Monday, July 04, 2016

Neethimozhiga'l 21 | நீதிமொழிகள் 21 | Proverbs 21

ராஜாவின்  இருதயம்  கர்த்தரின்  கையில்  நீர்க்கால்களைப்போலிருக்கிறது;  அதைத்  தமது  சித்தத்தின்படி  அவர்  திருப்புகிறார்.  (நீதிமொழிகள்  21:1)

raajaavin  iruthayam  karththarin  kaiyil  neerkkaalga'laippoalirukki’rathu;  athaith  thamathu  siththaththinpadi  avar  thiruppugi’raar.  (neethimozhiga’l  21:1)

மனுஷனுடைய  வழியெல்லாம்  அவன்  பார்வைக்குச்  செம்மையாகத்  தோன்றும்;  கர்த்தரோ  இருதயங்களை  நிறுத்துப்பார்க்கிறார்.  (நீதிமொழிகள்  21:2)

manushanudaiya  vazhiyellaam  avan  paarvaikkuch  semmaiyaagath  thoan’rum;  karththaroa  iruthayangga'lai  ni’ruththuppaarkki’raar.  (neethimozhiga’l  21:2)

பலியிடுவதைப்பார்க்கிலும்,  நீதியும்  நியாயமும்  செய்வதே  கர்த்தருக்குப்  பிரியம்.  (நீதிமொழிகள்  21:3)

baliyiduvathaippaarkkilum,  neethiyum  niyaayamum  seyvathea  karththarukkup  piriyam.  (neethimozhiga’l  21:3)

மேட்டிமையான  பார்வையும்,  அகந்தையான  மனமுமுள்ள  துன்மார்க்கர்  போடும்  வெளிச்சம்  பாவமே.  (நீதிமொழிகள்  21:4)

meattimaiyaana  paarvaiyum,  aganthaiyaana  manamumu'l'la  thunmaarkkar  poadum  ve'lichcham  paavamea.  (neethimozhiga’l  21:4)

ஜாக்கிரதையுள்ளவனுடைய  நினைவுகள்  செல்வத்துக்கும்,  பதறுகிறவனுடைய  நினைவுகள்  தரித்திரத்துக்கும்  ஏதுவாகும்.  (நீதிமொழிகள்  21:5)

jaakkirathaiyu'l'lavanudaiya  ninaivuga'l  selvaththukkum,  patha’rugi’ravanudaiya  ninaivuga'l  thariththiraththukkum  eathuvaagum.  (neethimozhiga’l  21:5)

பொய்நாவினால்  பொருளைச்  சம்பாதிப்பது  சாவைத்  தேடுகிறவர்கள்  விடுகிற  சுவாசம்போலிருக்கும்.  (நீதிமொழிகள்  21:6)

poynaavinaal  poru'laich  sambaathippathu  saavaith  theadugi’ravarga'l  vidugi’ra  suvaasampoalirukkum.  (neethimozhiga’l  21:6)

துன்மார்க்கர்  நியாயஞ்செய்ய  மனதில்லாதிருக்கிறபடியால்,  அவர்கள்  பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.  (நீதிமொழிகள்  21:7)

thunmaarkkar  niyaayagnseyya  manathillaathirukki’rapadiyaal,  avarga'l  paazhkkadikkappattuppoavaarga'l.  (neethimozhiga’l  21:7)

குற்றமுள்ளவன்  தன்  வழிகளில்  மாறுபாடுள்ளவன்;  சுத்தமுள்ளவனோ  தன்  கிரியையில்  செம்மையானவன்.  (நீதிமொழிகள்  21:8)

kut’ramu'l'lavan  than  vazhiga'lil  maa’rupaadu'l'lavan;  suththamu'l'lavanoa  than  kiriyaiyil  semmaiyaanavan.  (neethimozhiga’l  21:8)

சண்டைக்காரியோடே  ஒரு  பெரிய  வீட்டில்  குடியிருப்பதைப்பார்க்கிலும்,  வீட்டின்மேல்  ஒரு  மூலையில்  தங்கியிருப்பதே  நலம்.  (நீதிமொழிகள்  21:9)

sa'ndaikkaariyoadea  oru  periya  veettil  kudiyiruppathaippaarkkilum,  veettinmeal  oru  moolaiyil  thanggiyiruppathea  nalam.  (neethimozhiga’l  21:9)

துன்மார்க்கனுடைய  மனம்  பொல்லாப்பைச்  செய்ய  விரும்பும்;  அவன்  கண்களில்  அவன்  அயலானுக்கு  இரக்கங்கிடையாது.  (நீதிமொழிகள்  21:10)

thunmaarkkanudaiya  manam  pollaappaich  seyya  virumbum;  avan  ka'nga'lil  avan  ayalaanukku  irakkangkidaiyaathu.  (neethimozhiga’l  21:10)

