Sunday, July 03, 2016

Neethimozhiga'l 20 | நீதிமொழிகள் 20 | Proverbs 20

திராட்சரசம்  பரியாசஞ்செய்யும்,  மதுபானம்  அமளிபண்ணும்;  அதினால்  மயங்குகிற  ஒருவனும்  ஞானவானல்ல.  (நீதிமொழிகள்  20:1)

thiraadcharasam  pariyaasagnseyyum,  mathubaanam  ama'lipa'n'num;  athinaal  mayanggugi’ra  oruvanum  gnaanavaanalla.  (neethimozhiga’l  20:1)

ராஜாவின்  உறுக்குதல்  சிங்கத்தின்  கெர்ச்சிப்புக்குச்  சமானம்;  அவனைக்  கோபப்படுத்துகிறவன்  தன்  பிராணனுக்கே  துரோகஞ்செய்கிறான்.  (நீதிமொழிகள்  20:2)

raajaavin  u’rukkuthal  singgaththin  kerchchippukkuch  samaanam;  avanaik  koabappaduththugi’ravan  than  piraa'nanukkea  thuroagagnseygi’raan.  (neethimozhiga’l  20:2)

வழக்குக்கு  விலகுவது  மனுஷனுக்கு  மேன்மை;  மூடனானவன்  எவனும்  அதிலே  தலையிட்டுக்கொள்வான்.  (நீதிமொழிகள்  20:3)

vazhakkukku  vilaguvathu  manushanukku  meanmai;  moodanaanavan  evanum  athilea  thalaiyittukko'lvaan.  (neethimozhiga’l  20:3)

சோம்பேறி  குளிருகிறதென்று  உழமாட்டான்;  அறுப்பிலே  பிச்சைகேட்டாலும்  அவனுக்கு  ஒன்றுங்கிடையாது.  (நீதிமொழிகள்  20:4)

soambea’ri  ku'lirugi’rathen’ru  uzhamaattaan;  a’ruppilea  pichchaikeattaalum  avanukku  on’rungkidaiyaathu.  (neethimozhiga’l  20:4)

மனுஷனுடைய  இருதயத்திலுள்ள  யோசனை  ஆழமான  தண்ணீர்போலிருக்கிறது;  புத்திமானோ  அதை  மொண்டெடுப்பான்.  (நீதிமொழிகள்  20:5)

manushanudaiya  iruthayaththilu'l'la  yoasanai  aazhamaana  tha'n'neerpoalirukki’rathu;  buththimaanoa  athai  mo'ndeduppaan.  (neethimozhiga’l  20:5)

மனுஷர்  பெரும்பாலும்  தங்கள்  தயாளத்தைப்  பிரசித்தப்படுத்துவார்கள்;  உண்மையான  மனுஷனைக்  கண்டுபிடிப்பவன்  யார்?  (நீதிமொழிகள்  20:6)

manushar  perumbaalum  thangga'l  thayaa'laththaip  pirasiththappaduththuvaarga'l;  u'nmaiyaana  manushanaik  ka'ndupidippavan  yaar?  (neethimozhiga’l  20:6)

நீதிமான்  தன்  உத்தமத்திலே  நடக்கிறான்;  அவனுக்குப்பிறகு  அவன்  பிள்ளைகளும்  பாக்கியவான்களாயிருப்பார்கள்.  (நீதிமொழிகள்  20:7)

neethimaan  than  uththamaththilea  nadakki’raan;  avanukkuppi’ragu  avan  pi'l'laiga'lum  baakkiyavaanga'laayiruppaarga'l.  (neethimozhiga’l  20:7)

நியாயாசனத்தில்  வீற்றிருக்கும்  ராஜா  தன்  கண்களினால்  சகல  பொல்லாப்பையும்  சிதறப்பண்ணுகிறான்.  (நீதிமொழிகள்  20:8)

niyaayaasanaththil  veet’rirukkum  raajaa  than  ka'nga'linaal  sagala  pollaappaiyum  sitha’rappa'n'nugi’raan.  (neethimozhiga’l  20:8)

என்  இருதயத்தைச்  சுத்தமாக்கினேன்,  என்  பாவமறத்  துப்புரவானேன்  என்று  சொல்லத்தக்கவன்  யார்?  (நீதிமொழிகள்  20:9)

en  iruthayaththaich  suththamaakkinean,  en  paavama’rath  thuppuravaanean  en’ru  sollaththakkavan  yaar?  (neethimozhiga’l  20:9)

