒழியும்.  (நீதிமொழிகள்  22:10)

pariyaasakkaaranaith  thuraththividu;  appozhuthu  vaathu  neenggum,  viroathamum  avamaanamum  ozhiyum.  (neethimozhiga’l  22:10)

சுத்த  இருதயத்தை  விரும்புகிறவனுடைய  உதடுகள்  இனிமையானவைகள்;  ராஜா  அவனுக்குச்  சிநேகிதனாவான்.  (நீதிமொழிகள்  22:11)

suththa  iruthayaththai  virumbugi’ravanudaiya  uthaduga'l  inimaiyaanavaiga'l;  raajaa  avanukkuch  sineagithanaavaan.  (neethimozhiga’l  22:11)

கர்த்தருடைய  கண்கள்  ஞானத்தைக்  காக்கும்;  துரோகிகளின்  வார்த்தைகளையோ  அவர்  தாறுமாறாக்குகிறார்.  (நீதிமொழிகள்  22:12)

karththarudaiya  ka'nga'l  gnaanaththaik  kaakkum;  thuroagiga'lin  vaarththaiga'laiyoa  avar  thaa’rumaa’raakkugi’raar.  (neethimozhiga’l  22:12)

வெளியிலே  சிங்கம்,  வீதியிலே  கொலையுண்பேன்  என்று  சோம்பேறி  சொல்லுவான்.  (நீதிமொழிகள்  22:13)

ve'liyilea  singgam,  veethiyilea  kolaiyu'nbean  en’ru  soambea’ri  solluvaan.  (neethimozhiga’l  22:13)

பரஸ்திரீகளின்  வாய்  ஆழமான  படுகுழி;  கர்த்தருடைய  கோபத்திற்கு  ஏதுவானவன்  அதிலே  விழுவான்.  (நீதிமொழிகள்  22:14)

parasthireega'lin  vaay  aazhamaana  padukuzhi;  karththarudaiya  koabaththi’rku  eathuvaanavan  athilea  vizhuvaan.  (neethimozhiga’l  22:14)

பிள்ளையின்  நெஞ்சில்  மதியீனம்  ஒட்டியிருக்கும்;  அதைத்  தண்டனையின்  பிரம்பு  அவனைவிட்டு  அகற்றும்.  (நீதிமொழிகள்  22:15)

pi'l'laiyin  negnchil  mathiyeenam  ottiyirukkum;  athaith  tha'ndanaiyin  pirambu  avanaivittu  agat’rum.  (neethimozhiga’l  22:15)

தனக்கு  அதிகம்  உண்டாகத்  தரித்திரனை  ஒடுக்குகிறவன்  தனக்குக்  குறைச்சலுண்டாகவே  ஐசுவரியவானுக்குக்  கொடுப்பான்.  (நீதிமொழிகள்  22:16)

thanakku  athigam  u'ndaagath  thariththiranai  odukkugi’ravan  thanakkuk  ku’raichchalu'ndaagavea  aisuvariyavaanukkuk  koduppaan.  (neethimozhiga’l  22:16)

உன்  செவியைச்  சாய்த்து,  ஞானிகளுடைய  வார்த்தைகளைக்  கேட்டு,  என்  போதகத்தை  உன்  இருதயத்தில்  வை.  (நீதிமொழிகள்  22:17)

un  seviyaich  saayththu,  gnaaniga'ludaiya  vaarththaiga'laik  keattu,  en  poathagaththai  un  iruthayaththil  vai.  (neethimozhiga’l  22:17)

அவைகளை  உன்  உள்ளத்தில்  காத்து,  அவைகளை  உன்  உதடுகளில்  நிலைத்திருக்கப்பண்ணும்போது,  அது  இன்பமாயிருக்கும்.  (நீதிமொழிகள்  22:18)

avaiga'lai  un  u'l'laththil  kaaththu,  avaiga'lai  un  uthaduga'lil  nilaiththirukkappa'n'numpoathu,  athu  inbamaayirukkum.  (neethimozhiga’l  22:18)

உன்  நம்பிக்கை  கர்த்தர்மேல்  இருக்கும்படி,  இன்றையதினம்  அவைகளை  உனக்குத்  தெரியப்படுத்துகிறேன்.  (நீதிமொழிகள்  22:19)

un  nambikkai  karththarmeal  irukkumpadi,  in’raiyathinam  avaiga'lai  unakkuth  theriyappaduththugi’rean.  (neethimozhiga’l  22:19)