பரியாசக்காரனைத்  தண்டிக்கும்போது  பேதை  ஞானமடைவான்;  ஞானவான்  போதிக்கப்படும்போது  அறிவடைவான்.  (நீதிமொழிகள்  21:11)

pariyaasakkaaranaith  tha'ndikkumpoathu  peathai  gnaanamadaivaan;  gnaanavaan  poathikkappadumpoathu  a’rivadaivaan.  (neethimozhiga’l  21:11)

நீதிபரர்  துன்மார்க்கருடைய  வீட்டைக்  கவனித்துப்பார்க்கிறார்;  துன்மார்க்கரைத்  தீங்கில்  கவிழ்த்துப்போடுவார்.  (நீதிமொழிகள்  21:12)

neethiparar  thunmaarkkarudaiya  veettaik  kavaniththuppaarkki’raar;  thunmaarkkaraith  theenggil  kavizhththuppoaduvaar.  (neethimozhiga’l  21:12)

ஏழையின்  கூக்குரலுக்குத்  தன்  செவியை  அடைத்துக்கொள்ளுகிறவன்,  தானும்  சத்தமிட்டுக்  கூப்பிடும்போது  கேட்கப்படமாட்டான்.  (நீதிமொழிகள்  21:13)

eazhaiyin  kookkuralukkuth  than  seviyai  adaiththukko'l'lugi’ravan,  thaanum  saththamittuk  kooppidumpoathu  keadkappadamaattaan.  (neethimozhiga’l  21:13)

அந்தரங்கமாய்க்  கொடுக்கப்பட்ட  வெகுமதி  கோபத்தைத்  தணிக்கும்;  மடியிலுள்ள  பரிதானம்  குரோதத்தை  ஆற்றும்.  (நீதிமொழிகள்  21:14)

antharanggamaayk  kodukkappatta  vegumathi  koabaththaith  tha'nikkum;  madiyilu'l'la  parithaanam  kuroathaththai  aat’rum.  (neethimozhiga’l  21:14)

நியாயந்தீர்ப்பது  நீதிமானுக்குச்  சந்தோஷமும்,  அக்கிரமக்காரருக்கோ  அழிவுமாம்.  (நீதிமொழிகள்  21:15)

niyaayantheerppathu  neethimaanukkuch  santhoashamum,  akkiramakkaararukkoa  azhivumaam.  (neethimozhiga’l  21:15)

விவேகத்தின்  வழியை  விட்டுத்  தப்பி  நடக்கிற  மனுஷன்  செத்தவர்களின்  கூட்டத்தில்  தாபரிப்பான்.  (நீதிமொழிகள்  21:16)

viveagaththin  vazhiyai  vittuth  thappi  nadakki’ra  manushan  seththavarga'lin  koottaththil  thaabarippaan.  (neethimozhiga’l  21:16)

சிற்றின்பப்பிரியன்  தரித்திரனாவான்;  மதுபானத்தையும்  எண்ணெயையும்  விரும்புகிறவன்  ஐசுவரியவானாவதில்லை.  (நீதிமொழிகள்  21:17)

sit’rinbappiriyan  thariththiranaavaan;  mathubaanaththaiyum  e'n'neyaiyum  virumbugi’ravan  aisuvariyavaanaavathillai.  (neethimozhiga’l  21:17)

நீதிமானுக்குப்  பதிலாகத்  துன்மார்க்கனும்,  செம்மையானவனுக்குப்  பதிலாக  துரோகியும்  மீட்கும்பொருளாவார்கள்.  (நீதிமொழிகள்  21:18)

neethimaanukkup  bathilaagath  thunmaarkkanum,  semmaiyaanavanukkup  bathilaaga  thuroagiyum  meedkumporu'laavaarga'l.  (neethimozhiga’l  21:18)

சண்டைக்காரியும்  கோபக்காரியுமான  ஸ்திரீயுடன்  குடியிருப்பதைப்பார்க்கிலும்  வனாந்தரத்தில்  குடியிருப்பது  நலம்.  (நீதிமொழிகள்  21:19)

sa'ndaikkaariyum  koabakkaariyumaana  sthireeyudan  kudiyiruppathaippaarkkilum  vanaantharaththil  kudiyiruppathu  nalam.  (neethimozhiga’l  21:19)

வேண்டிய  திரவியமும்  எண்ணெயும்  ஞானவானுடைய  வாசஸ்தலத்தில்  உண்டு;  மூடனோ  அதைச்  செலவழித்துப்போடுகிறான்.  (நீதிமொழிகள்  21:20)

vea'ndiya  thiraviyamum  e'n'neyum  gnaanavaanudaiya  vaasasthalaththil  u'ndu;  moodanoa  athaich  selavazhiththuppoadugi’raan.  (neethimozhiga’l  21:20)