வெவ்வேறான  நிறைகல்லும்,  வெவ்வேறான  மரக்காலும்  ஆகிய  இவ்விரண்டும்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்.  (நீதிமொழிகள்  20:10)

vevvea’raana  ni’raikallum,  vevvea’raana  marakkaalum  aagiya  ivvira'ndum  karththarukku  aruvaruppaanavaiga'l.  (neethimozhiga’l  20:10)

பிள்ளையானாலும்,  அதின்  செய்கை  சுத்தமோ  செம்மையோ  என்பது,  அதின்  நடக்கையினால்  விளங்கும்.  (நீதிமொழிகள்  20:11)

pi'l'laiyaanaalum,  athin  seygai  suththamoa  semmaiyoa  enbathu,  athin  nadakkaiyinaal  vi'langgum.  (neethimozhiga’l  20:11)

கேட்கிற  காதும்,  காண்கிற  கண்ணும்  ஆகிய  இவ்விரண்டையும்  கர்த்தர்  உண்டாக்கினார்.  (நீதிமொழிகள்  20:12)

keadki’ra  kaathum,  kaa'ngi’ra  ka'n'num  aagiya  ivvira'ndaiyum  karththar  u'ndaakkinaar.  (neethimozhiga’l  20:12)

தூக்கத்தை  விரும்பாதே,  விரும்பினால்  தரித்திரனாவாய்;  கண்விழித்திரு,  அப்பொழுது  ஆகாரத்தினால்  திருப்தியாவாய்.  (நீதிமொழிகள்  20:13)

thookkaththai  virumbaathea,  virumbinaal  thariththiranaavaay;  ka'nvizhiththiru,  appozhuthu  aagaaraththinaal  thirupthiyaavaay.  (neethimozhiga’l  20:13)

கொள்ளுகிறவன்:  நல்லதல்ல,  நல்லதல்ல  என்பான்;  போய்விட்டபின்போ  மெச்சிக்கொள்வான்.  (நீதிமொழிகள்  20:14)

ko'l'lugi’ravan:  nallathalla,  nallathalla  enbaan;  poayvittapinboa  mechchikko'lvaan.  (neethimozhiga’l  20:14)

பொன்னும்  மிகுதியான  முத்துக்களும்  உண்டு;  அறிவுள்ள  உதடுகளோ  விலையுயர்ந்த  இரத்தினம்.  (நீதிமொழிகள்  20:15)

ponnum  miguthiyaana  muththukka'lum  u'ndu;  a’rivu'l'la  uthaduga'loa  vilaiyuyarntha  iraththinam.  (neethimozhiga’l  20:15)

அந்நியனுக்காகப்  பிணைப்பட்டவனுடைய  வஸ்திரத்தை  எடுத்துக்கொள்;  அந்நிய  ஸ்திரீயினிமித்தம்  அவன்  கையில்  ஈடு  வாங்கிக்கொள்.  (நீதிமொழிகள்  20:16)

anniyanukkaagap  pi'naippattavanudaiya  vasthiraththai  eduththukko'l;  anniya  sthireeyinimiththam  avan  kaiyil  eedu  vaanggikko'l.  (neethimozhiga’l  20:16)

வஞ்சனையினால்  வந்த  போஜனம்  மனுஷனுக்கு  இன்பமாயிருக்கும்;  பின்போ  அவனுடைய  வாய்  பருக்கைக்கற்களால்  நிரப்பப்படும்.  (நீதிமொழிகள்  20:17)

vagnchanaiyinaal  vantha  poajanam  manushanukku  inbamaayirukkum;  pinboa  avanudaiya  vaay  parukkaikka’rka'laal  nirappappadum.  (neethimozhiga’l  20:17)

ஆலோசனையினால்  எண்ணங்கள்  ஸ்திரப்படும்;  நல்யோசனை  செய்து  யுத்தம்பண்ணு.  (நீதிமொழிகள்  20:18)

aaloasanaiyinaal  e'n'nangga'l  sthirappadum;  nalyoasanai  seythu  yuththampa'n'nu.  (neethimozhiga’l  20:18)

தூற்றிக்கொண்டு  திரிகிறவன்  இரகசியங்களை  வெளிப்படுத்துவான்;  ஆதலால்  தன்  உதடுகளினால்  அலப்புகிறவனோடே  கலவாதே.  (நீதிமொழிகள்  20:19)

thoot’rikko'ndu  thirigi’ravan  iragasiyangga'lai  ve'lippaduththuvaan;  aathalaal  than  uthaduga'linaal  alappugi’ravanoadea  kalavaathea.  (neethimozhiga’l  20:19)

தன்  தகப்பனையும்  தன்  தாயையும்  தூஷிக்கிறவனுடைய  தீபம்  காரிருளில்  அணைந்துபோம்.  (நீதிமொழிகள்  20:20)

than  thagappanaiyum  than  thaayaiyum  thooshikki’ravanudaiya  theebam  kaariru'lil  a'nainthupoam.  (neethimozhiga’l  20:20)