சத்திய  வார்த்தைகளின்  யதார்த்தத்தை  நான்  உனக்குத்  தெரிவிக்கும்படிக்கும்,  நீ  உன்னை  அனுப்பினவர்களுக்குச்  சத்திய  வார்த்தைகளை  மறுமொழியாகச்  சொல்லும்படிக்கும்,  (நீதிமொழிகள்  22:20)

saththiya  vaarththaiga'lin  yathaarththaththai  naan  unakkuth  therivikkumpadikkum,  nee  unnai  anuppinavarga'lukkuch  saththiya  vaarththaiga'lai  ma’rumozhiyaagach  sollumpadikkum,  (neethimozhiga’l  22:20)

ஆலோசனையையும்  ஞானத்தையும்  பற்றி  நான்  உனக்கு  முக்கியமானவைகளை  எழுதவில்லையா?  (நீதிமொழிகள்  22:21)

aaloasanaiyaiyum  gnaanaththaiyum  pat’ri  naan  unakku  mukkiyamaanavaiga'lai  ezhuthavillaiyaa?  (neethimozhiga’l  22:21)

ஏழையாயிருக்கிறான்  என்று  ஏழையைக்  கொள்ளையிடாதே;  சிறுமையானவனை  நியாயஸ்தலத்தில்  உபத்திரவப்படுத்தாதே.  (நீதிமொழிகள்  22:22)

eazhaiyaayirukki’raan  en’ru  eazhaiyaik  ko'l'laiyidaathea;  si’rumaiyaanavanai  niyaayasthalaththil  ubaththiravappaduththaathea.  (neethimozhiga’l  22:22)

கர்த்தர்  அவர்களுக்காக  வழக்காடி,  அவர்களைக்  கொள்ளையிடுகிறவர்களுடைய  பிராணனைக்  கொள்ளையிடுவார்.  (நீதிமொழிகள்  22:23)

karththar  avarga'lukkaaga  vazhakkaadi,  avarga'laik  ko'l'laiyidugi’ravarga'ludaiya  piraa'nanaik  ko'l'laiyiduvaar.  (neethimozhiga’l  22:23)

கோபக்காரனுக்குத்  தோழனாகாதே;  உக்கிரமுள்ள  மனுஷனோடே  நடவாதே.  (நீதிமொழிகள்  22:24)

koabakkaaranukkuth  thoazhanaagaathea;  ukkiramu'l'la  manushanoadea  nadavaathea.  (neethimozhiga’l  22:24)

அப்படிச்  செய்தால்,  நீ  அவனுடைய  வழிகளைக்  கற்றுக்கொண்டு,  உன்  ஆத்துமாவுக்குக்  கண்ணியை  வருவிப்பாய்.  (நீதிமொழிகள்  22:25)

appadich  seythaal,  nee  avanudaiya  vazhiga'laik  kat’rukko'ndu,  un  aaththumaavukkuk  ka'n'niyai  varuvippaay.  (neethimozhiga’l  22:25)

கையடித்து  உடன்பட்டு,  கடனுக்காகப்  பிணைப்படுகிறவர்களில்  ஒருவனாகாதே.  (நீதிமொழிகள்  22:26)

kaiyadiththu  udanpattu,  kadanukkaagap  pi'naippadugi’ravarga'lil  oruvanaagaathea.  (neethimozhiga’l  22:26)

செலுத்த  உனக்கு  ஒன்றுமில்லாதிருந்தால்,  நீ  படுத்திருக்கும்  படுக்கையையும்  அவன்  எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.  (நீதிமொழிகள்  22:27)

seluththa  unakku  on’rumillaathirunthaal,  nee  paduththirukkum  padukkaiyaiyum  avan  eduththukko'l'lavea'ndiyathaagumea.  (neethimozhiga’l  22:27)

உன்  பிதாக்கள்  நாட்டின  பூர்வ  எல்லைக்குறியை  மாற்றாதே.  (நீதிமொழிகள்  22:28)

un  pithaakka'l  naattina  poorva  ellaikku’riyai  maat’raathea.  (neethimozhiga’l  22:28)

தன்  வேலையில்  ஜாக்கிரதையாயிருக்கிறவனை  நீ  கண்டால்,  அவன்  நீசருக்கு  முன்பாக  நில்லாமல்,  ராஜாக்களுக்கு  முன்பாக  நிற்பான்.  (நீதிமொழிகள்  22:29)

than  vealaiyil  jaakkirathaiyaayirukki’ravanai  nee  ka'ndaal,  avan  neesarukku  munbaaga  nillaamal,  raajaakka'lukku  munbaaga  ni’rpaan.  (neethimozhiga’l  22:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!