நீதியையும்  தயையையும்  பின்பற்றுகிறவன்  ஜீவனையும்  நீதியையும்  மகிமையையும்  கண்டடைவான்.  (நீதிமொழிகள்  21:21)

neethiyaiyum  thayaiyaiyum  pinpat’rugi’ravan  jeevanaiyum  neethiyaiyum  magimaiyaiyum  ka'ndadaivaan.  (neethimozhiga’l  21:21)

பலவான்களுடைய  பட்டணத்தின்  மதிலை  ஞானமுள்ளவன்  ஏறிப்பிடித்து,  அவர்கள்  நம்பின  அரணை  இடித்துப்போடுவான்.  (நீதிமொழிகள்  21:22)

balavaanga'ludaiya  patta'naththin  mathilai  gnaanamu'l'lavan  ea’rippidiththu,  avarga'l  nambina  ara'nai  idiththuppoaduvaan.  (neethimozhiga’l  21:22)

தன்  வாயையும்  தன்  நாவையும்  காக்கிறவன்  தன்  ஆத்துமாவை  இடுக்கண்களுக்கு  விலக்கிக்  காக்கிறான்.  (நீதிமொழிகள்  21:23)

than  vaayaiyum  than  naavaiyum  kaakki’ravan  than  aaththumaavai  idukka'nga'lukku  vilakkik  kaakki’raan.  (neethimozhiga’l  21:23)

அகங்காரமும்  இடும்புமுள்ளவனுக்குப்  பரியாசக்காரனென்று  பெயர்,  அவன்  அகந்தையான  சினத்தோடே  நடக்கிறான்.  (நீதிமொழிகள்  21:24)

aganggaaramum  idumbumu'l'lavanukkup  pariyaasakkaaranen’ru  peyar,  avan  aganthaiyaana  sinaththoadea  nadakki’raan.  (neethimozhiga’l  21:24)

சோம்பேறியின்  கைகள்  வேலைசெய்யச்  சம்மதியாததினால்,  அவன்  ஆசை  அவனைக்  கொல்லும்.  (நீதிமொழிகள்  21:25)

soambea’riyin  kaiga'l  vealaiseyyach  sammathiyaathathinaal,  avan  aasai  avanaik  kollum.  (neethimozhiga’l  21:25)

அவன்  நாள்தோறும்  ஆவலுடன்  இச்சிக்கிறான்;  நீதிமானோ  பிசினித்தனமில்லாமல்  கொடுப்பான்.  (நீதிமொழிகள்  21:26)

avan  naa'lthoa’rum  aavaludan  ichchikki’raan;  neethimaanoa  pisiniththanamillaamal  koduppaan.  (neethimozhiga’l  21:26)

துன்மார்க்கருடைய  பலி  அருவருப்பானது;  அதைத்  துர்ச்சிந்தையோடே  செலுத்தினாலோ  எத்தனை  அதிகமாய்  அருவருக்கப்படும்.  (நீதிமொழிகள்  21:27)

thunmaarkkarudaiya  bali  aruvaruppaanathu;  athaith  thurchsinthaiyoadea  seluththinaaloa  eththanai  athigamaay  aruvarukkappadum.  (neethimozhiga’l  21:27)

பொய்ச்சாட்சிக்காரன்  கெட்டுப்போவான்;  செவிகொடுக்கிறவனோ  எப்பொழுதும்  பேசத்தக்கவனாவான்.  (நீதிமொழிகள்  21:28)

poychsaadchikkaaran  kettuppoavaan;  sevikodukki’ravanoa  eppozhuthum  peasaththakkavanaavaan.  (neethimozhiga’l  21:28)

துன்மார்க்கன்  தன்  முகத்தைக்  கடினப்படுத்துகிறான்;  செம்மையானவனோ  தன்  வழியை  நேர்ப்படுத்துகிறான்.  (நீதிமொழிகள்  21:29)

thunmaarkkan  than  mugaththaik  kadinappaduththugi’raan;  semmaiyaanavanoa  than  vazhiyai  nearppaduththugi’raan.  (neethimozhiga’l  21:29)

கர்த்தருக்கு  விரோதமான  ஞானமுமில்லை,  புத்தியுமில்லை,  ஆலோசனையுமில்லை.  (நீதிமொழிகள்  21:30)

karththarukku  viroathamaana  gnaanamumillai,  buththiyumillai,  aaloasanaiyumillai.  (neethimozhiga’l  21:30)

குதிரை  யுத்தநாளுக்கு  ஆயத்தமாக்கப்படும்;  ஜெயமோ  கர்த்தரால்  வரும்.  (நீதிமொழிகள்  21:31)

kuthirai  yuththanaa'lukku  aayaththamaakkappadum;  jeyamoa  karththaraal  varum.  (neethimozhiga’l  21:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!