ஆரம்பத்திலே  துரிதமாகக்  கிடைத்த  சுதந்தரம்  முடிவிலே  ஆசீர்வாதம்  பெறாது.  (நீதிமொழிகள்  20:21)

aarambaththilea  thurithamaagak  kidaiththa  suthantharam  mudivilea  aaseervaatham  pe’raathu.  (neethimozhiga’l  20:21)

தீமைக்குச்  சரிக்கட்டுவேன்  என்று  சொல்லாதே;  கர்த்தருக்குக்  காத்திரு,  அவர்  உன்னை  இரட்சிப்பார்.  (நீதிமொழிகள்  20:22)

theemaikkuch  sarikkattuvean  en’ru  sollaathea;  karththarukkuk  kaaththiru,  avar  unnai  iradchippaar.  (neethimozhiga’l  20:22)

வெவ்வேறான  நிறைகற்கள்  கர்த்தருக்கு  அருவருப்பானவைகள்;  கள்ளத்  தராசு  நல்லதல்ல.  (நீதிமொழிகள்  20:23)

vevvea’raana  ni’raika’rka'l  karththarukku  aruvaruppaanavaiga'l;  ka'l'lath  tharaasu  nallathalla.  (neethimozhiga’l  20:23)

கர்த்தராலே  மனுஷருடைய  நடைகள்  வாய்க்கும்;  ஆகையால்  மனுஷன்  தன்  வழியை  அறிந்துகொள்வதெப்படி?  (நீதிமொழிகள்  20:24)

karththaraalea  manusharudaiya  nadaiga'l  vaaykkum;  aagaiyaal  manushan  than  vazhiyai  a’rinthuko'lvatheppadi?  (neethimozhiga’l  20:24)

பரிசுத்தமானதை  விழுங்குகிறதும்,  பொருத்தனை  செய்தபின்பு  யோசிக்கிறதும்,  மனுஷனுக்குக்  கண்ணியாயிருக்கும்.  (நீதிமொழிகள்  20:25)

parisuththamaanathai  vizhunggugi’rathum,  poruththanai  seythapinbu  yoasikki’rathum,  manushanukkuk  ka'n'niyaayirukkum.  (neethimozhiga’l  20:25)

ஞானமுள்ள  ராஜா  துன்மார்க்கரைச்  சிதறடித்து,  அவர்கள்மேல்  உருளையை  உருட்டுவான்.  (நீதிமொழிகள்  20:26)

gnaanamu'l'la  raajaa  thunmaarkkaraich  sitha’radiththu,  avarga'lmeal  uru'laiyai  uruttuvaan.  (neethimozhiga’l  20:26)

மனுஷனுடைய  ஆவி  கர்த்தர்  தந்த  தீபமாயிருக்கிறது;  அது  உள்ளத்தில்  உள்ளவைகளையெல்லாம்  ஆராய்ந்துபார்க்கும்.  (நீதிமொழிகள்  20:27)

manushanudaiya  aavi  karththar  thantha  theebamaayirukki’rathu;  athu  u'l'laththil  u'l'lavaiga'laiyellaam  aaraaynthupaarkkum.  (neethimozhiga’l  20:27)

தயையும்  சத்தியமும்  ராஜாவைக்  காக்கும்;  தயையினாலே  தன்  சிங்காசனத்தை  நிற்கப்பண்ணுவான்.  (நீதிமொழிகள்  20:28)

thayaiyum  saththiyamum  raajaavaik  kaakkum;  thayaiyinaalea  than  singgaasanaththai  ni’rkappa'n'nuvaan.  (neethimozhiga’l  20:28)

வாலிபரின்  அலங்காரம்  அவர்கள்  பராக்கிரமம்;  முதிர்வயதானவர்களின்  மகிமை  அவர்கள்  நரை.  (நீதிமொழிகள்  20:29)

vaalibarin  alanggaaram  avarga'l  baraakkiramam;  muthirvayathaanavarga'lin  magimai  avarga'l  narai.  (neethimozhiga’l  20:29)

காயத்தின்  தழும்புகளும்,  உள்ளத்தில்  உறைக்கும்  அடிகளும்,  பொல்லாதவனை  அழுக்கறத்  துடைக்கும்.  (நீதிமொழிகள்  20:30)

kaayaththin  thazhumbuga'lum,  u'l'laththil  u’raikkum  adiga'lum,  pollaathavanai  azhukka’rath  thudaikkum.  (neethimozhiga’l  20:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!